Retail Barcode Labels செயலி

Retail Barcode Labels செயலி ஐகான்
Shopify App Store-இலிருந்து Retail Barcode Labels-ஐ நிறுவவும்.

Shopify-இலிருந்தே பார்கோடு லேபிள்களை வடிவமைத்து அச்சிட, நீங்கள் Retail Barcode Labels செயலியைப் பயன்படுத்தலாம். கணினியுடன் இணைக்கப்பட்டுள்ள ஆதரிக்கப்படும் லேபிள் பிரிண்டரும் உங்களிடம் இருக்க வேண்டும்.

Retail Barcode Labels செயலியைப் பயன்படுத்தி, டெஸ்க்டாப்பில் உள்ள Shopify நிர்வாகியிலிருந்தோ Shopify செயலியிலிருந்தோ லேபிள்களை அச்சிடலாம். Shopify POS இலிருந்து நேரடியாக லேபிள்களை அச்சிட முடியாது.

Retail Barcode Labels செயலிக்கான பரிசீலனைகள்

Retail Barcode Labels செயலியைப் பயன்படுத்துவதற்கு முன்பு பின்வருவனவற்றைக் கவனத்தில் கொள்ளவும்:

பார்கோடு உருவாக்கம்

  • Retail Barcode Labels செயலியானது Code-128 பார்கோடுகளை மட்டுமே உருவாக்கும்.
  • Retail Barcode Labels செயலி, மாறுபாடு ID இன் கடைசி 8 இலக்கங்களை மாறுபாட்டின் பார்கோடாக ஒதுக்குகிறது. இது அரிதானது என்றாலும், இரண்டு தயாரிப்புகளின் மாறுபாடு ID-களும் ஒரே கடைசி 8 இலக்கங்களைக் கொண்டிருந்தால் அவை ஒரே பார்கோட்டைப் பெறக்கூடும் என்பதே இதன் பொருளாகும். நிர்வாகியில் நீங்கள் வேறு பார்கோட்டை மேனுவலாக உள்ளிடலாம் அல்லது தனித்துவமான பார்கோடுகளை உருவாக்க மூன்றாம் தரப்புச் செயலியைப் பயன்படுத்தலாம்.
  • Retail Barcode Labels செயலி உருவாக்கும் 8 இலக்க பார்கோடுகளைப் பல ஸ்டோர்கள் பகிர்ந்து பயன்படுத்தக்கூடும். அதனால் அவை Google Shopping இல் பயன்படுத்த ஏற்றவை அல்ல. Google போன்ற மூன்றாம் தரப்புச் சேனல்களில் பார்கோடுகளைப் பயன்படுத்த, GS1 இலிருந்து தனித்துவமான பார்கோடுகளை வாங்க வேண்டும்.

லேபிள் தனிப்பயனாக்கம்

  • Retail Barcode Labels செயலியில் ஏற்கெனவே இல்லாத தனிப்பயன் லேபிள் அளவுகளைச் சேர்க்க முடியாது. செயலி ஆதரிக்காத லேபிள் அளவு தேவைப்பட்டால், மூன்றாம் தரப்புச் செயலியைப் பயன்படுத்துவது குறித்துப் பரிசீலிக்கவும்.
  • Shopify Payments ஆதரிக்கும் நாணயங்களைப் பயன்படுத்தும் ஸ்டோர்களுக்கு மட்டுமே பார்கோடு லேபிள்களில் விலையைக் காண்பிக்கும் வசதி கிடைக்கும். ஆதரிக்கப்படாத ஒரு நாணயத்தில் விலைகளைக் காண்பிக்க வேண்டும் என்றால், மூன்றாம் தரப்புச் செயலித் தீர்வைப் பயன்படுத்தவும்.
  • சிறப்பு எழுத்துக்களைக் கொண்ட தயாரிப்புத் தகவல் (ěščřžúů, ā போன்ற சமஸ்கிருத எழுத்துக்கள் அல்லது எம் டேஷ்கள் போன்றவை) லேபிள்களில் சரியாகக் காட்டப்படாமல் போகலாம். இது நிகழ்ந்தால், தயாரிப்புத் தகவலை மேனுவலாக மீண்டும் தட்டச்சு செய்யவும் அல்லது சிறப்பு எழுத்துக்களை ஆதரிக்கும் மூன்றாம் தரப்புச் செயலியைப் பயன்படுத்தவும்.

