Epson T20 அல்லது T88 சீரிஸ் ரசீது அச்சுப்பொறியில் சிக்கல் தீர்த்தல்

Epson T20 அல்லது T88 சீரிஸ் ரசீது அச்சுப்பொறியின் பொதுவான சிக்கல்களைத் தீர்க்க இந்த வழிகாட்டியை நீங்கள் பயன்படுத்தலாம். அச்சுப்பொறிச் சிக்கல்களை விரைவாகச் சரிசெய்வது, வாடிக்கையாளர்கள் தங்களின் ரசீதுகளைப் பெறுவதை உறுதிசெய்து, உங்கள் செக்அவுட் செயல்முறை தடையின்றி இயங்கவும் உதவும். நீங்கள் எதிர்கொள்ளும் குறிப்பிட்ட சிக்கலைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பாக, படி 1: Epson T20 அல்லது T88 சீரிஸ் ரசீது அச்சுப்பொறிக்கான பொதுவான சிக்கல் தீர்த்தல் என்பதை முடிப்பதை உறுதிசெய்யவும்.

இந்தச் சிக்கல் தீர்க்கும் படிகள் மூலம் சிக்கல் தீர்க்கப்படவில்லை எனில், நீங்கள் Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளலாம்.

படி 1: உங்கள் Epson T20 அல்லது T88 சீரிஸ் ரசீது அச்சுப்பொறிக்கான பொதுவான சிக்கல் தீர்த்தல்

உங்கள் Epson T20 அல்லது T88 சீரிஸ் ரசீது அச்சுப்பொறிக்கான பின்வரும் பொதுவான சிக்கல் தீர்க்கும் படிகளை முடிக்கவும்:

  • Shopify POS புதுப்பித்த நிலையில் உள்ளதா என்பதை உறுதிசெய்யவும்.

  • உங்கள் சாதனம் புதுப்பித்த நிலையில் உள்ளதா என்பதை உறுதிசெய்யவும்:

    • உங்கள் iOS சாதனத்தைப் புதுப்பிக்க, உங்கள் சாதனத்தின் அமைப்புகளுக்குச் சென்று, General (பொதுவானவை) > Software Update (மென்பொருள் புதுப்பிப்பு) என்பதைத் தட்டவும். ஏதேனும் புதுப்பிப்பு இருந்தால், நீங்கள் Update now (இப்போதே புதுப்பி) என்பதைத் தட்டலாம்.
    • உங்கள் Android சாதனத்தைப் புதுப்பிக்க, உங்கள் சாதனத்தின் அமைப்புகளுக்குச் சென்று, Software update (மென்பொருள் புதுப்பிப்பு) என்பதைத் தட்டவும். ஏதேனும் புதுப்பிப்பு இருந்தால், அதை நிறுவுவதற்குத் திரையில் தோன்றும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
  • நீங்கள் ஒரு iOS சாதனத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், சாதனத்தின் அமைப்புகளுக்குச் சென்று, Allow cross website tracking (இணையதளங்களுக்கிடையேயான கண்காணிப்பை அனுமதி) அனுமதி இயக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்யவும்.

  • ஆதரிக்கப்படும் இணைப்பு வகையைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிசெய்யவும். Ethernet மூலம் இணைக்க, அச்சுப்பொறியை உங்கள் ரூட்டருடன் இணைத்து, iPad, iPhone அல்லது Android சாதனத்தை அதே உள்ளூர் நெட்வொர்க்குடன் இணைக்கவும். USB மூலம் இணைக்க, இணக்கமான iPad அல்லது Android சாதனத்துடன் Shopify POS Hub-ஐப் பயன்படுத்தவும். இந்த அச்சுப்பொறிகள் Bluetooth, உங்கள் POS சாதனத்துடனான நேரடி USB இணைப்புகள் மற்றும் செயலிக்குள் Wi-Fi அமைவு ஆகியவற்றை ஆதரிக்காது.

