Chipper 2X BT கார்டு ரீடரில் சிக்கல் தீர்த்தல்
Chipper 2X BT கார்டு ரீடரில் உள்ள பொதுவான சிக்கல்களைத் தீர்க்க, இந்த வழிகாட்டுதலைப் பயன்படுத்தவும். நீங்கள் எதிர்கொள்ளும் குறிப்பிட்ட சிக்கலைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு படி 1: Chipper 2X BT கார்டு ரீடருக்கான பொதுவான சிக்கல் தீர்த்தல் என்பதைப் பூர்த்திசெய்யவும். சிக்கல் தீர்க்கும் படிகள் மூலம் சிக்கல் தீர்க்கப்படவில்லை எனில், நீங்கள் Shopify ஆதரவிற்கு ஓர் அறிக்கையை அனுப்பலாம்.
இந்தப் பக்கத்தில்
படி 1: Chipper 2X BT கார்டு ரீடருக்கான பொதுவான சிக்கல் தீர்த்தல்
Chipper 2X BT கார்டு ரீடர் சிக்கல்களுக்கான பின்வரும் பொதுவான சிக்கல் தீர்க்கும் படிகளைப் பூர்த்திசெய்யவும்:
Chipper 2X BT கார்டு ரீடரைப் பயன்படுத்துவதற்கான தேவைகளை நீங்கள் பூர்த்திசெய்கிறீர்களா என்பதைச் சரிபார்க்கவும்.
இணைய இணைப்பு உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும். பேமெண்ட்டுகளைச் செயலாக்க, Wi-Fi அல்லது உங்கள் சாதனத்தின் செல்லுலார் தரவு மூலம் இணையத்துடன் Shopify POS இணைக்கப்பட வேண்டும். உங்களால் இணையத்துடன் இணைய முடியவில்லை என்றால், நீங்கள் ஆஃப்லைனில் இருக்கும் நேரத்தில் வேறு பேமெண்ட் வகையைப் பயன்படுத்த வேண்டும்.
POS செயலியில் கார்டு ரீடர் இணைக்கப்பட்ட சாதனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளதை உறுதிசெய்ய, வழிசெலுத்தலில் உள்ள இணைப்பு ஐகானைத் தட்டவும். கார்டு ரீடர் இணையவில்லை எனில், உங்கள் சாதனத்துடன் கார்டு ரீடரை இணைக்கவும்.
உங்கள் ஃபயர்வால் அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
Shopify POS புதுப்பிக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும்.
உங்கள் சாதனம் புதுப்பிக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும்:
- உங்கள் iOS சாதனத்தைப் புதுப்பிக்க, உங்கள் சாதனத்தின் அமைப்புகளுக்குச் சென்று, General > Software Update என்பதைத் தட்டவும். புதுப்பிப்பு கிடைத்தால், Update now என்பதைத் தட்டலாம்.
- உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தைப் புதுப்பிக்க, உங்கள் சாதனத்தின் அமைப்புகளுக்குச் சென்று, Software update என்பதைத் தட்டவும். புதுப்பிப்பு கிடைத்தால், அதை நிறுவ திரையில் தோன்றும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
உங்கள் Shopify POS சாதனத்தில் புளூடூத் இயக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
உங்கள் சாதன அமைப்புகளில் புளூடூத்துடன் இணைக்க POS செயலிக்கு அனுமதி உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
படி 2: Chipper 2X BT கார்டு ரீடர் சிக்கலைத் தேர்ந்தெடு
Chipper 2X BT கார்டு ரீடர் சிக்கலைத் தேர்ந்தெடுத்து, அனைத்துச் சிக்கல் தீர்க்கும் படிகளையும் பின்பற்றவும்.
Shopify POS Hub இணைப்புச் சிக்கல்களைத் தீர்த்தல்
Shopify POS Hub வழியாக உங்களின் POS வன்பொருள் இணைக்கப்படவில்லை எனில், Shopify POS Hub சிக்கல் தீர்க்கும் படிகளைப் பூர்த்திசெய்யவும்.
இணைத்தல் தொடர்பான சிக்கல்களைத் தீர்த்தல்
உங்களால் Chipper 2X BT கார்டு ரீடரை இணைக்க முடியாவிட்டால், பின்வரும் படிகளைப் பின்பற்றி இணைப்பில் உள்ள சிக்கலைத் தீர்க்கவும்:
- உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தில் மைக்ரோ-USB இணைப்பைப் பயன்படுத்தினால், ரீடரைக் கழற்றி மீண்டும் செருகவும்.
- நீங்கள் Retail ஸ்டாண்டைப் பயன்படுத்தினால், டேப்லெட்டைக் கழற்றிவிட்டு, மீண்டும் பொருத்திப் பார்க்கவும்.
