POS Go-வில் சிக்கல் தீர்த்தல்
உங்கள் POS Go சாதனத்தில் சிக்கல்கள் இருந்தால், பவர், பேமெண்ட், PIN அல்லது இணைப்புச் சிக்கல்கள் போன்ற பொதுவான பிரச்சனைகளைத் தீர்க்க இந்தப் பக்கத்தில் உள்ள சிக்கல் தீர்க்கும் வழிமுறைகளைப் பயன்படுத்தவும். இந்த வழிமுறைகள் சிக்கலைத் தீர்க்கவில்லை என்றால், மேலும் உதவி பெற நீங்கள் நேரடியாக Shopify ஆதரவிடம் சிக்கலைப் புகாரளிக்கலாம்.
இந்தப் பக்கத்தில்
POS Go ஆன் ஆகவில்லை
சாதனத்தை எழுப்பவோ ஆன் செய்யவோ பவர் பட்டனை அழுத்தும் போது உங்கள் POS Go எந்தப் பதிலளிப்பும் தரவில்லை எனில், பேட்டரி முற்றிலும் தீர்ந்திருக்கலாம். உங்கள் சாதனத்தை சார்ஜ் செய்ய சில மணிநேரங்களுக்குப் பவர் சோர்ஸில் இணைக்கவும். முடிந்தவரை உங்கள் POS Go உடன் வழங்கப்பட்ட USB கேபிளைப் பயன்படுத்தவும். திரைக்குச் சற்று மேலே ஒரு LED சார்ஜிங் இண்டிகேட்டர் ஒளிரும். LED சிவப்பு நிறத்தில் இருக்கும்போது, பேட்டரி சார்ஜ் மிகக் குறைவாக உள்ளது எனவும் சாதனம் சார்ஜ் ஆகிறது எனவும் அர்த்தம். மற்ற நிறங்கள் பேட்டரி மிகவும் குறைவாக இல்லை என்பதையும் சாதனம் சார்ஜ் ஆகிறது அல்லது முழுமையாக சார்ஜ் ஆகிவிட்டது என்பதையும் குறிக்கும். இணைத்த பிறகும் LED விளக்கு ஒளிரவில்லை என்றால், POS Go இன்னமும் எந்தப் பதிலளிப்பும் தரவில்லை என்றால், வேறு சார்ஜரை முயன்று பார்க்கவும். அப்போதும் எந்தப் பதிலளிப்பும் இல்லையெனில், மேலும் உதவி பெற சிக்கலைப் புகாரளிக்கவும்.
“ரீடருடன் இணைக்க முடியவில்லை” பிழைச் செய்தி
பேமெண்ட்டின்போது பவர் பொத்தானை அழுத்தி சாதனத்தைப் பூட்டினால், நீங்கள் மீண்டும் சாதனத்தைத் திறந்த பிறகு "ரீடருடன் இணைக்க முடியவில்லை" (Couldn't connect to reader) என்ற செய்தியுடன் ஒரு பிழைத் திரை தோன்றும். பேமெண்ட் செயல்முறையைத் தொடர பேமெண்ட் விருப்பங்களுக்குத் திரும்பு என்பதைத் தட்டி, தேவையான கட்டண முறையைத் தேர்ந்தெடுக்கவும்.
பேமெண்ட்டின்போது தவறான PIN-ஐ உள்ளிடுதல்
வாடிக்கையாளர் PIN தேவைப்படும் கார்டைப் பயன்படுத்தும்போது, 3 முறை தவறான PIN-ஐ உள்ளிட்டால் உங்கள் POS Go எந்தப் பதிலளிப்பும் தராமல் முடங்கலாம். சாதனத்தை ரீஸ்டார்ட் செய்வதே இதற்கான பரிந்துரைக்கப்பட்ட தீர்வாகும். சாதனத்தை ரீஸ்டார்ட் செய்ய, பவர் பட்டனை 2-3 வினாடிகள் அழுத்திப் பிடித்து, ரீஸ்டார்ட் செய் என்பதைத் தட்டவும். ரீபூட் செய்த பிறகு, உங்கள் பணியாளர் PIN-ஐ உள்ளிட்டு செக்அவுட்டை உங்களால் தொடர முடியும்.
