Verifone Victa Mobile இன் சிக்கல் தீர்த்தல்
Verifone Victa Mobile-இல் ஏற்படும் பொதுவான சிக்கல்களைத் தீர்க்க இந்த வழிகாட்டியைப் பயன்படுத்தவும். நீங்கள் எதிர்கொள்ளும் குறிப்பிட்ட சிக்கலுக்கான வழிமுறைகளைப் பார்க்கும் முன், பொதுவான சிக்கல் தீர்க்கும் படிகளைப் பின்பற்றி முடிக்கவும். இந்தப் படிகள் சிக்கலைத் தீர்க்கவில்லை என்றால், Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளலாம்.
இந்தப் பக்கத்தில்
படி 1: Verifone Victa Mobile இற்கான பொதுவான சிக்கல் தீர்த்தல்
Verifone Victa Mobile சிக்கல்களுக்கான பின்வரும் பொதுவான சிக்கல் தீர்க்கும் படிகளை நிறைவுசெய்யவும்:
Shopify POS உடன் Verifone Victa Mobile ஐப் பயன்படுத்துவதற்கான தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்கிறீர்களா என்பதைச் சரிபார்க்கவும்.
இணைய அணுகல் உள்ள Wi-Fi உடன் Victa Mobile இணைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும். 2.4 GHz அல்லது 5 GHz அலைவரிசையைப் பயன்படுத்தலாம்.
Shopify POS புதுப்பித்த நிலையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
உங்கள் சாதனம் புதுப்பித்த நிலையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்:
- உங்கள் iOS சாதனத்தைப் புதுப்பிக்க, சாதனத்தின் அமைப்புகளுக்குச் சென்று, General (பொது) > Software Update (மென்பொருள் புதுப்பிப்பு) என்பதைத் தட்டவும். புதுப்பிப்பு ஏதேனும் கிடைத்தால், Update now (இப்போதே புதுப்பி) என்பதைத் தட்டலாம்.
- உங்கள் Android சாதனத்தைப் புதுப்பிக்க, உங்கள் சாதனத்தின் அமைப்புகளுக்குச் சென்று, Software update (மென்பொருள் புதுப்பிப்பு) என்பதைத் தட்டவும். புதுப்பிப்பு ஏதேனும் கிடைத்தால், அதை நிறுவ திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
உங்கள் ஃபயர்வால் அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
சேதப்படுத்தப்பட்டுள்ளதா என ஆய்வுசெய்தல்
Victa Mobile முறைகேடாக மாற்றியமைக்கப்பட்டதற்கான அறிகுறிகள் உள்ளனவா என்பதைத் தினமும் சரிபார்க்கவும். சாதனத்திலிருந்து வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் கம்பிகள், கார்டு செருகும் இடங்களில் செருகப்பட்டுள்ள அந்நியப் பொருட்கள் அல்லது மாற்றியமைக்கப்பட்டதை வெளிப்படுத்தும் லேபிள்களில் சேதம் போன்றவை இதில் அடங்கும். இத்தகைய அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால், சாதனத்தைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தி Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
படி 2: Verifone Victa Mobile சிக்கலைத் தேர்ந்தெடுக்கவும்
நீங்கள் எதிர்கொள்ளும் Verifone Victa Mobile சிக்கலைத் தேர்ந்தெடுத்து, அனைத்துச் சிக்கல் தீர்க்கும் படிகளையும் பின்பற்றவும்.
சாதனம் தொடங்குவதில் உள்ள சிக்கல்களைத் தீர்த்தல்
Verifone Victa Mobile தொடங்கவில்லை என்றால், பின்வரும் படிகளைப் பயன்படுத்திச் சிக்கலைத் தீர்க்கவும்:
- சாதனம் பவர் சோர்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும் பேட்டரி சார்ஜ் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
- சாதனத்தைத் தொடங்க, பவர் பொத்தானைச் சுமார் 2 வினாடிகளுக்கு அழுத்திப் பிடிக்கவும்.
- Universal Serial Bus (USB) கேபிளும் பவர் அடாப்டரும் பாதுகாப்பாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
- சாதனம் இன்னும் தொடங்கவில்லை என்றால், வேறொரு USB கேபிள் அல்லது பவர் அடாப்டரை முயன்று பார்க்கவும்.
