Shopify Analytics இல் அமர்வுகள் மற்றும் மாற்று வீதத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்

Shopify Analytics அமர்வு அளவீட்டு ரோல்அவுட் 2026 செப்டம்பர் 21 முதல் 23 வரை நடைபெறும். புதுப்பிப்பு உங்கள் ஸ்டோரை வந்தடையும் போது, உங்கள் அறிக்கைகளில் அமர்வுகள், மாற்று வீதம் மற்றும் அமர்வு சார்ந்த பிற அளவீடுகள் மாறுபடலாம்.

இந்த அளவீடுகளில் ஏற்படும் மாற்றம், உங்கள் டிராஃபிக், ஆர்டர்கள் அல்லது வாடிக்கையாளர் நடத்தை மாறியிருப்பதை மட்டுமே குறிக்காது. அமர்வுச் செயல்பாடு எவ்வாறு அளவிடப்படுகிறது என்பதையும் அமர்வு தொடர்பான அறிக்கைகளில் பாட் அமர்வுகள் எவ்வாறு வடிகட்டப்படுகின்றன என்பதையும் இந்தப் புதுப்பிப்பு பிரதிபலிக்கிறது.

அமர்வு அளவீட்டிற்கான புதுப்பிப்புகள்

இந்தப் புதுப்பிப்பு, பின்வரும் மாற்றங்களை உள்ளடக்கியது:

  • நள்ளிரவில் (Coordinated Universal Time - UTC) முடிவடைவதற்குப் பதிலாக, வாடிக்கையாளரின் தொடர்ச்சியான செயல்பாட்டின் அடிப்படையில் அமர்வுகள் அமைகின்றன.
  • கார்ட் இணைப்பிலிருந்து நேரடியாகச் செக்அவுட்டுக்குச் செல்லும் வாடிக்கையாளர் போலப் பக்கப் பார்வை இல்லாத சில அமர்வுகளும் கணக்கிடப்படுகின்றன.
  • கண்டறியப்பட்ட பாட் அமர்வுகள், இயல்புநிலையாக அமர்வு தொடர்பான அறிக்கைகளிலிருந்து வடிகட்டப்படுகின்றன. Human or bot session வடிப்பானை ஆதரிக்கும் அறிக்கைகளில், பாட் அமர்வுகளையும் சேர்க்கும் வகையில் வடிப்பானை மாற்றியமைக்கலாம்.

எந்தவொரு செயல்பாடும் இன்றி 30 நிமிடங்கள் கடந்த பிறகு அமர்வு முடிவடையும்.

அமர்வுத் தரவு ஏன் மாறலாம்?

பக்கப் பார்வை இல்லாத அமர்வும் கணக்கிடப்படும்போது, உங்கள் அமர்வுகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். உதாரணமாக, ஒரு வாடிக்கையாளர் கார்ட் இணைப்பிலிருந்து நேரடியாகச் செக்அவுட்டுக்குச் செல்லும் நிகழ்வு.

முன்பு உங்கள் அறிக்கைகளில் சேர்க்கப்பட்ட பாட் அமர்வுகள், இயல்புநிலையாக வடிகட்டப்படும்போது உங்கள் அமர்வுகளின் எண்ணிக்கை குறையக்கூடும். நள்ளிரவு (Coordinated Universal Time - UTC) கடந்தும் தொடரும் செயல்பாடு இரண்டுக்கு பதிலாக ஒரே அமர்வாகக் கணக்கிடப்படும்போதும் உங்கள் அமர்வுகளின் எண்ணிக்கை குறையக்கூடும்.

உங்கள் அமர்வுகளில் ஏற்படும் மாற்றம், உங்கள் ஸ்டோரைப் பார்வையிட்ட வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மாறியுள்ளதை எப்போதும் குறிக்காது. பல நேரங்களில், அளவீட்டு முறையில் ஏற்பட்ட மாற்றத்தையே குறிக்கிறது. இந்தப் புதுப்பிப்பால் உங்கள் ஆர்டர்கள், விற்பனை மற்றும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஆகியவை பாதிக்கப்படாது. உங்கள் ஸ்டோரின் செயல்பாடு மாறியுள்ளதா என்பதைப் புரிந்துகொள்ள, அமர்வுகளுடன் உங்கள் ஆர்டர்கள், விற்பனை மற்றும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையையும் மதிப்பாய்வு செய்யவும்.

மாற்று வீதத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்

அமர்வுகளிலிருந்து மாற்று வீதம் கணக்கிடப்படுகிறது. உங்கள் அமர்வுகளின் எண்ணிக்கை மாறும்போது, உங்கள் ஆர்டர்களோ விற்பனையோ மாறாவிட்டாலும் கூட மாற்று வீதம் மாறலாம்.