POS Go-வில் இணைப்புச் சிக்கல்கள்
உங்களின் ரீடெய்ல் வன்பொருள், Shopify கணக்கு, Bluetooth மற்றும் Wi-Fi ஆகியவற்றுடன் POS Go-வின் இணைப்பு நிலையை என்பதைத் தட்டுவதன் மூலம் சரிபார்க்கலாம்.
உங்கள் Shopify நிர்வாகியில் நீங்கள் செய்யும் மாற்றம் POS-இல் காட்டப்படவில்லையெனில், இந்தப் பிரச்சனையைச் சரிசெய்ய நீங்கள் மேனுவலாக உங்கள் நிர்வாகியுடன் POS-ஐ மீண்டும் ஒத்திசைக்கலாம்.
POS Go சார்ஜிங் சிக்கல்கள்
உங்கள் POS Go சார்ஜ் ஆகவில்லை என்றாலோ மெதுவாக சார்ஜ் ஆனாலோ அல்லது பவருடன் இணைக்கப்பட்டிருக்கும்போதே பேட்டரி குறைந்தாலோ, சார்ஜர், சாதனம் மற்றும் டாக் ஆகியவற்றில் தனித்தனியாகச் சிக்கல் தீர்த்தலை மேற்கொள்ளவும்.
உங்கள் சார்ஜர் பின்வரும் குறைந்தபட்சத் தகுதிகளில் ஒன்றைப் பூர்த்திசெய்கிறதா என்பதை உறுதிசெய்யவும்: 10W அவுட்புட்டுடன் 5V/2A, அல்லது 18W அவுட்புட்டுடன் 9V/2A. சார்ஜர் குறைந்தது 2A மின்னோட்டத்தை வழங்க வேண்டும். அதிக மின்னோட்டத்தை ஆதரிக்கும் அல்லது இரட்டை 5V மற்றும் 9V லேபிள் உள்ள சார்ஜரும் POS Go-வை சார்ஜ் செய்ய முடியும்.
USB-C கேபிளுடன் POS Go-வை நேரடியாக சார்ஜ் செய்ய வால் அடாப்டரைப் பயன்படுத்தவும். சிக்கல் தீர்க்கும் போது கணினி USB போர்ட்டிலிருந்து POS Go-வை சார்ஜ் செய்ய வேண்டாம், ஏனெனில் கணினியால் போதுமான பவரை வழங்க முடியாமல் போகலாம். POS Go-வைத் தனியான சாதனமாகப் பயன்படுத்தினால், டாக்கில் சார்ஜ் செய்வதற்குப் பதிலாக USB-C கேபிளைப் பயன்படுத்தி நேரடியாக சார்ஜ் செய்யவும். POS Go டாக்கில் இணைக்கப்படும்போது, அது வாடிக்கையாளர் காட்சிப் பயன்முறைக்கு மாறும்.
குறைந்தபட்ச சார்ஜர் விவரக்குறிப்புகள் பூர்த்தி செய்யப்பட்டிருந்து, 30-60 நிமிடங்களுக்குப் பிறகும் POS Go சார்ஜ் ஆகவில்லை எனில், பின்வரும் சிக்கல் தீர்த்தல் படிகளை முயலவும்:
- வேறு USB-C சார்ஜிங் கேபிளை முயலவும்.
- வேறு வால் அடாப்டரை முயலவும்.
- வேறு பவர் அவுட்லெட்டை முயலவும்.
- குறைந்தது 1 மணிநேரத்திற்கு USB-C கேபிள் மூலமாக நேரடியாக POS Go-ஐ சார்ஜ் செய்துவிட்டு, பின்னர் மீண்டும் அதை ஆன் செய்ய முயலவும்.
