சரக்கு இடமாற்றங்கள் மற்றும் ஷிப்மென்ட்டுகளுக்கான பிரத்தியேக அறிக்கைகளை உருவாக்குதல்

இருப்பிடங்களுக்கு இடையிலான சரக்கு இடமாற்றங்கள் மற்றும் ஷிப்மென்ட்டுகள் தொடர்பான தகவல்களைக் காட்ட, Shopify Analytics ஐப் பயன்படுத்தி நீங்கள் பிரத்தியேகத் தரவு ஆய்வுகளை உருவாக்கலாம். சரக்கு இருப்பு நகர்வுகளைத் தடமறியவும், போக்குவரத்தில் உள்ள ஷிப்மென்ட்டுகளைக் கண்காணிக்கவும், சரக்கு இருப்புப் பெறுதல் துல்லியத்தைப் பகுப்பாய்வு செய்யவும் இந்த அறிக்கைகளைப் பயன்படுத்தவும். ஷிப்பிங் நேரங்களை மேம்படுத்தவும், தேவைப்படும்போது சரியான இடத்தை இருப்பு சென்றடைவதை உறுதிசெய்யவும், இருப்பு ஏற்பு மற்றும் நிராகரிப்பு விகிதங்கள் மூலம் தரச் சிக்கல்களைக் கண்டறியவும் இந்த அறிக்கைகளை நீங்கள் பயன்படுத்தலாம்.

ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் சரக்கு இருப்பை நகர்த்துவதற்கான கோரிக்கைகளே சரக்கு இடமாற்றங்கள் ஆகும். வரைவு, அனுப்பத் தயாராக உள்ளது, செயலில் உள்ளது, இடமாற்றப்பட்டது அல்லது ரத்து செய்யப்பட்டது போன்ற பல்வேறு நிலைகளின் மூலம் இடமாற்றங்கள் முன்னேறும். இடமாற்றத்தின் ஒரு பகுதியாகச் சரக்கு இருப்பின் பெளதிக நகர்வை ஷிப்மென்ட்டுகள் குறிக்கின்றன. இடமாற்றங்கள் மற்றும் ஷிப்மென்ட்டுகளில் மாறுபாட்டு நிலையில் தடமறியப்படும் தனிப்பட்ட தயாரிப்புகளின் வரிசை உருப்படிகள் இருக்கும்.

தரவு ஆய்வை உருவாக்கும்போது, உங்களின் சரக்கு இடமாற்றம் மற்றும் ஷிப்மென்ட் அறிக்கைகளைத் தனிப்பயனாக்கப் பல்வேறு பரிமாணங்கள் மற்றும் வடிப்பான்களைப் பயன்படுத்தலாம். Shopify Analytics-இன் உள்ளமைவுக் குழுவில் பரிமாணங்கள் மற்றும் வடிப்பான்களைப் பற்றி மேலும் அறிக.

இடமாற்றம் மற்றும் ஷிப்மென்ட் அறிக்கைகளுக்குக் கிடைக்கும் அளவீடுகள்

பிரத்தியேகச் சரக்கு இடமாற்றம் மற்றும் ஷிப்மென்ட் அறிக்கைகளை உருவாக்கும்போது, பின்வரும் அளவீடுகளைப் பயன்படுத்தலாம்.

