சில்லறை விற்பனை அறிக்கைகள்
தயாரிப்பு, SKU அல்லது பணியாளர்கள் போன்ற அளவுகோல்களின் அடிப்படையில் உங்கள் வாடிக்கையாளர்களின் விற்பனைப் புள்ளி ஆர்டர்கள் பற்றிய தகவல்களை மதிப்பாய்வு செய்ய, நீங்கள் சில்லறை விற்பனை அறிக்கைகளைப் பயன்படுத்தலாம்.
POS இடத்தில் செய்யப்பட்ட விற்பனைகளை மட்டுமே இந்த அறிக்கைகள் உள்ளடக்கியிருக்கும். பிற விற்பனைகள் அறிக்கைகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளன.
சில்லறை விற்பனை அறிக்கைகளில் உள்ள தரவு புதுப்பிக்கப்படுவதற்கு 1 முதல் 5 நிமிடங்கள் வரை ஆகலாம். புதிய தரவைக் காட்ட, அறிக்கையை மீண்டும் திறக்கலாம் அல்லது புதுப்பிக்கலாம்.
இந்தப் பக்கத்தில்
- உங்கள் சில்லறை விற்பனை அறிக்கைகளைப் பார்க்கவும்
- தயாரிப்பு வாரியாக POS மொத்த விற்பனை
- தயாரிப்பு மாறுபாடு வாரியாக POS மொத்த விற்பனை
- விற்பனையாளர் வாரியாக POS மொத்த விற்பனை
- தயாரிப்பு வகை வாரியாக POS மொத்த விற்பனை
- POS இடம் வாரியாக மொத்த விற்பனை
- பணியாளர் வாரியாக POS மொத்த விற்பனை
- POS பணியாளர்களின் தினசரி மொத்த விற்பனை
- POS பணியாளர்களின் மொத்த விற்பனை
- அறிக்கைகளில் உள்ள தனிப்பயன் விற்பனை உருப்படிகள்
உங்கள் சில்லறை விற்பனை அறிக்கைகளைப் பார்க்கவும்
சில்லறை விற்பனை அறிக்கைகளில் பயன்படுத்தப்படும் சொற்களைப் பற்றிய தகவலுக்கு, விற்பனை அறிக்கைகள் என்பதைப் பார்க்கவும்.
சில்லறை விற்பனை அறிக்கைகளை மட்டும் காண்பிக்கும்படி, உங்கள் அறிக்கைகள் பட்டியலை ஃபில்டர் செய்யலாம்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியில், பகுப்பாய்வு > அறிக்கைகள் என்பதற்குச் செல்லவும்.
வகை ஃபில்டரைக் கிளிக் செய்யவும்.
சில்லறை விற்பனை அறிக்கைகளை மட்டும் காண்பிக்கும்படி அறிக்கைகளை ஃபில்டர் செய்ய, சில்லறை விற்பனை என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியில்,
ஐகானைத் தட்டவும்.
பகுப்பாய்வு > அறிக்கைகள் என்பதைத் தட்டவும்.
ஃபில்டர் ஐகானைத் தட்டி, வகை என்பதைத் தட்டவும்.
சில்லறை விற்பனை அறிக்கைகளை மட்டும் காண்பிக்கும்படி அறிக்கைகளை ஃபில்டர் செய்ய, சில்லறை விற்பனை என்பதைத் தட்டவும்.
ஃபில்டர் செய்யப்பட்ட அறிக்கைகள் பட்டியலுக்கு மீண்டும் செல்ல < இதன்மூலம் ஃபில்டர் செய் அல்லது ← என்பதைத் தட்டி, பின்னர் X என்பதைத் தட்டவும்.
தயாரிப்பு வாரியாக POS மொத்த விற்பனை
தயாரிப்பு வாரியாக POS மொத்த விற்பனை அறிக்கையானது உங்கள் தயாரிப்புகளுக்கான மொத்த விற்பனையின் பிரிப்பைக் காண்பிக்கிறது, ஆனால் இதில் ஷிப்பிங் சேர்க்கப்படவில்லை.
