பார்கோடு பிரிண்டர்கள்

உங்கள் சில்லறை விற்பனை ஸ்டோரில் செக்அவுட் மற்றும் சரக்கு மேலாண்மையை எளிதாக்க பார்கோடு லேபிள்களைப் பயன்படுத்தலாம். தயாரிப்புகளுக்கான பார்கோடு லேபிள்களை அச்சிட, ஆதரிக்கப்படும் லேபிள் பிரிண்டரைப் பயன்படுத்தலாம். பிரிண்டரை டெஸ்க்டாப் கணினியுடன் இணைத்து, பொருத்தமான மென்பொருளை நிறுவ வேண்டும்.

ஆதரிக்கப்படும் பார்கோடு லேபிள் பிரிண்டர்கள்

உங்கள் Shopify தயாரிப்புகளுக்குப் பார்கோடு லேபிள்களை அச்சிட, ஆதரிக்கப்படும் பிரிண்டர் மற்றும் அதற்கான மென்பொருளைப் பயன்படுத்த வேண்டும்.

வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் கிடைக்கும் பிராண்டுகள், மாடல் எண்கள் மற்றும் பிராந்தியக் கிடைக்கும் தன்மை போன்ற விவரங்களுடன், கீழே பட்டியலிடப்பட்டுள்ள Shopify-க்கு ஏற்ற லேபிள் பிரிண்டர்களின் சேகரிப்பை ஆராயுங்கள்.

வட அமெரிக்காவில் உள்ள லேபிள் பிரிண்டர்கள்

DYMO மற்றும் Zebra வழங்கும் பல்வேறு மாடல்கள் உட்பட, வட அமெரிக்காவில் Shopify-க்குக் கிடைக்கும் பலவகையான லேபிள் பிரிண்டர்களை ஆராயுங்கள், மேலும் அவற்றின் மாடல் எண்கள் மற்றும் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் அவற்றை எங்கு வாங்கலாம் என்ற விவரங்களையும் தெரிந்துகொள்ளுங்கள்.

Shopify-க்காக வட அமெரிக்காவில் கிடைக்கும் லேபிள் பிரிண்டர்கள்
லேபிள் பிரிண்டர்மாடல் எண்கிடைக்கும் தன்மை
DYMO LabelWriter® 550 லேபிள் பிரிண்டர்ஏதுமில்லைகனடா, அமெரிக்கா
Zebra லேபிள் பிரிண்டர் (USB)ZD220கனடா, அமெரிக்கா
Zebra லேபிள் பிரிண்டர் (வயர்லெஸ்)ZD420 & ZD421கனடா, அமெரிக்கா

ஐரோப்பாவில் உள்ள லேபிள் பிரிண்டர்கள்

ஐரோப்பாவில் Shopify-க்கு இணக்கமான லேபிள் பிரிண்டர்களின் தேர்வை ஆராய்ந்து பாருங்கள். இதில் பல்வேறு வகையான இணைப்பு விருப்பங்கள், மேலும் எந்தெந்த நாடுகளில் கிடைக்கும் என்ற விவரங்களுடன் கூடிய Zebra மற்றும் Bixolon நிறுவனங்களின் மாடல்களும் அடங்கும்.

Shopify-க்காக ஐரோப்பாவில் கிடைக்கும் லேபிள் பிரிண்டர்கள்
லேபிள் பிரிண்டர்மாடல் எண்கிடைக்கும் தன்மை
Zebra லேபிள் பிரிண்டர் (USB)ZD220அயர்லாந்து, யுனைடெட் கிங்டம்
Zebra லேபிள் பிரிண்டர் (USB + புளூடூத்)ZD4A042-D0EM00EZபெல்ஜியம், செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, லக்ஸம்பர்க், நெதர்லாந்து, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, யுனைடெட் கிங்டம்
Bixolon லேபிள் பிரிண்டர் (USB)XD5-40dK/BEGயுனைடெட் கிங்டம்

நீங்கள் தேர்ந்தெடுக்கும் மாடலைப் பொறுத்து, லேபிள் பிரிண்டர் கம்பியில்லா அல்லது கம்பி இணைப்பு மூலம் டெஸ்க்டாப் கணினியுடன் இணையும். உங்கள் POS சாதனத்திலிருந்து அச்சிடத் தொடங்கினாலும், தேவையான மென்பொருள் நிறுவப்பட்டுள்ள டெஸ்க்டாப் கணினியுடன் பிரிண்டரை இணைக்க வேண்டும்.

