நடத்தை அறிக்கைகள்

வாடிக்கையாளர்களின் ஷாப்பிங் நடத்தையைப் புரிந்துகொள்ள நடத்தை அறிக்கைகள் உதவுகின்றன. பின்வரும் செயல்பாடுகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்த நுண்ணறிவுகளை இந்த அறிக்கைகள் உங்கள் வணிகத்திற்கு வழங்கலாம்:

  • உங்கள் தயாரிப்புகளை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் சிறப்பாகச் சந்தைப்படுத்துதல்
  • உங்களின் சிறந்த இலக்கு பார்வையாளர்களுக்கு அப்செல் செய்தல்
  • விளம்பர விலை நிர்ணயம் மற்றும் தயாரிப்புத் தொகுப்புகளை உருவாக்குதல்
  • உங்கள் சராசரி ஆர்டர் மொத்தத் தொகையை அதிகரித்தல்.

எடுத்துக்காட்டாக, உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் தீமில் ஒரு தேடல் பட்டி இருந்தால், உங்கள் ஸ்டோரில் தயாரிப்புகளைத் தேடுவதற்குப் பார்வையாளர்கள் எந்தச் சொற்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை தேடல் வினவலின்படி தேடல்கள் அறிக்கையில் நீங்கள் மதிப்பாய்வு செய்யலாம். எவ்வித முடிவுகளையும் தராத தேடல் சொற்களையும் முடிவுகள் இல்லாத தேடல்கள் அறிக்கையில் நீங்கள் மதிப்பாய்வு செய்யலாம்.

வாடிக்கையாளர்கள் தாங்கள் தேடுவதை எளிதாகக் கண்டறியும் வகையிலும், கூடுதல் வாங்குதல்களைச் செய்ய அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் உங்கள் ஸ்டோரை வடிவமைத்து, உங்கள் விற்பனையை அதிகரிக்க நடத்தை அறிக்கைகளில் உள்ள தரவைப் பயன்படுத்தலாம்.

உங்கள் நடத்தை அறிக்கைகளைப் பார்க்கவும்

நடத்தை அறிக்கைகளை மட்டும் காண்பிக்கும்படி உங்கள் அறிக்கைகள் பட்டியலை வடிகட்டலாம்.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, பகுப்பாய்வு > அறிக்கைகள் பகுதிக்குச் செல்லவும்.

  2. வகை வடிப்பானைக் கிளிக் செய்யவும்.

  3. நடத்தை அறிக்கைகளை மட்டும் காண்பிக்கும்படி அறிக்கைகளை வடிகட்ட, நடத்தை என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்
  1. Shopify செயலியில் இருந்து, Menu ஐகானைத் தட்டவும்.

  2. பகுப்பாய்வு > அறிக்கைகள் என்பதைத் தட்டவும்.

  3. வடிப்பான் ஐகானைத் தட்டி, பின்னர் வகை என்பதைத் தட்டவும்.

  4. நடத்தை அறிக்கைகளை மட்டும் காண்பிக்கும்படி அறிக்கைகளை வடிகட்ட, நடத்தை என்பதைத் தட்டவும்.

  5. வடிகட்டப்பட்ட அறிக்கைகள் பட்டியலுக்குத் திரும்ப, < வடிகட்டுதல் அல்லது ← என்பதைத் தட்டி, பின்னர் X என்பதைத் தட்டவும்.

மாற்று வீதப் பகுப்பு

உங்கள் பார்வையாளர்கள் உங்கள் ஸ்டோரில் இருந்து செக்அவுட்டிற்கு செல்லும் பாதையை மாற்று வீதப் பகுப்பு அறிக்கையின் மூலம் நீங்கள் காட்சிப்படுத்திப் பார்க்கலாம்.

ஒரு படிக்கான அமர்வுகளின் எண்ணிக்கையை மொத்த அமர்வுகளின் எண்ணிக்கையால் வகுப்பதன் மூலம் ஒவ்வொரு படிக்குமான மாற்று வீதம் கணக்கிடப்படுகிறது. எடுத்துக்காட்டாக, செக்அவுட் சென்றடைந்த அமர்வுகளின் எண்ணிக்கையை மொத்த அமர்வுகளின் எண்ணிக்கையால் வகுப்பதன் மூலம் செக்அவுட் சென்றடைந்தது என்ற படி கணக்கிடப்படுகிறது.

