Socket Mobile 2D ஸ்கேனர்
Shopify POS மூலம் டிஜிட்டல் மற்றும் அச்சிடப்பட்ட 1D, 2D பார்கோடுகளை ஸ்கேன் செய்ய நீங்கள் Socket Mobile S740, S720 அல்லது CHS 7Qi 2D ஸ்கேனர்களைப் பயன்படுத்தலாம்.

Socket Mobile 2D ஸ்கேனர் புளூடூத் மூலம் Shopify POS உடன் வயர்லெஸ் முறையில் இணைவதால், நீங்கள் இதனைச் சந்தைகள், கண்காட்சிகள், பாப்-அப் இடங்கள் அல்லது நேரடி ஸ்டோர்களில் பயன்படுத்தலாம். ஸ்கேனருடன் கொடுக்கப்பட்டுள்ள சார்ஜிங் கேபிள் அல்லது கிரேடில் எனப்படும் சார்ஜிங் ஸ்டாண்டைப் பவர் சாக்கெட்டில் செருகுவதன் மூலம் ஸ்கேனரை சார்ஜ் செய்யலாம். முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால், ஸ்கேனரின் பேட்டரி 14 மணிநேரம் வரை நீடிக்கும் (சுமார் 15,000 ஸ்கேன்கள்).