ஒரு ஆர்டரில் பல தயாரிப்புகள் இருக்கக் கூடும், ஆனால் அதற்கு ஒரேயொரு ஷிப்பிங் கட்டணம் மட்டுமே இருக்கும் என்பதால் ஷிப்பிங் சேர்க்கப்படவில்லை. அறிக்கையிடல் நோக்கங்களுக்காக, ஆர்டரில் உள்ள தயாரிப்புகளுக்கு இடையே ஷிப்பிங் கட்டணத்தைப் பிரிக்க முடியாது.
ஷிப்பிங் தொகைகள் ஃபில்டர் செய்யப்படுவதால், இந்த அறிக்கையில் காட்டப்படும் வரியில் ஷிப்பிங்கிற்கான வரிகள் சேர்க்கப்படவில்லை.
விற்பனை அறிக்கைகளில் பல்வேறு பொதுவான சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த அறிக்கையில் பின்வரும் கூடுதல் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன:
| சொல் | வரையறை |
|---|---|
| தயாரிப்பு வகை | நீங்கள் விற்கும் தயாரிப்பின் வகை. எடுத்துக்காட்டாக, தொப்பிகள், சட்டைகள் அல்லது காலணிகள். |
| தயாரிப்புத் தலைப்பு | உங்கள் தயாரிப்பிற்கான பெயர். |
| நிகர அளவு | விற்கப்பட்ட உருப்படிகளின் எண்ணிக்கை - திருப்பியளிக்கப்பட்ட உருப்படிகளின் எண்ணிக்கை என்பதற்குச் சமம். |
சில நேரங்களில், தயாரிப்பு வகை அல்லது தயாரிப்புத் தலைப்பு போன்ற தயாரிப்புப் புலங்களில் உள்ள தரவு ஒரு கோடு (—) எனக் குறிக்கப்படுகிறது. ஆர்டர் செய்யப்பட்ட நேரத்தில் தரவு எதுவும் இல்லாமல் இருந்தால் இது நிகழலாம்.
அதேபோல், ஆர்டர்களுக்கு இடையே இந்தத் தரவு ஏதேனும் மாற்றப்பட்டால், அடையாளங்காட்டும் தகவலானது முற்றிலும் ஒரே மாதிரியாக இல்லாததால், ஒரே தயாரிப்பிற்கான பல வரிசைகள் அறிக்கையில் சேர்க்கப்பட்டிருக்கலாம். அறிக்கைகள் எப்போதும் ஆர்டர் செய்யப்பட்ட நேரத்திலிருந்து அசல் மதிப்புகளைக் காண்பிக்கும்.
தயாரிப்பு மாறுபாடு வாரியாக POS மொத்த விற்பனை
தயாரிப்பு மாறுபாடு வாரியாக POS மொத்த விற்பனை அறிக்கையானது, தயாரிப்பு வாரியாக POS மொத்த விற்பனை அறிக்கையைவிட அதிக நுணுக்கமான அளவில் உங்களின் அதிகம் விற்பனையாகும் தயாரிப்புகளுக்கான மொத்த விற்பனையின் பிரிப்பைக் காண்பிக்கிறது, ஆனால் இதில் ஷிப்பிங் செலவு சேர்க்கப்படுவதில்லை.
ஒரு ஆர்டரில் பல தயாரிப்புகள் இருக்கக் கூடும், ஆனால் அதற்கு ஒரேயொரு ஷிப்பிங் கட்டணம் மட்டுமே இருக்கும் என்பதால் ஷிப்பிங் சேர்க்கப்படவில்லை. அறிக்கையிடல் நோக்கங்களுக்காக, ஆர்டரில் உள்ள தயாரிப்புகளுக்கு இடையே ஷிப்பிங் கட்டணத்தைப் பிரிக்க முடியாது.
