POS Go-ஐ அமைத்தல்

POS Go என்பது கூடுதல் வன்பொருள் ஏதுமின்றி நேரடி விற்பனைகளைச் செயல்படுத்தவும், உங்கள் கடையின் செயல்பாடுகளை நிர்வகிக்கவும், பேமெண்ட்டுகளை ஏற்கவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட அனைத்து வசதிகளையும் கொண்ட மொபைல் point of sale (POS) சாதனமாகும். சாதனத்தை சார்ஜ் செய்வது, ஆன் செய்வது தொடங்கி Wi-Fi உடன் இணைப்பது, உள்நுழைவது, அமைப்புகளைச் சரிசெய்வது வரை POS Go ஐப் பயன்படுத்தத் தொடங்குவது எப்படி என்பதை இந்தப் பக்கம் விளக்குகிறது.

POS Go ஐ சார்ஜ் செய்தல்

இதனுடன் வழங்கப்பட்டுள்ள USB-C கேபிளைப் பயன்படுத்தி நீங்கள் POS Go ஐ சார்ஜ் செய்யலாம். ரீடரை சார்ஜ் செய்ய, USB கனெக்டரின் சிறிய முனையை POS Go இலும், பெரிய முனையை போன் சார்ஜர் அல்லது கம்ப்யூட்டரிலும் செருகவும்.

வால் அடாப்டரைப் பயன்படுத்தும் போது POS Go முழுமையாக சார்ஜ் ஆவதற்கு 2-3 மணிநேரம் ஆகும். POS Go முழுமையாக சார்ஜ் ஆன பிறகு, நாள் முழுவதும் விற்பனை செய்யத் தேவையான அளவுக்கு அதன் பேட்டரி நீடிக்கும்.

POS Go இன் LED பவர் இண்டிகேட்டர் லைட் பின்வரும் நிலைகளைக் கொண்டுள்ளது:

POS Go இல் பேட்டரி நிலையின் ஸ்டேட்டஸ் லைட்டுகள்
LED பச்சைமுழுமையான சார்ஜ்
LED நீலம் (ஒளிரும்)சார்ஜ் ஆகிறது
LED ஆஃப்21% - 99% சார்ஜ் உள்ளது
LED மஞ்சள்10% - 20% சார்ஜ் உள்ளது
LED சிவப்பு1% - 9% சார்ஜ் உள்ளது

POS Go ஐ ஆன் மற்றும் ஆஃப் செய்தல்

POS Go ஐ ஆன் செய்ய, பவர் பொத்தானை அழுத்தி விடவும். ஸ்டேட்டஸ் லைட் ஆன் ஆகும்.

POS Go ஐ ஆஃப் செய்ய, பவர் பொத்தானை அழுத்திப் பிடித்திருக்கவும். கேட்கப்படும்போது, Power off என்பதைத் தட்டவும்.

POS Go ஐ அமைத்தல்

  1. POS Go ஐ சார்ஜ் செய்துவிட்டு, பிறகு அதை ஆன் செய்யவும்.
  2. நீங்கள் POS Go ஐப் பயன்படுத்தும் நாட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. Wi-Fi நெட்வொர்க்கைத் தேர்ந்தெடுக்கவும். கடவுச்சொல்லை உள்ளிட்டு, Join என்பதைத் தட்டி, பின்னர் Connect என்பதைத் தட்டவும். POS Go தானாகவே புதுப்பிப்புகள் ஏதேனும் உள்ளதா எனச் சரிபார்த்து, அவற்றைப் பயன்படுத்தும்.
  4. Shopify POS இல் உள்நுழையவும்.

சாதனத்தின் பெயரைக் கண்டறிதல்

More > Settings > Device Settings > Device name என்பதற்குச் சென்று சாதனத்தின் பெயரை மாற்றலாம்.

POS Go ஐ அதன் டாக்கில் பயன்படுத்தும்போது, இணைக்கும் செயல்முறையின்போதும் இணைப்பு நிலைகளைக் காட்டும் திரைகளிலும் சாதனத்தின் பெயர் காட்டப்படும். சாதனத்தின் பெயரை மாற்றுவது மொபைல் மூலம் செய்யும் விற்பனையைப் பாதிக்காது.

Wi-Fi அமைப்புகள்

More > Settings > Network & Internet என்பதற்குச் சென்று Wi-Fi அமைப்புகளை மாற்றலாம்.

POS Go இணைக்கப்பட்டுள்ள நெட்வொர்க் பச்சை நிற சரிபார்ப்புக் குறியுடன் காட்டப்படும். சாதனம் இருக்கும் வரம்பிற்குள் உள்ள மற்ற நெட்வொர்க்குகளும் காட்டப்படும். பட்டியலில் காட்டப்படாத நெட்வொர்க்குடன் இணைக்க, Other... என்பதைத் தட்டவும். நெட்வொர்க்குடன் இணைக்க POS Go க்கு WPA2 பாதுகாப்பு தேவை.

