பகுப்பாய்வு மேலோட்ட டாஷ்போர்டைத் தனிப்பயனாக்குதல்
உங்கள் வணிகத்திற்கு மிகவும் முக்கியமான அளவீடுகளில் கவனம் செலுத்துவதற்கு, நீங்கள் பகுப்பாய்வு மேலோட்ட டாஷ்போர்டைத் தனிப்பயனாக்கலாம். அளவீட்டுக் கார்டுகளைச் சேர்க்கலாம் அல்லது அகற்றலாம், அவற்றை மறுசீரமைக்கலாம் மற்றும் அவற்றின் அளவை மாற்றலாம், மேலும் அவற்றை லேபிளிடப்பட்ட பிரிவுகளாக ஒழுங்கமைக்கலாம்.
இந்தப் பக்கத்தில் உள்ளவை
உங்கள் பகுப்பாய்வு மேலோட்ட டாஷ்போர்டில் அளவீட்டுக் கார்டுகளை நிர்வகித்தல்
அளவீட்டுக் கார்டுகளைச் சேர்ப்பதன் மூலம், மறுசீரமைப்பதன் மூலம், அளவை மாற்றுவதன் மூலம் மற்றும் அகற்றுவதன் மூலம் உங்கள் மேலோட்ட டாஷ்போர்டைத் தனிப்பயனாக்கலாம். கிடைக்கும் கார்டுகள் அளவீட்டு லைப்ரரி பக்கப்பட்டியில் பட்டியலிடப்பட்டுள்ளன. உங்கள் அசல் தளவமைப்பை மீட்டமைக்க, இயல்புநிலைக்கு மீட்டமை என்பதைக் கிளிக் செய்யவும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, பகுப்பாய்வு என்பதற்குச் செல்லவும்.
டாஷ்போர்டு எடிட்டரைத் திறக்க, … > தனிப்பயனாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
பின்வரும் வழிகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி, உங்கள் டாஷ்போர்டில் அளவீட்டுக் கார்டுகளைத் தனிப்பயனாக்குங்கள்:
- கார்டில் உள்ள
ஐகானைக் கிளிக் செய்து, பின்னர் டாஷ்போர்டில் உங்களுக்கு விருப்பமான இடத்திற்கு கார்டை இழுத்து விடுவதன் மூலம், ஒரு கார்டை மறுசீரமைக்கலாம்.
- கார்டின் கீழ்-வலது மூலையைக் கிளிக் செய்து, உங்களுக்கு விருப்பமான அளவிற்கு அதை இழுப்பதன் மூலம், ஒரு கார்டின் அளவை மாற்றலாம்.
- பின்வரும் செயல்களில் ஏதேனும் ஒன்றைச் செய்வதன் மூலம், டாஷ்போர்டில் ஒரு கார்டைச் சேர்க்கலாம்:
- ஒரு அளவீட்டுக் கார்டை மேனுவலாக வைக்க, அளவீட்டு லைப்ரரி பக்கப்பட்டியிலிருந்து கார்டை டாஷ்போர்டுக்கு இழுத்து விடவும்.
- டாஷ்போர்டின் மேல் இடதுபுறத்தில் அளவீட்டுக் கார்டை வைக்க, அளவீட்டு லைப்ரரி பக்கப்பட்டியில் உள்ள அளவீட்டுப் பெயரைக் கிளிக் செய்யவும்.
- நீங்கள் அகற்ற விரும்பும் கார்டில் உள்ள X ஐக் கிளிக் செய்வதன் மூலம், டாஷ்போர்டிலிருந்து ஒரு கார்டை அகற்றலாம்.
- கார்டில் உள்ள
விருப்பத்தேர்வு: அனைத்துத் தளவமைப்பு மாற்றங்களையும் செயல்தவிர்க்கவும், கார்டுகளை இயல்புநிலைக் காட்சிக்கு மீட்டமைக்கவும், இயல்புநிலைக்கு மீட்டமை என்பதைக் கிளிக் செய்யவும்.