புனல் காட்சிப்படுத்தல்

இயல்புநிலையாக, மாற்று வீதப் பகுப்பு அறிக்கை ஒரு புனல் விளக்கப்படக் காட்சிப்படுத்தலைக் காண்பிக்கும். புனல் விளக்கப்படம் பின்வரும் அளவீடுகளை வரிசைப்படி ஆதரிக்கிறது:

  1. அனைத்து அமர்வுகள்
  2. கார்ட்டில் சேர்த்தல்கள் உள்ள அமர்வுகள்
  3. செக்அவுட் சென்றடைந்த அமர்வுகள்
  4. செக்அவுட்டை நிறைவுசெய்த அமர்வுகள்

அறிக்கையில் நீங்கள் சேர்க்கும் கூடுதல் அளவீடுகள் எதுவும் புனல் காட்சிப்படுத்தலில் காண்பிக்கப்படாது.

கீழ்வரும் வகையான புனல்களுக்கு இடையே காட்சிப்படுத்தலை மாற்ற, திறந்த புனல் நிலைமாற்றியை நீங்கள் இயக்கலாம் மற்றும் முடக்கலாம்:

திறந்த மற்றும் மூடிய புனல் காட்சிப்படுத்தலின் வரையறைகள் பற்றிய விளக்கம்.
புனல் வகைவிளக்கம்
திறந்தபார்வையாளர்கள் எந்தவொரு பாதையிலும் புனலில் நுழைந்து எந்தவொரு வரிசையிலும் படிகளைச் செய்யும் அமர்வுகளை இது உள்ளடக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு பார்வையாளர் கார்ட்டில் உருப்படிகளைச் சேர்க்காமலேயே நேரடியாக செக்அவுட் பக்கத்தைச் சென்றடையலாம். அவர்கள் முந்தைய படிகளைத் தவிர்த்திருந்தாலும், இந்த அமர்வு செக்அவுட் சென்றடைந்தது என்ற படியில் சேர்க்கப்படும்.
மூடியபார்வையாளர்கள் அனைத்துப் படிகளையும் தொடர்ச்சியான வரிசையில் நிறைவுசெய்யும் அமர்வுகளை மட்டுமே இது உள்ளடக்கும். எடுத்துக்காட்டாக, செக்அவுட்டை நிறைவுசெய்தது என்ற படியில் ஒரு அமர்வு கணக்கிடப்பட, பயனர் முதலில் கார்ட்டில் உருப்படிகளைச் சேர்க்க வேண்டும், பின்னர் செக்அவுட் பக்கத்திற்குச் செல்ல வேண்டும், இறுதியாக செக்அவுட்டை நிறைவுசெய்ய வேண்டும், இவை அனைத்தும் அதே வரிசையில் இருக்க வேண்டும். அவர்கள் ஏதேனும் ஒரு படியைத் தவிர்த்தால் அல்லது அவற்றை வரிசைக்கு வெளியே செய்தால், அடுத்தடுத்த படிகளில் அந்த அமர்வு கணக்கிடப்படாது.

மூடிய புனலின் ஒவ்வொரு படியின் மீதும் உங்கள் கர்சரை நகர்த்தி, இந்தப் படியைச் சென்றடைந்தது மற்றும் பாதியில் விலகியது போன்ற வீதங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட மாற்று வீதங்களை உதவிக்குறிப்பில் பார்க்கலாம்.

காலப்போக்கில் மாற்று வீதம்

தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட காலப்பகுதியில், கொள்முதல் செய்யும் ஆன்லைன் ஸ்டோர் பார்வையாளர்களின் சதவீதத்தை காலப்போக்கில் மாற்று வீதம் அறிக்கை காண்பிக்கும்.