நெட்வொர்க் இணைப்பைப் பரிசோதிக்க, Run health check என்பதைத் தட்டவும்

பின்வரும் பணிகளை முடிக்க, நெட்வொர்க்கிற்குப் பக்கத்திலுள்ள i என்பதைத் தட்டவும்:

  • நெட்வொர்க் தகவல்களை அணுக
  • நெட்வொர்க்கை மறக்கச் செய்ய
  • IP முகவரி, சப்நெட் மாஸ்க் மற்றும் DNS போன்ற இணைப்பு தொடர்பான விவரங்களைத் திருத்த

உங்கள் POS Go காட்சி அமைப்புகளைச் சரிசெய்தல்

உங்கள் POS Go இன் ஸ்கிரீன் பிரைட்னஸ் மற்றும் லாக் அமைப்புகளை நீங்கள் தனிப்பயனாக்கலாம். மேலும் டார்க் மற்றும் லைட் மோடுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். அத்துடன், POS Go செயல்பாடுகளுக்கான சவுண்டுகளையும் சரிசெய்யலாம்.

Shopify POS இல், Horizontal menu > Settings என்பதைத் தட்டி, பின்வரும் Display அமைப்புகளில் ஏதேனும் ஒன்றைத் திருத்தவும்:

  • Dark/light mode: உங்கள் POS Go காட்சிக்கு நீங்கள் லைட் அல்லது டார்க் மோடைத் தேர்வுசெய்யலாம்.
  • Screen lock: POS Go பயன்படுத்தப்படாமல் இருக்கும்போது ஸ்கிரீன் லாக் ஆவதற்கான நேரத்தை நீங்கள் அமைக்கலாம்.
  • Brightness: ஸ்லைடரை இடது அல்லது வலதுபுறமாக நகர்த்துவதன் மூலம் POS Go இல் நீங்கள் ஸ்கிரீன் பிரைட்னஸைச் சரிசெய்யலாம்.
  • Sound: பார்கோடுகளை ஸ்கேன் செய்வது அல்லது டேப் பேமெண்ட் முறையைப் பயன்படுத்துவது போன்ற வழக்கமான செயல்பாடுகளின்போது POS Go சவுண்டுகளை ஒலிக்கும். ஸ்லைடரை இடது அல்லது வலதுபுறமாக நகர்த்துவதன் மூலம் இந்தச் சவுண்டுகளின் ஒலியளவை நீங்கள் சரிசெய்யலாம். சவுண்டை ஆஃப் செய்ய, ஸ்லைடரை பூஜ்யத்திற்கு அமைக்கவும்.

Sound திரையில், நீங்கள் Vibrate on Silent மற்றும் Haptic feedback ஆகியவற்றை ஆன் அல்லது ஆஃப் ஆகவும் நிலைமாற்றலாம். Vibrate on Silent என்பதை ஆன் செய்யும் போது, சாதனம் சைலன்ட் மோடில் இருந்தாலும் அதிர்வதற்கு இது அனுமதிக்கும் மற்றும் Haptic feedback ஆனது திரையைத் தட்டுவது, கீபோர்டைப் பயன்படுத்துவது போன்ற பிற செயல்களுக்கு ஹாப்டிக் ஃபீட்பேக் கிடைப்பதை உறுதிசெய்கிறது.

அணுகல்தன்மைச் செயல்பாடுகளைச் சரிசெய்தல்

POS Go இல் உங்கள் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அணுகல்தன்மைச் செயல்பாடுகள் உள்ளன.

படிகள்:

  1. Shopify POS இல், Horizontal menu என்பதைத் தட்டவும்.
  2. Settings > Device settings என்பதைத் தட்டி, பின்வரும் Accessibility செயல்பாடுகளில் ஏதேனும் ஒன்றை ஆன் செய்யவும்:

ஸ்கிரீன் ரீடர்

ஸ்கிரீன் ரீடரைச் செயல்படுத்த, Screen reader என்பதைத் தட்டி, Activate screen reader when headphones are plugged in என்பதை ஆன் செய்யவும்.

தொடுதிரையில் L வடிவ சைகையைச் செய்து, ஒலியளவு, பேச்சின் வேகம் போன்ற ஸ்கிரீன் ரீடர் அமைப்புகளை மாற்றலாம். அத்துடன், சாதாரண வழிசெலுத்தலை அனுமதிக்கும் அதே வேளையில் திரையின் காட்சிகளை மறைக்கும் திரைத் தனியுரிமையையும் நீங்கள் செயல்படுத்தலாம்.