உதாரணமாக, பாட் அமர்வுகள் வடிகட்டப்படுவதால் உங்கள் அமர்வுகளின் எண்ணிக்கை குறைந்தால், மாற்று வீதம் அதிகரிக்கக்கூடும். பக்கப் பார்வை இல்லாத அமர்வுகளும் கணக்கிடப்படுவதால் உங்கள் அமர்வுகளின் எண்ணிக்கை அதிகரித்தால், மாற்று வீதம் குறையக்கூடும்.

இந்தப் புதுப்பிப்பிற்குப் பிறகு மாற்று வீதம் அதிகரிப்பதோ குறைவதோ நல்லதும் அல்ல, கெட்டதும் அல்ல. உங்கள் மாற்று வீதப் போக்குகளை மதிப்பாய்வு செய்யும்போது, இந்தப் புதுப்பிப்பை ஒரு புதிய அடிப்படையாகப் பயன்படுத்தவும்.

அமர்வு தொடர்பான அறிக்கைகளில் பாட் வடிகட்டல்

பாட் டிராஃபிக் என்பது இணையத்தில் பொதுவான ஒன்று. இது உங்கள் டிராஃபிக் அறிக்கையைப் பாதிக்கலாம். வாடிக்கையாளர் செயல்பாட்டில் நீங்கள் கவனம் செலுத்துவதற்கு ஏதுவாக, கண்டறியப்பட்ட பாட் அமர்வுகள் இயல்புநிலையாக அமர்வு தொடர்பான அறிக்கைகளிலிருந்து வடிகட்டப்படுகின்றன. பாட்களாக அடையாளம் காணப்படாத அமர்வுகள் இந்த அறிக்கைகளில் வழக்கமான அமர்வுகளாகவே கணக்கிடப்படும். சில ஹெட்லெஸ் ஸ்டோர்ஃபிரண்ட் அமைப்புகளில், ஸ்டோர்ஃபிரண்ட் பகுப்பாய்வு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்துக் கிடைக்கும் வடிப்பான்களும் அமர்வுச் செயல்பாடும் மாறுபடலாம்.

Human or bot session வடிப்பானை ஆதரிக்கும் அறிக்கைகளில், மனித மற்றும் பாட் அமர்வுகள் இரண்டையும் மதிப்பாய்வு செய்யும் வகையில் வடிப்பானை மாற்றியமைக்கலாம். முகப்புப் பக்கம், லைவ் வியூ போன்ற சில இடங்கள் இந்த வடிப்பான் இல்லாமல் அமர்வுத் தரவைக் காண்பிக்கும். இந்த இடங்களில் கண்டறியப்பட்ட பாட் அமர்வுகள் வடிகட்டப்படும், மேலும் வடிப்பானை மாற்றியமைக்க முடியாது. கூடுதல் தகவலுக்கு, Shopify பகுப்பாய்வு மற்றும் அறிக்கைகளில் பாட் வடிகட்டல் (Bot filtering in Shopify analytics and reports) என்பதைப் பார்க்கவும்.

தேடல் மற்றும் தயாரிப்புப் பரிந்துரை அறிக்கைகள், கண்டறியப்பட்ட பாட் அமர்வுகளைத் தானாகவே வடிகட்டும். மேலும், அவை Human or bot session வடிப்பானைக் காட்டாது. 2026 செப்டம்பர் 21 அன்றோ அதன் பிறகோ நீங்கள் அமர்வுகள் அல்லது தேடல் தரவுத்தொகுப்புகளைக் கோரினால், முடிவுகள் மாறக்கூடும். ஏனெனில், அமர்வுகளும் அமர்வுகளிலிருந்து பெறப்படும் அளவீடுகளும் வித்தியாசமாகக் கணக்கிடப்படுகின்றன. உங்கள் கோரிக்கை இந்தத் தேதியைக் கடக்கும்போது அறிக்கை எடிட்டர் ஒரு அறிவிப்பைக் காட்டக்கூடும்.

வரலாற்றுத் தரவு மற்றும் ஒப்பீடுகள்

இந்தப் புதுப்பிப்பால் உங்கள் வரலாற்றுத் தரவு நீக்கப்படவோ மீண்டும் செயலாக்கப்படவோ இல்லை. இருப்பினும், பாட் அமர்வுகள் வடிகட்டப்படும்போது உங்கள் அறிக்கைகள் வரலாற்று அமர்வுத் தரவை வித்தியாசமாகக் காட்டக்கூடும்.

