புதிய Shopify அறிக்கைகளின் மேலோட்டம்

உங்களுக்குத் தேவையான தரவைக் காண்பிக்க, Shopify-இல் உள்ள புதிய இயல்புநிலை அறிக்கைகளை நீங்கள் மாற்றியமைக்கலாம். நீங்கள் தரவை வடிகட்டலாம், அளவீடுகள் மற்றும் பரிமாணங்களைத் தேர்ந்தெடுக்கலாம், உங்களின் விருப்பமான காட்சிப்படுத்தலைத் தேர்வுசெய்யலாம், மேலும் பல்வேறு நேர வரம்புகள் அல்லது ஒப்பீடுகளைத் தேர்ந்தெடுக்கலாம். விரிதாள் நிரல்களில் பகுப்பாய்வு செய்வதற்காக உங்கள் அறிக்கைகளை ஏற்றுமதியும் செய்யலாம்.

உங்கள் Shopify நிர்வாகியில் முன்பே வடிவமைக்கப்பட்டுப் பயன்படுத்தத் தயாராக உள்ள தற்போதைய அறிக்கைகளைப் போலவே புதிய இயல்புநிலை Shopify அறிக்கைகளும் இருக்கும். இயல்புநிலை அறிக்கைகள் Shopify-ஆல் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படுகின்றன. நீங்கள் அறிக்கைகள் பட்டியலை உருவாக்கியவர் மூலம் வடிகட்டலாம், மேலும் இயல்புநிலை அறிக்கைகளின் பட்டியலை மட்டும் பார்க்க Shopify-ஐ மட்டுமே விருப்பமாகத் தேர்ந்தெடுக்கலாம்.

நீங்கள் விரும்பும் வகையில் வெவ்வேறு தகவல்களைக் காண்பிக்க, புதிய இயல்புநிலை Shopify அறிக்கைகளை நீங்கள் வடிகட்டலாம் மற்றும் திருத்தலாம். உங்கள் Shopify சந்தா எதுவாக இருந்தாலும், உங்கள் மாற்றங்களை தனிப்பயன் தரவு ஆய்வுகளாகச் சேமிக்கலாம்.

புதிய Shopify அறிக்கைகள் பின்வரும் முக்கியக் கூறுகளைக் கொண்டுள்ளன:

ShopifyQL வினவல் எடிட்டர்

ShopifyQL வினவல் எடிட்டரானது, ShopifyQL அல்லது Shopify Query Language என்பதைப் பயன்படுத்தி அறிக்கையைத் தரவுத்தள வினவலாகப் பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு இயல்புநிலை அறிக்கையும் ஏற்கனவே வினவல் எடிட்டரில் காட்டப்படும் முன்பே எழுதப்பட்ட வினவலையைக் கொண்டிருக்கும், எனவே உங்கள் ஸ்டோரின் தரவுத்தளத்தில் உள்ள தகவலிலிருந்து அறிக்கை எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம். புதிய தரவு ஆய்வு மூலம் முற்றிலும் தனிப்பயன் வினவலையும் நீங்கள் உருவாக்கலாம்.

உள்ளமைவுப் பலகம் அல்லது தரவு அட்டவணையைப் பயன்படுத்தி அறிக்கையில் நீங்கள் செய்யும் மாற்றங்கள், நிகழ்நேரத்தில் வினவல் எடிட்டரில் பிரதிபலிக்கும். முன்பே எழுதப்பட்ட வினவலில் நீங்கள் மாற்றத்தைச் செய்யும்போது, அந்த மாற்றங்களுடன் அறிக்கை, உள்ளமைவுப் பலகம், காட்சிப்படுத்தல் மற்றும் தரவு அட்டவணை ஆகியவற்றைத் புதுப்பிக்க, வினவல் எடிட்டரில் ▹ ரன் என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் பிராம்ட்டின் அடிப்படையில் Sidekick மூலம் ShopifyQL வினவலை உங்களுக்காக உருவாக்கிக் கொள்ளலாம் அல்லது தனிப்பயனாக்கிக் கொள்ளலாம்.