விற்பனை அறிக்கைகளில் பல்வேறு பொதுவான சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த அறிக்கையில் பின்வரும் கூடுதல் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன:
| சொல் | வரையறை |
|---|---|
| தயாரிப்புத் தலைப்பு | உங்கள் தயாரிப்பிற்கான பெயர். |
| வேரியண்ட் தலைப்பு | தயாரிப்பு மாறுபாட்டின் பெயர். |
| மாறுபாடு SKU | தயாரிப்பு மாறுபாட்டின் அடையாளக் குறியீடு. |
| நிகர அளவு | விற்கப்பட்ட உருப்படிகளின் எண்ணிக்கை - திருப்பியளிக்கப்பட்ட உருப்படிகளின் எண்ணிக்கை என்பதற்குச் சமம். |
விற்பனையாளர் வாரியாக POS மொத்த விற்பனை
விற்பனையாளர் வாரியாக POS மொத்த விற்பனை அறிக்கையானது உங்கள் விற்பனையாளர்களையும், ஒவ்வொரு விற்பனையாளரும் வழங்கும் தயாரிப்புகளையும் காண்பிக்கிறது; இவை விற்பனைப் புள்ளி இடம் வாரியாகக் குழுவாக்கப்பட்டிருக்கும்.
விற்பனை அறிக்கைகளில் பல்வேறு பொதுவான சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த அறிக்கையில் பின்வரும் கூடுதல் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன:
| சொல் | வரையறை |
|---|---|
| தயாரிப்பு விற்பனையாளர் | ஒரு தயாரிப்பை வழங்கும் விற்பனையாளரின் பெயர். விற்பனையாளர் சப்ளை செய்யும் தயாரிப்புகளின் பட்டியலைக் காண்பிக்க, அந்த விற்பனையாளரின் பெயரைக் கிளிக் செய்யவும். |
| நிகர அளவு | விற்கப்பட்ட உருப்படிகளின் எண்ணிக்கை - திருப்பியளிக்கப்பட்ட உருப்படிகளின் எண்ணிக்கை என்பதற்குச் சமம். |
தயாரிப்பு வகை வாரியாக POS மொத்த விற்பனை
தயாரிப்பு வகை வாரியாக POS மொத்த விற்பனை அறிக்கையானது, விற்பனைப் புள்ளி இடம் வாரியாகக் குழுவாக்கப்பட்ட தயாரிப்பு வகை வாரியான உங்களின் சில்லறை விற்பனையைக் காண்பிக்கிறது.
POS இடம் வாரியாக மொத்த விற்பனை
POS இடம் வாரியாக மொத்த விற்பனை அறிக்கையானது ஒவ்வொரு விற்பனைப் புள்ளி இடத்திற்குமான மொத்த விற்பனையைக் காண்பிக்கிறது.
விற்பனை அறிக்கைகளில் பல்வேறு பொதுவான சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த அறிக்கையில் பின்வரும் கூடுதல் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன:
| சொல் | வரையறை |
|---|---|
| தயாரிப்பு வகை | நீங்கள் விற்கும் தயாரிப்பின் வகை. எடுத்துக்காட்டாக, தொப்பிகள், சட்டைகள் அல்லது காலணிகள். |
| நிகர அளவு | விற்கப்பட்ட உருப்படிகளின் எண்ணிக்கை - திருப்பியளிக்கப்பட்ட உருப்படிகளின் எண்ணிக்கை என்பதற்குச் சமம். |
| POS இடத்தின் பெயர் | விற்பனை செய்யப்பட்ட விற்பனைப் புள்ளி இடத்தின் பெயர். |
பணியாளர் வாரியாக POS மொத்த விற்பனை
பணியாளர் வாரியாக POS மொத்த விற்பனை அறிக்கையானது, செக்அவுட்டின் போது வரிசை உருப்படிகளுக்கான கிரெடிட் வழங்கப்பட்ட பணியாளர் வாரியாக உங்கள் விற்பனையைக் காட்டுகிறது.