புதுப்பிப்புக்குப் பிந்தைய தரவுகளுக்கு, அமர்வு சார்ந்த அளவீடுகள் புதுப்பிக்கப்பட்ட அளவீட்டு முறையைப் பயன்படுத்துகின்றன. புதுப்பிப்புக்கு முந்தைய மற்றும் பிந்தைய காலகட்டங்களை ஒப்பிடும்போது, இந்த அளவீடுகளுக்கான அளவீட்டு மாற்றமாகவே புதுப்பிப்பைக் கருத்தில் கொள்ளுங்கள்.

பாட் வகைப்பாடு என்பது 2025 அக்டோபர் 7 மற்றும் அதற்குப் பிறகான அமர்வுகளுக்கு மட்டுமே பொருந்தும், பழைய அமர்வுகளுக்குப் பொருந்தாது. உங்கள் ஒப்பீட்டில் அந்தத் தேதிக்கு முந்தைய காலகட்டம் இடம்பெற்றால், முந்தைய காலகட்டத்தை அதே முறையில் வடிகட்ட முடியாது. அந்தத் தேதிக்குப் பிந்தைய காலகட்டங்களை ஒப்பிடுங்கள் அல்லது வடிப்பானை ஆதரிக்கும் அறிக்கையில் Human or bot session வடிப்பான் இல்லாமல் இரு காலகட்டங்களையும் மதிப்பாய்வு செய்யவும்.

காலகட்டம் வாரியாக அல்லது ஆண்டுக்கு ஆண்டு அறிக்கையை மதிப்பாய்வு செய்யும்போது, பின்வரும் செயல்களைக் கருத்தில் கொள்ளுங்கள்:

  • அமர்வுகளுடன் உங்கள் ஆர்டர்கள், விற்பனை மற்றும் மாற்றுதல் நடத்தையையும் ஒப்பிடவும்.
  • Human or bot session வடிப்பானை ஆதரிக்கும் அறிக்கைகளில், 2025 அக்டோபர் 7-க்குப் பிறகான அறிக்கையிடல் காலகட்டங்களை ஒப்பிடும்போது அதே வடிப்பான் அமைப்பைப் பயன்படுத்தவும். ஒரே வடிப்பான் அமைப்பைப் பயன்படுத்தினால், புதுப்பிப்புக்கு முன் அளவிடப்பட்ட அமர்வுகளைப் புதுப்பிப்புக்குப் பின் அளவிடப்பட்ட அமர்வுகளுடன் நேரடியாக ஒப்பிட முடியும் என்று அர்த்தமல்ல.
  • அமர்வு சார்ந்த அளவீடுகளுக்கான புதிய அடிப்படையாக, புதுப்பிப்புக்குப் பிந்தைய தரவைப் பயன்படுத்தவும்.

அறிக்கை மாற்றங்களைச் சரிபார்க்கவும்

புதுப்பிப்புக்குப் பிறகு உங்கள் அமர்வுகள் அல்லது மாற்று வீதம் மாறியிருந்தால், பின்வரும் முறையில் உங்கள் அறிக்கைகளை மதிப்பாய்வு செய்யவும்.

ஒவ்வொரு அறிக்கையும் அதற்குப் பொருந்தும் அளவீடுகளையும் வடிப்பான்களையும் மட்டுமே காட்டும். அமர்வு சார்ந்த அளவீடுகளுக்கு அமர்வுகள் அறிக்கையையும் ஆர்டர், விற்பனை மற்றும் வாடிக்கையாளர் விவரங்களுக்குப் பகுப்பாய்வு மேலோட்ட டாஷ்போர்டையும் பயன்படுத்தவும். உங்கள் டாஷ்போர்டில் ஏதேனும் அளவீடு காட்டப்படவில்லை எனில், அதன் கார்டைச் சேர்க்கவும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியில், Analytics > அறிக்கைகள் என்பதற்குச் செல்லவும்.

  2. லேண்டிங் பக்கம் வாரியாக அமர்வுகள் அல்லது சாதனம் வாரியாக அமர்வுகள் போன்ற அமர்வு சார்ந்த அளவீடுகளைப் பயன்படுத்தும் அறிக்கையைத் திறக்கவும்.

  3. புதுப்பிப்புக்குப் பிந்தைய காலகட்டத்திற்குத் தேதி வரம்பை அமைத்துவிட்டு, புதுப்பிப்புக்குப் பிந்தைய மற்றொரு காலகட்டத்தைச் சேர்ப்பதற்குப் பல்வேறு தேதி வரம்புகளிலுள்ள தரவை ஒப்பிடவும்.