பிரத்தியேக அறிக்கைகளை உருவாக்குவதற்கான சரக்கு இடமாற்றம் மற்றும் ஷிப்மென்ட் அளவீடுகள்
அளவீடுவிளக்கம்
ஏற்பு விகிதம்ஏற்கப்பட்ட, பெறப்பட்ட உருப்படிகளின் சதவீதம்.
ஏற்கப்பட்ட அளவுஇலக்கு இடத்தில் ஏற்கப்பட்ட யூனிட்களின் எண்ணிக்கை.
ஆர்டர் செய்யப்பட்ட அளவுஇடமாற்றத்திற்கு ஆர்டர் செய்யப்பட்ட சரக்கு உருப்படிகளின் அளவு.
பெறப்பட்ட அளவுஏற்கப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட உருப்படிகள் என இரண்டும் உட்பட இலக்கு இடத்தில் பெறப்பட்ட யூனிட்களின் மொத்த எண்ணிக்கை.
நிராகரிக்கப்பட்ட அளவுஇலக்கு இடத்தில் பெறும்போது நிராகரிக்கப்பட்ட யூனிட்களின் எண்ணிக்கை.
நிராகரிப்பு விகிதம்நிராகரிக்கப்பட்ட, பெறப்பட்ட உருப்படிகளின் சதவீதம்.
ஷிப் செய்யப்பட்ட அளவுமூல இடத்திலிருந்து ஷிப் செய்யப்பட்ட யூனிட்களின் எண்ணிக்கை.
இடமாற்ற வரிசை உருப்படிகள்இடமாற்றங்கள் முழுவதிலுமான வரிசை உருப்படிகளின் எண்ணிக்கை.
இடமாற்றங்கள்சரக்கு இடமாற்றங்களின் எண்ணிக்கை.
ஷிப் செய்யப்பட்ட பிரத்யேக உருப்படிகள்ஷிப் செய்யப்பட்ட பிரத்யேகச் சரக்கு உருப்படிகளின் எண்ணிக்கை.
இடமாற்றப்பட்ட பிரத்யேக உருப்படிகள்இடமாற்றப்பட்ட பிரத்யேகச் சரக்கு உருப்படிகளின் எண்ணிக்கை.

இடமாற்றம் மற்றும் ஷிப்மென்ட் அறிக்கைகளுக்குக் கிடைக்கும் பரிமாணங்கள்

பல்வேறு பரிமாணங்களைப் பயன்படுத்தி உங்கள் அறிக்கைகளைக் குழுவாக்கலாம் மற்றும் வடிக்கலாம். பிரத்தியேகச் சரக்கு இடமாற்றம் மற்றும் ஷிப்மென்ட் அறிக்கைகளை உருவாக்கும்போது பின்வரும் பரிமாணங்கள் கிடைக்கும்.

இடமாற்றப் பரிமாணங்கள்

இடமாற்றப் பரிமாணங்கள்
பரிமாணம்விளக்கம்
ஆவணச் சீரான வள அடையாளங்காட்டி (URI)Shopify-இல் இந்த இடமாற்றத்தை அடையாளங்காணும் URI பாதை.
சரக்கு இருப்பு இலக்கு IDசரக்கு இடமாற்றங்களைப் பெறும் இருப்பிடத்திற்கான Shopify அடையாளங்காட்டி.
சரக்கு உருப்படி IDசரக்கு உருப்படிக்கான Shopify அடையாளங்காட்டி.
சரக்கு இருப்பு மூல இட IDசரக்கு இடமாற்றங்களை அனுப்பும் இருப்பிடத்திற்கான Shopify அடையாளங்காட்டி.
தயாரிப்பு மாறுபாடு IDதயாரிப்பு மாறுபாட்டிற்கான Shopify அடையாளங்காட்டி.
பணியாளர் IDஇடமாற்றத்தை உருவாக்கிய அல்லது நிர்வகித்த பணியாளருக்கான Shopify அடையாளங்காட்டி.
இடமாற்றச் செயலி IDஇடமாற்றத்தை உருவாக்கிய செயலிக்கான Shopify அடையாளங்காட்டி.
இடமாற்றச் செயலி பெயர்இடமாற்றத்தை உருவாக்கிய செயலி அல்லது ஒருங்கிணைப்பின் பெயர்.
இடமாற்றம் உருவாக்கப்பட்டதுஇடமாற்றம் உருவாக்கப்பட்ட தேதி மற்றும் நேரம்.
இடமாற்ற IDசரக்கு இடமாற்றத்திற்கான Shopify அடையாளங்காட்டி.
இடமாற்ற வரிசை உருப்படி IDஇடமாற்ற வரிசை உருப்படிக்கான Shopify அடையாளங்காட்டி.
இடமாற்றப் பெயர்T0001 போன்ற இடமாற்றத்தின் காட்சிப் பெயர்.
இடமாற்றக் குறிப்புஇடமாற்றத்திற்கான குறிப்புகள் அல்லது வழிமுறைகள்.
இடமாற்றக் குறிப்புப் பெயர்இடமாற்றத்திற்கான வெளிப்புறக் குறிப்பு எண்.
இடமாற்றத்தின் நிலைஇடமாற்றத்தின் தற்போதைய நிலை.
இடமாற்ற டேக்குகள்இடமாற்ற வகைப்படுத்தலுக்கான பிரத்தியேக டேக்குகள்.

