Shopify POS Go-இலிருந்து பிற பேமெண்ட் விருப்பங்களுக்கு மாற்றுதல்
மே 26, 2027 முதல், POS Go ஒரு கையடக்க மொபைல் விற்பனைப் புள்ளி சாதனமாகச் செயல்படுவதை நிறுத்திவிட்டு, தானாகவே கவுண்டர்டாப் பேமெண்ட் டெர்மினல் பயன்முறைக்கு மாறிவிடும். டேப்லெட்டுடன் இணைக்கப்படும்போது, வாடிக்கையாளரைப் பார்த்தபடி உள்ள கார்டு ரீடராக நீங்கள் சாதனத்தைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். இந்த மாற்றம் தொடர்ந்து ஆதரிக்கப்படும் Shopify POS Terminal-ஐப் பாதிக்காது.
என்ன மாறுகிறது, உங்களிடம் உள்ள சாதனத்தை எவ்வாறு தொடர்ந்து பயன்படுத்துவது மற்றும் நீங்கள் கருத்தில் கொள்ளக்கூடிய பிற மொபைல் விற்பனை விருப்பங்கள் ஆகியவற்றை இந்த வழிகாட்டி விளக்குகிறது.
இந்தப் பக்கத்தில்
POS Go-இலிருந்து பிற பேமெண்ட் விருப்பங்களுக்கு மாற்றுவதற்கான காலவரிசை
மொபைல் விற்பனைச் செயல்பாடு முடிவடையும் வரை POS Go வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும். மொபைல் விற்பனைக்கு நீங்கள் POS Go-ஐ நம்பியிருந்தால், மே 26, 2027-க்குள் மாற்று பேமெண்ட் விருப்பத்தைத் தேர்வுசெய்யவும். POS Go மொபைல் சாதனத்திற்கு எக்ஸ்சேஞ்ச் (trade-in) திட்டம் எதுவும் இல்லை. உங்கள் தற்போதைய POS Go-ஐ கவுண்டர்டாப் பேமெண்ட் டெர்மினலாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
கவுண்டர்டாப் பேமெண்ட் டெர்மினல் பயன்முறைக்கு POS Go மாறுதலைத் திட்டமிட, பின்வரும் காலவரிசையைப் பார்க்கவும்:
- ஜனவரி 1, 2027: POS Go பராமரிப்புப் பயன்முறைக்குள் நுழைகிறது. சாதனம் வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும், ஆனால் வழக்கமான மென்பொருள் புதுப்பிப்புகளை அது இனி பெறாது.
- மே 26, 2027: POS Go மொபைல் விற்பனைச் செயல்பாடு முடிவடைகிறது. அனைத்து POS Go சாதனங்களும் தானாகவே கவுண்டர்டாப் பேமெண்ட் டெர்மினல் பயன்முறைக்கு மாறும், மேலும் டேப்லெட்டுடன் இணைக்கப்படும்போது வாடிக்கையாளர்களுக்குத் தெரியும் கார்டு ரீடர்களாகத் தொடர்ந்து செயல்படும்.
Shopify POS இக்கான மொபைல் விற்பனை விருப்பத்தேர்வைத் தேர்வு செய்தல்
Shopify POS மூலம் மொபைல் விற்பனை செய்வதற்குப் பி்ன்வரும் விருப்பத்தேர்வுகள் கிடைக்கின்றன, அவற்றை மதிப்பாய்வு செய்யவும்.
Verifone Victa Mobile
Victa Mobile என்பது Verifone இன் கூட்டுடன் வழங்கப்படும் மொபைல் விற்பனைச் சாதனமாகும். இதில் Shopify POS இயங்கும், டேப், சிப், ஸ்வைப் மற்றும் டிஜிட்டல் வாலட் பேமெண்ட்டுகளை ஏற்கும், அத்துடன் இதில் உள்ளமைக்கப்பட்ட பார்கோடு ஸ்கேனர் இருக்கும்.
Victa Mobile டாக் செய்யப்பட்டு, டேப்லெட்டுடன் இணைக்கப்பட்டிருக்கும்போது, அதைக் கவுண்டர்டாப் பேமெண்ட் டெர்மினலாகவும் பயன்படுத்தலாம்.
உங்களுக்குப் பின்வரும் தேவைகள் ஏதேனும் இருந்தால், உங்கள் சில்லறை விற்பனை அமைவுக்கு Victa Mobile சரியான தேர்வாக இருக்கலாம்:
- சிப் மற்றும் ஸ்வைப் பேமெண்ட்டுகள் உட்பட முழுமையான பேமெண்ட் கவரேஜ் தேவைப்படும்போது.
