BBPOS WisePad 3 கார்டு ரீடரில் சிக்கல் தீர்த்தல்
BBPOS WisePad 3 கார்டு ரீடரில் ஏற்படும் பொதுவான சிக்கல்களைத் தீர்க்க இந்த வழிகாட்டியைப் பயன்படுத்தவும். நீங்கள் எதிர்கொள்ளும் குறிப்பிட்ட சிக்கலைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், படி 1: BBPOS WisePad 3 கார்டு ரீடருக்கான பொதுவான சிக்கல் தீர்த்தல் என்பதை நிறைவுசெய்யவும். சிக்கல் தீர்க்கும் படிகள் மூலம் சிக்கல் தீர்க்கப்படாவிட்டால், நீங்கள் Shopify ஆதரவுக்கு அறிக்கையை அனுப்பலாம்.
இந்தப் பக்கத்தில்
படி 1: BBPOS WisePad 3 கார்டு ரீடருக்கான பொதுவான சிக்கல் தீர்த்தல்
BBPOS WisePad 3 கார்டு ரீடர் சிக்கல்களுக்கான பின்வரும் பொதுவான சிக்கல் தீர்க்கும் படிகளை நிறைவுசெய்யவும்:
BBPOS WisePad 3 கார்டு ரீடரைப் பயன்படுத்துவதற்கான தேவைகளைப் பூர்த்திசெய்கிறீர்களா என்பதைச் சரிபார்க்கவும்.
உங்களிடம் இணைய இணைப்பு உள்ளதா எனச் சரிபார்க்கவும். பேமெண்ட்டுகளைச் செயலாக்க, Wi-Fi அல்லது உங்கள் சாதனத்தின் செல்லுலார் டேட்டா மூலம் இணையத்துடன் Shopify POS இணைக்கப்பட வேண்டும். இணையத்துடன் இணைக்க முடியவில்லை எனில், ஆஃப்லைனில் இருக்கும்போது வேறு பேமெண்ட் வகையைப் பயன்படுத்த வேண்டும்.
Shopify POS புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்யவும்.
உங்கள் சாதனம் புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்யவும்:
- உங்கள் iOS சாதனத்தைப் புதுப்பிக்க, உங்கள் சாதனத்தின் அமைப்புகளுக்குச் சென்று, General > Software Update என்பதைத் தட்டவும். ஏதேனும் புதுப்பிப்பு கிடைத்தால், Update now என்பதைத் தட்டலாம்.
- உங்கள் Android சாதனத்தைப் புதுப்பிக்க, உங்கள் சாதனத்தின் அமைப்புகளுக்குச் சென்று, மென்பொருள் புதுப்பிப்பு என்பதைத் தட்டவும். ஏதேனும் புதுப்பிப்பு கிடைத்தால், அதை நிறுவ திரையில் தோன்றும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
உங்கள் ஃபயர்வால் அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
உங்கள் Shopify POS சாதனத்தில் Bluetooth இயக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
உங்கள் சாதன அமைப்புகளில் Bluetooth உடன் இணைக்க POS செயலிக்கு அனுமதி உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
BBPOS WisePad 3 கார்டு ரீடரை மீட்டமைக்கவும்
உங்கள் ரீடரின் சார்ஜிங் போர்ட்டுக்கு அருகில் மீட்டமைப்பு பின்ஹோல் அமைந்துள்ளது. பின்ஹோலில் பேப்பர்கிளிப்பைச் செருகி, ஐந்து விநாடிகளுக்கு அழுத்திப் பிடிக்கவும். பேப்பர்கிளிப்பை நீங்கள் எடுக்கும்போது, ரீடரில் பீப் ஒலி கேட்க வேண்டும் மற்றும் திரை மீண்டும் தொடங்க வேண்டும்.
படி 2: BBPOS WisePad 3 கார்டு ரீடர் சிக்கலைத் தேர்ந்தெடுக்கவும்
BBPOS WisePad 3 கார்டு ரீடர் சிக்கலைத் தேர்ந்தெடுத்து, அனைத்துச் சிக்கல் தீர்க்கும் படிகளையும் பின்பற்றவும்.
Shopify POS Hub இணைப்புச் சிக்கல்களைத் தீர்த்தல்
உங்கள் POS வன்பொருள் Shopify POS Hub வழியாக இணைக்கப்படவில்லை எனில், Shopify POS Hub சிக்கல் தீர்க்கும் படிகளை நிறைவுசெய்யவும்.