காலப்போக்கில் மாற்று வீதம் அறிக்கையில் பின்வரும் நெடுவரிசைகள் உள்ளன:

காலப்போக்கில் வாடிக்கையாளர் கொள்முதல் நடத்தை குறித்த விவரங்களை வழங்கும் அளவீடுகள்.
நெடுவரிசைவிளக்கம்
நேரத் தொகுத்தல்நாள், வாரம் அல்லது மாதம் போன்று நீங்கள் தேர்ந்தெடுத்த நேரத் தொகுப்பு.
அமர்வுகள்உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் உள்ள அமர்வுகளின் மொத்த எண்ணிக்கை.
கார்ட்டில் சேர்த்தல்கள் உள்ள அமர்வுகள்வாடிக்கையாளர் ஒருவர் கார்ட்டில் ஒரு தயாரிப்பைச் சேர்த்த அமர்வுகளின் மொத்த எண்ணிக்கை.
செக்அவுட் சென்றடைந்த அமர்வுகள்செக்அவுட்டின் போது பயனர் உள்ளீடு (எடுத்துக்காட்டாக, விசையை அழுத்துதல் அல்லது மவுஸைக் கிளிக் செய்தல்) வழங்கிய அமர்வுகளின் மொத்த எண்ணிக்கை.
செக்அவுட்டை நிறைவுசெய்த அமர்வுகள்வாடிக்கையாளர் ஒருவர் ஒரு தயாரிப்பை வாங்கிய அமர்வுகளின் மொத்த எண்ணிக்கை.
மாற்று வீதம்கொள்முதலில் முடிந்த அமர்வுகளின் சதவீதம்.

உங்கள் ஸ்டோர் அமர்வுகளை எவ்வளவு சிறப்பாக விற்பனையாக மாற்றுகிறது என்பதைப் புரிந்துகொள்ள இந்தத் தகவல் உங்களுக்கு உதவும்.

நீங்கள் இந்த அறிக்கையைத் திறக்கும்போது, சில வினாடிகள் முன்னும் பின்னுமாக தரவு புதுப்பித்த நிலையில் இருக்கும். புதிய தரவைச் சேர்க்க, அறிக்கையை மீண்டும் திறக்கலாம் அல்லது புதுப்பிக்கலாம்.

இந்த அறிக்கையில் நீங்கள் வெவ்வேறு தேதி வரம்புகளிலான தரவை ஒப்பிடலாம்.

எடுத்துக்காட்டு: வணிக முடிவுகளை எடுக்க, காலப்போக்கிலான மாற்று வீதம் அறிக்கையைப் பயன்படுத்துதல்

சாராவிடம் ஒரு விளையாட்டுப் பொருட்கள் ஸ்டோர் உள்ளது. பலரும் அவரது ஆன்லைன் ஸ்டோரைப் பார்வையிடுகிறார்கள், ஆனால் அவருக்கு இன்னும் அதிக விற்பனை கிடைக்கவில்லை.

தனது Shopify நிர்வாகியில், சாரா பகுப்பாய்வு > அறிக்கைகள் என்பதைக் கிளிக் செய்கிறார். நடத்தை கார்டில், அறிக்கைகள் தலைப்பின் கீழ், காலப்போக்கில் மாற்று வீதம் என்பதைக் கிளிக் செய்கிறார். இதன்படி குழுவாக்கு கீழ்தோன்றும் மெனுவைக் கிளிக் செய்து, அவரது மாற்று வீத அறிக்கையை மாதம் அடிப்படையில் குழுவாக்குகிறார்.

கடந்த மாதம் தனது ஆன்லைன் ஸ்டோரின் மாற்று வீதம் 5% ஆக இருந்ததைச் சாரா கண்டறிகிறார், அதாவது அந்த மாதத்தில் அவரது ஆன்லைன் ஸ்டோரைப் பார்வையிட்டவர்களில் 5% பேர் ஒரு தயாரிப்பை வாங்கியுள்ளனர். அடுத்த மாதத்தில், சாரா தனது சேகரிப்புகளை மறுசீரமைத்து, தனது மாற்று வீதத்தில் ஏற்படும் மாற்றங்களைக் காண ஒரு புதிய தள்ளுபடிக் குறியீட்டை அறிமுகப்படுத்துகிறார், மேலும் தனது முன்னேற்றத்தைக் கண்காணிக்க காலப்போக்கில் மாற்று வீதம் அறிக்கையைப் பயன்படுத்துகிறார்.

இணையச் செயல்திறன் அறிக்கைகள்

உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் இணையச் செயல்திறனை மேம்படுத்துவது, வாடிக்கையாளர்களின் ஷாப்பிங் அனுபவத்தை மேம்படுத்தலாம், உங்கள் ஸ்டோரை எளிதாகக் கண்டறியச் செய்யலாம் மற்றும் மாற்றத்தை அதிகரிக்கலாம். இணையச் செயல்திறனானது 3 முக்கிய இணைய அளவீடுகள் (Core Web Vitals) மூலம் அளவிடப்படுகிறது, மேலும் உங்களின் இணையதளத்தை ஏற்றும் வேகம், ஊடாடுதல் மற்றும் காட்சி நிலைத்தன்மை போன்ற அம்சங்களைத் தடமறிகிறது.

