Star Micronics MCW10 வயர்லெஸ் LAN அடாப்டர்
உங்கள் வாடிக்கையாளர்களுக்கு ரசீதுகளை அச்சிட, Star Micronics MCW10 வயர்லெஸ் LAN அடாப்டர் ரசீது அச்சுப்பொறியை Shopify POS உடன் இணைக்கலாம். வாங்குவதற்கு முன், Star Micronics MCW10 வயர்லெஸ் LAN அடாப்டர் ரசீது அச்சுப்பொறியைப் பயன்படுத்துவதற்கான தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்கிறீர்களா என்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
Star Micronics MCW10 வயர்லெஸ் LAN அடாப்டர் ரசீது அச்சுப்பொறியை எங்கு வாங்குவது, அதை எப்படி அமைப்பது மற்றும் பொதுவான சிக்கல்களைத் தீர்ப்பது எப்படி என்பதை அறிய இந்த வழிகாட்டியைப் பயன்படுத்தவும்.
இந்தப் பக்கத்தில்
- Star Micronics MCW10 வயர்லெஸ் LAN அடாப்டரைப் பயன்படுத்துவதற்கான தேவைகள்
- Star Micronics MCW10 வயர்லெஸ் LAN அடாப்டரைப் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை
- Star Micronics MCW10 வயர்லெஸ் LAN அடாப்டரை எங்கு வாங்குவது
- உங்கள் Star Micronics MCW10 வயர்லெஸ் LAN அடாப்டரை ரசீது அச்சுப்பொறியுடன் இணைக்கவும்
- MCW10-இன் நெட்வொர்க் அமைப்புகளைத் தொடங்கமைக்கவும்
Star Micronics MCW10 வயர்லெஸ் LAN அடாப்டரைப் பயன்படுத்துவதற்கான தேவைகள்
உங்கள் Shopify ஸ்டோரில் இந்த வன்பொருளைப் பயன்படுத்த, நீங்கள் பின்வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:
- Shopify POS-ஐப் பயன்படுத்த வேண்டும்
- iOS 15 அல்லது அதற்கும் பிந்தைய பதிப்பில் இயங்கும் இணக்கமான iPad அல்லது iPhone இருக்க வேண்டும்
- Star Micronics mC-Print3 ரசீது அச்சுப்பொறி அல்லது Star Micronics TSP143IVUE ரசீது அச்சுப்பொறி இருக்க வேண்டும்
Star Micronics MCW10 வயர்லெஸ் LAN அடாப்டரைப் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை
நீங்கள் MCW10-ஐ இணைக்கும் Wi-Fi நெட்வொர்க் பெயர் (SSID) பின்வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:
- SSID-இல் இந்த எழுத்துகள் இருக்கக்கூடாது:
? " $ [ ¥ \ + - SSID இந்த எழுத்துகள் அல்லது இடைவெளியுடன் (space) தொடங்கக்கூடாது:
! # ; - SSID-இன் முடிவில் இடைவெளி (space) இருக்கக்கூடாது
Star Micronics MCW10 வயர்லெஸ் LAN அடாப்டரை எங்கு வாங்குவது
Star Micronics MCW10 வயர்லெஸ் LAN அடாப்டர், Shopify Hardware ஸ்டோரில் தனியாகவோ அல்லது தகுதிபெறும் அச்சுப்பொறிகளுடன் விருப்பத்திற்குரிய ஆட்-ஆனாகவோ (add-on) கிடைக்கும்.
உங்கள் Star Micronics MCW10 வயர்லெஸ் LAN அடாப்டரை ரசீது அச்சுப்பொறியுடன் இணைக்கவும்
Star Micronics MCW10 வயர்லெஸ் LAN அடாப்டரைப் பயன்படுத்துவதற்கு முன், நீங்கள் சாதனத்தை ஒரு ரசீது அச்சுப்பொறியுடன் இணைக்க வேண்டும். இணக்கமான ரசீது அச்சுப்பொறிகளில் Star Micronics mC-Print3 ரசீது அச்சுப்பொறி மற்றும் Star Micronics TSP143IVUE ரசீது அச்சுப்பொறி ஆகியவை அடங்கும்.
படிகள்:
- ரசீது அச்சுப்பொறியின் பவர் ஆஃப் செய்யப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும்.
- LAN கேபிளின் ஒரு முனையை MCW10-இன் LAN 1 போர்ட்டில் சொருகவும். கூடுதல் ரசீது அச்சுப்பொறிக்கு நீங்கள் LAN 2 போர்ட்டைப் பயன்படுத்தலாம்.
- LAN கேபிளின் மறுமுனையை ரசீது அச்சுப்பொறியின் ஈத்தர்நெட் போர்ட்டில் சொருகவும்.
- USB கேபிளை MCW10-இல் உள்ள USB போர்ட்டிலும், USB கேபிளின் மறுமுனையை ரசீது அச்சுப்பொறியிலும் சொருகவும். ரசீது அச்சுப்பொறியில் பொதுவாக USB போர்ட் "iPAD 2.4A." எனக் குறிக்கப்பட்டிருக்கும்.
- ரசீது அச்சுப்பொறியை ஆன் செய்யவும்.
- பவர் LED மற்றும் LAN 1 LED ஆகியவை எரிகின்றனவா என்பதையும், WLAN LED மெதுவாக ஒளிர்கிறதா என்பதையும் சரிபார்க்கவும்.
MCW10-இன் நெட்வொர்க் அமைப்புகளைத் தொடங்கமைக்கவும்
MCW10 சாதனம் பயன்பாட்டில் இருந்திருந்தாலோ நீங்கள் இணைப்புச் செயல்முறையை மீண்டும் செய்கிறீர்கள் என்றாலோ, புதிய நெட்வொர்க்குடன் MWC10 இணைக்கப்படுவதற்கு, நீங்கள் சாதனத்தின் நெட்வொர்க் அமைப்புகளைத் தொடங்கமைக்க வேண்டும்.
படிகள்:
- சாதனம் ரசீது அச்சுப்பொறியுடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும்.
- சாதனத்தின் பக்கவாட்டில் உள்ள மீட்டமை (reset) ஸ்விட்சை 5 வினாடிகள் அல்லது அதற்கும் மேலாக அழுத்திப் பிடிக்கவும்.
- பவர் LED ஒளிரத் தொடங்கி மற்ற LED-கள் ஆஃப் ஆகும் போது, தொடங்கமைப்பை ஆரம்பிக்க மீட்டமை (reset) ஸ்விட்சை விட்டுவிடவும்.