பார்கோடு பிரிண்டர்களுக்காகக் கவனிக்க வேண்டியவை

பார்கோடு லேபிள் அச்சிடுவதை அமைப்பதற்கு முன், கவனிக்க வேண்டிய பின்வரும் விஷயங்களை மதிப்பாய்வு செய்யவும்:

சாதன இணக்கத்தன்மை

  • DYMO LabelWriter 450: Mac (OS X® 10.11 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகள்) மற்றும் Windows (Windows® 7 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகள்) கணினிகளுடன் இணக்கமானது.
  • DYMO LabelWriter 550: Mac (Mac OS X 10.14 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகள்) மற்றும் Windows (Windows 8.1 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகள்) கணினிகளுடன் இணக்கமானது. Intel மற்றும் M1 ஆகிய இரண்டு மாடல்களையும் ஆதரிக்கிறது. Macbook Air மற்றும் Macbook Pro 13"-க்குப் Big Sur 11.1 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகள் தேவை. Mac mini-யுடன் இது இணங்காது.
  • DYMO LabelWriter வயர்லெஸ்: Mac (OS X® 10.11 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகள்) மற்றும் Windows (Windows® 7 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகள்) கணினிகளுடன் மட்டுமே இணக்கமானது. Retail Barcode Labels செயலியைப் பயன்படுத்தி iOS அல்லது Android சாதனங்களில் DYMO வயர்லெஸ் பிரிண்டரால் அச்சிட முடியாது.
  • Zebra ZD421: இந்தப் பிரிண்டர் AirPrint ஐ ஆதரிக்காது. iOS சாதனங்களிலிருந்து நேரடியாகவோ இணைய உலாவி மூலமாகவோ பார்கோடுகளை அச்சிட முடியாது. Zebra இன் செயலியைப் பயன்படுத்தி Bluetooth மூலம் iOS சாதனங்களுடன் இந்தப் பிரிண்டரை இணைக்க முடிந்தாலும், பார்கோடு லேபிள் அச்சிடுதலுக்கான ஒருங்கிணைப்பு இதில் இல்லை. பார்கோடு லேபிள்களை அச்சிட டெஸ்க்டாப் கணினி இணைப்பு தேவை.
  • அனைத்து பார்கோடு பிரிண்டர்களுக்கும்: Shopify POS செயலி பார்கோடு லேபிள்களை நேரடியாக அச்சிடுவதை ஆதரிக்காது. பார்கோடு லேபிள்களை அச்சிட, உங்கள் பிரிண்டர் ஆதரிக்கும் மென்பொருளைப் பயன்படுத்தவும். பிரிண்டரின் அமைவுத் தேவைகளுக்கு ஏற்ப அதை இணைத்திருப்பதை உறுதிசெய்யவும்.

ஆதரிக்கப்படும் லேபிள் அளவுகள்

  • DYMO பிரிண்டர்களுக்கான 4 லேபிள் அளவுகளை மட்டுமே Retail Barcode Labels செயலி ஆதரிக்கிறது: சிறியது (1" x 1"), நடுத்தரமானது (1" x 2 1/8"), பெரியது (1 1/8" x 3 1/2"), மற்றும் பட்டர்ஃபிளை/பார்பெல் (3/8" x 3/4"). தனிப்பயன் லேபிள் அளவுகள் கிடைக்கவில்லை.

லேபிள்களை அச்சிடுவதற்கான மென்பொருள் தேவைகள்

பார்கோடு லேபிள்களை அச்சிட, உங்கள் பிரிண்டரை டெஸ்க்டாப் கணினியுடன் இணைக்கும் முன் பின்வருபவனவற்றில் ஒன்றை அமைக்க வேண்டும்:

  • Retail Barcode Labels செயலி — Shopify-இலிருந்தே எளிய பார்கோடு லேபிள்களை வடிவமைத்து அச்சிடலாம்.
  • Dymo Label மென்பொருள் — விரிவான பார்கோடு லேபிள்களை வடிவமைத்து அச்சிடலாம். டெஸ்க்டாப் அல்லது POS சாதனத்திலிருந்து இந்த லேபிள்களை நீங்கள் அச்சிடலாம்.

டெஸ்க்டாப் கணினியுடன் உங்கள் பிரிண்டரை இணைத்தல்

உங்கள் பிரிண்டரை இணைக்க, உற்பத்தியாளரின் விரைவுத் தொடக்க வழிகாட்டிகளைப் பின்பற்றவும்:

Dymo பிரிண்டர்களுக்கான ஆதரிக்கப்படும் பார்கோடு லேபிள் அளவுகள்

ஆதரிக்கப்படும் Dymo பிரிண்டர்கள் எதிலாவது பார்கோடு லேபிள்களை அச்சிட, பின்வரும் அளவுகளில் ஒன்றில் Dymo பிராண்ட் லேபிள்களைப் பயன்படுத்த வேண்டும்:

  • சிறியது (1" x 1"), அதிகபட்சம் 6-8 இலக்கங்கள்
  • நடுத்தரமானது (1" x 2 1/8"), அதிகபட்சம் 22 இலக்கங்கள்
  • பெரியது (1 1/8" x 2 1/8"), அதிகபட்சம் 40 இலக்கங்கள்
  • பட்டர்ஃபிளை/பார்பெல் (3/8" x 3/4"), அதிகபட்சம் 8 இலக்கங்கள் (ஐக்கிய ராஜ்ஜியத்தில் கிடைக்கவில்லை)

எண்கள் எடுத்துக்கொள்ளும் இடத்தை விட எழுத்துகள் அல்லது குறியீடுகள் அதிக இடத்தை எடுத்துக்கொள்ளலாம் என்பதால், அவற்றைப் பயன்படுத்தும்போது குறைவான வரியுருக்களை நீங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கலாம்.

