Shopify Audiences அமைத்தல்

Shopify Audiences செயலியை நிறுவ, நீங்கள் Shopify Network Intelligence என்பதைச் செயல்படுத்தியிருக்க வேண்டும்.

நீங்கள் Shopify Audiences செயலியை நிறுவியதும், விளம்பரப் பிரச்சாரங்களைக் கொண்ட எந்தவொரு தகுதியான விளம்பரத் தளத்துடனும் இணைத்து, அந்தத் தளத்திற்கு ஆடியன்ஸை ஏற்றுமதி செய்யலாம். உங்கள் ஸ்டோரில் தானாக உருவாக்கப்படும் பண்புக்கூறுகளின் அடிப்படையில் ஆடியன்ஸ் அமைந்திருக்கும்.

உங்கள் ஆடியன்ஸ் ஏற்றுமதி செய்யப்பட்டதும், இணைக்கப்பட்ட விளம்பரத் தளத்திற்குச் செல்லவும். Shopify Audiences மூலம் ஏற்றுமதி செய்யப்பட்ட ஆடியன்ஸ் பட்டியல்களை, நீங்கள் ஏற்கெனவே வைத்துள்ள விளம்பரப் பிரச்சாரங்களில் சேர்க்கலாம் அல்லது இந்தப் பட்டியல்களைப் பயன்படுத்தி புதிய விளம்பரப் பிரச்சாரங்களை உருவாக்கலாம்.

ஒவ்வொரு விளம்பரத் தளத்திற்கும் உருவாக்கப்படும் ஆடியன்ஸ் வகைகள் மற்றும் உங்கள் விளம்பரப் பிரச்சாரங்களில் அவற்றைப் பயன்படுத்துவது எப்படி என்பது பற்றி மேலும் அறிக.

Shopify Audiences தகுதி வரம்புகள்

அமெரிக்கா அல்லது கனடாவைத் தளமாகக் கொண்டு, Shopify Payments-ஐப் பயன்படுத்தும் தகுதியான Shopify Plus ஸ்டோர்களுக்கு Shopify Audiences கிடைக்கும். Shopify Audiences-ஐப் பயன்படுத்த, நீங்கள் Shopify Network Intelligence என்பதைச் செயல்படுத்தியிருக்க வேண்டும்.

நீங்கள் Shopify Audiences-ஐ அமைப்பதற்கு முன், Shopify Audiences-ஐப் பயன்படுத்துவதற்கான உங்கள் தகுதியைச் சரிபார்த்து, செயலியை நிறுவுங்கள்.

Shopify Audiences அமைத்தல்

Shopify Audiences-ஐப் பயன்படுத்த, நீங்கள் Shopify Network Intelligence என்பதைச் செயல்படுத்தியிருக்க வேண்டும். உங்கள் அமைப்புகளை உள்ளமைப்பது எப்படி என அறிக.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகி-யில், செயலிகள் > Audiences என்பதற்குச் செல்லவும்.

  2. Shopify Audiences விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்க, தொடங்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. தரவுப் பகிர்வு பிரிவில், அமெரிக்க மாகாணச் சட்டங்கள் மற்றும் பிற பொருந்தக்கூடிய தனியுரிமைச் சட்டங்களின் தேவைகளுடன் நீங்கள் இணங்குகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, இயக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.