வினவல் தவறாக இருந்தால், எந்த வரியில் பிழை உள்ளது என்பதைக் குறிக்க வினவல் எடிட்டரின் கீழே பிழைச் செய்தி காண்பிக்கப்படும். வினவலில் உள்ள பிழைகள் சிவப்பு நிறத்தில் அடிக்கோடிட்டுக் காட்டப்படும், மேலும் சிக்கலைத் தீர்ப்பதற்கான உதவிக்குறிப்புகளைப் பெற, பிழையின் மீது கர்சரை நகர்த்தலாம்.

வினவல் எடிட்டர் மறைக்கப்பட்டிருக்கும்போது, அதைக் காண்பிக்க கீழ்நோக்கிய அம்பைக் ⌄ கிளிக் செய்யவும் அல்லது தட்டவும். அறிக்கையில் வினவல் எடிட்டரின் உள்ளடக்கத்தை மறைக்க, மேல்நோக்கிய அம்பைக் ⌃ கிளிக் செய்யவும் அல்லது தட்டவும்.

ShopifyQL-ஐப் பயன்படுத்துதல் மற்றும் வினவல்களை உருவாக்குதல் குறித்து மேலும் அறிக.

Shopify அறிக்கைகளில் விரைவு வடிப்பான்கள்

விரைவு வடிப்பான்கள் என்பவை Shopify அறிக்கையின் மேற்பகுதியில் அமைந்துள்ள மெனுக்களின் தொகுப்பாகும், இதன்மூலம் உங்கள் வணிகத்திற்கு ஏற்ற வகையில் உங்கள் அறிக்கைக்கான தரவை வடிகட்டவும் வடிவமைக்கவும் முடியும்.

Shopify அறிக்கைகளில் பின்வரும் விரைவு வடிப்பான் மெனுக்கள் அடங்கும்:

  • தேதி வரம்பு மெனு: தேதி மற்றும் நேர வரம்புகளின் அடிப்படையில் உங்கள் அறிக்கைக்கான தரவை வடிகட்டலாம். கடந்த 7 நாள்கள், இந்த மாதத்தில் இதுவரை, அல்லது பிளாக் ஃப்ரைடே சைபர் மண்டே போன்ற முன்பே அமைக்கப்பட்ட தேதி வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கலாம் அல்லது உங்களின் சொந்தத் தனிப்பயன் தேதி வரம்பை அமைக்கலாம். அறிக்கைக்கான தேதி அல்லது நேர வரம்பை அமைப்பது குறித்து மேலும் அறிக.
  • ஒப்பீட்டு மெனு: 2 வெவ்வேறு காலகட்டங்களுக்கு இடையே அல்லது இலக்குடன் உங்கள் அறிக்கைக்கான தரவை ஒப்பிடலாம். எடுத்துக்காட்டாக, கடந்த 30 நாள்களில் நடைபெற்ற நிகர விற்பனையை அதற்கு முந்தைய 30-நாள்கள் காலகட்டத்துடனோ கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடனோ ஒப்பிடலாம்.
  • நாணய மெனு: உங்கள் ஸ்டோர் நாணயத்தைத் தவிர வேறொரு நாணயத்தில் உங்கள் அறிக்கைக்கான தரவைக் காண்பிக்கலாம். பயன்படுத்தப்படும் நாணய மாற்று வீதமானது, பரிவர்த்தனை நிகழ்ந்த நாளின் வரலாற்று விகிதத்தை அடிப்படையாகக் கொண்டது.
  • ஸ்டோர் மெனு: பல-ஸ்டோர் அறிக்கையிடல் அணுகலைக் கொண்ட நிறுவனங்களுக்கு, ஒரு நிறுவனத்திலுள்ள பல ஸ்டோர்களின் அறிக்கைக்கான தரவை ஒரே அறிக்கையில் காண்பிக்கலாம்.