டாஷ்போர்டில் அளவீட்டுக் கார்டுகளைத் தனிப்பயனாக்கி முடித்ததும், சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
அளவீட்டு லைப்ரரியைப் பயன்படுத்துதல்
உங்கள் பகுப்பாய்வு மேலோட்ட டாஷ்போர்டில் சேர்க்கக்கூடிய கிடைக்கும் அளவீடுகள் அனைத்தின் பட்டியலை அளவீட்டு லைப்ரரி கொண்டுள்ளது. உங்கள் தனிப்பயன் அறிக்கைகள் உட்பட, ஒவ்வொரு அறிக்கைக்கும் தொடர்புடைய கார்டு டாஷ்போர்டில் கிடைக்கிறது. உங்கள் டாஷ்போர்டில் நீங்கள் சேர்க்க விரும்பும் அளவீட்டை எளிதாகக் கண்டறியும் வகையில், இயல்புநிலையாக, கையகப்படுத்தல், நடத்தை அல்லது வாடிக்கையாளர்கள் போன்ற வகைகளின்படி அளவீடுகள் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும்.
நீங்கள் கிடைக்கும் கார்டுகளில் எத்தனை வேண்டுமானாலும் உங்கள் டாஷ்போர்டில் சேர்க்கலாம், ஆனால் ஒவ்வொரு கார்டையும் ஒரு முறை மட்டுமே சேர்க்க முடியும். டாஷ்போர்டில் அளவீட்டுக் கார்டு சேர்க்கப்படும்போது, நீங்கள் கார்டை தவறுதலாக நகலெடுப்பதைத் தவிர்ப்பதற்காக, கிடைக்கக்கூடிய விருப்பமாக அளவீட்டு லைப்ரரி பக்கப்பட்டியிலிருந்து அது அகற்றப்படும்.
முக்கியச் சொல் மூலம் ஒரு அளவீட்டைத் தேட, அளவீட்டு லைப்ரரியின் மேற்புறத்தில் உள்ள தேடல் பட்டியைப் பயன்படுத்தலாம். வகை அல்லது தலைப்பு வாரியாக அளவீட்டு லைப்ரரியை வரிசைப்படுத்த ஐகானையும் கிளிக் செய்யலாம் அல்லது அகரவரிசை (A-Z) மற்றும் தலைகீழ் அகரவரிசை (Z-A) என வரிசையை மாற்றலாம்.
அளவீட்டுக் கார்டுகளைப் பிரிவுகளாக ஒழுங்கமைத்தல்
நீங்கள் உருவாக்கும் தனிப்பயன் லேபிளின் கீழ் கார்டுகளை ஒன்றாக ஒழுங்கமைக்கப் பிரிவுகளை உருவாக்கலாம். பிரிவுகளின் மூலம், நீங்கள் பின்வரும் செயல்களில் ஏதேனும் ஒன்றைச் செய்யலாம்:
- புதிய பிரிவுகளை உருவாக்குதல்.
- பிரிவுகளில் உள்ள உள்ளடக்கத்தைத் தனிப்பயனாக்குதல்.
- அனைத்துப் பிரிவுகளையும் மறுசீரமைத்தல்.
- பிரிவுகளை நீக்குதல்.
ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அல்லது
ஐகான்களைக் கிளிக் செய்வதன் மூலம், நீங்கள் தற்காலிகமாகப் பிரிவுகளை மறைக்கவும் மீண்டும் காட்டவும் முடியும்.
உங்கள் பகுப்பாய்வு மேலோட்ட டாஷ்போர்டில் பிரிவுகளை உருவாக்குதல்
உங்கள் தரவை ஒழுங்கமைக்க, உங்கள் டாஷ்போர்டில் புதிய பிரிவுகளை உருவாக்கலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, பகுப்பாய்வு என்பதற்குச் செல்லவும்.
டாஷ்போர்டு எடிட்டரைத் திறக்க, … > தனிப்பயனாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
பின்வரும் செயல்களில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:
- டாஷ்போர்டின் மேற்புறத்தில், பிரிவைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
- தற்போதிருக்கும் எந்தப் பிரிவுகளுக்கு இடையிலும், ⊕ பிரிவைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
புதிய பிரிவுத் தலைப்பில், ஒரு பிரிவின் பெயரை உள்ளிட்டு, Enter ஐ அழுத்தவும்.
விருப்பத்தேர்வு: உங்கள் புதிய பிரிவின் உள்ளடக்கத்தைத் தனிப்பயனாக்குங்கள், பிரிவுகளின் வரிசையை மறுசீரமைக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் பகுப்பாய்வு மேலோட்ட டாஷ்போர்டில் பிரிவு உள்ளடக்கத்தைத் திருத்துதல்
பகுப்பாய்வு மேலோட்ட டாஷ்போர்டின் எந்தவொரு பிரிவிலும் உள்ள உள்ளடக்கத்தை நீங்கள் தனிப்பயனாக்கலாம். இதில் அளவீட்டுக் கார்டுகளைச் சேர்ப்பது, மாற்றுவது, அளவை மாற்றுவது அல்லது அகற்றுவது, மேலும் டாஷ்போர்டில் இருக்கும் பிரிவுகளை மறுபெயரிடுவது மற்றும் மறுசீரமைப்பது ஆகியவை அடங்கும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, பகுப்பாய்வு என்பதற்குச் செல்லவும்.
