Shopify பகுப்பாய்வு

ஒருங்கிணைந்த டாஷ்போர்டு மற்றும் அறிக்கை அனுபவத்தின் மூலம், உங்கள் ஸ்டோரின் சமீபத்திய செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்யவும், பார்வையாளர்கள் குறித்த நுண்ணறிவைப் பெறவும், உங்கள் வலைச் செயல்திறனைப் பகுப்பாய்வு செய்யவும், உங்கள் ஸ்டோரின் பரிவர்த்தனைகளைப் பகுப்பாய்வு செய்யவும் Shopify-இன் பகுப்பாய்வு டாஷ்போர்டுகளும் அறிக்கைகளும் உங்களை அனுமதிக்கின்றன. உங்கள் விற்பனை வருவாயை எப்படி அதிகரிப்பது, அதிக மாற்றங்களை உருவாக்கும் லேண்டிங் பக்கங்களின் அடிப்படையில் உங்கள் ஸ்டோரை எப்படி மேம்படுத்துவது அல்லது ஒரே ஆர்டரில் வாங்கப்படும் தயாரிப்புகளின் அடிப்படையில் புதிய விற்பனை மேம்பாட்டு உத்திகளை எப்படி உருவாக்குவது என்பதை அறிய, Shopify Analytics-ஐப் பயன்படுத்தவும்.

எந்தவொரு Shopify சந்தாத் திட்டத்தில் உள்ள வணிகர்களுக்கும் Shopify Analytics-இன் முக்கிய அம்சங்கள் கிடைக்கும். உங்களிடம் ஆன்லைன் ஸ்டோர் இருந்தால், லைவ் வியூ பக்கத்தில் டிராஃபிக் காட்டப்படும். அறிக்கைகள் மற்றும் டாஷ்போர்டுகளை அணுக, பணியாளர்களுக்கு பகுப்பாய்வு அனுமதிகள் தேவை.

பல நிலை விவரங்களில் உங்கள் வணிகத் தரவைக் கண்காணிக்க Shopify-இன் பகுப்பாய்வுப் பக்கங்கள் உங்களை அனுமதிக்கின்றன:

  • பகுப்பாய்வு டாஷ்போர்டு: பகுப்பாய்வு பக்கத்தில் உள்ள தனிப்பயனாக்கக்கூடிய டாஷ்போர்டு என்பது, தரவு கார்டுகளின் தொகுப்பாகும். இவை அளவீடுகள் எனப்படுகின்றன. ஒவ்வொரு கார்டும் சேனல் வாரியாக நிகர விற்பனை அல்லது சாதன வகை வாரியாக அமர்வுகள் போன்ற ஒரு குறிப்பிட்ட வணிகக் குறியீடு குறித்த விரைவான கூட்டுத்தொகை அல்லது மதிப்பினை உங்களுக்கு வழங்கும். ஆழமான நுண்ணறிவுகளையும் தனிப்பயனாக்கப்பட்ட தரவு ஆய்வுக்கான வாய்ப்பையும் வழங்கும் தொடர்புடைய அறிக்கையை ஒவ்வொரு கார்டிலிருந்தும் நீங்கள் நேரடியாக அணுகலாம். தரவு ஆய்வில் இருந்து நீங்கள் உருவாக்கும் எந்தவொரு பிரத்தியேக அறிக்கையும், தொடர்புடைய அளவீட்டு கார்டை உருவாக்கும். இது டாஷ்போர்டு லைப்ரரியில் கிடைக்கும்.
  • அறிக்கைகள்: பகுப்பாய்வு > அறிக்கைகள் பக்கத்தில் கிடைக்கும், இந்தப் புதிய Shopify அறிக்கைகள் ஒரு குறிப்பிட்ட அளவீடு அல்லது அளவீடுகளின் தொகுப்பைக் குறித்த ஆழமான மற்றும் செறிவான தரவை உங்களுக்கு வழங்குகின்றன. ஒவ்வொரு அறிக்கையிலும் உங்கள் முதன்மை அளவீடுகள் அல்லது பரிமாணங்களை முன்னிலைப்படுத்தும் காட்சியமைப்பைக் காண முடியும். அத்துடன் கூடுதல் நுண்ணறிவுகளை வழங்கும் ஒரு விரிவான அட்டவணையையும் காணலாம். உங்கள் அறிக்கையைப் புதிய தரவு ஆய்வாகத் தனிப்பயனாக்கவும் முடியும்.

இந்தப் பிரிவில் இருப்பவை