- உங்கள் Chipper 2X BT கார்டு ரீடரில் பேட்டரி சார்ஜ் 50%-க்கும் அதிகமாக இருப்பதை உறுதிசெய்யவும். இல்லையெனில், மீண்டும் இணைக்க முயற்சிக்கும் முன் 50%-க்கும் அதிகமாக சார்ஜ் செய்யவும். மின்சாரத்தில் இணைக்கப்பட்டிருந்தாலும், பேட்டரி சார்ஜ் 50%-க்கும் குறைவாக இருந்தால் ரீடரை இணைப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம்.
- Chipper 2X BT கார்டு ரீடர் வேறொரு சாதனத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும். அவ்வாறு இணைக்கப்பட்டிருந்தால், புதிய சாதனத்துடன் இணைக்க முயலும் முன் அந்தச் சாதனத்திலிருந்து அதைத் துண்டிக்கவும். Chipper 2X BT கார்டு ரீடரை ஒரே நேரத்தில் ஒரு சாதனத்துடன் மட்டுமே இணைக்க முடியும்.
- POS செயலியை ஃபோர்ஸ் க்ளோஸ் செய்துவிட்டு, மீண்டும் திறக்கவும்.
- மைக்ரோ-USB கேபிளைப் பயன்படுத்தினால், புளூடூத்தைப் பயன்படுத்தி ரீடரை இணைத்துப் பார்க்கவும். நீங்கள் ஆண்ட்ராய்டு டேப்லெட்டைப் பயன்படுத்தி, புளூடூத் மூலம் ரீடரை இணைக்கிறீர்கள் என்றால், மைக்ரோ-USB கேபிளைப் பயன்படுத்தி ரீடரை இணைத்துப் பார்க்கவும்.
இணைப்புச் சிக்கல்களைத் தீர்த்தல்
உங்கள் POS சாதனத்திலிருந்து உங்களின் Chipper 2X BT கார்டு ரீடர் துண்டிக்கப்பட்டால், பின்வரும் படிகளைப் பின்பற்றி இணைப்பில் உள்ள சிக்கலைத் தீர்க்கவும்.
படிகள்:
- Shopify POSக்கான பின்வரும் அனுமதிகளை உங்கள் சாதனத்தின் அமைப்புகளில் மதிப்பாய்வு செய்யவும்:
- iOS மற்றும் ஆண்ட்ராய்டு: Location அமைப்பானது When using this app என அமைக்கப்பட்டிருக்க வேண்டும்
- iOS மற்றும் ஆண்ட்ராய்டு: Camera அமைப்பானது On அல்லது Allowed என அமைக்கப்பட்டிருக்க வேண்டும்
- iOS : Local Network அமைப்பானது On என அமைக்கப்பட்டிருக்க வேண்டும்
- iOS : Bluetooth அமைப்பானது On என அமைக்கப்பட்டிருக்க வேண்டும்
- iOS : Allow Cross-Website Tracking அமைப்பானது On என அமைக்கப்பட்டிருக்க வேண்டும்
- Shopify POS இலிருந்து,
என்பதைத் தட்டவும்.
- சாதனத் தகவல் பக்கத்தில் கார்டு ரீடர் பட்டியலிடப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும். இது சாதனமாகப் பட்டியலிடப்பட்டிருந்தால், Forget card reader என்பதைத் தட்டவும்.
- சாதனத்தின் புளூடூத் அமைப்புகளில் இருந்து, கார்டு ரீடர் பட்டியலிடப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும். இது சாதனமாகப் பட்டியலிடப்பட்டிருந்தால், அதை மறக்கத் தட்டவும்.
- உங்கள் சாதனத்தில் புளூடூத்தை முடக்கவும்.
- குறைந்தது 3 நிமிடங்களுக்குச் சாதனத்தை முழுமையாக ஆஃப் செய்யவும்.
- கார்டு ரீடரை மீட்டமைக்க முயலவும். ரீடரின் அடிப்பகுதியில் உள்ள சார்ஜிங் போர்ட்டிற்கு அடுத்துள்ள சிறிய துளையைக் கண்டறிந்து, பேப்பர் கிளிப்பின் முனை போன்ற கூர்மையான சிறிய பொருளை அந்தத் துளைக்குள் செருகவும். ரீடரை மீட்டமைக்க ஐந்து வினாடிகளுக்கு அதை அழுத்திப் பிடிக்கவும். மற்றொரு பேமெண்ட்டிற்கு அதைப் பயன்படுத்துவதற்கு முன்பு, ரீடர் இணைக்கப்பட்டிருப்பதைக் குறிக்கும் கார்டு ரீடரின் ஸ்டேட்டஸ் விளக்கு ஒளிரும் வரை காத்திருக்கவும்.
- சாதனத்தை மீண்டும் ஆன் செய்து, சாதன அமைப்புகளில் புளூடூத்தை மீண்டும் செயல்படுத்தவும், ஆனால் ரீடரை மீண்டும் இணைக்காமல் (pair) பார்த்துக்கொள்ளவும்.
