Socket Mobile 1D ஸ்கேனரின் சிக்கலைத் தீர்த்தல்
Socket Mobile 1D S700 அல்லது 7Ci ஸ்கேனர்களில் ஏற்படும் பொதுவான சிக்கல்களைத் தீர்க்க, இந்த வழிகாட்டியைப் பயன்படுத்தலாம். ஸ்கேனர் சிக்கல்களை விரைவாகத் தீர்ப்பதன் மூலம், செக்அவுட் செயல்முறை தடையின்றி இயங்குவதை உறுதிசெய்து வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்க முடியும். குறிப்பிட்ட சிக்கலைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், படி 1: Socket Mobile 1D ஸ்கேனருக்கான பொதுவான சிக்கல் தீர்த்தல் என்பதை நிறைவுசெய்யவும்.
இந்தப் பக்கத்தில்
- படி 1: Socket Mobile 1D ஸ்கேனர்களுக்கான பொதுவான சிக்கல் தீர்த்தல்
- படி 2: Socket Mobile 1D ஸ்கேனர் சிக்கலைத் தேர்ந்தெடுக்கவும்
- Socket Mobile 1D ஸ்கேனர் பேட்டரிகளை மாற்றவும்
- Socket Mobile 1D ஸ்கேனரின் பேக்டரி மீட்டமைப்பு (Factory reset)
- ஆதரிக்கப்படும் பார்கோடு வகைகள்
- உங்கள் Socket Mobile 1D ஸ்கேனர் குறித்து Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளுங்கள்
படி 1: Socket Mobile 1D ஸ்கேனர்களுக்கான பொதுவான சிக்கல் தீர்த்தல்
எல்லா Socket Mobile 1D ஸ்கேனர் சிக்கல்களுக்கும், பின்வரும் பொதுவான சிக்கல் தீர்த்தல் படிகளை நிறைவுசெய்யவும்:
- Shopify POS புதுப்பிக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும். பதிப்பு 8.16 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு தேவை.
- உங்கள் சாதனம் புதுப்பிக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும்:
- உங்கள் iOS சாதனத்தைப் புதுப்பிக்க, சாதன அமைப்புகளுக்குச் சென்று General > Software Update என்பதைத் தட்டவும். ஏதேனும் புதுப்பிப்பு இருந்தால், Update now என்பதைத் தட்டவும்.
- உங்கள் Android சாதனத்தைப் புதுப்பிக்க, சாதன அமைப்புகளுக்குச் சென்று Software update என்பதைத் தட்டவும். ஏதேனும் புதுப்பிப்பு இருந்தால், அதை நிறுவுவதற்குத் திரையில் தோன்றும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
- Bluetooth ஆஃப் செய்து, மீண்டும் ஆன் செய்யவும்.
- சாதனத்தை ரீஸ்டார்ட் செய்யவும்.
- (iOS சாதனங்களுக்கு) உங்கள் அமைப்புகளில், நிறுவப்பட்ட செயலிகளின் பட்டியலில் Shopify POS என்பதைக் கண்டறிந்து, பின்வரும் அமைப்புகள் செயலில் உள்ளதா என உறுதிப்படுத்தவும்:
- Allow Shopify POS to access பிரிவில், Bluetooth அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது.
- Allow Cross-Website Tracking அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது.
- உங்கள் ஸ்கேனரானது இணைக்கப்பட்டிருக்கும் சாதனத்திலிருந்து 33 அடி அல்லது அதற்கும் குறைவான தொலைவுக்குள் இருப்பதை உறுதிசெய்யவும்.
- எந்த ஸ்கேனர் விளக்கு எந்த பேட்டரி கொள்ளளவைக் குறிக்கும் என்பதை விவரிக்கும் பின்வரும் அட்டவணையைக் கொண்டு, ஸ்கேனர் சார்ஜ் செய்யப்பட்டுள்ளதா எனச் சரிபார்க்கவும்:
| ஸ்கேனர் சார்ஜிங் விளக்கு | பேட்டரி கொள்ளளவு |
|---|---|
| நிலையான பச்சை | 100%-26% |
| நிலையான மஞ்சள் | 25%-10% |
| நிலையான சிவப்பு | 10% இற்குக் கீழ் |
| ஒளிரும் சிவப்பு | மிகவும் குறைவு |
| ஒளிரும் மஞ்சள் | பேட்டரி சார்ஜ் ஆகிறது |
படி 2: Socket Mobile 1D ஸ்கேனர் சிக்கலைத் தேர்ந்தெடுக்கவும்
பொதுவான சிக்கல் தீர்த்தல் படிகள் உங்கள் சிக்கலைத் தீர்க்கவில்லை எனில், Socket Mobile 1D ஸ்கேனர் சிக்கலைத் தேர்ந்தெடுத்து எல்லாச் சிக்கல் தீர்த்தல் படிகளையும் பின்பற்றவும்.