உள்ளமைவுப் பலகம்

அறிக்கையின் வலதுபுறத்தில் உள்ள உள்ளமைவுப் பலகத்தைப் பயன்படுத்திப் புதிய Shopify அறிக்கைகளைத் தனிப்பயனாக்கலாம். உள்ளமைவுப் பலகத்தின் மேற்புறத்தில் உள்ள தாவல்களைப் பயன்படுத்தி நீங்கள் 2 ஆய்வு முறைகளுக்கு இடையே மாறலாம்: அவை ஃப்ரீஃபார்ம் Chart Vertical Icon மற்றும் குழுக்கள் Chart Cohort Icon ஆகும்.

ஒவ்வொரு தாவலும் தனித்தனியாகச் செயல்படும், எனவே ஆய்வு முறைகளுக்கு இடையே மாறும் போது அது மற்ற தாவலில் உள்ள உங்களின் தற்போதைய உள்ளமைவுகளைப் பாதிக்காது. இதன்மூலம், தாவல்களுக்கு இடையே மாறும்போது நீங்கள் செய்யும் மாற்றங்களை இழக்காமல், ஒரே அறிக்கைக்குள் பல்வேறு கோணங்களில் உங்கள் தரவை எளிதாக ஆராய முடியும். இருப்பினும், தற்போது திறக்கப்பட்டிருக்கும் ஆய்வு முறைத் தாவலின் அடிப்படையில் ஒரு அறிக்கைக்கு 1 உள்ளமைவு மட்டுமே சேமிக்கப்படும். இரு ஆய்வு முறைகளுக்கும் நீங்கள் உருவாக்கிய உள்ளமைவுகளைச் சேமிக்க விரும்பினால், ஒவ்வொரு ஆய்வு முறையையும் தனித்தனித் தனிப்பயன் அறிக்கையாகச் சேமிக்க வேண்டும்.

நீங்கள் தேர்ந்தெடுப்பவற்றின் அடிப்படையில், உள்ளமைவுப் பலகத்திலுள்ள மெனுக்களில் இருக்கும் விருப்பங்கள் மாறும் வகையில் புதுப்பிக்கப்படும். தரவை ஒன்றாகப் பார்க்க முடியாதபோது, குறிப்பிட்ட தரவுக் கலவைகளைத் தேர்ந்தெடுக்க முடியாது.

அளவீடுகள், பரிமாணங்கள் அல்லது வடிப்பான்களைச் சேர்த்து அல்லது அகற்றி, இயல்புநிலை அறிக்கைகளைத் தற்காலிகமாகத் திருத்தலாம். ஆனால் இந்தத் திருத்தங்கள், இந்த அறிக்கைகளின் அசல் உள்ளமைவை மேலெழுதாது. ஏற்கனவே உள்ள இயல்புநிலை அறிக்கையில் செய்யப்பட்ட மாற்றங்களை வைத்திருக்க, தரவு ஆய்வைத் தனிப்பயன் அறிக்கையாக நீங்கள் சேமிக்க வேண்டும்.

தரவு ஆய்வுகளை உருவாக்குவது குறித்து மேலும் அறிக.

ஃப்ரீஃபார்ம் முறை

போக்குகளை ஆராயவும் நீங்கள் தேர்ந்தெடுத்த பரிமாணங்கள் முழுவதும் தரவை ஒப்பிடவும் ஃப்ரீஃபார்ம் முறைத் தாவலே Chart Vertical Icon இயல்புநிலை அறிக்கை அனுபவமாகும். பின்வரும் அறிக்கை அளவுகோல்களைத் தேர்ந்தெடுப்பதற்கான மெனுக்கள் இந்தத் தாவலில் உள்ளன:

  • அளவீடுகள்: அறிக்கையில் காட்டப்படும் மொத்தம் அல்லது மதிப்பு. நீங்கள் எப்போதுமே குறைந்தது 1 அளவீட்டையாவது தேர்ந்தெடுக்க வேண்டும். எனினும், ஒரே அறிக்கையில் நீங்கள் பல அளவீடுகளைச் சேர்த்து அவற்றுக்கிடையே மாறிக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, நிகர விற்பனை அல்லது சராசரி ஆர்டர் மதிப்பு ஆகிய இரண்டுமே அளவீடுகள்தாம். நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட அளவீடுகளைச் சேர்க்கும்போது, உள்ளமைவுப் பலகத்தில் விரும்பிய அளவீட்டைக் கிளிக் செய்வதன் மூலம் எதைக் காட்சிப்படுத்த வேண்டும் என்பதை மாற்றலாம். எந்த அளவீடு காட்சிப்படுத்தப்படுகிறது என்பதைச் சரிபார்ப்புக்குறி குறிக்கும்.
  • பரிமாணங்கள்: தேர்ந்தெடுக்கப்பட்ட அளவீட்டைப் பிரித்து ஒழுங்கமைப்பதற்கான பண்பு. எடுத்துக்காட்டாக, காலப்போக்கில் கார்ட்டில் சேர்க்கப்பட்டவற்றின் வீதம் என்ற அறிக்கையில், கார்ட்டில் சேர்க்கப்பட்டவற்றின் வீதம் என்பது அளவீடு, நேரம் என்பது பரிமாணம் ஆகும். ஒரே அறிக்கையில் நீங்கள் பல பரிமாணங்களைச் சேர்க்கலாம்.
  • காட்சிப்படுத்தல்: உங்கள் தரவின் காட்சிப் பிரதிநிதித்துவம். மிகவும் பொருத்தமான காட்சிப்படுத்தல் தானாகவே தேர்ந்தெடுக்கப்படும். எனினும், நீங்கள் விரும்பியவாறு அந்தத் தேர்வை மேலெழுதலாம்.
  • (விரும்பினால்) அட்ரிபியூஷன்: அறிக்கையில் விற்பனை அளவீடுகள் மற்றும் சந்தைப்படுத்தல் பரிமாணங்கள் பயன்படுத்தப்படும்போது மட்டுமே காட்டப்படும் பிரிவு. உங்கள் அறிக்கைக்கான தரவின் அட்ரிபியூஷன் மாடல்களைத் தேர்ந்தெடுக்க, இதைப் பயன்படுத்தவும். அறிக்கைகளில் உள்ள சந்தைப்படுத்தல் அட்ரிபியூஷன் தரவு குறித்து மேலும் அறிக.
  • வடிப்பான்கள்: உங்கள் அறிக்கையின் தரவைக் குறைத்து, குறிப்பிட்ட அளவுகோல்களை மட்டுமே சேர்ப்பதற்கான முறை. இயல்புநிலையாக, கடைசி 30 நாட்களுக்கான தரவைச் சேர்க்கும் வகையில் தேதி வரம்பு வடிப்பான் அமைக்கப்பட்டிருக்கும். ஒரே அறிக்கையில் நீங்கள் பல வடிப்பான்களைச் சேர்க்கலாம்.

குழுக்கள் முறை

காலப்போக்கில் வாடிக்கையாளரைத் தக்கவைத்தல் மற்றும் குழுக்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைச் சிறப்பாகத் தீர்மானிக்க, உங்கள் அறிக்கைக்கான தரவை மதிப்பாய்வு செய்ய குழுக்கள் முறைத் தாவல் Chart Cohort Icon அனுமதிக்கிறது.

பின்வரும் அறிக்கை அளவுகோல்களைத் தேர்ந்தெடுப்பதற்கான மெனுக்கள் இந்தத் தாவலில் உள்ளன:

  • அளவீடு: அறிக்கையில் காட்டப்படும் மொத்தம் அல்லது மதிப்பு. நீங்கள் எப்போதும் குறைந்தது 1 அளவீட்டையாவது தேர்ந்தெடுக்க வேண்டும். அதேசமயம், ஒரேநேரத்தில் 1 தக்கவைப்பு அளவீட்டை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும். எடுத்துக்காட்டாக, நிகர விற்பனை அல்லது ஒரு வாடிக்கையாளர் செலவழித்த தொகை ஆகிய இரண்டுமே தக்கவைப்பு அளவீடுகள்தாம்.
  • குழுவின் வரையறை: வாடிக்கையாளர்களின் முதல் ஆர்டரின் அடிப்படையில், குழுப் பகுப்பாய்வில் எந்த வாடிக்கையாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதைத் தீர்மானிக்க வடிப்பான்களைப் பயன்படுத்துவதற்கான மெனு. எடுத்துக்காட்டாக, Shop விற்பனைச் சேனலில் இருந்து முதல் ஆர்டரைச் செய்த வாடிக்கையாளர்களை மட்டுமே சேர்க்க நீங்கள் வடிகட்டலாம்.
  • காட்சிப்படுத்தல்: உங்கள் தரவின் காட்சிப் பிரதிநிதித்துவம். மிகவும் பொருத்தமான காட்சிப்படுத்தல் தானாகவே தேர்ந்தெடுக்கப்படும். எனினும், நீங்கள் விரும்பியவாறு அந்தத் தேர்வை மேலெழுதலாம்.
  • இடைவெளி: குழுக்கள் பிரிக்கப்படும் காலவரம்புகளைத் தேர்ந்தெடுப்பதற்கான விருப்பம். எடுத்துக்காட்டாக, நீங்கள் குழுக்களை மாதம் வாரியாகப் பிரிக்கலாம்.
  • வடிப்பான்கள்: உங்கள் அறிக்கையின் தரவைக் குறைத்து, குறிப்பிட்ட அளவுகோல்களை மட்டுமே சேர்ப்பதற்கான முறை. இயல்புநிலையாக, கடந்த 12 மாதங்களுக்கான தரவைச் சேர்க்கும் வகையில் தேதி வரம்பு வடிப்பான் அமைக்கப்பட்டிருக்கும். ஒரே அறிக்கையில் நீங்கள் பல வடிப்பான்களைச் சேர்க்கலாம்.

வாடிக்கையாளர் குழுப் பகுப்பாய்வுத் தரவைத் தனிப்பயனாக்குவது குறித்து மேலும் அறிக.

சிறுகுறிப்புகள் பலகம்

ஒரு அளவீட்டில் மாற்றங்கள் ஏன் ஏற்பட்டன என்பதைப் பகுப்பாய்வு செய்ய உதவ, நேரப் பரிமாணத்தைப் பயன்படுத்தும் அறிக்கைகளில் நீங்கள் சிறுகுறிப்புகளைச் சேர்க்கலாம். நிகழ்வுகள் நடந்த தேதிகளில் அறிக்கையின் காட்சிப்படுத்தலில் சிறுகுறிப்புகள் நிறக் குறியிடப்பட்ட காட்சி மார்க்கர்களாக இருக்கும். தயாரிப்பு வெளியிடப்படுவது, தீம் பயன்படுத்தப்படுவது அல்லது செயலி நிறுவப்படுவது போன்ற ஸ்டோர் நிகழ்வுகளிலிருந்து சில சிறுகுறிப்புகள் உருவாக்கப்படுகின்றன. செயலிகள் மூலமாகவும் சிறுகுறிப்புகளைச் சேர்க்கலாம், அத்துடன் பிரச்சார அறிமுகம் அல்லது சப்ளையர் தாமதம் போன்ற உங்கள் சொந்த வணிக நிகழ்வுகளுக்கான சிறுகுறிப்புகளை நீங்களும் உங்கள் பணியாளர்களும் உருவாக்கலாம்.

சிறுகுறிப்புகளைச் செயல்படுத்த, சிறுகுறிப்புகள் என்பதைக் கிளிக் செய்து, பின்னர் Show annotations என்பதைக் கிளிக் செய்யவும். உள்ளமைவுப் பேனலானது சிறுகுறிப்புகள் பேனலாக மாறும், இது அறிக்கையின் காலவரம்பிற்கான அனைத்துச் சிறுகுறிப்புகளையும் பட்டியலிடும். சிறுகுறிப்புகள் பேனலில் இருந்து, உங்களுடைய சொந்தச் சிறுகுறிப்புகளை உருவாக்கலாம், திருத்தலாம் மற்றும் நீக்கலாம், சிறுகுறிப்புகளைத் தேடலாம் மற்றும் செயல்பாட்டு வகை மூலம் அல்லது Shopify, செயலி அல்லது பணியாளர் போன்று அவற்றை யார் உருவாக்கினார்கள் என்பது மூலம் ஃபில்டர் செய்யலாம். உள்ளமைவுப் பேனலுக்குத் திரும்ப, கட்டுப்பாடுகள் என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் Shopify அறிக்கைகளில் சிறுகுறிப்புகளைப் பயன்படுத்துவது குறித்து மேலும் அறிக.

காட்சிப்படுத்தல்கள்

Shopify அறிக்கையில் உங்கள் தரவு காட்சிப்படுத்தப்படும் விதத்தை நீங்கள் கட்டுப்படுத்தலாம். காட்சிப்படுத்தல்களில் கோட்டு அல்லது பட்டை வரைபடங்கள் போன்ற வரைபடங்களும் பட்டியல்கள், அட்டவணைகள், வெப்ப வரைபடங்கள், ஹிஸ்டோகிராம்களும் அடங்கும்.

இயல்பாக, அறிக்கையில் உள்ள முதன்மை அளவீட்டிற்கான பரிந்துரைக்கப்பட்ட காட்சிப்படுத்தல் உள்ளமைவு பேனலில் தானாகவே தேர்ந்தெடுக்கப்படும். Shopify இயல்புநிலை அறிக்கைகள் முன்பே தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிப்படுத்தலுடன் வருகின்றன, அவை ஒத்த பரிமாணங்களைக் கொண்ட பரிந்துரைக்கப்பட்ட காட்சிப்படுத்தலில் இருந்து வேறுபட்டிருக்கலாம். உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் வேறுபட்ட காட்சிப்படுத்தல் வகையை கைமுறையாகத் தேர்ந்தெடுப்பதன் மூலம் Recommended அமைப்பை நீங்கள் முடக்கலாம். உங்கள் Shopify அறிக்கைக்கான சரியான காட்சிப்படுத்தலைத் தேர்ந்தெடுப்பது பற்றி மேலும் அறிக.

குறிப்பிட்ட தரவுத்தொகுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிப்படுத்தல் கிடைக்கவில்லை எனில், அது காட்டப்படாது. எடுத்துக்காட்டாக, நேரத்தைப் பரிமாணமாகத் தேர்ந்தெடுத்தால் மட்டுமே கோட்டு வரைபடங்கள் காட்டப்படும். காட்சிப்படுத்தலைக் காட்ட, விடுபட்ட அல்லது இணக்கமான அளவீடுகள் அல்லது பரிமாணங்களைச் சேர்க்க உங்கள் அறிக்கையைச் சரிசெய்யலாம். அல்லது பரிந்துரைக்கப்படுபவை அமைப்பை மேனுவலாக மீண்டும் செயல்படுத்தலாம்.

அறிக்கையில் உள்ள முதன்மைப் பரிமாணத்திற்கான இயல்புநிலை எண்ணிக்கையிலான உருப்படிகளைக் காட்சிப்படுத்தல்கள் காட்டும். எடுத்துக்காட்டாக, தயாரிப்பு வாரியான மொத்த விற்பனை அறிக்கையானது இயல்புநிலையான எளிய கிடைமட்டப் பட்டை வரைபடக் காட்சிப்படுத்தலில் 5 தயாரிப்புகள் வரை காட்டும். ஆதரிக்கப்படும் காட்சிப்படுத்தல் வகையைத் தேர்ந்தெடுக்கும்போது, உள்ளமைவுப் பலகத்தைப் பயன்படுத்தித் தனிப்பயன் எண்ணிக்கையிலான உருப்படிகளை நீங்கள் காட்டலாம். காட்சிப்படுத்தல்களில் உள்ள உருப்படிகளின் எண்ணிக்கையைத் தனிப்பயனாக்குவது குறித்து மேலும் அறிக.

தரவு அட்டவணை

எல்லா அறிக்கைகளின் கீழும் தரவு அட்டவணை இருக்கும். மேலும் இது, நீங்கள் தேர்ந்தெடுத்த அளவீடுகள் மற்றும் பரிமாணங்களை அட்டவணை வடிவத்தில் காட்டும். ஒவ்வொரு அட்டவணையின் முதல் வரிசையிலும் சுருக்கம் காட்டப்படும். இது சேர்க்கப்பட்டுள்ள அனைத்து அளவீடுகளுக்கான எண்களிலான மொத்த மதிப்புகளைக் காட்டுகிறது.

அட்டவணையை 2 வழிகளில் ஒழுங்கமைக்கலாம்: தட்டையான அல்லது உள்ளமைக்கப்பட்ட வடிவம். தரவை எவ்வாறு காட்ட வேண்டும் என்பது, அறிக்கையிலிருந்து நீங்கள் பெற விரும்பும் தகவல்களைப் பொறுத்தது.

தரவு அட்டவணையின் தட்டையான அல்லது உள்ளமைக்கப்பட்ட பதிப்புகளுக்கு இடையில் மாற, டேபிள் விருப்பத்தின் ஐகானைக் கிளிக் செய்யவும் அல்லது தட்டவும்:

Image of the Flat table icon and the Nested table icon, with a double-sided arrow in the middle indicating the option to switch between them.

தட்டையான அட்டவணை

ஒரு தட்டையான அட்டவணை உங்கள் தரவு அட்டவணையில் உள்ள ஒவ்வொரு வரிசைக்கும் ஒரு ஒற்றை வரிசையைக் காண்பிக்கும். ஒரு குறிப்பிட்ட அளவீட்டின் மூலம் தட்டையான அட்டவணையை வரிசைப்படுத்த நீங்கள் தேர்வுசெய்தால், அது பரிமாணத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து தனிப்பட்ட, தனித்தனி வரிசைகளிலும் தரவை வரிசைப்படுத்தும்.

நிகர விற்பனையின் அடிப்படையில் இறங்கு வரிசையில் வரிசைப்படுத்தப்படும்போது, தட்டையான அட்டவணையில் தரவு எவ்வாறு காட்டப்படும் என்பதற்கான பின்வரும் உதாரணத்தை மதிப்பாய்வு செய்யவும்:

விற்பனைச் சேனல் மற்றும் தயாரிப்புத் தலைப்புத் தரவைக் கொண்ட அட்டவணை, நிகர விற்பனை மதிப்புகளின் அடிப்படையில் இறங்கு வரிசையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
விற்பனைச் சேனல்தயாரிப்புத் தலைப்புநிகர விற்பனை ⌄
சுருக்கம் $2,760
ஆன்லைன் ஸ்டோர்Bamboo Towel$575
ஆன்லைன் ஸ்டோர்Beach Sandals$450
விற்பனைப் புள்ளிRed Sunglasses$425
விற்பனைப் புள்ளிBamboo Towel$380
ஆன்லைன் ஸ்டோர்Red Sunglasses$300
விற்பனைப் புள்ளிCoconut Sunscreen$275
ஆன்லைன் ஸ்டோர்Coconut Sunscreen$210
விற்பனைப் புள்ளிBeach Sandals$145