அச்சிடும் பணிப்பாய்வு

  • அச்சிடுவதற்கான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்க, தயாரிப்பு அனுமதிகள் செயல்படுத்தப்பட்ட ஒரு பணியாளர் பங்கு உங்களுக்குத் தேவை.
  • தயாரிப்புத் தலைப்பின் அடிப்படையில் லேபிள்கள் அகரவரிசையில் அச்சிடப்படும்.
  • மாறுபாடுகள் மற்றும் அளவுகளைத் தேர்ந்தெடுக்க, தானியங்கு மொத்த அச்சிடல் அல்லது CSV பதிவேற்ற விருப்பங்களைச் செயலி ஆதரிக்காது. லேபிள்களை அச்சிடும்போது ஒவ்வொரு மாறுபாட்டையும் அளவையும் நீங்கள் மேனுவலாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஆதரிக்கப்படும் லேபிள் அளவுகள்

Retail Barcode Labels செயலி பின்வரும் லேபிள் அளவுகளை ஆதரிக்கிறது:

  • Dymo - 30252 Large (1 1/8" x 3 1/2"), அதிகபட்சமாக 39 இலக்கங்கள்
  • Dymo - 30336 Small (1" x 2 1/8"), அதிகபட்சமாக 22 இலக்கங்கள்
  • Dymo - 30332 Square (1" x 1"), அதிகபட்சமாக 6-8 இலக்கங்கள்
  • Dymo - 30299 Price Tag (3/8" x 3/4"), அதிகபட்சமாக 8 இலக்கங்கள் (யுனைடெட் கிங்டமில் கிடைக்காது)
  • Avery Standard - 5160 (2.63" x 1")
  • Avery Standard - 5167 (1.75" x 0.5")
  • Zebra - 10010037 (1.188" x 0.844")
  • Zebra - 10010038 (1.25" x 1")
  • Zebra - 10010039 (2" x 1")
  • Zebra - 10015340 (2.25" x 0.75")
  • Zebra - 10010043 (3" x 1")
  • Zebra - 10010044 (3" x 2")
  • Zebra - ZSB-LC6 (2.25" x 1")
  • Zebra - ZSB-LC7 (1.25" x 1.25")
  • Zebra - ZSB-LC8 (2.25" x 0.5")

பார்கோடு லேபிள் டெம்ப்ளேட்டை உருவாக்கவும்

உங்கள் பார்கோடு லேபிள்களில் இருக்க வேண்டிய தயாரிப்புத் தகவலைப் பார்கோடு டெம்ப்ளேட்கள் தீர்மானிக்கின்றன. லேபிளில் உள்ள இடம் குறைவாக இருப்பதால், சிறிய டெம்ப்ளேட் அளவுகளில் குறைவான தனிப்பயனாக்க விருப்பங்களே இருக்கும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியில், செயலிகள் > Retail Barcode Labels என்பதற்குச் செல்லவும்.

  2. டெம்ப்ளேட்டை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும். நீங்கள் இதுவரை எந்த டெம்ப்ளேட்டுகளையும் உருவாக்கவில்லை என்றால், தொடங்கு என்பதைக் கிளிக் செய்து, தொடங்குதல் டயலாக்கில் பின்வரும் விருப்பங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்:

    • தவிர்: பார்கோடுகளை உருவாக்குவதைத் தவிர்த்துவிட்டு, நேரடியாக டெம்ப்ளேட் உருவாக்கக் காட்சிக்குச் செல்லவும்.
    • பார்கோடுகளை உருவாக்கு: உங்கள் தயாரிப்புகளுக்குப் பார்கோடுகளை உருவாக்கவும்.
  3. டெம்ப்ளேட் தலைப்பை உள்ளிடவும்.