இடப் பரிமாணங்கள்

இடப் பரிமாணங்கள்
பரிமாணம்விளக்கம்
இலக்கு நகரம்இலக்கு இடத்தின் நகரம்.
இலக்கு நாடுஇலக்கு இடத்தின் நாடு.
இலக்குப் பெயர்இலக்கு இடத்தின் பெயர்.
இலக்கு மாகாணம்இலக்கு இடத்தின் மாகாணம் அல்லது மாநிலம்.
மூல இடத்தின் நகரம்மூல இடத்தின் நகரம்.
மூல இடத்தின் நாடுமூல இடத்தின் நாடு.
மூல இடத்தின் பெயர்மூல இடம் அல்லது சப்ளையரின் பெயர்.
மூல இடத்தின் மாகாணம்மூல இடத்தின் மாகாணம் அல்லது மாநிலம்.

தயாரிப்புப் பரிமாணங்கள்

தயாரிப்புப் பரிமாணங்கள்
பரிமாணம்விளக்கம்
தயாரிப்பு மாறுபாடு SKUதயாரிப்பு மாறுபாட்டின் SKU.
தயாரிப்பு மாறுபாட்டின் தலைப்புதயாரிப்புப் பெயர் மற்றும் மாறுபாடு விவரங்கள்.

ஷிப்மென்ட் பரிமாணங்கள்

ஷிப்மென்ட் பரிமாணங்கள்
பரிமாணம்விளக்கம்
கேரியர்ஷிப்பிங் கேரியர் நிறுவனத்தின் பெயர்.
கேரியர் குறியீடுகேரியர் குறியீடு அல்லது சுருக்கம்.
எதிர்பார்க்கப்படும் டெலிவரி நேரம்ஷிப்மென்ட் வந்து சேரும் என மதிப்பிடப்பட்ட தேதி மற்றும் நேரம்.
சரக்கு இருப்பு இலக்கு IDசரக்கு இடமாற்றங்களைப் பெறும் இருப்பிடத்திற்கான Shopify அடையாளங்காட்டி.
சரக்கு உருப்படி IDசரக்கு உருப்படிக்கான Shopify அடையாளங்காட்டி.
சரக்கு இருப்பு மூல இட IDசரக்கு இடமாற்றங்களை அனுப்பும் இருப்பிடத்திற்கான Shopify அடையாளங்காட்டி.
தயாரிப்பு மாறுபாடு IDதயாரிப்பு மாறுபாட்டிற்கான Shopify அடையாளங்காட்டி.
ஷிப்மென்ட் IDஷிப்மென்ட்டுக்கான Shopify அடையாளங்காட்டி.
ஷிப்மென்ட் வரிசை உருப்படி IDஷிப்மென்ட் வரிசை உருப்படிக்கான Shopify அடையாளங்காட்டி.
ஷிப்மென்ட் பெயர்இடமாற்றப் பெயரைப் போன்று ஷிப்மென்ட் எண்ணிலிருந்து கணக்கிடப்படும் ஷிப்மென்ட் அடையாளங்காட்டி.
ஷிப்மென்ட் எண்இடமாற்றத்திற்குள்ளான எண்.
ஷிப்மென்ட் பெறப்பட்ட நேரம்ஷிப்மென்ட் தொடக்கத்தில் பெறப்பட்ட தேதி மற்றும் நேரம்.
ஷிப்மென்ட் அனுப்பப்பட்ட நேரம்ஷிப்மென்ட் அனுப்பப்பட்ட தேதி மற்றும் நேரம்.
ஷிப்மென்ட் நிலைஷிப்மென்ட்டின் தற்போதைய நிலை.
பணியாளர் IDஷிப்மென்ட்டை உருவாக்கிய அல்லது நிர்வகித்த பணியாளருக்கான Shopify அடையாளங்காட்டி.
தடமறிவதற்கான எண்ஷிப்மென்ட்டை அடையாளம் காண கேரியர் பயன்படுத்தும் தடமறிவதற்கான எண்.
தடமறிவதற்கான URLகேரியரின் இணையதளத்தில் ஷிப்மென்ட்டைத் தடமறிவதற்கான URL.
இடமாற்ற IDஇந்த ஷிப்மென்ட்டை உருவாக்கிய இடமாற்றத்திற்கான Shopify அடையாளங்காட்டி.