இணைப்புச் சிக்கல்களைத் தீர்த்தல்
உங்கள் Socket Mobile 1D ஸ்கேனரை Shopify POS கண்டறிந்தாலும் ஸ்கேனர் இணைக்கப்படவில்லை எனில், பின்வரும் படிகளைக் கொண்டு சிக்கலைத் தீர்க்கவும்:
- Bluetooth ஆஃப் செய்து, மீண்டும் ஆன் செய்யவும்.
- சாதனத்தை ரீபூட் செய்யவும்.
- ஸ்கேனரை அமைப்பதற்குச் சரியான பார்கோடை ஸ்கேன் செய்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். உங்கள் iPad உடன் வேலை செய்ய, 1D பார்கோடு ஸ்கேனரை iOS பயன்முறைக்கு அமைக்கிறது. பார்கோடை ஸ்கேன் செய்தபோது மூன்று பீப் சத்தங்களை நீங்கள் கேட்கவில்லை என்றாலோ, அல்லது 2D பார்கோடைத் தவறுதலாக ஸ்கேன் செய்திருந்தாலோ, ஸ்கேனர் iOS பயன்முறையில் இல்லை எனப் பொருள். ஸ்கேனர் இணைப்பைத் துண்டித்துவிட்டு, பின்னர் அதை மீண்டும் இணைக்கவும்.
உங்கள் Socket Mobile 1D ஸ்கேனர் இன்னமும் இணைக்கப்படவில்லை எனில், உங்கள் சாதனத்தில் உள்ள Bluetooth அமைப்புகளை மீட்டமைக்கவும்.
உங்கள் Bluetooth அமைப்புகளை மீட்டமைக்கவும்
வீடியோ டுடோரியலைப் பார்ப்பதன் மூலம் அல்லது எழுதப்பட்ட படிகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் POS சாதனத்தின் Bluetooth அமைப்புகளை மீட்டமைக்கவும்.
iOS
படிகள்:
- உங்கள் iOS சாதனத்திலிருந்து, அமைப்புகள் > Bluetooth என்பதற்குச் செல்லவும்.
- நீங்கள் சிக்கல் தீர்க்கும் வன்பொருளுக்கு அடுத்துள்ள ( i ) ஐகானைத் தட்டி, பின்னர் இந்தச் சாதனத்தை மற (Forget This Device) என்பதைத் தட்டவும்.
- உங்கள் Bluetooth அமைப்புகளை முடக்கவும்.
- 2-3 நிமிடங்களுக்கு iOS சாதனத்தை ஆஃப் செய்யவும்.
- உங்கள் iOS சாதனத்தை மறுதொடக்கம் செய்து, பின்னர் உங்கள் வன்பொருளை இணைக்கவும்.
Android
- உங்கள் Android சாதனத்திலிருந்து, அமைப்புகள் > Bluetooth என்பதற்குச் செல்லவும்.
- நீங்கள் மறக்க விரும்பும் சாதனத்தைக் கண்டறிந்து, அதன் அடுத்துள்ள கியர் ஐகானைத் தட்டவும்.
- மற (Forget) அல்லது இணைப்பைத் துண்டி (Unpair) என்பதைத் தட்டவும்.
- உங்கள் Android சாதனத்தை 2-3 நிமிடங்களுக்கு ஆஃப் செய்து, பின்னர் மீண்டும் ஆன் செய்யவும்.
- Bluetooth என்பதை ஆன் செய்து, பின்னர் உங்கள் வன்பொருளை இணைக்கவும்.
Shopify POS இல் "Connecting scanner" (ஸ்கேனரை இணைக்கிறது) திரையில் இணைக்கும் முயற்சி தடைபடுவதைச் சிக்கல் தீர்க்கவும்
உங்கள் சாதனத்தின் Bluetooth அமைப்புகளில் Socket Mobile 1D ஸ்கேனர் பட்டியலிடப்பட்டிருந்தும், Shopify POS “Connecting scanner” (ஸ்கேனர் இணைக்கப்படுகிறது) திரையிலேயே இருந்தால், பின்வரும் படிகள் மூலம் சிக்கலுக்குத் தீர்வு காணவும்.