பின்வரும் அறிக்கைகளை உள்ளடக்கிய உங்கள் இணையச் செயல்திறன் தரவைப் பார்ப்பதன் மூலம், தொழில்துறைத் தரநிலைகள் மற்றும் உங்களைப் போன்ற பிற Shopify ஸ்டோர்களுடன் ஒப்பிடுகையில் உங்கள் ஸ்டோர் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்:

உங்கள் தீம்கள் பக்கத்தின் மேற்புறத்தில் உள்ள செயல்திறன் அளவீட்டுச் சுருக்கத்தையும் பார்க்கலாம், இது உங்கள் இணையச் செயல்திறன் மதிப்பெண்களின் விரைவான சுருக்கத்தை வழங்குகிறது.

இந்த அறிக்கைகளைப் பற்றி மேலும் அறிய, இணையச் செயல்திறன் அறிக்கைகள் என்பதைப் பார்க்கவும்.

காலப்போக்கில் தயாரிப்புப் பரிந்துரை மாற்றங்கள்

உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் தயாரிப்புப் பக்கங்களில் Shopify வழங்கும் தயாரிப்புப் பரிந்துரைகளைப் பயன்படுத்தினால், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட காலத்தில் அந்தப் பரிந்துரைகள் எந்தளவுக்குப் பயனுள்ளதாக உள்ளன என்பதை காலப்போக்கில் தயாரிப்புப் பரிந்துரை மாற்றங்கள் அறிக்கை குறிக்கும். உங்கள் ஸ்டோர் தயாரிப்புப் பரிந்துரைகளை விற்பனையாக எந்தளவுக்கு மாற்றுகிறது என்பதைப் புரிந்துகொள்ள இந்தத் தகவல் உதவும்.

கண்டறியப்பட்ட பாட் அமர்வுகள் இந்த அறிக்கையிலிருந்து தானாகவே வடிகட்டப்படும், மேலும் மனிதன் அல்லது பாட் அமர்வு வடிப்பான் தயாரிப்புப் பரிந்துரை அறிக்கைகளில் கிடைக்காது.

காலப்போக்கில் தயாரிப்புப் பரிந்துரை மாற்றங்கள் அறிக்கையில் பின்வரும் நெடுவரிசைகள் உள்ளன:

விற்பனையை உருவாக்குவதில் தயாரிப்புப் பரிந்துரைகளின் செயல்திறன்.
நெடுவரிசைவிளக்கம்
நாள்வாடிக்கையாளர் ஊடாடல் நிகழ்ந்த நாள்.
அமர்வுகள்வாடிக்கையாளர்கள் தயாரிப்புப் பக்கத்தில் தயாரிப்புப் பரிந்துரைகளைப் பார்த்த அமர்வுகளின் எண்ணிக்கை.
கிளிக்குகளுடன் கூடிய அமர்வுகள்தயாரிப்புப் பரிந்துரையைக் கிளிக் செய்த பிறகு வாடிக்கையாளர் தயாரிப்புப் பக்கத்தைப் பார்த்த அமர்வுகளின் எண்ணிக்கை.
கார்ட்டில் சேர்த்தலுடன் கூடிய அமர்வுகள்அமர்வில் தயாரிப்புப் பரிந்துரையைக் கிளிக் செய்த பிறகு, பரிந்துரைக்கப்பட்ட ஒரு தயாரிப்பை வாடிக்கையாளர் கார்ட்டில் சேர்த்த அமர்வுகளின் எண்ணிக்கை.
கொள்முதல்களுடன் கூடிய அமர்வுகள்அமர்வுக்குள் தயாரிப்புப் பரிந்துரையைக் கிளிக் செய்து கார்ட்டில் சேர்த்ததைத் தொடர்ந்து, வாடிக்கையாளரால் ஒரு தயாரிப்பு வாங்கப்பட்ட அமர்வுகளின் எண்ணிக்கை.
கிளிக் வீதம்தயாரிப்புப் பரிந்துரையைக் கிளிக் செய்யும் விளைவை ஏற்படுத்திய, தயாரிப்புப் பரிந்துரைகளுடன் கூடிய அமர்வுகளின் சதவீதம்.
கார்ட்டில் சேர்த்தல் வீதம்தயாரிப்புப் பரிந்துரையைக் கார்ட்டில் சேர்க்கும் விளைவை ஏற்படுத்திய, தயாரிப்புப் பரிந்துரைகளுடன் கூடிய அமர்வுகளின் சதவீதம்.
கொள்முதல் வீதம்தயாரிப்புப் பரிந்துரையைக் கொள்முதல் செய்யும் விளைவை ஏற்படுத்திய, தயாரிப்புப் பரிந்துரைகளுடன் கூடிய அமர்வுகளின் சதவீதம்.