Victa Mobile டாக்கில் சிவப்பு விளக்கு விட்டுவிட்டு ஒளிரும்போது சிக்கல் தீர்த்தல்
Victa Mobile டாக்கில் உள்ள குறிகாட்டி விளக்கு Victa Mobile சாதனத்தின் சார்ஜ் நிலையைக் காட்டாது. Shopify POS இந்த விளக்கைப் பயன்படுத்துவதில்லை. Victa Mobile முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டிருந்தாலும், வழக்கமான பயன்பாட்டின்போது டாக் விளக்கு சிவப்பு நிறத்தில் விட்டுவிட்டு ஒளிரக்கூடும்.
டாக்கில் Victa Mobile சார்ஜ் ஆகிறதா என்பதைச் சரிபார்க்க, பின்வரும் படிகளைப் பின்பற்றிச் சிக்கலைத் தீர்க்கவும்:
- Victa Mobile-இன் மேற்பகுதியில் உள்ள LED-ஐச் சரிபார்க்கவும். சிவப்பு நிறம் சாதனம் சார்ஜ் ஆவதைக் குறிக்கும். பச்சை நிறம் சாதனம் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டிருப்பதைக் குறிக்கும். Verifone Victa Mobile-ஐ சார்ஜ் செய்வது பற்றி மேலும் அறிக.
- டாக்கில் Victa Mobile சார்ஜ் ஆகவில்லை என்றால், பெட்டியில் வழங்கப்பட்ட யுனிவர்சல் சீரியல் பஸ் (USB) கேபிள் மற்றும் பவர் அடாப்டரைப் பயன்படுத்தி சார்ஜ் செய்யவும்.
- கேபிள் மூலம் Victa Mobile சார்ஜ் ஆகியும் டாக்கில் சார்ஜ் ஆகவில்லை என்றால், Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
வெற்றுத் திரைச் சிக்கலைத் தீர்த்தல்
Verifone Victa Mobile திரை வெறுமையாக இருந்தால், பின்வரும் படிகளைப் பின்பற்றிச் சிக்கலைத் தீர்க்கவும்:
- ஸ்கிரீன்சேவர் பயன்முறையிலிருந்து சாதனத்தை எழுப்ப, தொடுதிரையைத் தட்டவும்.
- தவறான அல்லது படிக்க முடியாத தகவல் காட்டப்பட்டால், எல்லாக் கேபிள் இணைப்புகளையும் சரிபார்க்கவும்.
- ஷட் டவுன் செய்வதற்கான விருப்பம் காட்டப்படும் வரை பவர் பொத்தானை அழுத்திப் பிடித்துச் சாதனத்தை ரீஸ்டார்ட் செய்து, பிறகு மீண்டும் ஆன் செய்யவும்.
இணைப்பதில் உள்ள சிக்கல்களைத் தீர்த்தல்
உங்களால் Verifone Victa Mobile ஐ இணைக்க முடியவில்லை என்றால், பின்வரும் படிகளைக் கொண்டு இணைப்புச் சிக்கலைத் தீர்க்கவும்:
-
Shopify POS இற்கான உங்கள் சாதன அமைப்புகளில் பின்வரும் அனுமதிகளை மதிப்பாய்வு செய்யவும்:
- iOS மற்றும் Android: இடம் என்பதற்கான அனுமதி இந்தச் செயலியைப் பயன்படுத்தும்போது (iOS) அல்லது செயலியைப் பயன்படுத்தும்போது மட்டுமே அனுமதி (Android) என அமைக்கப்பட்டிருக்கும்
- iOS மற்றும் Android: Camera (கேமரா) என்பது On (ஆன்) அல்லது Allowed (அனுமதிக்கப்பட்டது) என இருக்க வேண்டும்
- iOS: Local Network (உள்ளூர் நெட்வொர்க்) என்பது On (ஆன்) என இருக்க வேண்டும்
- iOS: Background app refresh (பின்னணிச் செயலிப் புதுப்பிப்பு) என்பது On (ஆன்) என இருக்க வேண்டும்
- iOS: Allow Cross-Website Tracking (க்ராஸ்-வெப்சைட் டிராக்கிங்கை அனுமதி) என்பது On (ஆன்) என இருக்க வேண்டும்
- இணைப்பதற்கு முன், உங்கள் Verifone Victa Mobile 50% இக்கும் மேல் சார்ஜ் செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
- Verifone Victa Mobile ஏற்கனவே வேறு சாதனத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா எனப் பார்க்கவும். ஒரே நேரத்தில் ஒரு சாதனத்துடன் மட்டுமே இந்தச் சாதனத்தை இணைக்க முடியும். புதிய சாதனத்துடன் இணைக்கும் முன்பு தற்போதைய சாதனத்திலிருந்து இதன் இணைப்பைத் துண்டிக்கவும்.