படி 2: உங்கள் Epson T20 அல்லது T88 சீரிஸ் ரசீது அச்சுப்பொறிச் சிக்கலைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் Epson T20 அல்லது T88 சீரிஸ் ரசீது அச்சுப்பொறியில் நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கலைத் தேர்ந்தெடுத்து, சிக்கல் தீர்த்தல் படிகளைப் பின்பற்றவும்.

ஒளிராமல் தொடர்ந்து எரியும் ERROR LED விளக்கின் சிக்கலைத் தீர்க்கவும்

ERROR LED தொடர்ந்து ஒளிர்ந்தால், அச்சுப்பொறியில் பேப்பர் குறைவாக உள்ளது என்று அர்த்தம். அச்சுப்பொறியைத் திறந்து, பேப்பரை மாற்றிவிட்டு, மூடியை மூடவும். இப்போது ERROR LED அணைய வேண்டும்.

ரசீது பேப்பரைச் சரியாகச் செருகுவதை உறுதிசெய்யவும்:

ரசீது பேப்பரைக் கீழிருந்து சரியாக உள்ளிடுவதும் மேலிருந்து தவறாக உள்ளிடுவதும்.

ஒளிரும் LEDகளின் சிக்கலைத் தீர்க்கவும்

LEDகள் ஒளிர்ந்தால், உங்கள் Epson அச்சுப்பொறியின் மாடலுக்கான Epson தொழில்நுட்பக் குறிப்பு வழிகாட்டிகளைத் தேடவும். உங்கள் அச்சுப்பொறியின் பக்கவாட்டில் உள்ள Epson ஸ்டிக்கரில் அச்சுப்பொறியின் மாடலைக் கண்டறியலாம்.

பேப்பர் சிக்கும் சிக்கலைத் தீர்க்கவும்

ரசீது அச்சுப்பொறியில் பேப்பரைச் சாய்வாக உள்ளிட்டால், பேப்பர் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது. இவ்வாறு நடந்தால், அச்சுப்பொறியை முடக்கி, அதைத் திறந்து, மீண்டும் பேப்பரை உள்ளிடவும்.

ரசீது பேப்பரைச் சரியாகச் செருகுவதை உறுதிசெய்யவும்:

ரசீது பேப்பரைக் கீழிருந்து சரியாக உள்ளிடுவதும் மேலிருந்து தவறாக உள்ளிடுவதும்.

உங்களின் ரசீதைக் குறிப்பிடப்பட்டுள்ள 3 அங்குல அகலத்தை விடக் குறைவானதாக அமைக்க விரும்பினால், வழங்கப்பட்டுள்ள பிரிப்பானைப் பயன்படுத்துவதை உறுதிசெய்துகொள்ளவும். அச்சுப்பொறியில் பேப்பரை உள்ளிடும்போது அதை மடிக்க வேண்டாம்.

அச்சிடும் சிக்கலைத் தீர்க்கவும்

Epson T20 மற்றும் T88 சீரிஸ் ரசீது அச்சுப்பொறிகள் 58mm மற்றும் 80mm ரசீது பேப்பர் அளவை ஆதரிக்கும். Shopify POS, 80mm ரசீது பேப்பர் அளவை மட்டுமே ஆதரிக்கிறது. 80mm பேப்பரை அச்சிடும் வகையில் உங்கள் அச்சுப்பொறியை உள்ளமைக்க, 58mm பேப்பருக்கான கார்டுகளை அகற்றவும்.

படிகள்:

  1. அச்சுப்பொறியை முடக்கவும்.
  2. ரோல் பேப்பரின் மூடியைத் திறக்கவும்.
  3. முக்கோணக் குறிகளை சீரமைத்து ரோல் பேப்பர் வழிகாட்டிகளை நிறுவவும்.