  4. லேபிள் வகை பிரிவிலிருந்து லேபிள் வகையைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது பிற லேபிள் வகைகள் என்பதைத் தேர்ந்தெடுத்து, பேப்பர் பிராண்ட் மற்றும் பேப்பர் குறியீடு/மாடல் எண்ணைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. லேபிள் முன்னோட்டம் பிரிவில், லேபிளில் நீங்கள் சேர்க்க விரும்பும் தகவலைத் தேர்ந்தெடுக்கவும். ஒரு உருப்படியின் அருகிலுள்ள புள்ளிகளைக் கிளிக் செய்து இழுப்பதன் மூலம் லேபிளில் அதன் வரிசையை மாற்றலாம்.

  6. டெம்ப்ளேட்டை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் தயாரிப்புகள் அனைத்திற்கும் பார்கோடுகளை உருவாக்கவும்

உங்கள் அனைத்துத் தயாரிப்புகளுக்கும் தனித்துவமான பார்கோடுகளை உருவாக்குவதைத் தானியங்குபடுத்த Retail Barcode Labels செயலியை நீங்கள் பயன்படுத்தலாம். இந்தச் செயலி 8 இலக்கப் பார்கோடுகளை உருவாக்குகிறது. தயாரிப்பு விவரங்கள் அல்லது மாறுபாடு விவரங்கள் பக்கத்தில் இருந்து அல்லது மொத்தச் செயலைப் பயன்படுத்திப் பார்கோட்டை நீங்கள் திருத்தலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியில், செயலிகள் > Retail Barcode Labels என்பதற்குச் செல்லவும்.

  2. பார்கோடுகளை உருவாக்கு > பார்கோடுகள் இல்லாத தயாரிப்புகளுக்குப் பார்கோடுகளை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

ஒரு குறிப்பிட்ட தயாரிப்புக்குப் பார்கோடுகளை உருவாக்கவும்

குறிப்பிட்ட தயாரிப்புகளுக்குத் தனித்துவமான பார்கோடுகளை உருவாக்க, Retail Barcode Labels செயலியை நீங்கள் பயன்படுத்தலாம். இச்செயலி 8 இலக்கப் பார்கோடுகளை உருவாக்கும். தயாரிப்பு அல்லது மாறுபாட்டு விவரங்கள் பக்கத்திலிருந்து, அல்லது மொத்தச் செயலைப் பயன்படுத்தி நீங்கள் பார்கோடைத் திருத்தலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியில், செயலிகள் > Retail Barcode Labels என்பதற்குச் செல்லவும்.

  2. பார்கோடுகளை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்து, குறிப்பிட்ட தயாரிப்புகளுக்கான பார்கோடுகளை உருவாக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  3. தயாரிப்புகளைச் சேர் உரையாடல் பெட்டியில், நீங்கள் பார்கோடுகளை உருவாக்க விரும்பும் தயாரிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தயாரிப்புகள் பகுதிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் பார்கோடு லேபிளை உருவாக்க விரும்பும் தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்கவும்.

  3. கிடைமட்ட மெனு என்பதைக் கிளிக் செய்து, பின்னர் செயலிகள் பிரிவில், பார்கோடு லேபிள்களை அச்சிடு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  4. லேபிள் டெம்ப்ளேட்டைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. தயாரிப்புகள் பிரிவில், ஒவ்வொரு மாறுபாட்டிற்கும் நீங்கள் அச்சிட விரும்பும் லேபிள்களின் எண்ணிக்கையை உள்ளிடவும்.

  6. அச்சிடும் பணி பிரிவில் காட்டப்படும் உங்கள் பிரிண்டர் அமைப்புகளைச் சரிபார்க்கவும்.

  7. லேபிள்களை அச்சிடு பொத்தானைக் கிளிக் செய்யவும்.

  8. விருப்பத்தேர்வு: பார்கோடு லேபிள்களின் PDF நகலைச் சேமிக்க, இலக்கு என்பதை PDF ஆகச் சேமி என அமைக்கவும்.