பணியாளர் பரிமாணங்கள்

பணியாளர் பரிமாணங்கள்
பரிமாணம்விளக்கம்
API கிளையண்ட் IDஒரு API மூலம் இடமாற்றம் உருவாக்கப்பட்டிருந்தால், இது API கிளையண்ட் ID ஐக் காட்டும்.
பணியாளரின் பெயர்இடமாற்றத்தை உருவாக்கிய அல்லது நிர்வகித்த பணியாளர்.

உதாரணம்: படிநிலைக் குழுவாக்கத்துடனான மேம்பட்ட வினவல்

பல்வேறு பரிமாணங்கள் முழுவதும் விரிவான விவரங்களுடன் இடமாற்றங்களைப் பகுப்பாய்வு செய்ய இந்த மேம்பட்ட வினவலைப் பயன்படுத்தவும். விவரத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் துணை மொத்தங்களைக் காட்டுவதன் மூலம், எந்தெந்த இடமாற்றங்கள் மற்றும் தயாரிப்புகளுக்குக் கவனம் தேவை என்பதை அடையாளம் காண இந்த வினவல் உங்களுக்கு உதவுகிறது. ஒவ்வொரு ஷிப்மென்ட்டிலும் உள்ள ஒவ்வொரு தயாரிப்பு மாறுபாட்டிற்கான பெறுதல் தரத்தை நீங்கள் தடமறியலாம், இடமாற்றங்கள் முழுவதுமான பணியாளர்களின் செயல்திறனை அளவிடலாம் மற்றும் அளவு மற்றும் ஏற்பு விகிதங்களின் அடிப்படையில் செயல்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம். படிநிலைக் கட்டமைப்பு தொடர்பான தரவை ஒன்றாகத் தொகுக்கிறது, இதன் மூலம் பெறுவதில் ஏற்படும் சிக்கல்கள், ஷிப்பிங் தாமதங்கள் அல்லது குறிப்பிட்ட இடங்களுக்கு இடையிலான சரக்கு இருப்பு நகர்வுகள் போன்றவற்றின் பேட்டர்ன்களைக் கண்டறிவது எளிதாகிறது.