முக்கோணக் குறிகளை சீரமைத்து ரோல் பேப்பர் வழிகாட்டிகளை நிறுவுதல்

அச்சிடுவதில் உள்ள சிக்கல் தீர்க்கப்படவில்லை என்றால், மென்பொருள் உள்ளமைவில் சிக்கல் இருக்கலாம், அதற்கு உங்களின் அச்சுப்பொறி மென்பொருளைப் புதுப்பிக்க வேண்டியிருக்கும். உங்கள் சாதனத்தில் Epson Utility செயலிக்குச் சென்று, Change Printer Settings > Various Settings > Printing Control என்பதைத் தட்டவும். Paper width - Number of columns பிரிவில், இது 80mm - 48 நெடுவரிசைகள் என அமைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும்.

RED செயலாக்கப்பட்ட அச்சுப்பொறிகளின் சிக்கல்களைத் தீர்த்தல்

RED (Radio Equipment Directive) செயலாக்கப்பட்ட அச்சுப்பொறிகள் தற்போது செயல்படுவதில்லை. இந்தச் சிக்கலைத் தீர்க்க, உங்கள் சாதனம் வெற்றிகரமாக இணைக்கப்படுவதையும் செயல்படுவதையும் அனுமதிக்க, Secure Printing என்பதை முடக்க வேண்டும்.

RED வரம்பிற்குள் வரும் எல்லாத் தயாரிப்புகளிலும் இயல்பாகவே Secure Printing செயலாக்கப்பட்டிருக்கும். RED உடன் இணக்கமாக உள்ள பின்வரும் ஏதேனும் மாடல் பயன்பாடுகளைக் கொண்டு, நீங்கள் தற்போதைய அமைப்பை உறுதிப்படுத்தி Secure Printing அமைப்பை மாற்றலாம்:

  • TM (Thermal Monitor) Utility
  • Web Config
  • EpsonNet Config (Web version)

உங்கள் Epson T20 அல்லது T88 சீரிஸ் ரசீது அச்சுப்பொறியை ஃபாக்டரி ரீசெட் செய்யவும்

உங்கள் Epson T20 அல்லது T88 சீரிஸ் ரசீது அச்சுப்பொறியின் இணைப்புச் சிக்கல்களைத் தீர்க்க ஃபாக்டரி ரீசெட் உதவக்கூடும்.

படிகள்:

  1. அச்சுப்பொறியின் முன்புறமுள்ள பவர் பட்டனை அழுத்தி அதை முடக்கவும்.
  2. அச்சுப்பொறியின் கீழ்ப்புறத்தில் ஈதர்நெட் பிளக்கிற்கு அருகில் உள்ள SW ரீசெட் பொத்தானைக் கண்டறியவும்.
  3. பால்பாயிண்ட் பேனாவைப் பயன்படுத்தி SW ரீசெட் பொத்தானை 5 வினாடிகளுக்கு அழுத்திப் பிடிக்கவும்.
  4. அச்சுப்பொறியை மீண்டும் இயக்கும் போது SW ரீசெட் பொத்தானை தொடர்ந்து அழுத்திப் பிடித்திருக்கவும்.
  5. “Resetting to Factory Default” (இயல்புநிலை அமைப்புகளுக்கு மீட்டமைக்கப்படுகிறது) என்ற வாசகத்துடன் ஒரு பேப்பர் அச்சிடப்படும்.
  6. SW ரீசெட் பொத்தானை விட்டுவிடவும். இதன்மூலம் ஃபாக்டரி ரீசெட் முடிவடைகிறது.

Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்

பொதுவான சிக்கல் தீர்த்தல் மற்றும் குறிப்பிட்ட சிக்கல் தீர்த்தல் வழிகாட்டிகளைப் பின்பற்றிய பிறகும் உங்கள் ரசீது அச்சுப்பொறி இயங்கவில்லை எனில், நீங்கள் Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளலாம்.

Shopify POS இலிருந்து, கிடைமட்ட மெனு > ஆதரவு > ஆதரவைத் தொடர்புகொள்ளவும் என்பதைத் தட்டவும்.