டாஷ்போர்டு எடிட்டரைத் திறக்க, … > தனிப்பயனாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் பிரிவு உள்ளடக்கத்தைத் தனிப்பயனாக்க, பின்வரும் செயல்களில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:
- ஒரு பிரிவின் தலைப்பை மறுபெயரிட,
ஐகானைக் கிளிக் செய்து, பின்னர் உங்கள் பிரிவை மறுபெயரிடவும்.
- டாஷ்போர்டில் அளவீட்டுக் கார்டைச் சேர்க்க, பின்வரும் செயல்களில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:
- பக்கப்பட்டியிலிருந்து கார்டை இழுத்து, பிரிவில் விடவும்.
- பிரிவில் நீங்கள் சேர்க்க விரும்பும் கார்டைப் பக்கப்பட்டியில் கிளிக் செய்யவும்.
- ஒரு பிரிவில் உள்ள கார்டை மறுசீரமைக்க, கார்டில் உள்ள
ஐகானைக் கிளிக் செய்து, பின்னர் டாஷ்போர்டில் உங்களுக்கு விருப்பமான இடத்திற்கு கார்டை இழுத்து விடவும்.
- கார்டின் அளவை மாற்ற, கார்டின் கீழ்-வலது மூலையைக் கிளிக் செய்து, உங்களுக்கு விருப்பமான அளவிற்கு அதை இழுக்கவும்.
- பிரிவிலிருந்து ஒரு கார்டை அகற்ற, நீங்கள் அகற்ற விரும்பும் கார்டில் உள்ள X ஐக் கிளிக் செய்யவும்.
- ஒரு பிரிவின் தலைப்பை மறுபெயரிட,
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் பகுப்பாய்வு மேலோட்ட டாஷ்போர்டில் பிரிவுகளை மறுசீரமைத்தல்
உங்கள் பகுப்பாய்வு மேலோட்ட டாஷ்போர்டில் பிரிவுகள் மேலிருந்து கீழாக எந்த வரிசையில் காட்டப்பட வேண்டும் என்பதை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, பகுப்பாய்வு என்பதற்குச் செல்லவும்.
டாஷ்போர்டு எடிட்டரைத் திறக்க, … > தனிப்பயனாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
பிரிவுகளை மறுவரிசைப்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
பிரிவுகளை மறுவரிசைப்படுத்து உரையாடலில், மேலிருந்து கீழாகப் பிரிவுகளை மறுவரிசைப்படுத்த,
ஐகானைக் கிளிக் செய்து இழுக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் பகுப்பாய்வு மேலோட்ட டாஷ்போர்டில் பிரிவுகளை நீக்குதல்
உங்கள் பகுப்பாய்வு மேலோட்ட டாஷ்போர்டில் எந்த நேரத்திலும் தனிப்பயன் பிரிவை நீங்கள் நீக்கலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, பகுப்பாய்வு என்பதற்குச் செல்லவும்.
டாஷ்போர்டு எடிட்டரைத் திறக்க, … > தனிப்பயனாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் நீக்க விரும்பும் பிரிவில், பிரிவை நீக்க
ஐகானைக் கிளிக் செய்யவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் பகுப்பாய்வு மேலோட்ட டாஷ்போர்டை மீட்டமைத்தல்
எந்த நேரத்திலும் உங்கள் பகுப்பாய்வு மேலோட்ட டாஷ்போர்டை அதன் இயல்புநிலைக்கு நீங்கள் மீட்டமைக்கலாம். இயல்புநிலை டாஷ்போர்டு காட்சியில் "டாஷ்போர்டு" எனப்படும் 1 பிரிவு மட்டுமே இடம்பெற்றிருக்கும், மேலும் இதில் அளவீட்டுக் கார்டுகளின் இயல்புநிலை வரிசை அதன் இயல்புநிலை ஒழுங்கு மற்றும் அளவாக்கத்தில் இருக்கும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, பகுப்பாய்வு என்பதற்குச் செல்லவும்.
டாஷ்போர்டு எடிட்டரைத் திறக்க, … > தனிப்பயனாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
இயல்புநிலைக்கு மீட்டமை என்பதைக் கிளிக் செய்யவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.