Zebra பிரிண்டர்களுக்கான ஆதரிக்கப்படும் பார்கோடு லேபிள் அளவுகள்

உங்கள் லேபிள் பிரிண்டர் மூலம் லேபிள்களை அச்சிட, Zebra Supplies Selector | ZipZebra Supplies Solutions இணையதளத்திற்குச் சென்று உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் Zebra பிராண்ட் லேபிள்களைக் கண்டறியலாம்.

உங்கள் Shopify தயாரிப்புகளில் பார்கோடுகளைச் சேர்த்தல்

பின்வரும் முறைகளைப் பயன்படுத்தி, Shopify-இல் உள்ள உங்கள் தயாரிப்புகளில் பார்கோடுகளைச் சேர்க்கலாம்:

பார்கோடு பிரிண்டர்களுக்கான சிக்கல் தீர்த்தல்

பார்கோடு லேபிள்களை அச்சிடுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், பின்வரும் படிகளை முயற்சிக்கவும்:

  1. நீங்கள் ஆதரிக்கப்படும் பிரிண்டரைப் பயன்படுத்துகிறீர்களா? இந்தப் பார்கோடு லேபிள் பிரிண்டர்கள் மட்டுமே ஆதரிக்கப்படுகின்றன.
  2. பிரிண்டர் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா? பவர் அவுட்லெட் மற்றும் நீங்கள் அச்சிடும் கணினியின் USB போர்ட் ஆகிய இரண்டுடனும் இது இணைக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும்.
  3. இணைய இணைப்பு உள்ளதா? கணினியை Shopify உடன் இணைக்க முடிந்தாலொழிய உங்கள் தயாரிப்புகளுக்கான லேபிள்களை அச்சிட முடியாது.
  4. நீங்கள் ஆதரிக்கப்படும் பார்கோடு லேபிள்களைப் பயன்படுத்துகிறீர்களா? நீங்கள் ஆதரிக்கப்படும் பார்கோடு லேபிள்களைப் பயன்படுத்தி, பார்கோடு வார்ப்புருவில் சரியான லேபிள் அளவைத் தேர்ந்தெடுத்தாலொழிய உங்கள் லேபிள்கள் சரியாக அச்சிடப்படாது.
  5. நீங்கள் லேபிள்களை அச்சிடும் அனைத்துத் தயாரிப்புகளுக்கும் மாறுபாடுகளுக்கும் பார்கோடு எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளனவா? Shopify-இல் பார்கோடு எண் இல்லாத தயாரிப்புகள் ஏதேனும் இருந்தால், அவற்றின் லேபிள்களை அச்சிடும் முன் பார்கோடுகளைச் சேர்க்கவும்.
  6. பிரிண்டர் இடைநிறுத்தப்பட்டுள்ளதா? உங்கள் லேபிள் பிரிண்டரின் நிலையைச் சரிபார்த்து, அது இடைநிறுத்தப்படவில்லை என்பதையும் அதன் வரிசையில் அச்சிடும் பணிகள் ஏதுமில்லை என்பதையும் உறுதிசெய்யவும்.
  7. பிரிண்டர் வெற்று லேபிள்களை அச்சிடுகிறதா? நீங்கள் உங்கள் பிரிண்டரைச் சுத்தப்படுத்த வேண்டியிருக்கலாம். Dymo அல்லது Zebra பிரிண்டர்களைச் சுத்தப்படுத்துவதற்கான வழிமுறைகளை, உற்பத்தியாளரின் பயனர் கையேட்டில் கண்டறியலாம்.
  8. Dymo LabelWriter வயர்லெஸ் பிரிண்டருக்கு: பிரிண்டரின் பக்கவாட்டில் ஒளிரும் விளக்குகள் எதையேனும் நீங்கள் கவனிக்கிறீர்களா? அப்படியானால், சிக்கலுக்கான காரணத்தைக் கண்டறிய உற்பத்தியாளரின் சிக்கல் தீர்த்தல் கையேட்டைப் பயன்படுத்தவும்.

பார்கோடு அச்சிடல் வழிகாட்டுதல்களையும் நீங்கள் மதிப்பாய்வு செய்யலாம்.

இந்தப் பிரிவில்