- POS செயலியைக் கட்டாயமாக மூடி, மீண்டும் திறக்கவும்.
பேமெண்ட் ஏற்பதில் உள்ள சிக்கல்களைத் தீர்த்தல்
Verifone Victa Mobile மூலம் உங்களால் பேமெண்ட்டுகளைச் செயலாக்க முடியவில்லை என்றால், பின்வரும் படிகளைக் கொண்டு சிக்கலைத் தீர்க்கவும்:
- Shopify POS-க்கான இடம் தொடர்பான அனுமதிகள், இந்தச் செயலியைப் பயன்படுத்தும்போது (iOS) அல்லது செயலியைப் பயன்படுத்தும்போது மட்டுமே அனுமதி (Android) என அமைக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தவும்.
- Shopify POS-ஐக் கட்டாயமாக மூடி, மீண்டும் திறந்து பேமெண்ட் செய்ய மீண்டும் முயற்சிக்கவும்.
- Shopify Payments சோதனைப் பயன்முறையில் இல்லை என்பதையும், பேமெண்ட்டுகள் முடக்கப்பட்டிருப்பதாக உங்கள் Shopify Payments கணக்கில் எந்தக் குறிப்புகளும் இல்லை என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
சிப் கார்டு சிக்கல்களைத் தீர்த்தல்
சிப் கார்டைச் செருகும்போது Verifone Victa Mobile பதிலளிக்கவில்லை என்றால், பின்வரும் படிகளைக் கொண்டு சிக்கலைத் தீர்க்கவும்:
- சிப்பின் தொடர்புப் புள்ளிகள் மேல்நோக்கி இருக்கும்படி வாடிக்கையாளர் கார்டைச் செருகுவதை உறுதிசெய்யவும்.
- பரிவர்த்தனை முடியும் வரை கார்டை உள்ளேயே செருகி வைத்திருக்கவும். கார்டை முன்கூட்டியே எடுத்தால் பரிவர்த்தனை ரத்தாகிவிடும்.
- கார்டில் பழுது இருக்கிறதா என்பதைச் சரிபார்க்க, வேறு சிப் கார்டைப் பயன்படுத்திப் பார்க்கவும்.
- சிப் செருகும் இடம் அழுக்காக இருந்தால், ஒரு காகிதத் துண்டை கிரெடிட் கார்டின் தடிமனுக்கு மடிக்கவும். அதை சிப் செருகும் இடத்தில் செருகி, பக்கவாட்டில் இருபுறமும் நகர்த்தி மின் தொடர்புப் பகுதிகளைச் சுத்தம் செய்யவும். பின்னர் அழுத்தக் காற்றைப் பயன்படுத்தி செருகும் இடத்தைச் சுத்தம் செய்யவும்.
மேக்னடிக் ஸ்ட்ரைப் சிக்கல்களைத் தீர்த்தல்
Verifone Victa Mobile மேக்னடிக் ஸ்ட்ரைப் கார்டுகளைப் படிக்கவில்லை என்றால், பின்வரும் படிகளைக் கொண்டு சிக்கலைத் தீர்க்கவும்:
- காந்தப் பட்டை பின்புறம் அல்லது கீழ்ப்புறம் நோக்கி இருக்குமாறு வாடிக்கையாளர் கார்டைச் சாதனத்தின் பக்கவாட்டிலிருந்து செருகுவதை உறுதிசெய்யவும்.
- ஒரே சீரான, தொடர்ச்சியான அசைவில் ஸ்வைப் செய்து பார்க்கவும்.
