மொபைல் சாதன நிர்வாகத்தின் மூலம் Shopify POS புதுப்பிப்புகளை நிர்வகித்தல்

உங்கள் வணிகம் Shopify POS சாதனங்களை நிர்வகிக்க மொபைல் சாதன நிர்வாகத்தை (MDM) பயன்படுத்தினால், சாதனங்களில் Shopify POS இன் புதிய பதிப்புகள் எப்போது நிறுவப்பட வேண்டும் என்பதை நீங்கள் கட்டுப்படுத்தலாம். இதன் மூலம் நிறுவனம் முழுவதும் புதுப்பிப்புகளை ரோல்அவுட் செய்வதற்கு முன் அவற்றைச் சோதிக்கவும், விற்பனை அதிகமாக இருக்கும் காலங்களில் இடையூறுகளைக் குறைக்கவும் புதுப்பிப்பால் சிக்கல்கள் ஏற்பட்டால் அவற்றை இன்னும் திறம்படத் தீர்க்கவும் முடியும்.

Shopify POS புதுப்பிப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன, படிப்படியான ரோல்அவுட்டுகளுக்கு உங்கள் MDM-ஐ எவ்வாறு உள்ளமைப்பது மற்றும் நிலையான சாதனங்களைப் பராமரிப்பதற்கான சிறந்த நடைமுறைகள் ஆகியவற்றை இந்த வழிகாட்டி விளக்குகிறது.

Shopify POS புதுப்பிப்புகளைப் புரிந்துகொள்ளுதல்

Shopify POS-இன் புதிய பதிப்பு ஒவ்வொரு 2 வாரங்களுக்கும் வெளியிடப்படுகிறது. மிகவும் புதுப்பித்த செயல்பாடு உங்களிடம் இருப்பதை உறுதிசெய்யும் புதிய அம்சங்களும் பிழைத்திருத்தங்களும் Shopify POS-இன் புதிய பதிப்புகளில் அடங்கும். புதுப்பிப்புகள் உங்கள் அன்றாடப் பணிப்பாய்வுகளையும் பாதிக்கலாம், எனவே கூடுதல் பணியாளர் பயிற்சி தேவைப்படலாம். புதுப்பிப்புகளுக்காகத் திட்டமிடுவது, குறிப்பாக அதிக சாதனங்கள் வைத்திருப்பவர்கள், தங்கள் வணிகச் செயல்பாடுகளில் ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்க உதவும்.

மிகச் சமீபத்தில் சோதிக்கப்பட்ட செயலியின் பதிப்பு உங்களிடம் இருப்பதை உறுதிசெய்ய, முடிந்தவரை விரைவாக அனைத்துச் சாதனங்களிலும் Shopify POS-ஐப் புதுப்பிப்பது சிறந்த நடைமுறையாகும்.

பெரும்பாலான MDM அமைப்புகள், Shopify POS செயலியின் புதுப்பிப்புகளிலிருந்து இயங்குதளப் புதுப்பிப்புகளைத் தனியாக நிர்வகிக்கின்றன. MDM-ஐ அமைக்கும்போது, இரு வகையான புதுப்பிப்புகளையும் அது நிர்வகிக்கிறதா என்பதை உறுதிசெய்யவும். இதனால், புதிய Shopify POS பதிப்பை நீங்கள் சோதித்து முடிப்பதற்கு முன் இயங்குதளப் புதுப்பிப்பு தானாக ரோல்அவுட் செய்யப்படாது.

Shopify POS-இல் புதுப்பிப்பைக் கட்டுப்படுத்த MDM-ஐப் பயன்படுத்துதல்

நீங்கள் நிர்வகிக்கும் iOS அல்லது Android சாதனங்களில் MDM மூலம் எவ்வாறு Shopify POS புதுப்பிப்புகளை அரங்கேற்றலாம், திட்டமிடலாம் மற்றும் கண்காணிக்கலாம் என்பதை அறியப் பின்வரும் படிகளை மதிப்பாய்வு செய்யவும். உங்கள் MDM மென்பொருளுக்கு ஆதரவு தேவைப்பட்டால், உங்கள் MDM-இன் ஆதரவுக் குழுக்களைத் தொடர்புகொள்ள வேண்டும்.

முந்தைய Shopify POS பதிப்பிற்கு உங்களால் திரும்பச் செல்ல முடியாது. நீங்கள் Shopify POS-ஐப் புதுப்பித்த பிறகு, அடுத்த புதுப்பிப்பு வெளியாகி நீங்கள் அதை வரிசைப்படுத்தும் வரை உங்கள் சாதனங்கள் அந்தப் பதிப்பிலேயே இருக்கும்.

படி 1: சாதனச் சோதனைச் குழுக்களை உருவாக்குதல்

பெரும்பாலான MDM அமைவாக்கங்கள் சாதனக் குழுக்களை உருவாக்க உங்களை அனுமதிக்கின்றன, எனவே நீங்கள் சாதனக் குழுக்களைப் பல்வேறு வகைகளில் நிர்வகிக்கலாம். சோதனைச் சாதனங்களின் குழுவை உருவாக்குவது, கட்டுப்படுத்தப்பட்ட அளவிலான சாதனங்களில் புதுப்பிப்புகளை வரிசைப்படுத்த உங்களை அனுமதிக்கிறது, இதன் மூலம் உங்கள் ஒட்டுமொத்தச் சாதனங்களையும் புதுப்பிப்பதற்கு முன்பு புதிய அம்சங்களையும் பணிப்பாய்வு மாற்றங்களையும் உங்களால் சோதிக்க முடியும்.

உங்கள் மற்ற சாதனங்களுக்கு ரோல்அவுட் செய்வதற்கு முன்பாக, சோதனைக் குழுவில் 2-3 வணிக நாள்கள் சோதிப்பதற்குத் திட்டமிடுங்கள். அதிக விற்பனை நடைபெறும் காலக்கட்டங்களுக்கு முன்பாக, சோதனை செய்வதற்கான கால அளவை ஒரு முழு வாரமாக நீட்டிக்கவும்.

படி 2: உங்கள் சாதனங்களின் புதுப்பிப்பு அமைப்புகளை அமைவாக்கம் செய்தல்

புதுப்பிப்பு அமைப்புகளை நீங்கள் எவ்வாறு அமைவாக்கம் செய்வது என்பது உங்கள் சாதனத்தின் வகையைப் பொறுத்தது:

  • iOS சாதனங்கள்: பெரும்பாலான சாதனக் குழுக்களில் Shopify POS-க்கான தானியங்கிச் செயலிப் புதுப்பிப்புகளை முடக்குவதற்கு உங்கள் MDM-ஐ அமைவாக்கம் செய்யவும். உங்கள் சோதனைக் குழுவில் தானியங்கிப் புதுப்பிப்புகள் செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும், அப்போதுதான் அது எப்போதும் புதிய பதிப்புகளை முதலில் பெறும். அதன் பிறகு நீங்கள் ரோல்அவுட் செய்யத் தயாரானதும் ஒவ்வொரு குழுவிற்கும் தானியங்கிப் புதுப்பிப்புகளைச் செயல்படுத்தலாம்.

  • Android சாதனங்கள்: உங்கள் MDM-இன் "Managed Google Play" அமைப்புகளில் Shopify POS புதுப்பிப்புப் பயன்முறையை அமைவாக்கம் செய்யவும். புதுப்பிப்புகளை உடனடியாகப் பெற உங்கள் சோதனைக் குழுவை "Default" அல்லது "High Priority" என அமைக்கவும். மற்ற குழுக்களுக்குப் புதுப்பிப்புகளை 90 நாள்கள் வரை தாமதப்படுத்த அவற்றை "Postpone" என அமைக்கவும், பின்னர் நீங்கள் ரோல்அவுட் செய்யத் தயாரானதும் அவற்றை "Default" என மாற்றவும்.

உங்கள் iOS சாதனங்கள் iOS 17.2 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பில் இயங்கி, உங்கள் மேற்பார்வையில் இருந்து, Apple Business Manager மூலம் பதிவுசெய்யப்பட்டிருந்தால், அறிவிப்பு அடிப்படையிலான செயலி நிர்வாகம் மூலம் Shopify POS-ஐ ஒரு குறிப்பிட்ட பதிப்பில் நிலைநிறுத்த உங்கள் MDM ஆதரிக்கக்கூடும். இதற்கான ஆதரவு உங்கள் MDM வழங்குநரைப் பொறுத்தது. படிப்படியான ரோல்அவுட்களுக்கு இதைப் பயன்படுத்துவதற்கு முன், குறிப்பிட்ட பதிப்பில் நிலைநிறுத்தும் திறன் உள்ளதா என்பதை உங்கள் MDM வழங்குநரிடம் உறுதிசெய்யவும். உங்கள் MDM இதை ஆதரிக்காவிட்டால், தானியங்கிப் புதுப்பிப்புகளைச் செயல்படுத்தும்போது, அந்த நேரத்தில் App Store இல் கிடைக்கும் சமீபத்திய பதிப்பு நிறுவப்படும். அது நீங்கள் சோதித்த பதிப்பைவிடப் புதியதாக இருக்கலாம்.

படி 3: உங்கள் சாதனங்களைப் புதுப்பித்தல்

உங்கள் வணிகத்திற்குக் குறைவான இடையூறுகளுடன் உங்கள் சாதனங்களைப் புதுப்பிக்க பின்வரும் உதவிக்குறிப்புகளைக் கருத்தில் கொள்ளவும்:

  • உங்கள் வணிகத்தின் தினசரிச் செயல்பாடுகளுக்கு இடையூறுகள் ஏற்படுவதைத் தடுக்க, குறைவான டிராஃபிக் இருக்கும் நேரங்களில் புதுப்பிப்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • உங்கள் ஸ்டோர்கள் திறக்கப்படுவதற்கு முன் அல்லது உங்கள் ஸ்டோர்கள் மூடப்பட்ட பிறகு புதுப்பிப்புகளை வரிசைப்படுத்துவதற்கு உங்கள் MDM-ஐ அமைவாக்கம் செய்யவும்.
  • உங்களிடம் பல நேர மண்டலங்களில் இடங்கள் இருந்தால், ஒவ்வொரு இடமும் அவற்றின் உள்ளூர் இரவு நேரங்களில் புதுப்பிப்புகளைப் பெறுமாறு உங்கள் ரோல்அவுட் அட்டவணையை நீங்கள் மாற்றி அமைக்க வேண்டியிருக்கலாம். இது எல்லாச் சாதனங்களும் ஒரே நேரத்தில் புதுப்பிக்கப்படுவதைத் தடுக்கிறது, சிக்கல்கள் ஏற்பட்டால் நேர மண்டலத்திற்கு ஏற்ற ஸ்டோர் நேரங்களில் அவற்றைக் கையாள உங்கள் ஆதரவுக் குழுவை அனுமதிக்கிறது.

Shopify POS செயலிப் புதுப்பிப்புகளில் உங்கள் கார்டு ரீடர் அல்லது Shopify POS Hub போன்ற வன்பொருளுக்கான ஃபெர்ம்வேர் சேர்க்கப்படாது. வன்பொருளின் சொந்தப் புதுப்பிப்புச் செயல்முறையின் மூலமாக வன்பொருள் ஃபெர்ம்வேர் புதுப்பிப்புகளைத் தனியாக நிர்வகிக்கவும்.

உங்கள் சாதனங்களைப் புதுப்பிப்பதற்கு முன்பு, இரவுநேரப் புதுப்பிப்புகள் உட்பட அதுபற்றி ஸ்டோர் நிர்வாகிகளுக்கு நீங்கள் தெரிவிக்க வேண்டும். இது சாத்தியமான பணிப்பாய்வு மாற்றங்களுக்கு ஸ்டோர் நிர்வாகிகளைத் தயார்படுத்துகிறது. Shopify POS புதுப்பிப்பு தொடர்பான பின்வரும் விவரங்களை உங்கள் நிர்வாகிக்கு வழங்கவும்:

  • அவர்களின் உள்ளூர் நேர மண்டலத்தில் புதுப்பிப்புத் தேதி மற்றும் நேரம்
  • Retail Release Roundup மூலம் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதன் சுருக்கமான விளக்கம்
  • ஸ்டோர் திறக்கப்படுவதற்கு முன்பாக ஒரு சோதனை விற்பனையைச் செயல்படுத்துவது போன்ற சோதனைச் செய்வதற்கான வழிமுறைகள்.
  • சிக்கல் ஏற்பட்டால் யாரைத் தொடர்புகொள்வது

POS சாதனங்கள் சரியாகச் செயல்படுகின்றனவா என்பதைச் சரிபார்க்க, புதுப்பிப்பு நடைபெறும் நாள்களில் ஸ்டோர் திறப்பதற்கு 15-30 நிமிடங்களுக்கு முன்பாகவே ஸ்டோர் நிர்வாகிகள் வர வேண்டியிருக்கலாம்.

படி 4: மும்முரமான காலக்கட்டங்களுக்குத் திட்டமிடுதல்

விடுமுறைகள் அல்லது விளம்பர நிகழ்வுகள் போன்ற முக்கிய விற்பனைக் காலங்களுக்கு முன், எல்லாச் சாதனங்களையும் நிலையாக இயங்கும், சோதிக்கப்பட்ட சமீபத்திய Shopify POS பதிப்புக்குப் புதுப்பிப்பதை உறுதிசெய்யவும். இடையூறுகளைக் குறைக்க, அதிகப் பரிவர்த்தனைகள் நடைபெறும் இந்த நாட்கள் தொடங்குவதற்குச் சற்று முன்போ இந்த நாட்களிலோ நீங்கள் சோதிக்காத புதுப்பிப்புகளை வரிசைப்படுத்துவதைத் தவிர்க்கவும்.

மும்முரமான காலக்கட்டங்களுக்குத் திட்டமிட பின்வரும் சிறந்த நடைமுறைகளைப் பயன்படுத்தவும்:

  • அதிக விற்பனை நடைபெறும் காலக்கட்டங்களுக்குப் பல வாரங்களுக்கு முன்பாகவே உங்களின் சோதனைக் குழுச் சாதனங்களில் புதிய Shopify POS புதுப்பிப்புகளைச் சோதிக்கவும்.
  • மீதமுள்ள சாதனங்களைப் புதுப்பிக்கும் முன்பாக புதிய பதிப்புடன் எல்லாப் பணிப்பாய்வுகள், ஒருங்கிணைப்புகள் மற்றும் வன்பொருள்களையும் சரிபார்க்கவும்.
  • விற்பனை அதிகரிப்பதற்கு முன்பாக எல்லா இடங்களும் அங்கீகரிக்கப்பட்ட சமீபத்திய பதிப்பில் இயங்குமாறு ரோல்அவுட்டைத் திட்டமிடவும்.

Shopify POS புதுப்பிப்பைச் சரிபார்த்தல்

உங்கள் சோதனைச் சாதனங்கள் புதிய Shopify POS பதிப்பைப் பெற்ற பிறகு, மீதமுள்ள உங்கள் சாதனங்களுக்கு ரோல்அவுட் செய்யும் முன்பாக பின்வரும் சரிபார்ப்புகளைச் செய்யவும்:

  • உங்கள் கார்டு ரீடர் இணைக்கப்பட்டுப் பரிவர்த்தனையை நிறைவுசெய்கிறது என்பதை உறுதிப்படுத்த ஒரு கார்டு பேமெண்டைச் செயல்படுத்தவும்.
  • உங்கள் பணப் பெட்டி திறக்கிறது என்பதை உறுதிப்படுத்த ஒரு ரொக்க விற்பனையைச் செயல்படுத்தவும்.
  • ரிட்டர்னைச் செயல்படுத்தவும்.
  • தள்ளுபடியைப் பயன்படுத்தவும்.
  • ரசீதை அச்சிடவும்.
  • பார்கோடை ஸ்கேன் செய்யவும்.
  • உங்கள் பணியாளர்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு Shopify POS பயனர் இடைமுக (UI) நீட்டிப்பையும் திறக்கவும்.
  • லாயல்டி அல்லது சரக்கு இருப்புச் செயலிகள் போன்ற மூன்றாம் தரப்புச் செயலி ஒருங்கிணைப்புகளைச் சரிபார்க்கவும்.

ஒவ்வொரு சரிபார்ப்பும் வெற்றிகரமாக இருந்தால், உங்கள் மீதமுள்ள சாதனங்களுக்கும் ரோல்அவுட்டைத் தொடரவும். ஏதேனும் சரிபார்ப்பு எதிர்பார்த்தபடி வேலை செய்யவில்லை எனில், ரோல்அவுட்டை நிறுத்திவிட்டு, புதுப்பிப்பு வரிசைப்படுத்தல்களின் சிக்கல்களைத் தீர்த்தல் என்பதைப் பார்க்கவும்.

புதுப்பிப்பு வரிசைப்படுத்தல்களின் சிக்கல்களைத் தீர்த்தல்

பின்வரும் சிக்கல் தீர்க்கும் படிகளைப் பயன்படுத்திப் பெரும்பாலான புதுப்பிப்பு வரிசைப்படுத்தல் சிக்கல்களை உங்களால் தீர்க்க முடியும். உங்களால் சிக்கலைத் தீர்க்க முடியாவிட்டால், கூடுதல் சிக்கல் தீர்த்தல் ஆதரவிற்கு உங்கள் MDM விற்பனையாளரைத் தொடர்புகொள்ளவும்.

சாதனங்கள் புதுப்பிப்புகளைப் பெறவில்லை

வரிசைப்படுத்தப்பட்ட 24-48 மணிநேரத்திற்குள் சாதனங்கள் புதுப்பிக்கப்படவில்லை எனில், பின்வரும் சிக்கல் தீர்க்கும் படிகளை மேற்கொள்ளவும்:

சாதன இணைப்பைச் சரிபார்த்தல்:

  • உங்கள் POS சாதனம் Wi-Fi அல்லது செல்லுலார் பிணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளதைச் சரிபார்க்கவும்.
  • உங்கள் POS சாதனம் ஏர்பிளேன் பயன்முறையில் அல்லது ஆஃப்லைனில் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்.
  • வலையமைப்பு ஃபயர்வால் அமைப்புகள் MDM டிராஃபிக்கைத் தடுக்கவில்லை என்பதை உறுதிசெய்யவும்.

MDM அமைவாக்கத்தைச் சரிபார்த்தல்:

  • வரிசைப்படுத்துவதற்கான சரியான குழுவில் உங்கள் POS சாதனம் உள்ளதை உறுதிப்படுத்தவும்.
  • புதுப்பிப்புக் கொள்கை செயலில் உள்ளதை உறுதிப்படுத்தவும் (இடைநிறுத்தப்படாமல் அல்லது முடக்கப்படாமல்).
  • உங்கள் MDM கன்சோலில் POS சாதனத்தின் முந்தைய செக்-இன் நேரத்தைச் சரிபார்க்கவும்.

செயலி விநியோகத்தைச் சரிபார்த்தல் (iOS):

  • “Apple Business Manager” இல் உள்ள “Apps and Books (செயலிகள் மற்றும் புத்தகங்கள்)” வழியாக Shopify POS-ஐச் சேர்த்துள்ளதைச் சரிபார்க்கவும்.
  • டோக்கன்கள் ஆண்டுதோறும் காலாவதியாகும் என்பதால், உங்களின் "Apple Business Manager" டோக்கன் தற்போதைய நிலையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.
  • பொது App Store இலிருந்து Shopify POS-ஐச் சேர்த்திருந்தால், புதுப்பிப்புக் கட்டுப்பாடுகள் செயல்படாது. “Apple Business Manager” மூலம் Shopify POS-ஐ மீண்டும் சேர்க்கவும். மேற்பார்வையில் உள்ள சாதனங்களில், பொது App Store இலிருந்து ஏற்கெனவே நிறுவப்பட்ட Shopify POS-ஐ மீண்டும் நிறுவாமலேயே Apple Business Manager மூலம் நிர்வகிக்கும் வகையில் மாற்றலாம்.

மேனுவல் ஒத்திசைவைக் கட்டாயப்படுத்துதல்:

  • பெரும்பாலான MDM-கள் தனிப்பட்ட சாதனங்களுக்கு "sync" அல்லது "check-in" பொத்தானைக் கொண்டுள்ளன. இது திட்டமிடப்பட்ட செக்-இன்னிற்குக் காத்திருப்பதற்குப் பதிலாக உடனடி இணைப்பு முயற்சியைத் தூண்டுகிறது.
MDM மற்றும் வலையமைப்புச் சிக்கல்கள்

சில சந்தர்ப்பங்களில், Shopify POS வலையமைப்பிற்குள் MDM மென்பொருள் தலையிடலாம். MDM-ஐச் செயல்படுத்திய பிறகு Shopify POS இணைப்புச் சிக்கல்களை நீங்கள் சந்தித்தால், பின்வரும் சிக்கல் தீர்க்கும் படிகளை மேற்கொள்ளவும்:

  • சிக்கலைக் கண்டறிவதற்கு MDM இல்லாமல் ஒரு சாதனத்தைச் சோதிக்கவும்.
  • MDM ஃபயர்வால் மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளைச் சரிபார்க்கவும்.
  • தேவையான POS டொமைன்கள் அல்லது போர்ட்களை MDM தடுக்கிறதா எனச் சரிபார்க்கவும்.
  • Shopify POS-க்கான வலையமைப்புத் தேவைகளை உறுதிப்படுத்தவும்.

வலையமைப்புச் சிக்கல்களுக்கு MDM காரணமாக இருக்கலாம் என நீங்கள் சந்தேகித்தால், உங்கள் MDM விற்பனையாளரின் ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.

வணிக நேரங்களில் நிறுவப்படும் புதுப்பிப்புகள்

இரவில் திட்டமிடப்பட்டிருந்தும் ஸ்டோர்கள் திறந்திருக்கும் போது புதுப்பிப்புகள் வரிசைப்படுத்தப்பட்டால், பின்வரும் சிக்கல் தீர்த்தல் படிகளை மேற்கொள்ளுங்கள்:

சாதன நேரமண்டல அமைப்புகளைச் சரிபார்க்கவும்:

  • சாதனத்தின் நேரமண்டலமானது கடை இருப்பிடத்துடன் பொருந்தாமல் இருக்கலாம்.
  • ஒவ்வொரு சாதனத்திலும் சரியான உள்ளூர் நேரமண்டலம் உள்ளமைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தவும். சில சாதனங்களில் UTC அல்லது தலைமையகத்தின் நேரமண்டலம் இயல்புநிலையாக இருக்கும்.

பராமரிப்புச் சாளர உள்ளமைவை மதிப்பாய்வு செய்யவும்:

  • பராமரிப்புச் சாளர நேரங்கள் சரியாக உள்ளனவா என்பதை உறுதிப்படுத்தவும்.
  • நேரங்கள் UTC-இல் இல்லாமல் சாதனத்தின் உள்ளூர் நேரமண்டலத்தில் உள்ளனவா என்பதைச் சரிபார்க்கவும்.
  • பராமரிப்புக்கான நேர வரம்பு அம்சம் செயல்படுத்தப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும்.

புதுப்பிப்பில் உள்ள சிக்கலைப் புகாரளி

முதலில் சில சாதனங்களில் சோதிப்பதன் மூலம், உங்கள் சாதனங்கள் அனைத்தையும் புதுப்பிப்பதற்கு முன்பாகவே சிக்கல்களைக் கண்டறியலாம். உங்கள் சோதனைச் செயல்முறையின் போதோ அதற்குப் பின்னரோ சிக்கலைக் கண்டறிந்தால், பின்வரும் படிகளை மேற்கொள்ளவும்:

  • புதுப்பிப்பின் வரிசைப்படுத்தலை நீங்கள் நிறைவுசெய்யவில்லை என்றால், உங்கள் மீதமுள்ள சாதனங்களைப் புதுப்பிக்க வேண்டாம்.
  • பாதிக்கப்பட்ட சாதனங்களிலிருந்து POS பதிவுகளைச் சமர்ப்பிப்பதன் மூலம் சிக்கலைப் புகாரளிக்கவும். Shopify POS-இல், Horizontal menu > ஆதரவு > பிழையைப் புகாரளி என்பதற்குச் செல்லவும்.
  • புதுப்பிப்பைத் தொடர்ந்து வரிசைப்படுத்த வேண்டுமா என்பதை முடிவுசெய்யவும். சிக்கல் உங்கள் அன்றாடப் பணிப்பாய்வுகளைப் பாதித்தால், அதைத் தீர்க்கும் வரை வரிசைப்படுத்துவதை இடைநிறுத்தலாம்.