  4. Human or bot session வடிப்பானை ஆதரிக்கும் அறிக்கைகளில், இரு காலகட்டங்களும் ஒரே வடிப்பான் மதிப்பைப் பயன்படுத்துகின்றனவா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

  5. புதிய அடிப்படை அளவீட்டை நிறுவ, புதுப்பிப்புக்குப் பிறகு உங்களின் அமர்வு சார்ந்த அளவீடுகளை ஒப்பிடவும்.

  6. பகுப்பாய்வு மேலோட்ட டாஷ்போர்டைத் திறக்க பகுப்பாய்வு என்பதற்குச் செல்லவும். உங்கள் ஆர்டர்கள், விற்பனை அல்லது வாடிக்கையாளர் எண்ணிக்கை மாறியுள்ளதா என்பதை மதிப்பாய்வு செய்ய, அதே தேதி வரம்புகளைப் பயன்படுத்தவும்.

உங்கள் அமர்வு சார்ந்த அளவீடுகள் மாறி, உங்கள் ஆர்டர்கள், விற்பனை மற்றும் வாடிக்கையாளர் எண்ணிக்கை அப்படியே இருந்தால், இந்த வேறுபாட்டைப் புதுப்பிப்பு விளக்கக்கூடும். உங்கள் ஸ்டோரின் செயல்திறன் மாறியிருக்காது.

அமர்வு சார்ந்த அளவீடுகளை உள்ளடக்கிய பிரத்தியேக அறிக்கையை நீங்கள் பயன்படுத்தினால், புதுப்பிப்புக்குப் பிறகு அந்த அறிக்கையை மதிப்பாய்வு செய்யவும். Shopify Analytics இலிருந்து ஒரு செயலி அமர்வுத் தரவைப் பயன்படுத்தினால், அந்தச் செயலிக்குக் கிடைக்கும் தரவும் மாறக்கூடும். அமர்வு சார்ந்த அளவீடுகளை ஒரு செயலி எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ள, செயலியை உருவாக்குபவரைத் தொடர்புகொள்ளவும்.

ஸ்டோர்ஃபிரண்ட் அமலாக்கச் சிக்கல்கள்

இந்த அமர்வு அளவீட்டுப் புதுப்பிப்புக்காகப் பெரும்பாலான வணிகர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை. உங்கள் ஸ்டோர்ஃபிரண்ட் குறித்து ஏதேனும் மெசேஜ் வந்தால், உங்கள் தொழில்நுட்பக் குழு, ஏஜென்சி அல்லது அமலாக்கக் கூட்டாளருடன் இணைந்து செயல்படவும். உங்கள் அமைவு அல்லது சிக்கலுக்கான வழிகாட்டியைக் காணவும்:

பாதிக்கப்படக்கூடிய அளவீடுகள்

அமர்வு அளவீட்டுப் புதுப்பிப்புக்குப் பிறகு மாறக்கூடிய அமர்வு சார்ந்த அளவீடுகளில் பின்வரும் வகைகளும் அடங்கும்:

  • அமர்வுகள்
  • மாற்று வீதம்
  • கார்ட்டில் சேர்ப்பதற்கான வீதம்
  • செக்அவுட்டை அடைந்ததற்கான வீதம்
  • செக்அவுட் மாற்று வீதம்
  • பவுன்ஸ் வீதம்
  • ஒரு அமர்வுக்கான பக்கப் பார்வைகள்
  • சராசரி அமர்வுக் கால அளவு
  • ஆன்லைன் ஸ்டோர் பார்வையாளர்கள்

ஆர்டர்கள் அல்லது வாடிக்கையாளர்களை அமர்வுகளுடன் தொடர்புபடுத்தும் அளவீடுகள் உட்பட, பிற அமர்வு சார்ந்த அளவீடுகளும் மாறக்கூடும். உங்கள் மொத்த ஆர்டர்கள், விற்பனை மற்றும் வாடிக்கையாளர் எண்ணிக்கை பாதிக்கப்படாது. உங்கள் அறிக்கைகளில் உள்ள அமர்வுப் புலங்களின் முழுமையான தொகுப்பிற்கு, பகுப்பாய்வுத் தரவுப் புள்ளிகள் (புலங்கள்) குறிப்பு என்பதில் உள்ள அமர்வுகள் மற்றும் நடத்தை புலங்களைக் காணவும்.

இந்த அளவீடுகளைப் பயன்படுத்தும் பின்வரும் அறிக்கைகளும் டாஷ்போர்டுகளும் பாதிக்கப்படலாம்: