Star Micronics mPOP அச்சுப்பொறி மற்றும் பணப் பெட்டி தொடர்பான சிக்கல் தீர்த்தல்

Star Micronics mPOP அச்சுப்பொறி மற்றும் பணப் பெட்டி தொடர்பான பொதுவான சிக்கல்களைத் தீர்க்க இந்த வழிகாட்டியைப் பயன்படுத்தவும். நீங்கள் எதிர்கொள்ளும் குறிப்பிட்ட சிக்கலைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் படி 1: Star Micronics mPOP அச்சுப்பொறி மற்றும் பணப் பெட்டிக்கான பொதுவான சிக்கல் தீர்த்தல் என்பதை நிறைவுசெய்யவும். சிக்கல் தீர்க்கும் படிகள் மூலம் சிக்கலைத் தீர்க்க முடியவில்லை எனில், நீங்கள் Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளலாம்.

படி 1: Star Micronics mPOP அச்சுப்பொறி மற்றும் பணப் பெட்டிக்கான பொதுவான சிக்கல் தீர்த்தல்

Star Micronics mPOP அச்சுப்பொறி மற்றும் பணப் பெட்டிக்கான பின்வரும் சிக்கல் தீர்க்கும் படிகளை நிறைவுசெய்யவும்:

  • Star Micronics mPOP அச்சுப்பொறி மற்றும் பணப் பெட்டியைப் பயன்படுத்த நீங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துள்ளீர்களா என்பதைச் சரிபார்க்கவும்.

  • Shopify POS புதுப்பிக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும்.

  • உங்கள் சாதனம் புதுப்பிக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும்:

    • உங்கள் iOS சாதனத்தைப் புதுப்பிக்க, உங்கள் சாதனத்தின் அமைப்புகளுக்குச் சென்று, General > Software Update என்பதைத் தட்டவும். புதுப்பிப்பு ஏதேனும் கிடைத்தால், Update now என்பதைத் தட்டலாம்.
    • உங்கள் Android சாதனத்தைப் புதுப்பிக்க, உங்கள் சாதனத்தின் அமைப்புகளுக்குச் சென்று, Software update என்பதைத் தட்டவும். புதுப்பிப்பு ஏதேனும் கிடைத்தால், திரையில் தோன்றும் வழிமுறைகளைப் பின்பற்றி அதை நிறுவவும்.
  • உங்கள் Star Micronics mPOP ரசீது அச்சுப்பொறி மற்றும் பணப் பெட்டியை மறுதொடக்கம் செய்யவும்.

  • உங்கள் POS சாதனத்தை மறுதொடக்கம் செய்யவும்.

உங்கள் புளூடூத் அமைப்புகளை மீட்டமைக்கவும்

டுடோரியல் வீடியோவைப் பார்ப்பதன் மூலமாகவோ எழுதப்பட்ட படிகளைப் பின்பற்றுவதன் மூலமாகவோ உங்கள் POS சாதனத்தின் புளூடூத் அமைப்புகளை மீட்டமைக்கவும்.

iOS

படிகள்:

  1. உங்கள் iOS சாதனத்தில், Settings > Bluetooth என்பதற்குச் செல்லவும்.
  2. நீங்கள் சரிசெய்யும் வன்பொருளுக்கு அடுத்துள்ள ( i ) ஐகானைத் தட்டி, பின்னர் Forget This Device என்பதைத் தட்டவும்.
  3. உங்கள் Bluetooth அமைப்புகளை முடக்கவும்.
  4. iOS சாதனத்தை 2-3 நிமிடங்களுக்கு அணைத்துவைக்கவும்.
  5. உங்கள் iOS சாதனத்தை மறுதொடக்கம் செய்து, பின்னர் உங்கள் வன்பொருளை இணைக்கவும்.
Android
  1. உங்கள் Android சாதனத்தில், Settings > Bluetooth என்பதற்குச் செல்லவும்.
  2. நீங்கள் மறக்க விரும்பும் சாதனத்தைக் கண்டறிந்து, அதற்கடுத்துள்ள கியர் ஐகானைத் தட்டவும்.
  3. Forget (மற) அல்லது Unpair (இணைப்பை நீக்கு) என்பதைத் தட்டவும்.
  4. உங்கள் Android சாதனத்தை 2-3 நிமிடங்களுக்கு ஆஃப் செய்துவிட்டு, மீண்டும் ஆன் செய்யவும்.
  5. Bluetooth-ஐ ஆன் செய்துவிட்டு, உங்கள் வன்பொருளை இணைக்கவும்.