படிகள்:
- இணைக்கும் செயல்முறையை ரத்துசெய்யவும்.
- உங்கள் சாதனத்தின் Bluetooth அமைப்புகளிலிருந்து ஸ்கேனரை அகற்றவும்.
- உங்கள் Bluetooth அமைப்புகளை ஆஃப் செய்து, மீண்டும் ஆன் செய்யவும்.
- ஸ்கேனரை இணைக்க முயலவும்.
நீங்கள் இன்னமும் சிக்கல்களை எதிர்கொண்டால், உங்கள் ஸ்கேனரை மீட்டமைத்து, மீண்டும் இணைக்க முயலவும்.
பார்கோடு ஸ்கேனிங் சிக்கல்களைத் தீர்க்கவும்
உங்கள் Socket Mobile 1D ஸ்கேனரைப் பயன்படுத்திக் கார்ட்டிற்குள் பார்கோடுகளை ஸ்கேன் செய்வதில் சிக்கல்கள் இருந்தால், பின்வரும் படிகளைக் கொண்டு சிக்கலைத் தீர்க்கவும்:
Shopify POS-ஐக் கட்டாயமாக மூடிவிட்டு (Force close), அதை மீண்டும் திறக்கவும்.
உங்கள் சாதன அமைப்புகளில் Bluetooth ஐ ஆஃப் மற்றும் ஆன் என நிலைமாற்றவும்.
Shopify POS கார்ட்டில் பார்கோடுகளை ஸ்கேன் செய்வதை உறுதிப்படுத்தவும். தேடல் பட்டியைத் தட்டிவிட்டு ஸ்கேன் செய்தால், Shopify POS ஆனது தயாரிப்பைத் தேடுமே தவிர, தயாரிப்பைக் கார்ட்டில் சேர்க்காது.
நீங்கள் ஆதரிக்கப்படும் பார்கோடு வகையை ஸ்கேன் செய்துள்ளதை உறுதிப்படுத்தவும்.
உங்கள் ஸ்டோரின் தயாரிப்புகளில் ஒன்றாக இல்லாத அருகிலுள்ள ஏதேனும் ஒரு உருப்படியின் பார்கோடை ஸ்கேன் செய்து, ஸ்கேனர் பார்கோடுகளை அடையாளம் காண்கிறதா எனச் சோதிக்கவும். உங்கள் ஸ்கேனர் சரியாக இணைக்கப்பட்டிருந்தால், Shopify POS இல் Unrecognized barcode (அடையாளம் காணப்படாத பார்கோடு) என்ற பிழை காண்பிக்கப்படும். பிழை காண்பிக்கப்பட்டால், அடுத்த படிகளுக்குத் தொடரவும். பிழை காண்பிக்கப்படவில்லை எனில், உங்கள் சாதனத்திலிருந்து ஸ்கேனரின் இணைப்பைத் துண்டித்துவிட்டு, மீண்டும் அவற்றை இணைக்கவும்.
என்பதைத் தட்டுவதன் மூலம், Connectivity (இணைப்பு) மெனுவில் ஸ்கேனர் இணைக்கப்பட்டுள்ளதாகக் காண்பிக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். ஸ்கேனர் இணைக்கப்பட்டதாகக் காண்பிக்கப்படவில்லை எனில், உங்கள் சாதனத்தின் Bluetooth அமைப்புகளுக்குச் சென்று ஸ்கேனரை மறக்கச் செய்யவும் (Forget the scanner). பின்னர் உங்கள் சாதனத்துடன் ஸ்கேனரை மீண்டும் இணைக்கவும்.
