Dymo Label மென்பொருளைப் பயன்படுத்துதல்
உங்கள் டெஸ்க்டாப்பிலிருந்து பார்கோடு லேபிள்களைத் தனிப்பயனாக்கி அச்சிட Dymo Label மென்பொருளைப் பயன்படுத்தலாம். தொடங்குவதற்கு முன், உங்கள் Shopify தயாரிப்புகளில் பார்கோடுகளைச் சேர்ப்பதையும் உங்கள் தயாரிப்புத் தகவலை ஒரு CSV கோப்பிற்கு ஏற்றுமதி செய்வதையும் உறுதிசெய்யவும். Dymo Label மென்பொருளில் நீங்கள் தனிப்பயனாக்கங்களை மேற்கொள்ளும்போது, ஆதரிக்கப்படும் பார்கோடு ஸ்டைலான Code 128 Auto என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
இந்தப் பக்கத்தில்
- உங்கள் Shopify தயாரிப்புகளில் பார்கோடுகளைச் சேர்த்தல்
- Dymo Label மென்பொருளை நிறுவுதல்
- உங்கள் தயாரிப்புத் தகவலை ஒரு CSV கோப்பிற்கு ஏற்றுமதி செய்தல்
- உங்கள் பார்கோடு லேபிள்களைத் தனிப்பயனாக்க Dymo Label மென்பொருளைப் பயன்படுத்துதல்
- தனிப்பயனாக்கப்பட்ட உங்கள் பார்கோடு லேபிள்களை அச்சிடுதல்
- Dymo Label மென்பொருளைப் புதுப்பித்தல்
- Dymo Label மென்பொருளில் சிக்கல் தீர்த்தல்
உங்கள் Shopify தயாரிப்புகளில் பார்கோடுகளைச் சேர்த்தல்
பின்வரும் முறைகளைப் பயன்படுத்தி Shopify இல் உங்கள் தயாரிப்புகளில் பார்கோடுகளைச் சேர்க்கலாம்:
- உங்கள் தயாரிப்புகளில் பார்கோடுகளைச் சேர்க்க, Retail Barcode Labels செயலியைப் பயன்படுத்தவும்.
- ஒரு தயாரிப்பு அல்லது மாறுபாட்டின் விவரங்களில் பார்கோடைச் சேர்க்கவும்.
- ஒரு தயாரிப்பு CSV கோப்பின் ஒரு பகுதியாக பார்கோடுகளை மொத்தமாக இறக்குமதி செய்யவும்.
Dymo Label மென்பொருளை நிறுவுதல்
Dymo இணையதளத்திலிருந்து உங்கள் Mac அல்லது Windows டெஸ்க்டாப்பில் Dymo Label மென்பொருளை நிறுவலாம்.
நிறுவலின் கடைசிப் படியில் நிறுவி உங்களைக் கேட்கும் வரை உங்கள் கணினியில் பிரிண்டரை இணைக்க வேண்டாம். உங்கள் பிரிண்டரை இணைக்க, Dymo இணையதளத்தில் உள்ள LabelWriter 450 அல்லது Dymo LabelWriter Wireless Printer என்பதற்கான விரைவுத் தொடக்க வழிகாட்டிகளைப் பின்பற்றவும்.
உங்கள் தயாரிப்புத் தகவலை ஒரு CSV கோப்பிற்கு ஏற்றுமதி செய்தல்
Dymo Label மென்பொருளில் இறக்குமதி செய்வதற்கு முன்பு, உங்கள் தயாரிப்புத் தகவலை ஒரு CSV கோப்பிற்கு ஏற்றுமதி செய்யலாம்.
ஒரு பக்கம் வரையிலான தயாரிப்புகளை (அதிகபட்சம் 50 தயாரிப்புகள்) ஏற்றுமதி செய்தால், உங்கள் உலாவி CSV கோப்பைப் பதிவிறக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களில் உள்ள தயாரிப்புகளை (51 அல்லது அதற்கு மேற்பட்ட தயாரிப்புகள்) ஏற்றுமதி செய்தால், CSV கோப்பு உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பப்படும். நீங்கள் கடையின் உரிமையாளராக இல்லையெனில், கடையின் உரிமையாளருக்கும் கோப்பு மின்னஞ்சலில் அனுப்பப்படும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தயாரிப்புகள் என்பதற்குச் செல்லவும்.
விருப்பத்தேர்வு: உங்கள் தயாரிப்புகளில் சிலவற்றை மட்டும் ஏற்றுமதி செய்ய விரும்பினால், குறிப்பிட்ட தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யத் தேர்ந்தெடுக்கவும் பார்க்கவும் உங்கள் தயாரிப்புப் பட்டியலை ஃபில்டர் செய்யலாம்.
