Epson T20 மற்றும் T88 சீரிஸ் ரசீது அச்சுப்பொறிகள்

Epson T20 மற்றும் T88 சீரிஸ் அச்சுப்பொறிகள் தெர்மல் ரசீது அச்சுப்பொறிகளாகும், இவை உங்கள் Shopify POS சாதனங்களுடன் வேலை செய்ய நெகிழ்வான இணைப்பு விருப்பங்களை வழங்குகின்றன. Epson T20 சீரிஸ் ரசீது அச்சுப்பொறியில் T20II மற்றும் T20III மாடல்கள் அடங்கும். Epson T88 சீரிஸ் ரசீது அச்சுப்பொறியில் T88IV, T88V, T88VI மற்றும் T88VII மாடல்கள் அடங்கும்.

ஈதர்நெட் இணைப்புகள் மூலம் iPad, iPhone மற்றும் Android சாதனங்களுடனும் POS Hub-உடன் USB இணைப்புகள் மூலமாகவும் இந்த அச்சுப்பொறிகள் வேலை செய்யும். அவை 80mm ரசீது தாள்களை ஆதரிக்கின்றன, இதுவே Shopify POS-க்குத் தேவைப்படும் அளவாகும். உங்கள் POS சாதனத்துடன் அச்சுப்பொறியை இணைத்த பிறகு, அவை இரண்டுமே ஆன் செய்யப்பட்டிருக்கும்போதெல்லாம் தானாகவே மீண்டும் இணைந்துகொள்ளும்.

Epson T20 அல்லது T88 சீரிஸ் ரசீது அச்சுப்பொறியைக் கொள்முதல் செய்வதற்கு முன், உங்கள் ஸ்டோரும் சாதனங்களும் அதனுடன் இணக்கமாக இருப்பதை உறுதிசெய்யத் தேவைகளைச் சரிபார்க்கவும்.

இந்தப் பிரிவில்