உங்கள் சாதனத்தின் கேமரா மூலம் பார்கோடை ஸ்கேன் செய்யவும். உங்கள் சாதனம் பார்கோடை ஸ்கேன் செய்யவில்லை எனில், பார்கோடு லேபிள் அல்லது பார்கோடு எண்ணில் ஏதேனும் சிக்கல் இருக்கலாம், பின்வரும் படிகளின் மூலம் நீங்கள் சிக்கலைத் தீர்க்கலாம்:
- உங்கள் Shopify நிர்வாகியில் தயாரிப்பின் நிலை மற்றும் கிடைக்கும் தன்மையைச் சரிபார்க்கவும். தயாரிப்பானது செயலில் உள்ள அல்லது பட்டியலிடப்படாத நிலையில் இருக்க வேண்டும், மேலும் விற்பனைப் புள்ளி விற்பனைச் சேனலில் கிடைக்கக்கூடியதாக இருக்க வேண்டும். வரைவு அல்லது காப்பகப்படுத்தப்பட்ட நிலையில் உள்ள தயாரிப்புகளை Shopify POS இல் விற்க முடியாது.
- பார்கோடு லேபிளில் உள்ள எண் உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள தயாரிப்பின் பார்கோடு எண்ணுடன் பொருந்துவதை உறுதிசெய்யவும். எண்ணின் தொடக்கத்திலோ முடிவிலோ கூடுதல் பூஜ்ஜியங்களோ சிறப்பு எழுத்துகளோ இருந்தால், அவற்றை நீக்கிவிட்டு மீண்டும் முயலவும்.
- Shopify நிர்வாகி தயாரிப்புப் பக்கத்தில் உள்ள பார்கோடு எண், SKU புலத்தில் இல்லாமல் பார்கோடு புலத்தில் உள்ளதை உறுதிசெய்யவும்.
பார்கோடு ஸ்கேனிங் வேகத்தில் ஏற்படும் சிக்கலைத் தீர்க்கவும்
உங்கள் Socket Mobile 1D ஸ்கேனரானது நீங்கள் விரும்பும் வேகத்தில் ஸ்கேன் செய்யவில்லை எனில், பின்வரும் படிகளின் மூலம் சிக்கலைத் தீர்க்கவும்:
உங்கள் ஸ்கேனரானது அதற்காகக் குறிப்பிடப்பட்டுள்ள வரம்பிற்குள் (33 அடி) இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். ஸ்கேனருக்கும் உங்கள் சாதனத்திற்கும் இடையிலான தூரம், ஸ்கேனிங் வேகத்தைப் பாதிக்கலாம்.
சாதனத்தை ரீஸ்டார்ட் செய்யவும்.
ஸ்கேனர் தானாகவே பார்கோடுகளை ஸ்கேன் செய்யாத சிக்கலைத் தீர்க்கவும்
Socket Mobile 1D ஸ்கேனர்கள் தானியங்கி ஸ்கேனிங்கை ஆதரிக்காது. Socket Mobile 2D ஸ்கேனர்கள் மட்டுமே தானியங்கி ஸ்கேனிங்கை ஆதரிக்கின்றன.
ஸ்கேனர் பவர் ஆஃப் ஆவது அல்லது சார்ஜ் நில்லாதது தொடர்பான சிக்கல்களைத் தீர்க்கவும்
இயல்புநிலையாக 2 மணிநேரத்திற்குச் செயல்பாடின்றி இருந்தால் Socket Mobile ஸ்கேனரின் பவர் ஆஃப் ஆகி, அதன் இணைப்பு துண்டிக்கப்படும். ஸ்கேனரானது தானாகவே ஆஃப் ஆகாமல் இருப்பதற்கு, உங்கள் சாதனத்தின் Bluetooth-ஐ ஆஃப் செய்துவிட்டு, "ஸ்கேனர் எப்போதும் ஆன் செய்யப்பட்டுள்ளது (scanner is always on)" என்ற பார்கோடை ஸ்கேன் செய்து உங்கள் ஸ்கேனரை உள்ளமைக்கவும்:

பார்கோடை ஸ்கேன் செய்த பிறகு, Bluetooth-ஐ மீண்டும் ஆன் செய்து, உங்கள் ஸ்கேனர் இணைக்கப்பட்டதாகத் தோன்றுகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
உங்கள் Socket Mobile 1D ஸ்கேனர் இன்னமும் பவர் ஆஃப் ஆனாலோ, பவர் ஆன் ஆகவில்லை என்றாலோ, அல்லது சார்ஜ் நிற்கவில்லை என்றாலோ, பின்வரும் படிகளைக் கொண்டு சிக்கலைத் தீர்க்கவும்:
- உங்கள் ஸ்கேனரைத் தொழிற்சாலை இயல்புநிலைக்கு மீட்டமைக்கவும்.