- கார்டில் பழுது இருக்கிறதா என்பதைச் சரிபார்க்க, வேறு மேக்னடிக் ஸ்ட்ரைப் கார்டைப் பயன்படுத்திப் பார்க்கவும்.
- சிக்கல் தொடர்ந்தால், கீபேடைப் பயன்படுத்திப் பரிவர்த்தனையை மேனுவலாகச் செயலாக்க முயலவும். மேனுவல் பரிவர்த்தனை வெற்றிகரமாக முடிவடைந்தால், சாதனத்திற்கே சர்வீஸ் தேவைப்படலாம்.
காண்டாக்ட்லெஸ் பேமெண்ட் சிக்கல்களைத் தீர்த்தல்
Verifone Victa Mobile காண்டாக்ட்லெஸ் பேமெண்ட்டுகளைப் படிக்கவில்லை என்றால், பின்வரும் படிகளைக் கொண்டு சிக்கலைத் தீர்க்கவும்:
- சாதனத்தின் மேல்புறத்தில் உள்ள காண்டாக்ட்லெஸ் ரீடர் பகுதிக்கும், காண்டாக்ட்லெஸ் கார்டு அல்லது சாதனத்திற்கும் இடையே எந்தத் தடைகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
- காண்டாக்ட்லெஸ் ரீடர் ஐகானின் 4 cm-க்குள் கார்டைப் பிடிக்கவும், பரிவர்த்தனை முடியும் வரை அதை நகர்த்தாமல் அப்படியே வைத்திருக்கவும்.
- வாடிக்கையாளரின் காண்டாக்ட்லெஸ் பேமெண்ட் நிராகரிக்கப்பட்டால், அதற்குப் பதிலாக கார்டைச் செருகி PIN-ஐ உள்ளிடுமாறு அவரிடம் கூறவும். காண்டாக்ட்லெஸ் செலவின வரம்பை அவர் எட்டியிருக்கலாம்.
கனடாவில் Interac PIN செயல்முறை முடங்கும்போது சிக்கல் தீர்த்தல்
கனடாவில், வாடிக்கையாளர் தவறான PIN-ஐ உள்ளிடும்போது Interac PIN செயல்முறை முடங்கினால், இந்தப் படிகளைப் பின்பற்றிச் சிக்கலைத் தீர்க்கவும்:
- பேமெண்ட் திரையை மீட்டமைக்கச் சாதனத்தில் உள்ள சிவப்பு ரத்துசெய் பொத்தானை அழுத்தவும்.
- பேமெண்ட்டை மீண்டும் முயலவும்.
பட்டியலிடப்படாத Wi-Fi வலையமைப்பில் சிக்கல் தீர்த்தல்
Verifone Victa Mobile-இல் உங்கள் Wi-Fi வலையமைப்பு பட்டியலிடப்படவில்லை என்றால், வலையமைப்பிற்குப் பாதுகாக்கப்பட்ட மேலாண்மை பிரேம்கள் (PMF) தேவைப்படலாம், இதில் WPA3 மட்டுமே கொண்ட வலையமைப்புகளும் அடங்கும். இந்த வலையமைப்புகளை Victa Mobile காட்டாது.
இணைப்பதற்கு, PMF-ஐக் கட்டாயமற்றதாக்கும் வலையமைப்பைப் பயன்படுத்தவும்:
- ஒரு WPA2 வலையமைப்பு.
- WPA3 மாறுதல் பயன்முறையில் உள்ள வலையமைப்பு.
- PMF தேவைப்படாத தனி SSID.
- ஒரு பாதுகாப்பான மொபைல் ஹாட்ஸ்பாட்.
பதிவுக் குறியீடு காட்டப்படாத சிக்கலைத் தீர்க்கவும்
Wi-Fi அமைவுக்குப் பிறகும் உங்கள் Verifone Victa Mobile பதிவுக் குறியீட்டைக் காட்டவில்லை எனில், இந்தப் படிநிலைகளைக் கொண்டு சிக்கலைத் தீர்க்கவும்:
- 60 வினாடிகள் வரை காத்திருக்கவும். அமைவுக்குப் பதிவுக் குறியீடு தேவையெனில், சாதனம் இணைப்பை ஏற்படுத்திய பிறகு அது காட்டப்படும்.