உள்ளமைக்கப்பட்ட அட்டவணை

ஒரு உள்ளமைக்கப்பட்ட அட்டவணை தேர்ந்தெடுக்கப்பட்ட பரிமாணங்களின்படி உங்கள் அட்டவணையில் உள்ள தரவை குழுவாக்குகிறது. உதாரணமாக, நீங்கள் விற்பனைச் சேனல் மற்றும் தயாரிப்புத் தலைப்பு போன்ற 2 பரிமாணங்களைத் தேர்ந்தெடுத்த நிகர விற்பனை அறிக்கை இருந்தால், உள்ளமைக்கப்பட்ட அட்டவணையானது தரவை விற்பனைச் சேனலின்படியும், பிறகு ஒவ்வொரு விற்பனைச் சேனலிலும் உள்ள தயாரிப்புத் தலைப்பின்படியும் குழுவாக்கும். உங்கள் விற்பனையை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்த நீங்கள் தேர்வுசெய்தால், உள்ளமைக்கப்பட்ட அட்டவணை முதலில் அதிகம் விற்பனையாகும் விற்பனைச் சேனல்களையும், ஒவ்வொரு விற்பனைச் சேனலுக்குள்ளும் அதிகம் விற்பனையாகும் தயாரிப்புத் தலைப்புகளையும் முதலில் காண்பிக்கும்.

நிகர விற்பனையின் அடிப்படையில் இறங்கு வரிசையில் வரிசைப்படுத்தப்படும்போது, உள்ளமைக்கப்பட்ட அட்டவணையில் தரவு எவ்வாறு காட்டப்படும் என்பதற்கான பின்வரும் உதாரணத்தை மதிப்பாய்வு செய்யவும்:

விற்பனைச் சேனலை முதன்மைப் பரிமாணமாகக் கொண்ட உள்ளமைக்கப்பட்ட அட்டவணை.
விற்பனைச் சேனல்தயாரிப்புத் தலைப்புநிகர விற்பனை ⌄
சுருக்கம் $2,760
ஆன்லைன் ஸ்டோர்-$1,535
Bamboo Towel$575
Beach Sandals$450
Red Sunglasses$300
Coconut Sunscreen$210
விற்பனைப் புள்ளி-$1,225
Red Sunglasses$425
Bamboo Towel$380
Coconut Sunscreen$275
Beach Sandals$145

உள்ளமைக்கப்பட்ட அட்டவணையில் பரிமாணங்களின் வரிசை முக்கியமானது, ஏனெனில் உள்ளமைக்கப்பட்ட அட்டவணைகள் உள்ளமைவுப் பேனலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பரிமாணங்களின் வரிசையின் அடிப்படையில் தரவைக் குழுவாக்குகின்றன. உதாரணமாக, முந்தைய எடுத்துக்காட்டில் உள்ள பரிமாணங்கள் மாற்றப்பட்டு, தயாரிப்புத் தலைப்பு முதன்மைப் பரிமாணமாக இருந்தால், நிகர விற்பனையின் அடிப்படையில் இறங்கு வரிசையில் வரிசைப்படுத்தப்படும்போது அதே தரவு எவ்வாறு காட்டப்படும் என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:

தயாரிப்புத் தலைப்பை முதன்மைப் பரிமாணமாகக் கொண்ட உள்ளமைக்கப்பட்ட அட்டவணை.
தயாரிப்புத் தலைப்புவிற்பனைச் சேனல்நிகர விற்பனை ⌄
சுருக்கம் $2,760
Bamboo Towel-$955
ஆன்லைன் ஸ்டோர்$575
விற்பனைப் புள்ளி$380
Red Sunglasses-$725
விற்பனைப் புள்ளி$425
ஆன்லைன் ஸ்டோர்$300
Beach Sandals-$595
ஆன்லைன் ஸ்டோர்$450
விற்பனைப் புள்ளி$145
Coconut Sunscreen-$485
விற்பனைப் புள்ளி$275
ஆன்லைன் ஸ்டோர்$210