FROM inventory_shipments
  SHOW shipped_quantity, received_quantity, accepted_quantity, rejected_quantity,
    acceptance_rate
  GROUP BY transfer_name, inventory_origin_name, destination_name, transfer_note,
    staff_member_name, shipment_name, shipment_status, shipment_shipped_at,
    shipment_received_at, product_variant_sku, product_variant_title WITH
    GROUP_TOTALS, TOTALS
  SINCE startOfDay(-90d) UNTIL today
  ORDER BY transfer_name DESC,
    received_quantity__transfer_name_inventory_origin_name_totals DESC,
    received_quantity__transfer_name_inventory_origin_name_destination_name_totals
    DESC,
    received_quantity__transfer_name_inventory_origin_name_destination_name_transfer_note_totals
    DESC,
    received_quantity__transfer_name_inventory_origin_name_destination_name_transfer_note_staff_member_name_totals
    DESC,
    received_quantity__transfer_name_inventory_origin_name_destination_name_transfer_note_staff_member_name_shipment_name_totals
    DESC,
    received_quantity__transfer_name_inventory_origin_name_destination_name_transfer_note_staff_member_name_shipment_name_shipment_status_totals
    DESC,
    received_quantity__transfer_name_inventory_origin_name_destination_name_transfer_note_staff_member_name_shipment_name_shipment_status_shipment_shipped_at_totals
    DESC,
    received_quantity__transfer_name_inventory_origin_name_destination_name_transfer_note_staff_member_name_shipment_name_shipment_status_shipment_shipped_at_shipment_received_at_totals
    DESC,
    received_quantity__transfer_name_inventory_origin_name_destination_name_transfer_note_staff_member_name_shipment_name_shipment_status_shipment_shipped_at_shipment_received_at_product_variant_sku_totals
    DESC, received_quantity DESC, inventory_origin_name ASC, destination_name ASC,
    transfer_note ASC, staff_member_name ASC, shipment_name ASC, shipment_status ASC,
    shipment_shipped_at ASC, shipment_received_at ASC, product_variant_sku ASC,
    product_variant_title ASC
VISUALIZE received_quantity TYPE table

உதாரணம்: படிநிலைக் குழுவாக்கத்துடனான சரக்கு இருப்பு இடமாற்றங்களின் குறியீட்டுப் பகுப்பாய்வு

இடம், நிலை மற்றும் தயாரிப்பு வாரியாக விரிவான முறிவுகளுடன் இடமாற்றங்கள் முழுவதும் ஆர்டர் செய்யப்பட்ட அளவுகளைப் பகுப்பாய்வு செய்ய இந்த மேம்பட்ட வினவலைப் பயன்படுத்தவும். உங்கள் இடங்கள் முழுவதும் இடமாற்ற ஆர்டர்களின் அளவு மற்றும் விநியோகத்தைப் புரிந்துகொள்ள இந்த வினவல் உங்களுக்கு உதவுகிறது. இடமாற்ற நிலையின் அடிப்படையில் ஆர்டர் செய்யப்பட்ட அளவுகளை நீங்கள் தடமறியலாம், குறிப்பிட்ட இடங்களுக்கு இடையே எந்தெந்தத் தயாரிப்புகள் அடிக்கடி இடமாற்றப்படுகின்றன என்பதை அடையாளம் காணலாம் மற்றும் டேக்குகள், உருவாக்கப்பட்ட தேதிகளைப் பயன்படுத்தி காலப்போக்கில் இடமாற்ற பேட்டர்ன்களைப் பகுப்பாய்வு செய்யலாம். படிநிலைக் கட்டமைப்பு தொடர்பான தரவை ஒன்றாகத் தொகுக்கிறது, இதன் மூலம் ஆர்டர் செய்யும் பேட்டர்ன்களில் உள்ள டிரெண்டுகளைக் கண்டறிவதும் சரக்கு இருப்பு நகர்வுகளைத் திட்டமிடுவதும் எளிதாகிறது.

FROM inventory_transfers
  SHOW ordered_quantity
  GROUP BY transfer_name, inventory_origin_name, destination_name,
    transfer_status, transfer_note, transfer_tags, transfer_created_at,
    inventory_transfer_line_item_id, product_variant_sku WITH GROUP_TOTALS, TOTALS
  SINCE startOfDay(-90d) UNTIL today
  ORDER BY transfer_name DESC,
    ordered_quantity__transfer_name_inventory_origin_name_totals DESC,
    ordered_quantity__transfer_name_inventory_origin_name_destination_name_totals
    DESC,
    ordered_quantity__transfer_name_inventory_origin_name_destination_name_transfer_status_totals
    DESC,
    ordered_quantity__transfer_name_inventory_origin_name_destination_name_transfer_status_transfer_note_totals
    DESC,
    ordered_quantity__transfer_name_inventory_origin_name_destination_name_transfer_status_transfer_note_transfer_tags_totals
    DESC,
    ordered_quantity__transfer_name_inventory_origin_name_destination_name_transfer_status_transfer_note_transfer_tags_transfer_created_at_totals
    DESC,
    ordered_quantity__transfer_name_inventory_origin_name_destination_name_transfer_status_transfer_note_transfer_tags_transfer_created_at_inventory_transfer_line_item_id_totals
    DESC, ordered_quantity DESC, inventory_origin_name ASC, destination_name ASC,
    transfer_status ASC, transfer_note ASC, transfer_tags ASC, transfer_created_at
    ASC, inventory_transfer_line_item_id ASC, product_variant_sku ASC
VISUALIZE ordered_quantity