படி 2: Star Micronics mPOP அச்சுப்பொறி மற்றும் பணப் பெட்டி தொடர்பான சிக்கலைத் தேர்ந்தெடுக்கவும்

Star Micronics mPOP அச்சுப்பொறி மற்றும் பணப் பெட்டி சிக்கலைத் தேர்ந்தெடுத்து, சிக்கல் தீர்த்தல் படிகளைப் பின்பற்றவும்.

Shopify POS Hub இணைப்புச் சிக்கல்களைத் தீர்த்தல்

உங்கள் POS வன்பொருள் Shopify POS Hub மூலம் இணைக்கப்படாவிட்டால், Shopify POS Hub சிக்கல் தீர்த்தல் படிகளை நிறைவுசெய்யவும்.

இணைப்புச் சிக்கல்களைத் தீர்த்தல்

உங்கள் Star Micronics mPOP இணைக்கப்படாவிட்டால் அல்லது அடிக்கடி துண்டிக்கப்பட்டால், mPOP-இன் Bluetooth அமைப்புகளை மீட்டமைக்கவும்.

படிகள்:

  1. பக்கவாட்டில் உள்ள ஸ்விட்சைப் பயன்படுத்தி Star Micronics mPOP-ஐ ஆஃப் செய்யவும்.
  2. Star Micronics mPOP-இன் அடிப்பகுதியில் அமைந்துள்ள Bluetooth மீட்டமை பொத்தானை (1) அழுத்திப் பிடித்துக்கொண்டு, mPOP-இன் பக்கவாட்டில் உள்ள பவர் ஸ்விட்சை (2) ஆன் செய்யவும். Bluetooth மீட்டமை பொத்தானை விடாமல் தொடர்ந்து அழுத்தவும்.
    Star Micronics mPOP-இன் அடிப்பகுதியில் உள்ள மீட்டமை பொத்தானை அழுத்தி, பின்னர் mPOP-இன் பக்கவாட்டில் உள்ள பவர் பொத்தானை அழுத்தவும்
  3. தொடங்கமைப்புச் செயல்பாடு ஆரம்பிக்கும் போது, Star Micronics mPOP-இன் மேற்புறத்தில் அமைந்துள்ள Power LED மற்றும் Error LED ஆகியவை ஒளிரும். ஒளிரத் தொடங்கியதும், Bluetooth மீட்டமை பொத்தானை விட்டுவிடவும்.
  4. தொடங்கமைப்புச் செயல்பாடு முடிந்ததும், LED-கள் ஒளிர்வது நின்று, Power LED மட்டுமே தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கும். பக்கவாட்டில் உள்ள ஸ்விட்சைப் பயன்படுத்தி Star Micronics mPOP-ஐ மீண்டும் ஆஃப் செய்யவும்.
  5. உங்கள் சாதனத்திலிருந்து Star Micronics mPOP-ஐ அகற்றவும்:
    • iOS சாதனங்களுக்கு, அமைப்புகள் > Bluetooth என்பதைத் திறந்து, Star Micronics mPOP பட்டியலிடப்பட்டுள்ள இடத்திலுள்ள i ஐகானைத் தட்டவும். பிறகு Forget this device (இந்தச் சாதனத்தை மற) என்பதைத் தட்டவும்.

உங்கள் Star Micronics mPOP தொடர்ந்து இணைப்புச் சிக்கல்களைச் சந்தித்தால், தானியங்கு-இணைப்பு (Auto-connection) ஆன் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.