விற்பனை அறிக்கைகளில் பல்வேறு பொதுவான சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த அறிக்கையில் பின்வரும் கூடுதல் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன:
| சொல் | வரையறை |
|---|---|
| பணியாளர் பெயர் | வரிசை உருப்படியின் கிரெடிட்டைப் பெற்ற பணியாளரின் பெயர். |
| POS இடத்தின் பெயர் | விற்பனை செய்யப்பட்ட விற்பனைப் புள்ளி இடத்தின் பெயர். |
POS பணியாளர்களின் தினசரி விற்பனை மொத்தம்
பதிவேட்டில் விற்பனையைச் செயலாக்கிய பணியாளர் வாரியான தினசரி விற்பனையை POS பணியாளர்களின் தினசரி விற்பனை மொத்தம் அறிக்கை காட்டுகிறது.
விற்பனை அறிக்கைகளில் பல்வேறு பொதுவான சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த அறிக்கையில் பின்வரும் கூடுதல் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன:
| சொல் | வரையறை |
|---|---|
| நாள் | ஆர்டர்கள் அளிக்கப்பட்ட நாள். |
| பணியாளர் பெயர் | விற்பனையைச் செயலாக்கிய பணியாளரின் பெயர். |
| POS இடத்தின் பெயர் | விற்பனை செய்யப்பட்ட விற்பனைப் புள்ளி இடத்தின் பெயர். |
| பணியாளர் உதவியுடன் நடந்த விற்பனையின் வீதம் | வரிசை உருப்படிகளுக்கான கிரெடிட்டைப் பெற்ற ஒரு பணியாளராவது உள்ள விற்பனைகளின் சதவீதம். |
POS பணியாளர்களின் விற்பனை மொத்தம்
பதிவேட்டில் விற்பனையைச் செயலாக்கிய பணியாளர் வாரியான உங்களின் விற்பனையை, POS பணியாளர்களின் விற்பனை மொத்தம் அறிக்கை காட்டுகிறது.
விற்பனை அறிக்கைகளில் பல்வேறு பொதுவான சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த அறிக்கையில் பின்வரும் கூடுதல் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன:
| சொல் | வரையறை |
|---|---|
| பணியாளர் பெயர் | பதிவேட்டில் விற்பனையைச் செயலாக்கிய பணியாளரின் பெயர். |
| POS இடத்தின் பெயர் | விற்பனை செய்யப்பட்ட விற்பனைப் புள்ளி இடத்தின் பெயர். |
| பணியாளர் உதவியுடன் நடந்த விற்பனையின் வீதம் | வரிசை உருப்படிகளுக்கான கிரெடிட்டைப் பெற்ற ஒரு பணியாளராவது உள்ள விற்பனைகளின் சதவீதம். |
அறிக்கைகளில் உள்ள தனிப்பயன் விற்பனை உருப்படிகள்
வழக்கமான தயாரிப்பு அட்டவணையில் இல்லாத உருப்படியை விற்பதற்கு அல்லது தனிப்பயன் கூடுதல் கட்டணம் போன்ற கூடுதல் விலையை நேரடி விற்பனையில் சேர்க்க உங்களை அனுமதிக்கும் தனிப்பயன் விற்பனை உருப்படியைச் சேர்க்கும் விருப்பத்தை Shopify POS வழங்குகிறது.
இருப்பினும், தனிப்பயன் விற்பனை உருப்படி குறித்த வரையறுக்கப்பட்ட தகவல்கள் சேமிக்கப்படுவதால், இந்த விற்பனையானது ஒரு அறிக்கையில் வழக்கமான தயாரிப்பு விற்பனையைக் காட்டுவதைப் போல் காட்டப்படாது.