இணைத்தல் தொடர்பான சிக்கல்களைத் தீர்த்தல்
உங்களால் BBPOS WisePad 3 கார்டு ரீடரை இணைக்க முடியவில்லை எனில், பின்வரும் படிகளின் மூலம் இணைப்புச் சிக்கலைத் தீர்க்கவும்:
-
உங்கள் Shopify POS செயலிக்கான உங்கள் சாதனத்தின் அமைப்புகளில் பின்வரும் அனுமதிகளை மதிப்பாய்வு செய்யவும்:
- iOS மற்றும் Android: இருப்பிடம் என்பது இந்தச் செயலியைப் பயன்படுத்தும் போது என அமைக்கப்பட்டுள்ளது
- iOS மற்றும் Android: கேமரா ஆன் அல்லது அனுமதிக்கப்பட்டுள்ளது என அமைக்கப்பட்டுள்ளது
- iOS: உள்ளூர் நெட்வொர்க் ஆன் என அமைக்கப்பட்டுள்ளது
- iOS: பின்னணிச் செயலிப் புதுப்பிப்பு ஆன் என அமைக்கப்பட்டுள்ளது
- iOS: க்ராஸ்-வெப்சைட் டிராக்கிங்கை அனுமதி என்பது ஆன் என அமைக்கப்பட்டுள்ளது
- உங்கள் Android சாதனத்தில் USB-C கேபிள் மூலமாக BBPOS WisePad 3 கார்டு ரீடரை இணைக்கிறீர்கள் என்றால், ரீடரைக் கழற்றிவிட்டு மீண்டும் செருகிப் பார்க்கவும்.
- நீங்கள் Retail ஸ்டாண்டைப் பயன்படுத்தினால், டேப்லெட்டைக் கழற்றிவிட்டு மீண்டும் பொருத்திப் பார்க்கவும்.
- உங்கள் BBPOS WisePad 3 கார்டு ரீடர் 50% பேட்டரிக்கு மேல் சார்ஜ் செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும். இல்லையெனில், மீண்டும் முயல்வதற்கு முன் 50%-க்கு மேல் சார்ஜ் செய்யவும். ஏனெனில், சார்ஜரில் செருகியிருந்தாலும் 50%-க்கும் குறைவான பேட்டரியில் ரீடரை இணைப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம்.
- BBPOS WisePad 3 கார்டு ரீடர் வேறு ஒரு சாதனத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும். அப்படி இணைக்கப்பட்டிருந்தால், புதிய சாதனத்துடன் இணைக்க முயல்வதற்கு முன் அந்தச் சாதனத்திலிருந்து இணைப்பைத் துண்டிக்கவும். BBPOS WisePad 3 கார்டு ரீடரை ஒரே நேரத்தில் ஒரு சாதனத்துடன் மட்டுமே இணைக்க முடியும்.
- POS செயலியை ஃபோர்ஸ் க்ளோஸ் செய்துவிட்டு அதை மீண்டும் திறக்கவும்.
- நீங்கள் USB-C கேபிளைப் பயன்படுத்தினால், Bluetooth மூலம் ரீடரை இணைக்க முயலவும். உங்களிடம் Android டேப்லெட் இருந்து, Bluetooth மூலம் ரீடரை இணைக்கிறீர்கள் எனில், USB-C கேபிள் மூலமாக ரீடரை இணைக்க முயலவும்.
இணைப்புச் சிக்கல்களைச் சரிசெய்தல்
உங்கள் BBPOS WisePad 3 கார்டு ரீடர் உங்கள் POS சாதனத்திலிருந்து துண்டிக்கப்பட்டாலோ Bluetooth இணைப்புச் சிக்கல்களைச் சந்தித்தாலோ, பின்வரும் படிகளின் மூலம் இணைப்புச் சிக்கலைச் சரிசெய்யவும்.
படிகள்:
-
உங்கள் Shopify POS செயலிக்கான உங்கள் சாதனத்தின் அமைப்புகளில் பின்வரும் அனுமதிகளை மதிப்பாய்வு செய்யவும்:
- iOS மற்றும் Android: இருப்பிடம் என்பது இந்தச் செயலியைப் பயன்படுத்தும் போது என அமைக்கப்பட்டுள்ளது
- iOS மற்றும் Android: கேமரா ஆன் அல்லது அனுமதிக்கப்பட்டுள்ளது என அமைக்கப்பட்டுள்ளது
- iOS : உள்ளூர் நெட்வொர்க் ஆன் என அமைக்கப்பட்டுள்ளது
- iOS : Bluetooth ஆன் என அமைக்கப்பட்டுள்ளது
- iOS : க்ராஸ்-வெப்சைட் டிராக்கிங்கை அனுமதி என்பது ஆன் என அமைக்கப்பட்டுள்ளது
- Shopify POS செயலியில்,
ஐகானைத் தட்டவும்.