பார்கோடு ஸ்கேனிங் சிக்கல்களைத் தீர்த்தல்

பார்கோடு ஸ்கேனர் Star Micronics mPOP உடன் இணைக்கப்பட்டுள்ளதையும், Star Micronics mPOP பவர் ஆன் செய்யப்பட்டுள்ளதையும் உறுதிப்படுத்தவும். பார்கோடு ஸ்கேனரை Star Micronics mPOP-இல் ப்ளக்-இன் செய்தால் போதுமானது; அதை Shopify POS உடன் இணைக்க வேண்டியதில்லை.

USB பார்கோடு ஸ்கேனர் இணக்கமான 1D பார்கோடு வகைகளை மட்டுமே ஸ்கேன் செய்யும்.

பணப் பெட்டி திறக்காத சிக்கலைத் தீர்த்தல்

Star Micronics mPOP பணப் பெட்டி திறக்கவில்லை எனில், பின்வரும் படிகளைக் கொண்டு சிக்கலைத் தீர்க்கவும்:

  • ரசீது அச்சுப்பொறியில் பேப்பர் ஏற்றப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும். ரசீது அச்சுப்பொறியில் பேப்பர் தீர்ந்துவிட்டால், பணப் பெட்டியின் செயல்பாடுகள் இயங்காது.
  • Star Micronics mPOP-இன் மீதான மொத்த எடை 8kg (17.6 lbs) என்ற அளவைத் தாண்டாமல் இருப்பதை உறுதிப்படுத்தவும்.

Star Micronics mPOP பணப் பெட்டியைப் பரிசோதித்தல்

பணப் பெட்டியை ஏதேனும் தடுக்கிறதா என்பதைக் கண்டறிய, அதைத் திறந்து பரிசோதிக்கலாம்.

படிகள்:

  1. Shopify POS செயலியிலிருந்து, கிடைமட்ட மெனு > Connectivity (இணைப்புத்திறன்) என்பதைத் தட்டவும்.
  2. mPOP-ஐத் தேர்ந்தெடுத்து, Test cash drawer (பணப் பெட்டியைப் பரிசோதி) என்பதைத் தட்டவும்.
  3. பெட்டி ‘க்ளிக்’ என்ற சத்தத்துடன் திறப்பதைக் கேட்டதும், பெட்டியை மெதுவாக இழுக்கவும். அது இழுக்க வரவில்லை எனில், உள்ளே ஏதோ சிக்கியிருக்கலாம்.

Star Micronics mPOP பணப் பெட்டியைக் கைமுறையாகத் திறத்தல்

பணப் பெட்டியைத் தானாகத் திறக்க முடியவில்லை எனில், பின்வரும் முறைகளில் ஒன்றைப் பயன்படுத்திக் கைமுறையாகத் திறக்கலாம்:

  • ரசீது அச்சுப்பொறியைத் திறந்து, சிவப்புப் பொத்தானை ஒரு வினாடிக்கு அழுத்திப் பிடிக்கவும்.
  • Star Micronics mPOP-இன் அடிப்பகுதியில் உள்ள லாக் லீவரைக் (lock lever) கண்டறிந்து, அதை அழுத்தவும்.

Star Micronics mPOP ரசீது அச்சுப்பொறியின் அடிப்பகுதியில் உள்ள லாக் லீவர்

பணப் பெட்டி மூடாத சிக்கலைத் தீர்த்தல்

Star Micronics mPOP பணப் பெட்டி மூடாவிட்டால், பணப் பெட்டியை இறுக்கமாக அழுத்திப் பிடித்துக்கொண்டு, பணப் பெட்டியைப் பரிசோதிக்கவும்.

படிகள்:

  1. Shopify POS செயலியிலிருந்து, கிடைமட்ட மெனு > Connectivity (இணைப்புத்திறன்) என்பதைத் தட்டவும்.
  2. mPOP-ஐத் தேர்ந்தெடுத்து, Test cash drawer (பணப் பெட்டியைப் பரிசோதி) என்பதைத் தட்டவும்.
ரசீது அச்சிடல் சிக்கல்களைத் தீர்த்தல்

ரசீதுகளை அச்சிடுவதில் உங்களுக்குச் சிக்கல்கள் இருந்தால், ரசீது பேப்பர் சரியாக ஏற்றப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.