- உங்கள் பேட்டரிகளை மீட்டமைக்கவும். டேட்டா ரீடரின் பின்புறத்திலிருந்து பேட்டரி கவரைக் கழற்றி, பேட்டரிகளை வெளியே எடுத்து, 10 நிமிடங்களுக்கு அவற்றை அப்படியே வைக்கவும். மீண்டும் பேட்டரிகளை உள்ளிட்டு, பேட்டரி கதவை மூடிவிட்டு, பேட்டரி இன்டிகேட்டர் விளக்கு பச்சை நிறமாக மாறும் வரை சார்ஜ் செய்யவும். சார்ஜ் ஆவதற்கு 6 மணிநேரம் வரை ஆகலாம் என்பதால், ஒவ்வொரு நாளின் முடிவிலும் உங்கள் ஸ்கேனரை சார்ஜ் செய்வதே சிறந்த நடைமுறையாகும்.
- பொருத்தமான AC பவர் அடாப்டர் மூலம் ஸ்கேனர் சார்ஜ் ஆகிறதா என்பதை உறுதிசெய்யவும். கணினியின் USB போர்ட் போன்ற பொருத்தமற்ற மின்மூலத்தைப் பயன்படுத்தினால், ரீடரை சார்ஜ் செய்யப் போதுமான மின்சாரம் கிடைக்காது. இதனால், உண்மையில் இருப்பதைவிட அதிக சார்ஜ் இருப்பதாக ரீடர் கணக்கிட்டு, அணைந்துவிடலாம்.
சிக்கல் தீர்த்தல் மூலம் சிக்கல் தீர்க்கப்படவில்லை எனில், நீங்கள் ஸ்கேனரின் பேட்டரிகளை மாற்ற வேண்டியிருக்கலாம். ஸ்கேனரில் முன்பே நிறுவப்பட்ட இரண்டு AA NiMH ரீசார்ஜபிள் பேட்டரிகள் உள்ளன. வழங்கப்பட்ட USB பவர் கேபிளைப் பயன்படுத்தியோ ஸ்கேனர் கிராடில் மூலமாகவோ இந்தப் பேட்டரிகள் ரீசார்ஜ் செய்யப்படுகின்றன. சார்ஜ் செய்வதற்கு பேட்டரிகள் அகற்றப்படுவதில்லை.
டாக் மூலம் ஸ்கேனர் சார்ஜ் ஆகாத சிக்கலைத் தீர்த்தல்
உங்கள் சார்ஜிங் டாக் உங்கள் Socket Mobile ஸ்கேனரைச் சார்ஜ் செய்யவில்லை எனில், பின்வரும் படிகளின் மூலம் சிக்கலைத் தீர்க்கவும்:
- சார்ஜிங் கேபிள் பாதுகாப்பாகச் செருகப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தவும்:

- ஸ்கேனரின் சார்ஜிங் போர்ட்களில் சார்ஜிங் பின்கள் முழுமையாகச் செருகப்பட்டு, ஸ்கேனரின் சார்ஜிங் பின்களுடன் தொடர்பில் இருப்பதை உறுதிப்படுத்தவும்:

- பேட்டரி கதவில் உள்ள திருகு இறுக்கமாக இருப்பதையும் பேட்டரி கதவு மூடப்பட்டுள்ளதையும் உறுதிப்படுத்தவும்:

- சார்ஜிங் டாக்கில் பச்சை நிற LED ஒளிர்வதை உறுதிப்படுத்தவும். ஒளிரவில்லை எனில், டாக்கில் உள்ள சார்ஜிங் போர்ட்டில் சார்ஜிங் கேபிள் முழுமையாகச் செருகப்படாமல் இருக்கலாம்.

சார்ஜிங் டாக்கில் பச்சை நிற விளக்கு ஒளிரவில்லை எனில், டாக்கில் இருந்து கேபிளை அகற்றிவிட்டு, அதை ஸ்கேனரின் பக்கவாட்டில் உள்ள சார்ஜிங் போர்ட்டில் நேரடியாகச் செருகவும்.

ஸ்கேனர் சார்ஜ் ஆகத் தொடங்கினால், சார்ஜிங் டாக் பழுதாகி இருக்க அதிக வாய்ப்புள்ளது. ஸ்கேனர் சார்ஜ் ஆகவில்லை எனில், சார்ஜிங் கேபிள் பழுதாகி இருக்க அதிக வாய்ப்புள்ளது.