தரவானது ஒரு புனலைப் போன்றது: அமர்வுகளின் எண்ணிக்கை எப்போதும் கிளிக்குகளின் எண்ணிக்கையை விட அதிகமாகவோ அல்லது சமமாகவோ இருக்கும், கிளிக்குகளின் எண்ணிக்கை எப்போதும் கார்ட்டில் சேர்க்கப்பட்டவற்றின் எண்ணிக்கையை விட அதிகமாகவோ அல்லது சமமாகவோ இருக்கும், கார்ட்டில் சேர்க்கப்பட்டவற்றின் எண்ணிக்கை எப்போதும் கொள்முதல்களின் எண்ணிக்கையை விட அதிகமாகவோ அல்லது சமமாகவோ இருக்கும்.

வாங்கு பொத்தான் அல்லது மூன்றாம் தரப்புச் செயலியைப் பயன்படுத்திக் கார்ட்டில் சேர்க்கப்படும் அல்லது வாங்கப்படும் தயாரிப்புகளுக்கான தரவை இந்த அறிக்கை உள்ளடக்காது.

நாள், வாரம் அல்லது மாதம் அடிப்படையில் நீங்கள் தரவைக் குழுவாக்கலாம். வெவ்வேறு தேதி வரம்புகளிலிருந்து தரவை நீங்கள் ஒப்பிடவும் முடியும்.

பந்துரைகள் தடமறியப்படும் முறையினால், கடந்த 24 மணிநேரத்தில் உங்கள் ஸ்டோரில் நடந்த அனைத்துப் பரிந்துரை ஈடுபாடுகளையும் இந்த அறிக்கை காட்டாமல் போகலாம்.

குறைந்த ஈடுபாட்டைக் கொண்ட தயாரிப்புப் பரிந்துரைகள்

குறைந்த ஈடுபாட்டைக் கொண்ட தயாரிப்புப் பரிந்துரைகள் அறிக்கையானது, சராசரிக்கும் குறைவான கிளிக் வீதத்திலான பரிந்துரைகளைக் கொண்டு கடந்த 30 நாட்களில் அதிகம் விற்பனையான தயாரிப்புகளைக் காட்டுகிறது.

சராசரிக்கும் குறைவான பரிந்துரைக் கிளிக்குகளைக் கொண்ட அதிகம் விற்பனையாகும் தயாரிப்புகள்.
நெடுவரிசைவிளக்கம்
தயாரிப்புத் தலைப்புதயாரிப்பின் தலைப்பு.
தயாரிப்பு வகைதயாரிப்பின் வகை.
பரிந்துரைக் கிளிக் வீதம்தயாரிப்புப் பரிந்துரையை வாடிக்கையாளர் கிளிக் செய்யும் விளைவை ஏற்படுத்திய, தயாரிப்புப் பரிந்துரைகளுடன் கூடிய அமர்வுகளின் சதவீதம்.
சராசரிக் கிளிக் வீதத்திலிருக்கும் வித்தியாசம்பரிந்துரைக் கிளிக் வீதத்திற்கும் சராசரிக் கிளிக் வீதத்திற்கும் இடையிலான வித்தியாசம்.

காட்டப்படும் பரிந்துரைக்கப்பட்ட தயாரிப்புகளுக்குச் சராசரிக்கும் குறைவான கிளிக் வீதத்தைக் கொண்டு எந்தத் தயாரிப்புகளை உங்கள் வாடிக்கையாளர்கள் அதிகம் பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள, இந்த அறிக்கையிலுள்ள தகவல் உதவும். Search & Discovery செயலியில் இந்தத் தயாரிப்புகளுக்கான பரிந்துரைகளைத் தனிப்பயனாக்க நீங்கள் பரிசீலிக்கலாம்.

