Epson FP-81 II RT ரசீது அச்சுப்பொறியைப் பயன்படுத்துவதற்கான தேவைகள்
Shopify POS உடன் Epson FP-81 II RT ரசீது அச்சுப்பொறியை அமைப்பதற்கு முன், உங்கள் ஸ்டோர் மற்றும் சாதனங்கள் பின்வரும் வன்பொருள் மற்றும் மென்பொருள் தேவைகளைப் பூர்த்தி செய்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்:
நீங்கள் Shopify POS-ஐப் பயன்படுத்த வேண்டும்.
உங்களிடம் iPadOS 15.1 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பைக் கொண்டு இயங்கும் இணக்கமான iPad, iOS 15.1 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பைக் கொண்டு இயங்கும் iPhone, அல்லது Android 10.0 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பைக் கொண்டு இயங்கும் இணக்கமான Android சாதனம் இருக்க வேண்டும்.
இத்தாலியைத் தளமாகக் கொண்ட ஒரு Shopify ஸ்டோர் உங்களிடம் இருக்க வேண்டும்.
இந்தப் பக்கத்தில்
Shopify POS iOS மற்றும் Android சாதன இணக்கத்தன்மைத் தேவைகள்
Shopify POS செயலி iOS மற்றும் Android சாதனங்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இது லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் அல்லது Amazon Fire டேப்லெட்டுகளுக்குக் கிடைக்காது.
பின்வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சாதனங்களில் Shopify POS வேலை செய்யும்:
| சாதனம் | விளக்கம் |
|---|---|
| iPad | iPadOS 15.1 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பைக் கொண்டு இயங்கும் தலைமுறை 5 அல்லது அதற்கும் பிந்தைய பதிப்புகள் |
| iPad Air | iPadOS 15.1 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பைக் கொண்டு இயங்கும் தலைமுறை 2 அல்லது அதற்கும் பிந்தைய பதிப்புகள் |
| iPad mini | iPadOS 15.1 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பைக் கொண்டு இயங்கும் தலைமுறை 4 அல்லது அதற்கும் பிந்தைய பதிப்புகள் |
| iPad Pro | iPadOS 15.1 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பைக் கொண்டு இயங்கும் அனைத்து iPad Pro மாடல்களும் |
| iPhone | iOS 15.1 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பைக் கொண்டு இயங்கும் iPhone 7 அல்லது அதற்கும் பிந்தைய பதிப்புகள் |
| POS Go | Shopify வழங்கிய சமீபத்திய மென்பொருள் புதுப்பிப்புகளுடன் இயங்கும் POS Go |
| Android | Google Play Services மற்றும் Google Mobile Services செயல்படுத்தப்பட்டு, அதிகாரப்பூர்வ Android 10.0 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பில் இயங்கும் மொபைல் அல்லது டேப்லெட் |
Shopify POS இனி iOS 14 அல்லது அதற்கும் முந்தைய பதிப்புகளை ஆதரிக்காது. iOS-இன் பழைய பதிப்புகளில், நீங்கள் தொடர்ந்து செயலியைப் பயன்படுத்தலாம், ஆனால் இனி அதைப் புதுப்பிக்க முடியாது. பிழைத்திருத்தங்கள் மற்றும் புதிய அம்சங்களைப் பயன்படுத்திக்கொள்ள, உங்கள் சாதனத்தை iOS 15.1 அல்லது அதற்கும் பிந்தைய பதிப்புக்குப் புதுப்பிக்க வேண்டும். அது சாத்தியமில்லை எனில், iOS 15.1 அல்லது அதற்கும் பிந்தைய பதிப்பில் இயங்கும் வேறு ஒரு சாதனத்தில் Shopify POS-ஐப் பயன்படுத்துவதற்கு மாறவும்.
iOS அனுமதித் தேவைகள்
உங்கள் சாதனத்தை iOS 15.1 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பிற்குப் புதுப்பித்து, மூன்றாம் தரப்பு Shopify செயலிகளைப் பயன்படுத்தினால், உங்கள் iOS அமைப்புகளில் Cross-Website tracking அம்சத்தைச் செயல்படுத்த வேண்டியிருக்கலாம். உங்கள் Shopify நிர்வாகியில் நீங்கள் நிறுவும் மூன்றாம் தரப்பு Shopify செயலிகள், Shopify Inbox, Shopify Point of Sale மற்றும் Shopify செயலி ஆகியவற்றுடன் தொடர்ந்து இணைக்கப்பட்டிருக்க Cross-Website tracking அனுமதிக்கிறது.
Cross-Website tracking அம்சத்தைச் செயல்படுத்த, பின்வரும் படிகளை நிறைவுசெய்யவும்:
- உங்கள் iOS சாதனத்தில் Settings செயலியைத் திறக்கவும்.
- Shopify, Shopify POS அல்லது Shopify Inbox-ஐத் தட்டவும்.
- Allow Cross-Website Tracking என்பதைச் செயல்படுத்தவும்.
Epson FP-81 II RT ரசீது அச்சுப்பொறியை எங்கே வாங்குவது
நீங்கள் இத்தாலியிலுள்ள வணிகர்களுக்கான Shopify வன்பொருள் ஸ்டோரில் Epson FP-81 II RT ரசீது அச்சுப்பொறி மற்றும் அச்சுப்பொறிக்கான காகிதத்தை வாங்கலாம்.