  9. பரிந்துரைக்கப்பட்ட அமைப்புகளின்படி உங்கள் பிரிண்டர் அமைப்புகளைப் புதுப்பித்து, அச்சிடு என்பதைக் கிளிக் செய்யவும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியில், செயலிகள் > Retail Barcode Labels என்பதற்குச் செல்லவும்.

  2. லேபிள்களை அச்சிடு என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. நீங்கள் பார்கோடு லேபிளை அச்சிட விரும்பும் தயாரிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. தயாரிப்புகள் பிரிவில், ஒவ்வொரு மாறுபாட்டிற்கும் நீங்கள் அச்சிட விரும்பும் லேபிள்களின் எண்ணிக்கையை உள்ளிடவும்.

  5. அச்சிடும் பணி பிரிவில் காட்டப்படும் உங்கள் பிரிண்டர் அமைப்புகளைச் சரிபார்க்கவும்.

  6. லேபிள்களை அச்சிடு பொத்தானைக் கிளிக் செய்யவும்.

  7. விருப்பத்தேர்வு: பார்கோடு லேபிள்களின் PDF நகலைச் சேமிக்க, இலக்கு என்பதை PDF ஆகச் சேமி என அமைக்கவும்.

  8. பரிந்துரைக்கப்பட்ட அமைப்புகளுக்கு ஏற்ப உங்கள் பிரிண்டர் அமைப்புகளைப் புதுப்பித்து, அச்சிடு என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் பார்கோடு லேபிள்கள் சரியாக அச்சிடப்படுவதையும், பார்கோடுகள் சரியான அளவில் இருப்பதையும், லேபிள்களில் அவை வெட்டப்படாமலோ தவறாகச் சீரமைக்கப்படாமலோ இருப்பதையும் உறுதிசெய்ய இந்தப் படிகளைப் பின்பற்றவும்.

Mac

படிகள்:

  1. உங்கள் Mac-இன் அச்சிடு உரையாடல் பெட்டியில், கூடுதல் அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்து, பின்னர் சிஸ்டம் உரையாடல் பெட்டியைப் பயன்படுத்தி அச்சிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. பிரிண்டர் பட்டியலிலிருந்து, உங்கள் Dymo பிரிண்டரைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. காகித அளவு பட்டியலிலிருந்து, உங்கள் லேபிள் அளவோடு சரியாகப் பொருந்தும் லேபிள் SKU மற்றும் பரிமாணங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. திசையமைப்பை போர்ட்ரெய்ட் என அமைக்கவும்.

அச்சு உரையாடல் பெட்டி Mac

  1. பிரிண்டர் அம்சங்கள் என்பதன் கீழ், வெளியீட்டுத் தீர்மானம் பட்டியலிலிருந்து 300x600 DPI என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
Edge

படிகள்:

  1. Edge-ஐப் பயன்படுத்தும் உங்கள் PC-இன் அச்சிடு உரையாடல் பெட்டியில், பிரிண்டர் பட்டியலிலிருந்து உங்கள் Dymo பிரிண்டரைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. திசையமைப்பு பட்டியலிலிருந்து போர்ட்ரெய்ட் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. உங்கள் லேபிள் அளவைத் தேர்ந்தெடுத்து, தரத்தை 300x600 dpi என அமைக்கவும்.
Chrome

படிகள்:

  1. Google Chrome-ஐப் பயன்படுத்தும் உங்கள் PC-இன் அச்சிடு உரையாடல் பெட்டியில், சிஸ்டம் உரையாடல் பெட்டியைப் பயன்படுத்தி அச்சிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. பிரிண்டரைத் தேர்ந்தெடு என்பதன் கீழ், உங்கள் Dymo பிரிண்டரைக் கிளிக் செய்யவும்.
  3. விருப்பத்தேர்வுகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. திசையமைப்பு பட்டியலிலிருந்து போர்ட்ரெய்ட் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. மேம்பட்டவை என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. காகித அளவு பட்டியலிலிருந்து, உங்கள் லேபிள் அளவைத் தேர்ந்தெடுக்கவும்.
  7. அச்சுத் தரத்தை 300 x 600 dots per inch என அமைத்து, சரி என்பதைக் கிளிக் செய்யவும்.