இன்னமும் ஸ்கேனர் சார்ஜ் ஆகவில்லை எனில், பவர் அடாப்டரை வேறொரு பவர் அவுட்லெட்டில் செருகவும். புதிய அவுட்லெட்டில் செருகியதும் ஸ்கேனர் சார்ஜ் ஆனால், முதலில் செருகிய பவர் அவுட்லெட்டில் மின்சாரம் வராமல் இருக்கலாம்.
சார்ஜ் செய்யும்போது ஸ்கேனர் சூடாகும் சிக்கலைத் தீர்த்தல்
சார்ஜ் செய்யும்போது உங்கள் Socket Mobile 1D ஸ்கேனர் அதிகச் சூடானால், ஸ்கேனரை அன்ப்ளக் செய்யவும். சார்ஜ் செய்வது உங்கள் ஸ்கேனரை மிதமாகச் சூடாக்கலாம், ஆனால் தொடும்போதே மிகவும் சூடாக இருந்தால், உடனடியாக அதை மின்சக்தி இணைப்பில் இருந்து துண்டித்துவிட்டு, Socket Mobile ஆதரவுக் குழுவைத் தொடர்புகொள்ளவும்.
ஸ்கேன் பொத்தானை அழுத்தும்போது ஸ்கேனர் அணைந்துவிடும் சிக்கலுக்குத் தீர்வு காணுதல்
ஸ்கேன் பொத்தானை அழுத்தும்போது உங்கள் Socket Mobile 1D ஸ்கேனர் திடீரென அணைந்துவிட்டால், பின்வரும் சிக்கல் தீர்க்கும் படிகளை முயன்று பார்க்கவும்.
படிகள்:
- ஸ்கேனரிலிருந்து பேட்டரி கதவை அகற்றிவிட்டு, பேட்டரிகளை வெளியே எடுக்கவும்.
- 15-20 நிமிடங்களுக்கு ஸ்கேனருக்கு வெளியே பேட்டரிகளை வைத்திருக்கவும்.
- பேட்டரிகளை மீண்டும் செருகி, பேட்டரி விளக்கு பச்சை நிறமாக மாறும் வரை ஸ்கேனரைச் சார்ஜ் செய்யவும்.
- ஸ்கேனரை முழுமையாகச் சார்ஜ் செய்யவும்.
இன்னமும் சிக்கல் தொடர்ந்தால், ஸ்கேனரின் பேட்டரிகளை மாற்றவும்.
Socket Mobile 1D ஸ்கேனர் பேட்டரிகளை மாற்றுதல்
ஸ்கேனரில் சார்ஜ் நிற்கவில்லை என்றாலோ ஸ்கேன் பொத்தானை அழுத்தும்போது ஸ்கேனர் அணைந்துவிட்டாலோ, நீங்கள் ஸ்கேனரின் பேட்டரிகளை மாற்ற வேண்டியிருக்கலாம். நீங்கள் Socket Mobile தளத்தில் புதிய பேட்டரிகளை வாங்கலாம்.
ஸ்கேனரின் பேட்டரிகளை மாற்ற, உங்களுக்குப் பின்வரும் பொருட்கள் தேவை:
- பிலிப்ஸ் ஸ்க்ரூடிரைவர் (Phillips screwdriver)
- NiMH கொண்ட 2 AA ரீசார்ஜபிள் பேட்டரிகள் (Socket Mobile S700)
- NiMH கொண்ட 2 AAA ரீசார்ஜபிள் பேட்டரிகள் (Socket Mobile 7Ci)
படிகள்:
- ஸ்க்ரூடிரைவரைக் கொண்டு திருகைத் தளர்த்தவும்.
- பேட்டரி கதவை அகற்றவும்.
- பேட்டரிகளை அகற்றிவிட்டு மாற்றவும்.
- பேட்டரி கதவை இணைத்துவிட்டு, திருகை இறுக்கவும்.
அதிர்வு அமைப்புகள் மற்றும் வேலைச் சூழலைப் பொறுத்து பேட்டரி ஆயுள் மாறுபடலாம். இரண்டு ஆண்டுகளுக்குள் பேட்டரிகளை மாற்றுவதே சிறந்த நடைமுறையாகும்.