இடமாற்றம் மற்றும் ஷிப்மென்ட் அறிக்கைகளுக்கான சிறந்த நடைமுறைகள்

சிறந்த இடமாற்றம் மற்றும் ஷிப்மென்ட் அறிக்கைகளை உருவாக்க இந்தக் குறிப்புகளைப் பயன்படுத்தவும்.

இடமாற்ற நிலையின்படி வடிகட்டல்

இடமாற்றச் செயல்முறையின் குறிப்பிட்ட கட்டங்களில் கவனம் செலுத்த இடமாற்ற நிலை வடிப்பான்களைப் பயன்படுத்தவும்:

  • ready_to_ship: அனுப்புவதற்குத் தயாராக உள்ள இடமாற்றங்கள்
  • in_progress: செயலில் உள்ள இடமாற்றங்கள்
  • transferred: நிறைவடைந்த இடமாற்றங்கள்
  • canceled: ரத்துசெய்யப்பட்ட இடமாற்றங்கள்

தேதிப் புலங்களின்படி வடிகட்டல்

உங்கள் அறிக்கையிடல் தேவைகளுக்குப் பொருத்தமான தேதிப் புலங்களைப் பயன்படுத்தவும்:

  • இடமாற்றம் உருவாக்கப்பட்ட நேரம்: இடமாற்றம் உருவாக்கப்பட்ட தேதி மற்றும் நேரம்
  • ஷிப்மென்ட் அனுப்பப்பட்ட நேரம்: ஷிப்மென்ட் அனுப்பப்பட்ட தேதி மற்றும் நேரம்
  • ஷிப்மென்ட் பெறப்பட்ட நேரம்: ஷிப்மென்ட் தொடக்கத்தில் பெறப்பட்ட தேதி மற்றும் நேரம்
  • எதிர்பார்க்கப்படும் டெலிவரி நேரம்: ஷிப்மென்ட் வந்து சேரும் என மதிப்பிடப்பட்ட தேதி மற்றும் நேரம்

இடத்தின்படி வடிகட்டல்

குறிப்பிட்ட இடங்களுக்கு இடையேயான சரக்கு இருப்பு நகர்வுகளைத் தடமறிய, குறிப்பிட்ட மூல இடம் அல்லது இலக்கு இடங்களின் மூலம் நீங்கள் வடிகட்டலாம். உதாரணத்திற்கு:

WHERE inventory_origin_name = 'Main Warehouse'
  AND inventory_destination_name IN ('Store A', 'Store B', 'Store C')

தயாரிப்பின்படி வடிகட்டுதல்

குறிப்பிட்ட சரக்கு உருப்படிகளைத் தடமறிய குறிப்பிட்ட SKUகள் அல்லது தயாரிப்புகளில் கவனம் செலுத்துங்கள். உதாரணமாக, குறிப்பிட்ட SKU பேட்டர்னைக் கொண்ட தயாரிப்புகளுக்கு நீங்கள் வடிகட்டலாம்:

WHERE product_variant_sku LIKE 'WIDGET-%'

வினவல் செயல்திறனை மேம்படுத்துதல்

வினவல் செயல்திறனை மேம்படுத்த, குறிப்பிட்ட தேதிக்கான வரம்புகளைப் பயன்படுத்தவும். சுருக்கப்பட்ட தேதிக்கான வரம்புகள் முடிவுகளை விரைவாக வழங்கும்.