பேப்பரைச் சமதட்டமாக வைத்து, ரோலின் மேற்புறத்திலிருந்து வருமாறு ரசீதுகளை ஏற்றவும்

பேப்பர் சிக்கிக்கொள்ளுதல்

அச்சுப்பொறி இயங்கும் சத்தம் கேட்டாலும் பேப்பர் வெளியே வரவில்லை எனில், பேப்பர் சிக்கியிருக்கலாம். சிக்கியுள்ள பேப்பரை அகற்ற அச்சுப்பொறியைத் திறக்கலாம்.

படிகள்:

  1. அச்சுப்பொறியை அன்லாக் செய்ய அதன் முன்பக்கத்தை அழுத்தி, பின்னர் அச்சுப்பொறியை வெளியே இழுக்கவும்.
    அச்சுப்பொறி மூடியின் முன்பக்கத்தை அழுத்தி, பின்னர் அச்சுப்பொறியை வெளியே இழுக்கவும்
  2. அச்சுப்பொறியின் மூடியைத் திறக்க, மூடியைத் திறக்கும் லீவரை முன்னோக்கி இழுக்கவும்.
    Star Micronics mPOP அச்சுப்பொறி மூடியின் லீவரை முன்னோக்கி இழுக்கவும்
  3. துண்டுகள் உட்பட, சிக்கியிருக்கும் அனைத்துப் பேப்பர்களையும் அகற்றவும்.
  4. ரசீது பேப்பரை மீண்டும் ஏற்றவும்.

பேப்பர் சிக்கிக்கொள்வதைத் தடுக்க, பின்வரும் உதவிக்குறிப்புகளைப் பார்க்கவும்:

  • பேப்பரை ஏற்றும்போது, அதன் விளிம்பை நேர்க்கோட்டில் வெளியே இழுக்கவும்.
  • அச்சிடும்போதோ, பேப்பர் வெளியே வரும்போதோ அல்லது பேப்பர் வெட்டப்படுவதற்கு முன்போ பேப்பரைத் தொடுவதைத் தவிர்க்கவும்.

உங்கள் லோகோ கிரேஸ்கேலில் (grayscale) இருந்தால், Star Micronics mPOP மங்கலான நிறத்தில் அச்சிடலாம். மிகவும் தெளிவாக அச்சிட, ஃபோட்டோ எடிட்டரைப் பயன்படுத்தி உங்கள் லோகோவைக் கருப்பு வெள்ளையாக எடிட் செய்யலாம். பிறகு, எடிட் செய்யப்பட்ட லோகோவை உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள விற்பனைப் புள்ளி சேனலில் (Point of sale) நீங்கள் பதிவேற்றலாம்.

எல்இடி (LED) விளக்குகள் ஒளிரும் சிக்கலைத் தீர்த்தல்

Star Micronics mPOP எல்இடி (LED) விளக்குகள் ஒளிர்ந்தால், சிக்கலைக் கண்டறிய Star Micronic-இன் LED Display ஆவணத்தைப் பார்க்கவும்.

உங்கள் Star Micronics mPOP அச்சுப்பொறி மற்றும் பணப் பெட்டி குறித்து Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்

பொதுவான சிக்கல் தீர்த்தல் படிகள் மற்றும் குறிப்பிட்ட சிக்கல் தீர்த்தல் படிகளைப் பின்பற்றிய பிறகும், உங்கள் Star Micronics mPOP ரசீது அச்சுப்பொறி மற்றும் பணப் பெட்டி இன்னும் வேலை செய்யவில்லை என்றால், நீங்கள் Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளலாம்.

Shopify POS இலிருந்து, Horizontal menu ஐகான் > Support > Contact support என்பதைத் தட்டவும்.