அறிக்கை கடந்த 30 நாட்களிலான தரவை உள்ளடக்கும், மேலும் தினமும் மாறும். பரிந்துரைகள் தடமறியப்படும் முறையினால், கடந்த 24 மணிநேரத்திலான உங்கள் ஸ்டோரின் தரவை இந்த அறிக்கை உள்ளடக்காமல் போகலாம்.

தேடல் வினவல் வாரியான தேடல்கள்

உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் ஒரு தயாரிப்பைத் தேடுவதற்கு உங்கள் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திய தேடல் சொற்களின் விவரத்தை தேடல் வினவல் வாரியான தேடல்கள் அறிக்கை காட்டுகிறது.

ஆன்லைன் ஸ்டோரின் மிகவும் பிரபலமான தேடல் சொற்கள்.
நெடுவரிசைவிளக்கம்
தேடல் சொல்உங்கள் ஸ்டோரில் தேட வாடிக்கையாளர் பயன்படுத்திய சொல்.
தேடல்களின் எண்ணிக்கைஅந்தச் சொல்லைக் கொண்டு வாடிக்கையாளர்கள் உங்கள் ஸ்டோரில் தேடிய அமர்வுகளின் எண்ணிக்கை.

உங்கள் ஸ்டோரில் வாடிக்கையாளர்கள் எதையாவது தேடும்போது அவர்கள் பயன்படுத்தும் குறிப்பிட்ட சொற்களைப் புரிந்துகொள்ள இந்தத் தகவல் உதவும். வாடிக்கையாளர்கள் தாங்கள் தேடுவதை விரைவாகக் கண்டறிய, உங்கள் தயாரிப்புத் தலைப்புகளையும் விளக்கங்களையும் மாற்றுவது உதவுமா என்பதை நீங்கள் பரிசீலிக்கலாம்.

கண்டறியப்பட்ட பாட் அமர்வுகள் இந்த அறிக்கையிலிருந்து தானாகவே வடிகட்டப்படும், மேலும் மனிதர் அல்லது பாட் அமர்வு வடிப்பான் தேடல் அறிக்கைகளில் கிடைக்காது.

தேடல்கள் தடமறியப்படும் முறையால், இந்த அறிக்கை 72 மணிநேரம் வரை தாமதமாகலாம்.

கிளிக்குகள் இல்லாத தேடல்கள்

கிளிக்குகள் இல்லாத தேடல்கள் அறிக்கையானது, உங்கள் ஸ்டோரில் தேடும் வாடிக்கையாளர்களிடமிருந்து எந்தவொரு கிளிக்குகளையும் பெறாத முடிவுகளைக் கொண்ட தேடல் சொற்களின் பட்டியலைக் காட்டும்.

கிளிக்குகள் இல்லாத தேடல்கள் அறிக்கையில் பின்வரும் நெடுவரிசைகள் உள்ளன:

முடிவு கிளிக்குகள் ஏதுமில்லாத ஆன்லைன் ஸ்டோர் தேடல் சொற்கள்.
நெடுவரிசைவிளக்கம்
தேடல் சொல்உங்கள் ஸ்டோரில் தேட வாடிக்கையாளர் பயன்படுத்திய சொல்.
தேடல்களின் எண்ணிக்கைஅந்தச் சொல்லைக் கொண்டு வாடிக்கையாளர்கள் உங்கள் ஸ்டோரில் தேடிய அமர்வுகளின் எண்ணிக்கை.

வாடிக்கையாளர்கள் எந்த முடிவுகளையும் கிளிக் செய்யாதபோது, உங்கள் ஸ்டோரில் தேட அவர்கள் பயன்படுத்தும் குறிப்பிட்ட வார்த்தைகளைப் புரிந்துகொள்ள இந்தத் தகவல் உதவும். உங்கள் தயாரிப்புத் தலைப்புகளையும் விவரங்களையும் மாற்றுவது, வாடிக்கையாளர்கள் தேடுவதை விரைவாகக் கண்டறிய உதவுமா என்பதை நீங்கள் பரிசீலிக்கலாம். Search & Discovery செயலியில் உங்கள் ஸ்டோரின் தேடல் முடிவுகளையும் தனிப்பயனாக்கலாம்.