- சாதனத் தகவல் பக்கத்தில் கார்டு ரீடர் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும். இது ஒரு சாதனமாகக் காண்பிக்கப்பட்டால், கார்டு ரீடரை மறந்துவிடு என்பதைத் தட்டவும்.
- சாதனத்தின் Bluetooth அமைப்புகளில் கார்டு ரீடர் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும். இது ஒரு சாதனமாகக் காண்பிக்கப்பட்டால், அதை மறக்க, அதன் மீது தட்டவும்.
- உங்கள் சாதனத்தில் Bluetooth-ஐ முடக்கவும்.
- சாதனத்தைக் குறைந்தபட்சம் 3 நிமிடங்களுக்கு முழுமையாக ஆஃப் செய்யவும்.
- ரீசெட் பொத்தானை 5 வினாடிகளுக்கு அழுத்திப் பிடிக்க, ஒரு பின் அல்லது பேப்பர் கிளிப்பைப் பயன்படுத்தி பின்ஹோல் ரீசெட்டைச் செய்யவும். ரீசெட் பொத்தான் சாதனத்தின் வலதுபுறத்தில் சார்ஜிங் போர்ட்டின் கீழ் அமைந்துள்ளது. இந்தச் செயல் சாதனத்தை மீண்டும் இணைக்கும்.
- சாதனத்தை மீண்டும் ஆன் செய்து, சாதன அமைப்புகளில் Bluetooth-ஐ மீண்டும் இயக்கவும், ஆனால் ரீடரை மீண்டும் இணைக்காமல் பார்த்துக் கொள்ளவும்.
- Shopify POS செயலியைத் திறந்து, கார்டு ரீடரை இணைப்பதற்கான படிகளை நிறைவுசெய்யவும்.
'System Tampered' (சிஸ்டம் சேதமடைந்துள்ளது) பிழையைச் சரிசெய்தல்
உங்கள் BBPOS WisePad 3 கார்டு ரீடர் திரையில் Tamper Detected (சேதமடைந்திருப்பது கண்டறியப்பட்டது) பிழையைக் காண்பித்தால், ரீடரை இனி பயன்படுத்த முடியாது. மேலும், நீங்கள் அதை மாற்ற வேண்டியிருக்கும்.
சேதமடைந்த BBPOS WisePad 3 கார்டு ரீடரை மாற்றுமாறு நீங்கள் கோரலாம்: சேதமடைந்ததை மாற்றுவதற்கான போர்ட்டல்
ஆர்டர் உறுதிப்படுத்தல் மின்னஞ்சலில் உள்ள உங்கள் அசல் ஆர்டர் எண் உங்களுக்குத் தேவைப்படும். உங்களால் ஆர்டர் எண்ணைக் கண்டறிய முடியவில்லை எனில், நீங்கள் Shopify ஆதரவைத் தொடர்புகொள்ள வேண்டும்.
ஓவர்-தி-ஏர் புதுப்பிப்புச் சிக்கல்களைச் சரிசெய்தல்
உங்கள் BBPOS WisePad 3 கார்டு ரீடரைப் புதுப்பிக்க, பின்வரும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்:
- உங்கள் BBPOS WisePad 3 கார்டு ரீடர் குறைந்தது 50% சார்ஜ் செய்யப்பட்டுள்ளது.
- நீங்கள் Shopify POS-ஐ சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பித்துள்ளீர்கள்.
புதுப்பிப்பு உறைந்துபோனாலோ தோல்வியடைந்தாலோ, பின்வரும் படிகளைக் கொண்டு சிக்கலைச் சரிசெய்யவும்:
- POS செயலியை ஃபோர்ஸ் க்ளோஸ் செய்யவும்.
- POS செயலியை மீண்டும் திறக்கவும்.
ஐகானைத் தட்டவும்.
- வன்பொருள் பிரிவில், WisePad 3 என்பதைத் தட்டி, பின்னர் கார்டு ரீடரை மறந்துவிடு என்பதைத் தட்டவும்.