POS Go-வில் ஹெட்போன்களைச் செருகும்போது, திரை உள்ளடக்கங்களை ஹெட்போன்கள் வழியாக சாதனம் படிக்கும். மேலும், ஹெட்போன்களைச் செருகியிருக்கும் போது, ஒரு பொத்தானை ஒருமுறை தட்டினால் அது சிறப்புப்படுத்தப்பட்டு அதன் லேபிளை அறிவிக்கும்; பொத்தானை இருமுறை தட்டினால் அது தேர்ந்தெடுக்கப்படும்.

ஹெட்போன்களைச் செருகியிருக்கும்போது, அனைத்துப் பயனர்களுக்கும் ஸ்கிரீன் ரீடர் செயல்பாடுகள் இயக்கப்படும், எனவே அவற்றைத் தேர்ந்தெடுக்க நீங்களும் பொத்தான்களை இருமுறை தட்ட வேண்டும். எடுத்துக்காட்டாக, ஹெட்போன்களைச் செருகியபடி வாடிக்கையாளர் PIN மூலம் செக்அவுட் செய்யும் போது, வாடிக்கையாளர் தமது PIN-ஐ உள்ளிட பொத்தான்களை இருமுறை தட்ட வேண்டும், அத்துடன் விற்பனையைச் செயல்படுத்த நீங்களும் பொத்தான்களை இருமுறை தட்ட வேண்டும்.

ஸ்கிரீன் ரீடர் செயல்பாடுகளை முடக்க, நீங்கள் ஹெட்போன்களை அகற்றிவிடலாம்.

திரைப் பெரிதாக்கம்

POS Go-விற்கு திரைப் பெரிதாக்கத்தை இயக்கும்போது, திரையின் பெரிதாக்க அளவைச் சரிசெய்ய பின்வருவனவற்றை நீங்கள் செய்யலாம்:

  • பெரிதாக்க, திரையை மூன்று முறை தட்டவும், பின்னர் மீண்டும் திரையை மூன்று முறை தட்டினால் காட்சி இயல்பான பார்வைக்குத் திரும்பும்
  • ஸ்க்ரோல் செய்ய இரு விரல்களைப் பயன்படுத்தி இழுக்கவும்
  • பெரிதாக்க அளவைச் சரிசெய்ய இரு விரல்களால் கிள்ளவும்

இந்தச் செயல்பாட்டின் மூலம் மெய்நிகர் விசைப்பலகையைப் பெரிதாக்க முடியாது.

நிறத் திருத்தம்

பின்வரும் விருப்பங்களில் ஏதேனும் ஒன்றையோ இரண்டையுமோ இயக்குவதன் மூலம் POS Go-வில் நிறங்கள் காட்டப்படும் விதத்தை நீங்கள் சரிசெய்யலாம்:

  • நிறங்களைத் தலைகீழாக்கு: இயல்பான காட்சியில் இருந்து நிறங்களைத் தலைகீழாக மாற்றிக் காட்ட, இந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  • நிற வடிப்பான்: குறிப்பிட்ட சில நிறங்களைக் காட்டாதபடி காட்சியைச் சரிசெய்ய, இந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

POS Go-விற்கான தானியங்குப் புதுப்பிப்புகள்

PCI தேவைகளைப் பூர்த்தி செய்ய, POS Go ஒவ்வொரு 24 மணிநேரத்திற்கும் தானாகவே ரீபூட் செய்யப்படும். தற்போது, இது உங்கள் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணிக்கு இயல்பாகவே நடக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.

தானாகவோ மேனுவலாகவோ சாதனம் ரீபூட் ஆகும்போது, அது மென்பொருள் புதுப்பிப்புகளைச் சரிபார்க்கும் முன்பு, சாதனத்தைத் திறக்க பணியாளர் PIN-ஐ உள்ளிட வேண்டும். ஏதேனும் புதுப்பிப்புகள் இருந்தால், சாதனம் தானாகவே அவற்றைப் பதிவிறக்கி நிறுவும். சமீபத்திய பதிப்பு உங்களிடம் இருப்பதை உறுதிசெய்ய, அனைத்து மென்பொருள் புதுப்பிப்புகளையும் நீங்கள் ஏற்க வேண்டும். சில புதுப்பிப்புகள் கட்டாயமானவை, அவற்றைத் தள்ளிப்போட முடியாது.

பேட்டரி மிகக் குறைவாக இருந்தாலோ, சாதனத்தால் உங்கள் Wi-Fi வலையமைப்புடன் இணைய முடியாவிட்டாலோ, POS Go ஒரு எச்சரிக்கைத் திரையைக் காட்டும். இந்தத் திரைகளில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றினால், புதுப்பித்தல் தொடரும்.

POS Go-வில் உங்கள் OS பதிப்பைச் சரிபார்க்கலாம். உங்கள் POS Go-வில், மேலும் > அமைப்புகள் > சாதன அமைப்புகள் > சிஸ்டம் > அறிமுகம் > OS பதிப்பு என்பதைத் தட்டவும்.