ஏற்றுமதி செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
தயாரிப்புகளை CSV கோப்பிற்கு ஏற்றுமதி செய் உரையாடலிலிருந்து, நீங்கள் ஏற்றுமதி செய்ய விரும்பும் தயாரிப்புகளைப் பின்வரும் விருப்பங்களிலிருந்து தேர்வுசெய்யவும்:
- தயாரிப்புகளின் தற்போதைய பக்கம்
- எல்லாத் தயாரிப்புகளும்
- நீங்கள் தேர்ந்தெடுத்த தயாரிப்புகள்
- உங்கள் தேடல் மற்றும் வடிப்பான்களுடன் பொருந்தும் தயாரிப்புகள்
நீங்கள் எந்த வகையான CSV கோப்பை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்:
- Excel, Numbers அல்லது பிற விரிதாள் நிரலுக்கான CSV கோப்பு. உங்கள் தயாரிப்பு CSV கோப்பைத் திருத்த ஒரு விரிதாள் நிரலைப் பயன்படுத்த நீங்கள் திட்டமிட்டிருந்தால், இந்த வடிவமைப்பைப் பயன்படுத்தவும்.
- எளிய CSV கோப்பு. உங்கள் தயாரிப்பு CSV கோப்பிற்கு எளிய உரை திருத்தியைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருந்தால், இந்த வடிவமைப்பைப் பயன்படுத்தவும்.
தயாரிப்புகளை ஏற்றுமதி செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் பார்கோடு லேபிள்களைத் தனிப்பயனாக்க, Dymo Label மென்பொருளைப் பயன்படுத்தவும்
உங்கள் பார்கோடு லேபிள்களுக்கான தனிப்பயனாக்கப்பட்ட தளவமைப்புகளை வடிவமைக்க, Dymo Label மென்பொருளை நீங்கள் பயன்படுத்தலாம்.
படிகள்:
- Dymo Label மென்பொருளைத் திறந்து, உங்களுக்குத் தேவையான லேபிள் அளவைக் கிளிக் செய்யவும்.
- தொடக்கத் தளவமைப்பைத் தேர்ந்தெடுக்க, தளவமைப்பைத் தேர்ந்தெடு பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- இந்த உதாரணத்திற்கு, வெற்றுத் தளவமைப்பைக் கிளிக் செய்யவும்.
- விரும்பினால்: முன்னோட்ட லேபிளை, அது பார்க்கும் பகுதியை நிரப்பும் வரை விரிவாக்க ஸ்லைடரைப் பயன்படுத்தவும். இது உங்கள் லேபிள் ஆப்ஜெக்ட்களையும் கிளிப் ஆர்ட்டையும் நிலைநிறுத்துவதை எளிதாக்கும்.
- உங்கள் தளவமைப்பில் சேர்க்கக்கூடிய லேபிள் ஆப்ஜெக்ட்களையும் கிளிப் ஆர்ட்டையும் காண செருகு என்பதைக் கிளிக் செய்யவும். இந்த உதாரணத்தில், பார்கோடும் உரைப்புலமும் கொண்ட லேபிளை வடிவமைப்பீர்கள்.
- லேபிள் ஆப்ஜெக்ட்கள் என்பதன் கீழ், பார்கோடு ஆப்ஜெக்ட்டைக் கண்டறிந்து, அதைக் கிளிக் செய்து உங்கள் லேபிள் முன்னோட்டத்திற்கு இழுத்துவிடவும்.
- நீங்கள் பார்கோடு ஆப்ஜெக்ட்டை நிலைநிறுத்தியதும், அதன் மீது வலது கிளிக் செய்து, கீழ்தோன்றும் மெனுவிலிருந்து பண்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- ஆப்ஜெக்ட் அமைப்புகள் பிரிவில், குறியீட்டியல் கீழ்தோன்றும் மெனுவிலிருந்து Code 128 Auto என்பதைத் தேர்ந்தெடுத்து, சரி என்பதைக் கிளிக் செய்யவும்.
- லேபிள் ஆப்ஜெக்ட்கள் என்பதன் கீழ், உரை லேபிள் ஆப்ஜெக்ட்டைக் கண்டறிந்து, அதைக் கிளிக் செய்து உங்கள் லேபிள் முன்னோட்டத்திற்கு இழுத்துவிடவும்.
- உங்கள் லேபிளில் உங்களுக்குத் தேவையான அனைத்து ஆப்ஜெக்ட்களும் இருக்கும்போது, பின்வரும் வழிகளில் தளவமைப்பை நீங்கள் செம்மைப்படுத்தலாம்:
- ஆப்ஜெக்ட்களை மீண்டும் நிலைநிறுத்துதல்: ஆப்ஜெக்ட்டைக் கிளிக் செய்து, அதன் விளிம்பை இழுக்கவும்.