வழக்கமான தயாரிப்புகளைப் போலல்லாமல், தனிப்பயன் விற்பனை உருப்படியின் தயாரிப்புத் தலைப்பு, தயாரிப்பு விற்பனையாளர் மற்றும் தயாரிப்பு வகை ஆகிய மதிப்புகள் அனைத்தும் எதுவுமில்லை என இருக்கும். கார்ட்டில் சேர்ப்பதற்கு முன் தனிப்பயன் விற்பனை உருப்படிக்குத் தலைப்பை ஒதுக்கினால், அந்தத் தலைப்பு விற்பனையின் போதுள்ள தயாரிப்புத் தலைப்பு மதிப்பாகும். தனிப்பயன் விற்பனை உருப்படிக்குத் தலைப்பை ஒதுக்க வேண்டாம் என நீங்கள் தேர்வுசெய்தால், விற்பனையின் போதுள்ள தயாரிப்புத் தலைப்பு மதிப்பு தனிப்பயன் விற்பனை என இயல்புநிலையாக இருக்கும்.
தனிப்பயன் விற்பனை உருப்படித் தகவல்களை உங்களுக்கு வேண்டியவாறு உங்கள் அறிக்கைகளில் சேர்க்கவும் காட்டவும் இந்த மதிப்புகளைப் பயன்படுத்தலாம். உங்கள் அறிக்கைகளைத் தனிப்பயனாக்குவது குறித்து மேலும் அறிக.
உதாரணம்: தனிப்பயன் விற்பனை உருப்படிகளைச் சேர்க்க, தயாரிப்பு வாரியான POS மொத்த விற்பனை அறிக்கையைத் தனிப்பயனாக்குதல்
இயல்புநிலையாக, தயாரிப்பு வாரியான POS மொத்த விற்பனை அறிக்கை Product title is not None என்ற வடிப்பானைப் பயன்படுத்துகிறது, அதாவது விற்பனை அறிக்கையிலிருந்து தனிப்பயன் விற்பனை உருப்படிகள் தவிர்க்கப்படும். அந்த வடிப்பானை அகற்றுவதன் மூலமும் தனிப்பயன் விற்பனை உருப்படிகளை அவற்றின் தலைப்பு வாரியாகத் தெளிவாகப் பிரிக்கப் பரிமாணங்களைச் சரிசெய்வதன் மூலமும் தனிப்பயன் விற்பனை உருப்படிகளைச் சேர்க்க உங்கள் விற்பனை அறிக்கையைத் தனிப்பயனாக்கலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், பகுப்பாய்வு > அறிக்கைகள் என்பதற்குச் செல்லவும்.
தயாரிப்பு வாரியான POS மொத்த விற்பனை அறிக்கையைக் கிளிக் செய்யவும்.
உள்ளமைவுப் பேனலின் வடிப்பான்கள் மெனுவில், Product title is not None வடிப்பானை அகற்ற, அதன் அருகிலுள்ள குப்பைத்தொட்டி ஐகானைக் கிளிக் செய்யவும். தனிப்பயன் விற்பனை உருப்படிகளின் தயாரிப்புத் தலைப்பு, எதுவுமில்லை என இருப்பதால், தனிப்பயன் விற்பனை உருப்படி மூலம் நடந்த அனைத்து விற்பனையின் ஒட்டுமொத்தப் பதிவுக்காகவும் தரவு அட்டவணையில் இது 1 வரிசையைச் சேர்க்கும்.
தனிப்பயன் விற்பனை உருப்படிகளை அவற்றின் தலைப்புகளின்படி பிரிக்க, உள்ளமைவுப் பேனலின் பரிமாணங்கள் மெனுவில் பின்வரும் செயல்களைச் செய்யவும்:
- ⊕ என்பதைக் கிளிக் செய்யவும்.
- விற்பனையின் போதுள்ள தயாரிப்புத் தலைப்பு பரிமாணத்தைத் தேடி, அதைத் தேர்ந்தெடுக்கவும்.