- Shopify POS செயலியைத் திறந்து, கார்டு ரீடரை இணைப்பதற்கான படிகளைப் பூர்த்திசெய்யவும்.
ஓவர்-தி-ஏர் புதுப்பிப்புச் சிக்கல்களைத் தீர்த்தல்
உங்கள் Shopify POS செயலி மூலம் Chipper 2X BT கார்டு ரீடரைப் புதுப்பிக்கும்போது புதுப்பிப்பு முடங்கினால் அல்லது தோல்வியடைந்தால், கார்டு ரீடரை வேறொரு சாதனத்துடன் இணைத்து மீண்டும் முயல வேண்டும்.
படிகள்:
- ரீடர் பவர் சோர்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும் அதன் பேட்டரி குறைந்தது 50% சார்ஜ் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் உறுதிசெய்துகொள்ளவும்.
- நீங்கள் Shopify POSஇன் சமீபத்திய பதிப்பைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிசெய்யவும்.
- உங்கள் சாதனத்தில் Shopify POS செயலியை மூடிவிட்டு மீண்டும் திறக்கவும்.
- Shopify POS இலிருந்து, கார்டு ரீடரின் இணைப்பைத் துண்டித்துவிட்டு, கார்டு ரீடரை மீண்டும் Shopify POS உடன் இணைக்கவும்.
- கார்டு ரீடர் புதுப்பிப்பை மறுதொடக்கம் செய்யவும்.
பேமெண்ட் ஏற்புச் சிக்கல்களைத் தீர்த்தல்
உங்கள் Chipper 2X BT கார்டு ரீடர் பேமெண்ட்டுகளைச் செயலாக்கவில்லை எனில், பின்வரும் படிகளைக் கொண்டு சிக்கலைத் தீர்க்கவும்.
படிகள்:
- கார்டைச் சரியாகச் செருகவும்.
- Shopify Payments சோதனைப் பயன்முறையை முடக்கியுள்ளதை உறுதிசெய்யவும்.
- சாதனத்தில் இருப்பிடச் சேவைகளை இயக்கவும், மேலும் சாதனத்தின் இருப்பிடத்தை அணுக Shopify POS செயலிக்கு அனுமதி உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.
- POS செயலியைக் கட்டாயமாக மூடி, பின்னர் சாதனத்தை அணைக்கவும். சாதனத்தை மீண்டும் இயக்கி, Shopify POS-ஐத் திறந்து, கார்டு ரீடர் இணைக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும். கார்டு ரீடர் இணைக்கப்பட்டுள்ளதை அதன் நிலை விளக்கு காட்டும்போது, மற்றொரு பேமெண்ட்டை முயற்சிக்கவும்.
சிப் கார்டு சிக்கல்களைத் தீர்த்தல்
நீங்கள் கார்டைச் செருகும்போது Chipper 2X BT கார்டு ரீடர் பதிலளிக்கவில்லை எனில், சிப் ஸ்லாட்டைச் சுத்தப்படுத்த வேண்டும்.
படிகள்:
- ஒரு காகிதத்தை கிரெடிட் கார்டின் தடிமனுக்கு மடிக்கவும்.
- மடிக்கப்பட்ட காகிதத்தை சிப் ஸ்லாட்டிற்குள் நுழைத்து, காகிதத்தைப் பக்கவாட்டிலும் முன்னும் பின்னுமாக நகர்த்தவும்.
- ஸ்லாட்டிலிருந்து காகிதத்தை அகற்றி, சிப் ஸ்லாட்டைச் சுத்தப்படுத்த கம்ப்ரஸ்டு ஏர் (compressed air) கேனைப் பயன்படுத்தவும்.
இந்தப் படிகள் வேலை செய்யவில்லை எனில், ஐசோப்ரோபைல் ஆல்கஹால் மற்றும் மெல்லிய காட்டன் ஸ்வாப்களைப் பயன்படுத்தி சிப் ஸ்லாட்டில் உள்ள தொடர்புகளை மென்மையாகச் சுத்தப்படுத்தவும்.
உங்களின் Chipper 2X BT கார்டு ரீடர் குறித்து Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்
பொதுவான சிக்கல் தீர்த்தல் படிகள் மற்றும் பிரச்சினைக்கான சிக்கல் தீர்த்தல் படிகளைப் பின்பற்றிய பிறகும் உங்கள் Chipper 2X BT கார்டு ரீடர் வேலை செய்யவில்லை எனில், Shopify ஆதரவுக்கு ஒரு அறிக்கையை அனுப்பலாம்.
உங்களின் Shopify POS செயலியில், > ஆதரவு > ஆதரவைத் தொடர்புகொள்ளவும் என்பதைத் தட்டவும்.