குறைந்த பரிமாணங்களுடன் தொடங்குவதன் மூலம் குழுவாக்கும் பரிமாணங்களைக் கட்டுப்படுத்துங்கள், பின்னர் தேவைக்கேற்ப அதிகப் பரிமாணங்களைச் சேர்க்கவும்.

தரவைக் குழுவாக்குவதற்கும் தொகுப்பதற்கும் முன்பு அதன் அளவைக் குறைக்க, WHERE (வடிகட்டுதல்) உட்பிரிவுகளைப் பயன்படுத்தி முன்கூட்டியே வடிப்பான்களைப் பயன்படுத்துங்கள்.

ஏற்பு விகிதங்கள் அல்லது அளவுகள் போன்ற கணக்கிடப்பட்ட அளவீடுகளை வடிகட்ட, திரட்டல்களுக்கு HAVING என்பதைப் பயன்படுத்தவும்.

இடமாற்றம் மற்றும் ஷிப்மென்ட் அறிக்கைகளில் உள்ள சிக்கல்களைத் தீர்த்தல்

உங்கள் இடமாற்றம் மற்றும் ஷிப்மென்ட் அறிக்கைகளில் சிக்கல்களைச் சந்தித்தால், பின்வரும் பொதுவான சிக்கல்களையும் தீர்வுகளையும் மதிப்பாய்வு செய்யவும்.

அறிக்கையில் எந்தத் தரவும் தோன்றவில்லை

உங்கள் அறிக்கையில் எந்தத் தரவும் தோன்றவில்லை என்றால், தேர்ந்தெடுக்கப்பட்ட தேதிக்கான வரம்பு மற்றும் நிலையில் இடமாற்றங்கள் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்தவும். நீங்கள் பகுப்பாய்வு செய்ய விரும்பும் இடமாற்றங்களைச் சேர்க்க, உங்கள் தேதிக்கான வரம்பு அல்லது நிலை வடிப்பான்களைச் சரிசெய்யவும்.

அறிக்கையில் விடுபட்ட வரைவு இடமாற்றங்கள்

இடமாற்றம் சார்ந்த அளவீடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் மட்டுமே வரைவு இடமாற்றங்கள் காட்டப்படும். வரைவு இடமாற்றங்களைப் பார்க்க எந்தவொரு ஷிப்மென்ட் அளவீடுகளையும் அகற்றவும்.

பெறப்பட்ட அளவுகள் பூஜ்ஜியமாகக் காட்டப்படுகின்றன

பெறப்பட்ட அளவுகள் 0 எனக் காட்டப்பட்டால், ஷிப்மென்ட்கள் இன்னும் பெறப்படாமல் இருக்கலாம். ஷிப்மென்ட் நிலையை உறுதிப்படுத்த, ஷிப்மென்ட் நிலை பரிமாணத்தை மதிப்பாய்வு செய்யவும்.

விடுபட்ட தயாரிப்புத் தகவல்

சில இடமாற்றங்களில் தயாரிப்பு மாறுபாடுகள் இல்லாமல் இருக்கலாம். தயாரிப்புத் தகவலுடன் உள்ள பதிவுகளை வடிகட்ட, பின்வரும் வடிப்பானை உங்கள் வினவலில் சேர்க்கவும்:

WHERE product_variant_sku IS NOT NULL

ஏற்பு விகிதம் கணக்கிடப்படவில்லை

ஏற்பு விகிதம் கணக்கிடப்படவில்லை என்றால், ஏற்பு விகிதத்திற்குப் பெறப்பட்ட அளவுகள் 0-ஐ விட அதிகமாக இருக்க வேண்டும். பூஜ்ஜியப் பிழைகளால் வகுப்பதைத் தவிர்க்க, உங்கள் வினவல் பெறப்பட்ட அளவுகளைக் கொண்ட ஷிப்மென்ட்களுக்கு வடிகட்டுகிறதா என்பதை உறுதிப்படுத்தவும்:

WHERE received_quantity > 0