- செக்அவுட்டில் தொடர்ந்து பார்கோடுகளை ஸ்கேன் செய்வதற்கு.
- நாள் முழுவதும் பயன்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட உறுதியான சாதனம் தேவைப்படும்போது.
- நம்பகத்தன்மை மற்றும் வேகம் ஆகியவற்றை எதிர்பார்க்கும், அதிக விற்பனையுள்ள ஸ்டோரை நடத்தும்போது.
- சராசரி ஆர்டர் மதிப்புகள் அதிகமாக இருந்து, காண்டாக்ட்லெஸ் பேமெண்ட்டுகள் மட்டுமில்லாமல், கூடுதல் பேமெண்ட் நெகிழ்வுத்தன்மை தேவைப்படும்போது.
உங்கள் நாட்டில் Victa Mobile கிடைக்கவில்லை என்றால், iPhone அல்லது Android இல் Tap to Pay அம்சத்தைப் பயன்படுத்துவதையோ கவுண்டர்டாப் பேமெண்ட் டெர்மினல் பயன்முறையில் உங்கள் POS Go ஐப் பயன்படுத்துவதையோ கருத்தில் கொள்ளவும்.
iPhone அல்லது Android இல் Tap to Pay
iPhone இல் Tap to Pay மற்றும் Android இல் Tap to Pay அம்சங்கள் மூலம், இணக்கமான iPhone அல்லது Android மொபைலில் பணியாளர்கள் Shopify POS செயலியைப் பயன்படுத்தி, அந்தச் சாதனத்திலேயே நேரடியாகக் காண்டாக்ட்லெஸ் பேமெண்ட்டுகளை ஏற்க முடியும். உங்களிடம் ஏற்கனவே இணக்கமான மொபைல் சாதனம் இருந்தால், கூடுதல் வன்பொருள் எதுவும் தேவையில்லை.
உங்களுக்குப் பின்வரும் தேவைகள் ஏதேனும் இருந்தால், உங்கள் சில்லறை விற்பனை அமைவுக்கு Tap to Pay சரியான தேர்வாக இருக்கலாம்:
- பெரும்பாலும் டேப் மற்றும் டிஜிட்டல் வாலட்கள் போன்ற காண்டாக்ட்லெஸ் பேமெண்ட்டுகளை ஏற்கும் போது.
- பரிச்சயமான ஸ்மார்ட்போனைப் பயன்படுத்த விரும்பும் போது.
- அதே சாதனத்தில் பிற செயலிகளை நிறுவுவதற்கான நெகிழ்வுத்தன்மை தேவைப்படும்போது.
Tap to Pay என்பது காண்டாக்ட்லெஸ் பேமெண்ட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். இது சிப் அல்லது ஸ்வைப் பரிவர்த்தனைகளை ஆதரிக்காது. நீங்கள் சிப் அல்லது ஸ்வைப் கார்டு பேமெண்ட்டுகளை ஏற்க விரும்பினால், உங்கள் சில்லறை விற்பனை அமைவுக்கு Verifone Victa Mobile ஐப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொள்ளவும்.
உங்கள் POS Go ஐ கவுண்டர்டாப் பேமெண்ட் டெர்மினலாகப் பயன்படுத்துதல்
மே 26, 2027-க்குப் பிறகும் உங்கள் POS Go ஒரு கவுண்டர்டாப் பேமெண்ட் டெர்மினலாகச் செயல்பட முடியும். கவுண்டர்டாப் பேமெண்ட் டெர்மினல் பயன்முறையில், அது POS Terminal என்றழைக்கப்படும், வாடிக்கையாளருக்குப் பார்த்திருக்கும் கார்டு ரீடராக மாறும். அதனை Shopify POS இயங்கும் டேப்லெட்டுடன் இணைக்கலாம்.
டாக் அக்சஸரியை வாங்குவதன் மூலம், நீங்கள் இப்போது POS Go ஐ கவுண்டர்டாப் பேமெண்ட் டெர்மினல் பயன்முறையில் பயன்படுத்தத் தொடங்கலாம். மே 26, 2027-க்குப் பிறகு, நீங்கள் விரும்பினால் டாக் இல்லாமலும் POS Go ஐ கவுண்டர்டாப் பேமெண்ட் டெர்மினல் பயன்முறையில் பயன்படுத்தலாம். POS Terminal மற்றும் POS Go ஐக் கவுண்டர்டாப் பேமெண்ட் டெர்மினல் பயன்முறையில் பயன்படுத்துவது குறித்து மேலும் அறிக.