POS Go-இன் LED பவர் இண்டிகேட்டர் சிக்கலைக் கண்டறிய உதவும்:
| இண்டிகேட்டர் | என்ன செய்ய வேண்டும் |
|---|---|
| சிவப்பு LED | பேட்டரி மிகக் குறைவாக உள்ளது. குறைந்தது 1 மணிநேரத்திற்கு வால் அடாப்டரில் POS Go-ஐ இணைத்தவாறு விட்டுவிட்டு, பின்னர் அதை மீண்டும் ஆன் செய்ய முயலவும். |
| சிவப்பு LED-உடன் ஒளிரும் மஞ்சள் நிறப் பேட்டரி ஐகான் | பேட்டரி முற்றிலும் தீர்ந்துவிட்டது. அதை மீண்டும் ஆன் செய்ய முயலும் முன்பு, குறைந்தது 1 மணிநேரத்திற்கு USB-C கேபிள் கொண்டு வால் அடாப்டரில் நேரடியாக POS Go-ஐ இணைத்தவாறு விட்டுவைக்கவும். |
| பல கேபிள்கள், வால் அடாப்டர்கள் மற்றும் அவுட்லெட்டுகளை முயன்ற பின்னரும் LED ஒளிரவில்லை | சாதனத்திற்குப் பவர் கிடைக்காமல் இருக்கலாம். Shopify ஆதரவிடம் சிக்கலைப் புகாரளிக்கவும். |
POS Terminal Dock-உடன் POS Go சார்ஜிங் சிக்கல்கள்
POS Terminal Dock-உடன் POS Go-ஐப் பயன்படுத்தினால், சிக்கல் டாக்-இல் உள்ளதா அல்லது POS Go-இல் உள்ளதா என்பதைத் தீர்மானிக்கவும்:
- USB-C கேபிள் மூலம் நேரடியாக வால் அடாப்டருடன் இணைக்கப்படும்போது POS Go முழுமையாக சார்ஜ் ஆகிறது எனில், டாக் பவரை வழங்காமல் இருக்கலாம். POS Go-இன் பின்புறத்திலும் டாக் உள்ளேயும் இருக்கும் சார்ஜிங் பின்களில் அழுக்கு, குப்பைகள் அல்லது பௌதிகச் சேதங்கள் உள்ளதா என்று சரிபார்க்கவும். பின்கள் சுத்தமாகவும் சேதமடையாமலும் இருந்தால், சிக்கலைப் புகாரளிக்கவும்.
- டாக்கில் உள்ள நீல நிற சார்ஜிங் விளக்கு ஆன் ஆகியும், POS Go பேட்டரி சதவீதம் தொடர்ந்து குறைந்தால், சிக்கலைப் புகாரளிக்கவும்.
- பல USB-C கேபிள்களைப் பயன்படுத்தி வால் அடாப்டரில் நேரடியாக இணைக்கப்பட்ட பிறகும் POS Go சார்ஜ் ஆகவில்லை அல்லது சிறிது நேரம் மட்டுமே சார்ஜ் ஆகிறது எனில், POS Go பேட்டரி செயலிழந்து இருக்கலாம். Shopify ஆதரவிடம் சிக்கலைப் புகாரளிக்கவும்.
POS Go பேட்டரிகள்
பல மின்னணுச் சாதனங்களைப் போலவே, POS Go சாதனமும் லித்தியம்-அயன் பேட்டரியைப் பயன்படுத்துகிறது. அனைத்து லித்தியம்-அயன் பேட்டரிகளும் இயல்பாகவே நேரமும் பயன்பாடும் அதிகரிக்கையில் சற்று வீக்கமடைகின்றன. வீங்கிய பேட்டரி உங்கள் சாதனத்தின் செயல்திறனைப் பாதிக்கலாம், மேலும் வீங்கிய பேட்டரியைத் தொடர்ந்து பயன்படுத்துவதும் சார்ஜ் செய்வதும் பரிந்துரைக்கப்படுவதில்லை. உங்கள் POS Go சாதனத்தில் பேட்டரி வீங்கியுள்ளதா என்பதை அவ்வப்போது சரிபார்க்கவும்.
உங்கள் பேட்டரி வீங்கியிருந்தால், அதைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, உங்கள் உள்ளூர் விதிமுறைகளுக்கு ஏற்ப அருகிலுள்ள மின்னணுவியல் மறுசுழற்சி மையத்தில் சாதனத்தை மறுசுழற்சி செய்யவும்.
POS Go மற்றும் லித்தியம்-அயன் பேட்டரிகளுக்கான கையாளுதல் வழிகாட்டுதல்கள்
உங்கள் POS Go மற்றும் லித்தியம்-அயன் பேட்டரிகளை நல்ல நிலையில் வைத்திருக்கப் பின்பற்ற வேண்டிய சிறந்த நடைமுறைகள் பின்வருமாறு:
- POS Go-ஐ குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் சேமித்து வைக்கவும், மேலும் நேரடி சூரிய ஒளி அல்லது வெப்ப மூலங்களிலிருந்து தள்ளி வைக்கவும்.