- ரீசெட் பொத்தானை 5 வினாடிகளுக்கு அழுத்திப் பிடிக்க, ஒரு பின் அல்லது பேப்பர் கிளிப்பைப் பயன்படுத்தி பின்ஹோல் ரீசெட்டைச் செய்யவும். ரீசெட் பொத்தான் சாதனத்தின் வலதுபுறத்தில் சார்ஜிங் போர்ட்டின் கீழ் அமைந்துள்ளது.
ஐகானை மீண்டும் தட்டவும்.
- + வன்பொருளைச் சேர் > கார்டு ரீடர்கள் > WisePad 3 என்பதைத் தட்டவும்.
- மீண்டும் புதுப்பிக்க முயலவும்.
பேமெண்ட் ஏற்புச் சிக்கல்களைச் சரிசெய்தல்
POS செயலியில் பேமெண்ட் தோல்வியடைந்ததால் உங்களால் பேமெண்ட்டுகளைச் செயலாக்க முடியவில்லை எனில், பின்வரும் படிகளின் மூலம் சிக்கலைச் சரிசெய்யவும்:
- POS செயலிகான இருப்பிட அனுமதிகள் எப்பொழுதும் அல்லது செயலியைப் பயன்படுத்தும் போது மட்டும் என அமைக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும்.
- POS செயலியை ஃபோர்ஸ் க்ளோஸ் செய்துவிட்டு மீண்டும் திறக்கவும். பின்னர் மீண்டும் பேமெண்ட் செய்ய முயலவும்.
- Shopify Payments சோதனைப் பயன்முறையில் இல்லை என்பதையும், கட்டணங்கள் முடக்கப்பட்டுள்ளதாக உங்கள் Shopify Payments கணக்கில் எந்தக் குறிப்புகளும் இல்லை என்பதையும் உறுதிசெய்யவும்.
சிப் கார்டு சிக்கல்களைச் சரிசெய்தல்
கார்டைச் செருகும் போது BBPOS WisePad 3 கார்டு ரீடர் செயல்படவில்லை எனில், சிப் ஸ்லாட்டைச் சோதிக்கவும்.
படிகள்:
- கார்டு ரீடரில் பவர் அல்லது அமைப்புகள் பொத்தானை அழுத்தவும்.
- கீழே ஸ்க்ரோல் செய்து Language (மொழி) அமைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
- 1-ஐ அழுத்தவும்.
- கீழே ஸ்க்ரோல் செய்து ICC test என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- ஒரு சிப் கார்டைச் செருகவும்.
நீங்கள் சிப் கார்டைச் செருகிய பிறகு, Wisepad 3-இல் Chip card detected (சிப் கார்டு கண்டறியப்பட்டது) எனக் காட்டப்பட வேண்டும்.
கார்டு ரீடரில் Chip card detected எனக் காட்டப்படவில்லை எனில், சிப் ஸ்லாட்டை நீங்கள் சுத்தம் செய்ய வேண்டும்.
படிகள்:
- ஒரு காகிதத் துண்டை கிரெடிட் கார்டு தடிமனுக்கு ஏற்றவாறு மடிக்கவும்.
- மடித்த காகிதத் துண்டை சிப் ஸ்லாட்டில் சொருகி, பக்கவாட்டிலும் முன்னும் பின்னுமாக நகர்த்தவும்.
- ஸ்லாட்டிலிருந்து காகிதத்தை அகற்றி, சிப் ஸ்லாட்டைச் சுத்தம் செய்ய அழுத்தப்பட்ட காற்றைப் பயன்படுத்தவும்.
இந்தப் படிகள் வேலை செய்யவில்லை எனில், ஐசோப்ரோபைல் ஆல்கஹால் மற்றும் மெல்லிய காட்டன் ஸ்வாப்பைப் பயன்படுத்தி சிப் ஸ்லாட்டிலுள்ள இணைப்புகளை மென்மையாகச் சுத்தம் செய்யவும்.
உங்கள் BBPOS WisePad 3 கார்டு ரீடர் குறித்து Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்
பொதுவான சிக்கல் தீர்த்தல் படிகள் மற்றும் குறிப்பிட்ட சிக்கல் தீர்த்தல் படிகளைப் பின்பற்றிய பிறகும் உங்கள் கார்டு ரீடர் வேலை செய்யவில்லை எனில், நீங்கள் Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளலாம்.
Shopify POS இல், ஐகான் > ஆதரவு > ஆதரவைத் தொடர்புகொள்க என்பதைத் தட்டவும்.