POS Go மூலம் விற்பனையைச் செயலாக்குதல்
POS Go மூலம் பேமெண்ட் கார்டுகளைச் செயலாக்குவது எப்படி என்பதை அறிந்துகொள்ள, இந்த வழிகாட்டியைப் பயன்படுத்தவும். அணுகல்தன்மைக்காக, PIN தேவைப்படும் விற்பனைகளை ஸ்கிரீன் ரீடர் மூலமாகவும் நீங்கள் செயலாக்கலாம்.
இந்தப் பக்கத்தில்
POS Go மூலம் விற்பனையைச் செயலாக்குதல்
POS Go-ஐப் பயன்படுத்தி ஒரு விற்பனையைச் செயலாக்க, இந்தப் படிகளைப் பின்பற்றவும்.
படிகள்:
- வாடிக்கையாளரின் கார்ட்டில் தயாரிப்புகளைச் சேர்க்கவும்.
- விருப்பத்தேர்வு: கார்ட்டில் ஒரு வாடிக்கையாளரைச் சேர்க்கவும்.
- கார்ட் திரையிலிருந்து, செக்அவுட் என்பதைத் தட்டவும்.
- கார்டைத் தட்டவோ, ஸ்வைப் செய்யவோ அல்லது செருகவோ வாடிக்கையாளரை அனுமதிக்கவும்.
- பரிவர்த்தனை வெற்றிகரமாக முடிந்ததும், வாடிக்கையாளர் தனது கார்டை எடுத்துக்கொள்ளலாம்.
- ரசீதை வழங்க வேண்டுமா என்பதை முடிவு செய்து, விநியோக முறையைத் தேர்ந்தெடுக்கவும்.
PIN தேவைப்படும் விற்பனையை ஸ்கிரீன் ரீடர் மூலம் செயலாக்குதல்
உங்கள் வாடிக்கையாளருக்கு அவர்களின் PIN-ஐ உள்ளிட ஸ்கிரீன் ரீடர் தேவைப்பட்டால், செக்அவுட் செயல்முறையைத் தொடங்குவதற்கு முன் ஸ்கிரீன் ரீடரை இயக்கி, ஹெட்போன்களைச் செருகவும். PIN திரை தோன்றும்போது, PIN பேடை எப்படிப் பயன்படுத்துவது என்பதற்கான வழிமுறைகளை ஸ்கிரீன் ரீடர் ஒலிக்கச் செய்யும்.
எண்களைக் கண்டறிய, வாடிக்கையாளர் திரையின் மேல் இடதுபுறத்தில் விரலை வைத்து, 1 என்ற எண்ணை அடைந்துவிட்டதைக் குறிக்கும் ஒலியைக் கேட்கும் வரை விரலைக் கீழே நகர்த்த வேண்டும். ஓர் எண்ணைத் தேர்ந்தெடுக்க, வாடிக்கையாளர் இரண்டு முறை தட்ட வேண்டும்.
Cancel மற்றும் Enter பொத்தான்களைக் கண்டறிய, பொத்தானின் லேபிளை உச்சரிக்கும் ஒலியைக் கேட்கும் வரை வாடிக்கையாளர் திரையின் கீழ் இடது அல்லது வலதுபுறமாக விரலை நகர்த்த வேண்டும். Cancel அல்லது Enter என்பதைத் தேர்ந்தெடுக்க, வாடிக்கையாளர் இரண்டு முறை தட்ட வேண்டும்.
ஹெட்போன்கள் செருகப்பட்டிருக்கும் போது, விற்பனையைச் செயலாக்கும் பணியாளர் உட்பட எல்லா பயனர்களும் பொத்தான்களைத் தேர்ந்தெடுக்க அவற்றை இரண்டு முறை தட்ட வேண்டும். ஸ்கிரீன் ரீடரை முடக்க, ஹெட்போன்களை அகற்றவும்.