- சாதனம் அல்லது பேட்டரியை நசுக்குவது, கீழே போடுவது, சிதைப்பது அல்லது வெளியிலிருக்கும் பொருட்களைக் கொண்டு துளையிடுவதைத் தவிர்க்கவும்.
- பேட்டரி பேக்குகள் மற்றும் செல்களைப் பிரிக்க வேண்டாம்.
- POS Go-இல் உள்ள பேட்டரியை மாற்றவோ அல்லது அகற்றவோ முயற்சிக்க வேண்டாம்.
- பேட்டரியின் மேற்பரப்பில் அழுத்தம் கொடுக்க வேண்டாம்.
- பேட்டரியை வளைக்க வேண்டாம்.
- பேட்டரியைப் பிரித்தெடுக்க அல்லது நெம்ப எந்த வகையான கருவிகளையும் பயன்படுத்த வேண்டாம்.
என் பேட்டரி வீங்கியுள்ளதா என்பதை நான் எப்படி அறிவது?
உங்கள் பேட்டரியை அவ்வப்போது சரிபார்ப்பதும், அது வீங்கியிருந்தால் உங்கள் சாதனத்தை மாற்றுவதும் முக்கியமாகும். சாதனத்தின் பக்கவாட்டிலிருந்து பார்த்து உங்கள் சாதனத்தை நீங்கள் சரிபார்க்கலாம். கார்டு ஸ்வைப் ரீடருக்குக் கீழே உள்ள கேஸ் பகுதி தட்டையாக இல்லை என்றால், உங்கள் சாதனம் வீங்கியுள்ளது என்று அர்த்தம். உங்கள் சாதனம் டாக்கில் இருந்தால், அதைச் சரிபார்க்க டாக்கில் இருந்து அகற்றவும். கார்டை ஸ்வைப் செய்வதில் சிரமம் அல்லது சாதனக் கேஸில் விரிசல் அல்லது புடைப்பு ஏற்படுவதும் உங்கள் பேட்டரி வீங்கியிருக்கலாம் என்பதற்கான சான்றுகளாகும்.
வீங்கிய பேட்டரி இருந்தால் நான் என்ன செய்ய வேண்டும்?
உங்களிடம் வீங்கிய பேட்டரி இருந்தால், சார்ஜ் செய்வதையும் சாதனத்தைப் பயன்படுத்துவதையும் நிறுத்தவும். உங்கள் உள்ளூர் விதிமுறைகளுக்கு ஏற்ப அருகிலுள்ள மின்னணுவியல் மறுசுழற்சி மையத்தில் சாதனத்தை மறுசுழற்சி செய்யவும். உதவிக்கு அல்லது மாற்றீட்டைக் கோருவதற்கு நீங்கள் Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளலாம். Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளும்போது, WTH11 என்று தொடங்கும் பின்புற வரிசை எண் உட்பட, உங்கள் சாதனத்தின் பக்கவாட்டு மற்றும் பின்புறப் புகைப்படங்களைச் சேர்க்கவும்.
Shopify ஆதரவிற்குப் புகாரளிக்கும் முன்பு முயற்சிக்க வேண்டிய கூடுதல் சிக்கல் தீர்த்தல் உதவிக்குறிப்புகள்
உங்கள் கார்டு ரீடர் வேலை செய்யவில்லை எனில், Shopify ஆதரவிற்குப் புகாரளிக்கும் முன்பு இந்தப் படிகளை மதிப்பாய்வு செய்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும்:
- உமிழ்நீர் துகள்கள் சிப் காண்டாக்ட்டுகளை அரிக்கக்கூடும் என்பதால், சிப் ஸ்லாட்டிற்குள் ஒருபோதும் ஊத வேண்டாம்.
- ஸ்டிக்கி நோட் அல்லது டேப் போன்ற ஒட்டுப்பொருளைப் பயன்படுத்த வேண்டாம், ஏனெனில் இது குப்பைகளைச் சேகரிக்கக்கூடிய எச்சங்களை விட்டுச்செல்லலாம்.
- சிப் ஸ்லாட்டிற்குள் இருக்கும் குப்பைகளை அகற்ற கம்ப்ரஸ்டு ஏர் கேனைப் பயன்படுத்தவும்.