தேடல்கள் தடமறியப்படும் முறையால், இந்த அறிக்கை 72 மணிநேரம் வரை தாமதமாகலாம்.

இந்த அறிக்கையில் செப்டம்பர் 2, 2022 முதல் உள்ள தரவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

முடிவுகள் இல்லாத தேடல்கள்

முடிவுகள் இல்லாத சிறந்த ஆன்லைன் ஸ்டோர் தேடல்கள் அறிக்கையானது, வாடிக்கையாளர்களுக்கு எந்த முடிவுகளையும் தராத, உங்கள் ஸ்டோரில் ஒரு தயாரிப்பைத் தேடுவதற்கு வாடிக்கையாளர்கள் பயன்படுத்திய தேடல் சொற்களின் விவரத்தைக் காட்டும்.

முடிவுகள் இல்லாத தேடல்கள் அறிக்கையில் பின்வரும் நெடுவரிசைகள் உள்ளன:

ஆன்லைன் ஸ்டோரில் எந்த முடிவுகளையும் தராத தேடல் சொற்கள்.
நெடுவரிசைவிளக்கம்
தேடல் சொல்உங்கள் ஸ்டோரில் தேட வாடிக்கையாளர் பயன்படுத்திய சொல்.
தேடல்களின் எண்ணிக்கைஅந்தச் சொல்லைக் கொண்டு வாடிக்கையாளர்கள் உங்கள் ஸ்டோரில் தேடிய அமர்வுகளின் எண்ணிக்கை.

வாடிக்கையாளர்கள் உங்கள் ஸ்டோரில் ஒன்றைத் தேடும்போது பயன்படுத்தும் குறிப்பிட்ட வார்த்தைகளைப் புரிந்துகொள்ள இந்தத் தகவல் உதவும். உங்கள் தயாரிப்புத் தலைப்புகளையும் விவரங்களையும் மாற்றுவது, வாடிக்கையாளர்கள் தேடுவதை விரைவாகக் கண்டறிய உதவுமா என்பதை நீங்கள் பரிசீலிக்கலாம். Search & Discovery செயலியில் உங்கள் ஸ்டோரின் தேடல் முடிவுகளையும் தனிப்பயனாக்கலாம்.

தேடல்கள் தடமறியப்படும் முறையால், இந்த அறிக்கை 72 மணிநேரம் வரை தாமதமாகலாம்.

காலப்போக்கில் தேடல் மாற்றங்கள்

நீங்கள் Shopify இன் ஸ்டோர்ஃபிரண்ட் தேடலைப் பயன்படுத்தினால், தேர்ந்தெடுக்கப்பட்ட காலகட்டத்தில் ஸ்டோர்ஃபிரண்ட் தேடல் எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது என்பதை காலப்போக்கில் தேடல் மாற்றங்கள் அறிக்கை குறிக்கும். உங்கள் ஸ்டோர் தேடல்களை எவ்வாறு விற்பனையாக மாற்றுகிறது என்பதைப் புரிந்துகொள்ள இந்தத் தகவல் உதவும்.

காலப்போக்கில் தேடல் மாற்றங்கள் அறிக்கையில் பின்வரும் நெடுவரிசைகள் உள்ளன:

காலப்போக்கில் ஸ்டோர்ஃபிரண்ட் தேடல்களிலிருந்து மாற்றங்களைத் தடமறிதல்.
நெடுவரிசைவிளக்கம்
நாள்வாடிக்கையாளர் ஊடாடல் நிகழ்ந்த நாள்.
அமர்வுகள்வாடிக்கையாளர்கள் தேடிய அமர்வுகளின் எண்ணிக்கை.
கிளிக்குகளுடன் கூடிய அமர்வுகள்தேடல் முடிவுகளில் காட்டப்பட்ட தயாரிப்பைக் கிளிக் செய்த பிறகு, வாடிக்கையாளரால் தயாரிப்புப் பக்கம் பார்க்கப்பட்ட அமர்வுகளின் எண்ணிக்கை.
கார்ட்டில் சேர்த்தலுடன் கூடிய அமர்வுகள்ஒரு அமர்வுக்குள் தேடல் முடிவுகளில் காட்டப்பட்ட தயாரிப்பைக் கிளிக் செய்த பிறகு, வாடிக்கையாளரால் கார்ட்டில் தயாரிப்பு சேர்க்கப்பட்ட அமர்வுகளின் எண்ணிக்கை.
கொள்முதல்களுடன் கூடிய அமர்வுகள்ஒரு அமர்வுக்குள் தேடல் முடிவுகளில் தயாரிப்பைக் கிளிக் செய்து கார்ட்டில் சேர்த்த பிறகு, வாடிக்கையாளரால் தேடல் முடிவுகளில் தோன்றிய தயாரிப்பு வாங்கப்பட்ட அமர்வுகளின் எண்ணிக்கை.
கிளிக் வீதம்தயாரிப்பைப் பார்ப்பதற்கான கிளிக்கில் விளைந்த தேடல் அமர்வுகளின் சதவீதம்.
கார்ட்டில் சேர்த்தல் வீதம்கார்ட்டில் தயாரிப்பைச் சேர்ப்பதில் விளைந்த தேடல் அமர்வுகளின் சதவீதம்.
கொள்முதல் வீதம்கொள்முதல்களாக மாறிய தேடல் அமர்வுகளின் சதவீதம்.

இந்தத் தரவானது ஒரு புனலைப் போன்றது: அமர்வுகளின் எண்ணிக்கை கிளிக்குகளின் எண்ணிக்கைக்கு அதிகமாகவோ அல்லது சமமாகவோ இருக்கும், கிளிக்குகளின் எண்ணிக்கை கார்ட்டில் சேர்க்கப்பட்ட எண்ணிக்கையை விட எப்போதுமே அதிகமாகவோ அல்லது சமமாகவோ இருக்கும், மேலும் கார்ட்டில் சேர்க்கப்பட்ட எண்ணிக்கை கொள்முதல்களின் எண்ணிக்கையை விட எப்போதுமே அதிகமாகவோ அல்லது சமமாகவோ இருக்கும்.

நாள், வாரம் அல்லது மாதம் அடிப்படையில் நீங்கள் தரவைக் குழுவாக்கலாம். வெவ்வேறு தேதி வரம்புகளிலிருந்து தரவை நீங்கள் ஒப்பிடவும் முடியும்.

வாங்கு பொத்தான் அல்லது மூன்றாம் தரப்புச் செயலியைப் பயன்படுத்திக் கார்ட்டில் சேர்க்கப்படும் அல்லது வாங்கப்படும் தயாரிப்புகளுக்கான தரவை இந்த அறிக்கை உள்ளடக்காது.

தேடல்கள் தடமறியப்படும் முறையால், இந்த அறிக்கை 72 மணிநேரம் வரை தாமதமாகலாம்.

லேண்டிங் பக்கம் வாரியாக அமர்வுகள்

பயனர்கள் உங்கள் ஸ்டோரில் எந்தப் பக்கத்தில் அமர்வுகளைத் தொடங்குகிறார்கள் என்பதை லேண்டிங் பக்கம் வாரியான அமர்வுகள் அறிக்கை காட்டுகிறது.

உங்கள் பகுப்பாய்வுப் பக்கத்திலிருந்து இந்த விவரங்களை நீங்கள் மதிப்பாய்வு செய்யலாம்.

நீங்கள் இந்த அறிக்கையைத் திறக்கும்போது, சில வினாடிகள் முன்னும் பின்னுமாக தரவு புதுப்பித்த நிலையில் இருக்கும். புதிய தரவைச் சேர்க்க, அறிக்கையை மீண்டும் திறக்கலாம் அல்லது புதுப்பிக்கலாம்.

சாதனம் வாரியாக அமர்வுகள்

உங்கள் இணையதளத்தை அணுகப் பயன்படுத்தப்பட்ட சாதனங்களின் வகையை சாதனம் வாரியான அமர்வுகள் அறிக்கை காட்டுகிறது.

உங்கள் பகுப்பாய்வுப் பக்கத்திலிருந்து இந்த விவரங்களை நீங்கள் மதிப்பாய்வு செய்யலாம்.

நீங்கள் இந்த அறிக்கையைத் திறக்கும்போது, சில வினாடிகள் முன்னும் பின்னுமாக தரவு புதுப்பித்த நிலையில் இருக்கும். புதிய தரவைச் சேர்க்க, அறிக்கையை மீண்டும் திறக்கலாம் அல்லது புதுப்பிக்கலாம்.