- ஆப்ஜெக்ட்களின் அளவை மாற்றுதல்: ஆப்ஜெக்ட்டைக் கிளிக் செய்து விளிம்பைச் சுற்றியுள்ள சிறிய பெட்டிகளில் ஒன்றை இழுக்கவும்.
- ஆப்ஜெக்ட்களை நீக்குதல்: ஆப்ஜெக்ட்டைக் கிளிக் செய்து, உங்கள் கீபோர்டில் உள்ள நீக்கு (delete) பொத்தானை அழுத்தவும்.
- நீங்கள் லேபிள் தளவமைப்பை உருவாக்கி முடித்ததும், கோப்பு மெனுவிற்குச் சென்று தளவமைப்பாகச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் தளவமைப்பிற்கு ஒரு பெயரிட்டு, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் தனிப்பயனாக்கப்பட்ட பார்கோடு லேபிள்களை அச்சிடவும்
நீங்கள் லேபிள் தளவமைப்பைத் தனிப்பயனாக்கிச் சேமித்த பிறகு, Shopify இலிருந்து நீங்கள் ஏற்றுமதி செய்த CSV கோப்பில் இருந்து லேபிள் ஆப்ஜெக்ட்களில் எந்தத் தகவலைச் சேர்க்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கலாம். உங்கள் தயாரிப்புகளின் தகவலை லேபிள் தளவமைப்பில் சேர்த்தவுடன், உங்கள் பார்கோடு லேபிள்களை அச்சிட நீங்கள் தயாராக இருப்பீர்கள்.
படிகள்:
- Dymo Label மென்பொருளில் உள்ள கோப்பு மெனுவிலிருந்து, தரவை இறக்குமதி செய்து அச்சிடு என்பதன் மீது சுட்டியை வைத்து, புதியது என்பதைக் கிளிக் செய்யவும்.
- தொடங்குதல் உரையாடல் பெட்டி காட்டப்படும்போது, அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
- Shopify இலிருந்து ஏற்றுமதி செய்த CSV கோப்பைத் தேர்ந்தெடுக்க, Browse (உலாவு) என்பதைக் கிளிக் செய்யவும்.
- CSV கோப்புப் பெயரைக் கண்டுபிடித்து அதன் மீது இருமுறை கிளிக் செய்யவும் (உதாரணமாக,
ProductLabels.csv). - பார்கோடு மற்றும் உரை லேபிள் ஆப்ஜெக்ட்களுடன் நீங்கள் வடிவமைத்த தளவமைப்பை லேபிள் முன்னோட்டம் காட்டுகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். நீங்கள் வேறு தளவமைப்பைப் பயன்படுத்த விரும்பினால், முன்பமைத்த மற்றும் சேமித்த தளவமைப்புகளை உலாவ, தளவமைப்பை மாற்று... என்பதைக் கிளிக் செய்து, நீங்கள் பயன்படுத்த விரும்பும் தளவமைப்பின் மீது இருமுறை கிளிக் செய்யவும்.
- Next (அடுத்து) என்பதைக் கிளிக் செய்யவும். Date fields (தேதி புலங்கள்) பிரிவில் CSV தரவு காட்டப்படும்.
- முதல் வரிசையைப் புலத்தின் பெயர்களாகப் பயன்படுத்து என்ற தேர்வுப்பெட்டியைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் லேபிள் தளவமைப்பில் உள்ள ஒரு உரைப்புலத்தைக் கிளிக் செய்து, பின்னர் உரைப்புலத்தை நிரப்ப தரவுப் புலங்கள் பிரிவில் உள்ள நெடுவரிசை ஹெடரைக் கிளிக் செய்யவும். உதாரணமாக, உங்கள் லேபிள் தளவமைப்பில் உள்ள பார்கோடு லேபிள் ஆப்ஜெக்ட்டைக் கிளிக் செய்து, பின்னர் உங்கள் CSV தரவுப் புலங்களில் உள்ள பார்கோடு நெடுவரிசைத் தலைப்பைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் பிற லேபிள் ஆப்ஜெக்ட்களுக்கும் தேவைக்கேற்ப இதை மீண்டும் செய்யவும். முன்னோட்டம் சாளரத்தில் உங்கள் பணியின் முன்னோட்டத்தை நீங்கள் காணலாம்.
- விரும்பினால்: உரைப்புலங்களில் நிலையான மதிப்புகளை உள்ளிடவும். உதாரணமாக, விலை உரைப்புலத்தில் நீங்கள் டாலர் குறியை உள்ளிடலாம். உங்கள் மாற்றங்கள் அனைத்தும் முன்னோட்டத்தில் பிரதிபலிக்கும்.