Socket Mobile 1D ஸ்கேனரை ஃபேக்டரி மீட்டமைத்தல்
சிக்கல் தீர்க்கும் படிகள் மூலம் உங்கள் Socket Mobile 1D ஸ்கேனரில் உள்ள சிக்கலைச் சரிசெய்ய முடியவில்லை எனில், ஃபேக்டரி மீட்டமைப்புப் பார்கோடை ஸ்கேன் செய்வதன் மூலமாகவோ ஸ்கேனரைக் கைமுறையாக மீட்டமைப்பதன் மூலமாகவோ உங்களால் ஃபேக்டரி மீட்டமைப்பைச் செய்ய முடியும்.
படிகள்:
பார்கோடு ஸ்கேன் மூலம் மீட்டமைத்தல்
- ஸ்கேனரில் குறைந்தபட்சம் 50% பவர் இருக்கும்படி சார்ஜ் செய்யவும்.
- ஸ்கேனர் மற்றும் உங்கள் சாதனத்தின் இணைப்பை நீக்கவும்.
- ஸ்கேனரை மீண்டும் ஆன் செய்யவும்.
- தொழிற்சாலை அமைப்புகளுக்கு மீட்டமைக்கும் பார்கோடை ஸ்கேன் செய்யவும். ஸ்கேனர் பார்கோடை ஏற்றுக்கொண்டால், 5 முறை பீப் ஒலி எழுப்பிய பிறகு அணைந்துவிடும்.

- மீண்டும் உங்கள் சாதனத்துடன் ஸ்கேனரை இணைக்கவும்.
கைமுறை மீட்டமைப்பு
ஸ்கேனரைக் கைமுறையாக மீட்டமைக்க, வீடியோ டுடோரியலை அல்லது எழுத்துப்பூர்வமான படிகளைப் பார்க்கவும்.
- ஸ்கேனரை ஆன் செய்யவும்.

- ஸ்கேன் பொத்தானை அழுத்திப் பிடித்துக்கொள்ளவும்.

- ஸ்கேன் பொத்தானைத் தொடர்ந்து அழுத்திப் பிடித்தவாறே, பவர் பொத்தானை ஒருமுறை அழுத்தவும்.
- பீப் ஒலியைக் கேட்கும் வரை ஸ்கேன் பொத்தானைத் தொடர்ந்து அழுத்திப் பிடித்துக்கொள்ளவும் (சுமார் 15 வினாடிகள்). ஸ்கேன் பொத்தானை நீங்கள் விடுவித்த பிறகு, ஸ்கேனர் 5 முறை பீப் ஒலி எழுப்பிவிட்டு அணைந்துவிடும்.
பீப் ஒலியைக் கேட்பதற்கு முன் நீங்கள் ஸ்கேன் பொத்தானை விடுவித்தால், ஃபேக்டரி மீட்டமைப்பு தோல்வியடையும், எனவே நீங்கள் கைமுறை ஃபேக்டரி மீட்டமைப்புப் படிகளை ஆரம்பத்தில் இருந்தே தொடங்க வேண்டியிருக்கும்.
ஆதரிக்கப்படும் பார்கோடு வகைகள்
Socket Mobile S700 மற்றும் 7Ci ஸ்கேனர், பின்வரும் 1D பார்கோடு வகைகளை ஆதரிக்கின்றன:
- Bookland EAN
- Chinese 2 of 5
- Codabar (ISBT 128 பிட் ஒருங்கிணைப்பு உட்பட)
- Code 11, Code 128
- Code 39
- Trioptic Code 39
- Code 39 Full ASCII
- Code 93
- Discrete 2 of 5
- GS1 DataBar (RSS)
- GS1-128 (UCC-128/EAN-128)
- ISBN
- ISBT 128
- Interleaved 2 of 5 (ITF-14)
- MSI
- Standard 2 of 5
- Telepen
- UPC/EAN (UPC-A, UPC-E, UPC-E1, EAN-13, EAN-8, UCC/EAN-128)
- VIN
உங்கள் Socket Mobile 1D ஸ்கேனர் குறித்து Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்
பொதுவான சிக்கல் தீர்த்தல் படிகள் மற்றும் குறிப்பிட்ட சிக்கலுக்கான சிக்கல் தீர்த்தல் படிகளைப் பின்பற்றிய பிறகும் உங்கள் Socket Mobile 1D ஸ்கேனர் செயல்படவில்லை என்றால், நீங்கள் Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளலாம்.
Shopify POS இல், ஐகான் > ஆதரவு > ஆதரவைத் தொடர்புகொள் என்பதைத் தட்டவும்.