- செயல்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
விருப்பத்தேர்வு: உங்கள் தனிப்பயன் அறிக்கையைச் சேமிக்க, எனச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
இப்போது உங்கள் தனிப்பயன் விற்பனை உருப்படிகள் எதுவுமில்லை என்ற தயாரிப்புத் தலைப்புடன் காட்டப்படும். மேலும் விற்பனையின் போதுள்ள தயாரிப்புத் தலைப்பு பரிமாணத்தைப் பயன்படுத்தி அவை அவற்றின் வெவ்வேறு தலைப்புகளால் பிரிக்கப்படும்.
உதாரணம்: தனிப்பயன் விற்பனை உருப்படி விற்பனையை மட்டும் காட்ட, தயாரிப்பு வாரியான POS மொத்த விற்பனை அறிக்கையைத் தனிப்பயனாக்குதல்
இயல்புநிலையாக, தயாரிப்பு வாரியான POS மொத்த விற்பனை அறிக்கை Product title is not None என்ற வடிப்பானைப் பயன்படுத்துகிறது, அதாவது விற்பனை அறிக்கையிலிருந்து தனிப்பயன் விற்பனை உருப்படிகள் தவிர்க்கப்படும். அந்த வடிப்பானை மாற்றுவதன் மூலமும் தனிப்பயன் விற்பனை உருப்படிகளை அவற்றின் தலைப்பு வாரியாகத் தெளிவாகப் பிரிக்கப் பரிமாணங்களைச் சரிசெய்வதன் மூலமும் தனிப்பயன் விற்பனை உருப்படிகளை மட்டும் காட்ட உங்கள் விற்பனை அறிக்கையைத் தனிப்பயனாக்கலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், பகுப்பாய்வு > அறிக்கைகள் என்பதற்குச் செல்லவும்.
தயாரிப்பு வாரியான POS மொத்த விற்பனை அறிக்கையைக் கிளிக் செய்யவும்.
உள்ளமைவுப் பேனலின் வடிப்பான்கள் மெனுவில், Product title is not None வடிப்பானை மாற்றவும்:
is notமதிப்பைக் கிளிக் செய்து, அதைisஎன மாற்றவும்.- மதிப்பைத் தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்து எதுவுமில்லை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- செயல்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
தனிப்பயன் விற்பனை உருப்படிகளை அவற்றின் தலைப்புகளின்படி பிரிக்க, உள்ளமைவுப் பேனலின் பரிமாணங்கள் மெனுவில் பின்வரும் செயல்களைச் செய்யவும்:
- ⊕ என்பதைக் கிளிக் செய்யவும்.
- விற்பனையின் போதுள்ள தயாரிப்புத் தலைப்பு பரிமாணத்தைத் தேடி, அதைத் தேர்ந்தெடுக்கவும்.
- செயல்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
விருப்பத்தேர்வு: உள்ளமைவுப் பேனலின் பரிமாணங்கள் மெனுவில் உங்கள் பரிமாணங்களின் காட்சி வரிசையைத் தனிப்பயனாக்குங்கள்:
- தேவையற்ற பரிமாணங்களை அகற்ற, தயாரிப்புத் தலைப்பு, தயாரிப்பு விற்பனையாளர் மற்றும் தயாரிப்பு வகை பரிமாணங்களுக்கு அடுத்துள்ள குப்பைத்தொட்டி ஐகானைக் கிளிக் செய்யவும்.
- விற்பனையின் போதுள்ள தயாரிப்புத் தலைப்பை முதன்மைப் பரிமாணமாக அமைக்க, பரிமாணத்திலுள்ள ⠿ ஐகானைக் கிளிக் செய்து, பரிமாணங்கள் பட்டியலின் மேற்பகுதிக்கு அதை இழுத்துவிடவும்.
உங்கள் தனிப்பயன் அறிக்கையைச் சேமிக்க, எனச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.