- உங்கள் அனைத்து லேபிள் ஆப்ஜெக்ட்களுக்கும் புலத்தின் பெயர்களை ஒதுக்கியதும், அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
- எந்தத் தயாரிப்புப் பார்கோடு லேபிள்களை அச்சிட வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்க, தேர்வுப்பெட்டிகளைப் பயன்படுத்தவும்.
- DYMO LabelWriter பிரிண்டர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்து, பின்னர் அச்சிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
Dymo Label மென்பொருளைப் புதுப்பிக்கவும்
Retail Barcode Printer செயலியானது Dymo Label மென்பொருளின் பதிப்பு 8.7.3 மற்றும் அதற்குப் பிந்தையவற்றுடன் மட்டுமே வேலை செய்யும்.
Dymo Label மென்பொருளைப் புதுப்பிக்க, பின்வரும் படிகளைச் செய்யவும்:
Mac
- Dymo Label மென்பொருளின் சமீபத்திய பதிப்பைப் பதிவிறக்கவும்.
- நிறுவும் நிரலை இயக்கி, நிறுவல் பிராம்ட்களைப் பின்பற்றவும்.
- சிஸ்டம் நீட்டிப்பு தடுக்கப்பட்டுள்ளது (System Extension Blocked) என்ற பாதுகாப்பு பிராம்ட் காட்டப்பட்டால், பாதுகாப்பு விருப்பத்தேர்வுகளைத் திற என்பதைக் கிளிக் செய்யவும். பாதுகாப்பு மற்றும் தனியுரிமை பார்வையில், பொது தாவலைக் கிளிக் செய்து, பின்னர் அனுமதி என்பதைக் கிளிக் செய்யவும்.
Windows
- Dymo Label மென்பொருளின் சமீபத்திய பதிப்பைப் பதிவிறக்கவும்.
- நிறுவும் நிரலை இயக்கி, நிறுவல் பிராம்ட்களைப் பின்பற்றவும்.
Dymo Label மென்பொருளில் சிக்கல் தீர்த்தல்
Dymo Label மென்பொருளைக் கொண்டு பார்கோடு லேபிள்களை அச்சிடுவதில் உங்களுக்குச் சிக்கல் இருந்தால், உங்கள் பிரிண்டர் அமைவில் சிக்கல் தீர்த்த பிறகு இந்தப் படிகளை முயலவும்:
- அகலத்தை அதிகரிக்க முயலவும் (Try to increase width) பிழை
- தனிப்பயன் பார்கோடு லேபிள்களை ஸ்கேன் செய்ய முடியவில்லை
Dymo Label மென்பொருளில் சிக்கல் தீர்த்த பிறகும் உங்களுக்குச் சிக்கல் இருந்தால், Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
அகலத்தை அதிகரிக்க முயலவும் (Try to increase width) பிழை
உங்களுக்கு அகலத்தை அதிகரிக்க முயலவும் (Try to increase width) பிழை ஏற்பட்டால், பார்கோடு லேபிளுக்கு மிகப் பெரியதாக உள்ளது என்று அர்த்தம். லேபிளில் பார்கோடு ஆப்ஜெக்ட்டை அகலமாக்க, உங்கள் தளவமைப்பில் பார்கோடு ஆப்ஜெக்ட்டின் அளவை நீங்கள் மாற்றலாம்.
நீங்கள் பார்கோடு ஆப்ஜெக்ட்டைச் சாத்தியமானவரை அகலமாக்கிய பிறகும், அகலத்தை அதிகரிக்க முயலவும் (Try to increase width) பிழை தோன்றினால், நீங்கள் பெரிய லேபிள் அளவைப் பயன்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு பார்கோடு லேபிள் அளவிலும் பின்வரும் அதிகபட்ச எழுத்துகள் பொருந்தும்:
- பெரியது: 40 எழுத்துகள்
- நடுத்தரமானது: 22 எழுத்துகள்
- சிறியது: 8 எழுத்துகள்
- மிகச் சிறியது: 12 எழுத்துகள்.
உங்கள் பார்கோடுகளில் எழுத்துகள் அல்லது குறியீடுகளைப் பயன்படுத்தினால், இந்த எழுத்துகள் எண்களை விட லேபிளில் அதிக இடத்தை எடுத்துக்கொள்ளும்.
பிரத்தியேகப் பார்கோடு லேபிள்களை ஸ்கேன் செய்ய முடியவில்லை
Dymo Label மென்பொருளைக் கொண்டு நீங்கள் அச்சிட்ட பிரத்தியேகப் பார்கோடு லேபிள்களை ஸ்கேன் செய்ய முடியவில்லை எனில், உங்கள் பிரத்தியேக லேபிள்களை அச்சிட்டபோது CSV கோப்பில் பார்கோடு நெடுவரிசையைத் தேர்ந்தெடுத்துள்ளீர்களா எனச் சரிபார்க்கவும்.