- பதிவுக் குறியீடு எதுவும் காட்டப்படாமல், Victa Mobile தானாகவே Shopify-உடன் இணைக்கப்பட்டால், உங்கள் சாதனத்தை அமைப்பதைத் தொடரவும்.
- பதிவுக் குறியீடு காட்டப்படாமலும், Victa Mobile Shopify-உடன் இணைக்கப்படாமலும் இருந்தால், உங்கள் வலையமைப்பு இணைப்பைச் சரிபார்க்கவும். கெஸ்ட் Wi-Fi போன்ற உள்நுழைவுப் பக்கத்தைக் கொண்ட வலையமைப்புகள், Victa Mobile Shopify-உடன் இணைக்கப்படுவதைத் தடுக்கலாம்.
Job Access With Speech (JAWS) திரை வாசிப்பானில் சிக்கல் தீர்த்தல்
உங்கள் மென்பொருள் பதிப்பில் Job Access With Speech (JAWS) ஸ்கிரீன் ரீடர் ஆதரவு செயல்படுத்தப்படவில்லை என்றால், இந்தப் படிகளைக் கொண்டு சிக்கலைத் தீர்க்கவும்:
- Victa Mobile-இல் ஹெட்போன்களைச் செருகவும். JAWS ஸ்கிரீன் ரீடர் ஆதரவு தானாகவே ஆன் ஆகும்.
- Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளுதல்
பொதுவான சிக்கல் தீர்த்தல் படிகள் மற்றும் குறிப்பிட்ட சிக்கலைத் தீர்க்கும் படிகளை முயற்சித்த பிறகும் உங்கள் Victa Mobile வேலை செய்யவில்லை என்றால், நீங்கள் Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளலாம்.
Shopify-இலிருந்து நீங்கள் வாங்கிய Victa Mobile அல்லது Victa Mobile டாக் தொடர்பான உத்தரவாதக் கோரிக்கைகளையும் மாற்றுதல்களையும் Shopify ஆதரவு கையாளுகிறது. நீங்கள் Verifone-ஐத் தொடர்புகொள்ள வேண்டியதில்லை. நீங்கள் Shopify ஆதரவைத் தொடர்புகொள்வதற்கு முன், பின்வரும் தகவல்களைச் சேகரிக்கவும்:
- சாதனத்தின் வரிசை எண். Victa Mobile-இன் பின்புறத்தில் S/N லேபிளுக்குப் பிறகு வரிசை எண் அச்சிடப்பட்டிருக்கும். டாக் அதற்கென சொந்த வரிசை எண்ணைக் கொண்டுள்ளது, இது டாக்கின் அடியில் உள்ள போர்ட் பேயில் S/N லேபிளுக்குப் பிறகு அச்சிடப்பட்டிருக்கும்.
- சிக்கலின் விவரம் மற்றும் நீங்கள் ஏற்கனவே முயன்று பார்த்த சிக்கல் தீர்த்தல் படிகள்.
- திரையில் தோன்றும் System Tampered மெசேஜ், அதிக வெப்பத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது டாக்கில் ஏற்பட்ட பௌதீகச் சேதம் ஆகியவற்றின் புகைப்படங்கள்.
இந்தத் தகவல்களைச் சேகரித்த பிறகு, உங்கள் Shopify POS செயலியில் இருந்து Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும். > ஆதரவு > ஆதரவைத் தொடர்புகொள் என்பதைத் தட்டவும்.
உங்கள் Victa Mobile அல்லது அதன் டாக் அதிக வெப்பமடைந்தாலோ, புகை வந்தாலோ அல்லது உருகினாலோ, உங்கள் உத்தரவாதக் காலம் முடிவடைந்திருந்தாலும் Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும். சாதனம் மற்றும் அதன் துணைப்பொருட்களை வைத்திருக்கவும், ஏனெனில் சிக்கலை விசாரிக்க அவை தேவைப்படலாம்.
உங்கள் Victa Mobile பௌதீகச் சேதத்துடன் வந்திருந்தால், வன்பொருள் ஸ்டோர் ஆர்டர்களின் தொடர்புகொள் படிவத்தைப் பயன்படுத்தவும். உங்கள் Shopify வன்பொருள் ஸ்டோர் ஆர்டரில் உதவியைப் பெறுவது குறித்து மேலும் அறிக.