- சிப் ஸ்லாட்டில் உள்ள காண்டாக்ட்டுகளை மெதுவாகச் சுத்தம் செய்ய ஐசோபுரோபைல் ஆல்கஹால் மற்றும் மெல்லிய காட்டன் ஸ்வாப்களைப் பயன்படுத்தவும்.
எனது சிக்கல் இங்கு இடம்பெறவில்லை
ரீபூட் செய்தும் சிக்கல் தீரவில்லை எனில், தொழிற்சாலை மீட்டமைப்பை முயலவும். தொழிற்சாலை மீட்டமைப்பிற்குப் பிறகு, நீங்கள் மீண்டும் அமைவுச் செயல்முறையைப் பின்பற்ற வேண்டும்.
ரீபூட் அல்லது தொழிற்சாலை மீட்டமைப்பின் மூலம் தீர்க்கப்படாத சிக்கலை நீங்கள் எதிர்கொண்டால், சிக்கலைப் புகாரளிக்கவும்.
POS Go-ஐத் தொழிற்சாலை மீட்டமைத்தல்
முழுமையான தொழிற்சாலை மீட்டமைப்பிற்கும் சாதன அமைவிற்கும் சுமார் 30 நிமிடங்கள் ஆகலாம்.
POS Go-ஐத் தொழிற்சாலை மீட்டமைக்க, உங்கள் சாதனம் ஆன் ஆகியிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும், பின்னர் சாதனத்தில் உள்ள 3 பொத்தான்களையும் (பவர், இடது ஸ்கேன், வலது ஸ்கேன்) ஒரே நேரத்தில் சேர்த்து அழுத்தி சுமார் 5 வினாடிகளுக்குப் பிடித்திருக்கவும். 'தொழிற்சாலை மீட்டமைப்பை உறுதிப்படுத்துக' (Confirm factory reset) எனும் உரையாடல் பெட்டி தோன்றும்.
3 பொத்தான்களையும் சுமார் 14 வினாடிகள் அழுத்திப் பிடித்திருந்தால், சாதனம் கட்டாயமாகத் தொழிற்சாலை மீட்டமைக்கப்படும்.
மேலும் > அமைப்புகள் > சாதன அமைப்புகள் > தொழிற்சாலை மீட்டமைப்பு என்பதைத் தட்டுவதன் மூலமும் நீங்கள் POS Go-ஐத் தொழிற்சாலை மீட்டமைக்கலாம்.
சாதனத்தைத் தொழிற்சாலை மீட்டமைத்த பிறகு, மீண்டும் அமைவுச் செயல்முறையைப் பின்பற்றவும். சாதனத்தின் Wi-Fi இணைப்பை மீண்டும் உள்ளமைக்கவும், புதுப்பிப்புகளைப் பதிவிறக்கவும் மற்றும் உங்கள் ஸ்டோரில் மீண்டும் உள்நுழையவும் வேண்டும்.
சிக்கல்களைப் புகாரளித்தல்
உங்கள் POS Go-இல் சிக்கல் இருந்தாலோ அல்லது அது வேலை செய்யும் நிலைக்குக் கொண்டுவர அதை அடிக்கடி ரீபூட் செய்யவோ மீட்டமைக்கவோ வேண்டி இருந்தாலோ, அதுகுறித்த சிக்கலை நீங்கள் Shopify ஆதரவிற்குப் புகாரளிக்கலாம்.
படிகள்:
- POS மெனுவைத் திறக்க, மேலும் என்பதைத் தட்டவும், பின்னர் ஆதரவு > பிழையைப் புகாரளி என்பதைத் தட்டவும்.
- சிக்கலின் சுருக்கமான விளக்கத்தைச் சேர்த்து, அனுப்பு என்பதைத் தட்டவும். கூடுதல் தகவல்களைப் பெற Shopify ஆதரவு உங்களைத் தொடர்புகொள்ளக்கூடும்.
ஏதேனும் காரணத்தால் உங்களால் பிழைப் புகாரை அனுப்ப முடியாவிட்டால் அல்லது அவசரமான சிக்கலை எதிர்கொண்டால், உங்கள் POS Go-இல் மேலும் > ஆதரவு > ஆதரவைத் தொடர்புகொள்க என்பதைத் தட்டவும்.