Star Micronics TSP143IIILAN ரசீது அச்சுப்பொறியில் சிக்கல் தீர்த்தல்
Star Micronics TSP143IIILAN ரசீது அச்சுப்பொறியில் ஏற்படும் பொதுவான சிக்கல்களைத் தீர்க்க இந்த வழிகாட்டியைப் பயன்படுத்தவும். நீங்கள் எதிர்கொள்ளும் குறிப்பிட்ட சிக்கலைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், படி 1: Star Micronics TSP143IIILAN ரசீது அச்சுப்பொறிக்கான பொதுவான சிக்கல் தீர்த்தல் என்பதை நிறைவுசெய்யவும். சிக்கல் தீர்க்கும் படிகள் மூலம் சிக்கல் தீர்க்கப்படவில்லை எனில், நீங்கள் Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளலாம்.
இந்தப் பக்கத்தில்
படி 1: Star Micronics TSP143IIILAN ரசீது அச்சுப்பொறிக்கான பொதுவான சிக்கல் தீர்த்தல்
உங்கள் ரசீது அச்சுப்பொறிச் சிக்கல்களுக்கு, பின்வரும் பொதுவான சிக்கல் தீர்க்கும் படிகளை நிறைவுசெய்யவும்:
Star Micronics TSP143IIILAN ரசீது அச்சுப்பொறியைப் பயன்படுத்த தேவைகளைப் பூர்த்திசெய்கிறீர்களா என்பதைச் சரிபார்க்கவும்.
Shopify POS புதுப்பித்த நிலையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.
உங்கள் சாதனம் புதுப்பித்த நிலையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்:
- உங்கள் iOS சாதனத்தைப் புதுப்பிக்க, சாதனத்தின் அமைப்புகளுக்குச் சென்று, General > Software Update என்பதைத் தட்டவும். புதுப்பிப்பு இருந்தால், Update now என்பதைத் தட்டலாம்.
- உங்கள் Android சாதனத்தைப் புதுப்பிக்க, உங்கள் சாதனத்தின் அமைப்புகளுக்குச் சென்று, Software update என்பதைத் தட்டவும். புதுப்பிப்பு ஏதேனும் இருந்தால், அதை நிறுவ திரையில் தோன்றும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
உங்கள் POS சாதனத்தை மறுதொடக்கம் செய்யவும்.
உங்கள் அச்சுப்பொறியை ஆஃப் செய்து, மின் இணைப்பைத் துண்டித்து அதை மறுதொடக்கம் செய்யவும். பிறகு மீண்டும் செருகி ஆன் செய்யவும்.
அச்சுப்பொறி ஒதுக்கப்பட்டுள்ள வலையமைப்பு 2.4g பேண்டில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும். 5g-மட்டுமே உள்ள வலையமைப்பில் அச்சுப்பொறியை இணைக்க முடியாது. பெரும்பாலான வலையமைப்புகள் டூயல்-பேண்ட் கொண்டவை, அதாவது Wi-Fi இணைப்பு 2.4g மற்றும் 5g ஆகிய இரண்டிலும் இருக்கும். உங்கள் வலையமைப்பு 2.4g ஆ அல்லது 5g ஆ என்று உறுதியாகத் தெரியவில்லை எனில், உங்கள் இணைய வழங்குநரைத் தொடர்புகொண்டு நேரடியாக விசாரிக்கவும். சில அரிய சூழ்நிலைகளில், நீங்கள் டூயல்-பேண்ட் வலையமைப்பைப் பிரிக்க வேண்டியிருக்கலாம்.
iOS அல்லது Android சாதன அமைப்புகளில் பின்வரும் அமைப்புகளை மதிப்பாய்வு செய்யவும்:
- iOS மற்றும் Android: இடம் என்பது இந்தச் செயலியைப் பயன்படுத்தும்போது என அமைக்கப்பட்டுள்ளது
- iOS மற்றும் Android: கேமரா ஆன் அல்லது அனுமதிக்கப்பட்டது என உள்ளது
- iOS: உள்ளூர் நெட்வொர்க் ஆன்-இல் உள்ளது
- iOS: பின்னணிச் செயலிப் புதுப்பிப்பு ஆன்-இல் உள்ளது
- iOS: இணையதளங்களுக்கு இடையிலான கண்காணிப்பை அனுமதி என்பது ஆன்-இல் உள்ளது
படி 2: Star Micronics TSP143IIILAN ரசீது அச்சுப்பொறிச் சிக்கலைத் தேர்ந்தெடுக்கவும்
ரசீது அச்சுப்பொறிச் சிக்கலைத் தேர்ந்தெடுத்து, அனைத்துச் சிக்கல் தீர்க்கும் படிகளையும் பின்பற்றவும்.
இணைப்புச் சிக்கல்களைத் தீர்த்தல்
உங்கள் அச்சுப்பொறி சாதனத்துடன் இணைக்கப்படவில்லை அல்லது அடிக்கடி துண்டிக்கப்பட்டால், அச்சுப்பொறியை ஆஃப் செய்துவிட்டு, ரவுட்டரிலிருந்து LAN கேபிளைத் துண்டிக்கவும், பிறகு மின் இணைப்பிலிருந்து ரவுட்டரைத் துண்டிக்கவும். 30 வினாடிகளுக்குப் பிறகு, LAN கேபிள் மற்றும் ரவுட்டரை மீண்டும் செருகவும். அச்சுப்பொறியை மீண்டும் ஆன் செய்யவும். உங்கள் சாதனம் வலையமைப்புடன் மீண்டும் இணைக்கப்படுவதற்குச் சிறிது நேரம் ஆகலாம்.
Shopify POS இன் இணைப்பு மெனுவில் அச்சுப்பொறி காட்டப்படவில்லை எனில், என்பதைத் தட்டி உங்கள் அச்சுப்பொறியை இணைக்கவும், பிறகு + வன்பொருளைச் சேர் > ரசீது அச்சுப்பொறி > Star Micronics> Ethernet/LAN என்பதைத் தட்டி, அச்சுப்பொறி மாடலைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் அச்சுப்பொறியில் சிக்கல் தீர்க்கவும்
உங்கள் அச்சுப்பொறியில் இன்னும் சிக்கல்கள் ஏற்பட்டால், கண்டறிதல் தகவலை அச்சிடுவதன் மூலம் உங்கள் அச்சுப்பொறியில் சிக்கலைத் தீர்க்கவும்.
படிகள்:
- உங்கள் அச்சுப்பொறியை ஆஃப் செய்துவிட்டு, FEED பொத்தானை அழுத்திப் பிடிக்கவும்.
- FEED பொத்தானை அழுத்திப் பிடிக்கும்போதே, அச்சுப்பொறியை மீண்டும் ஆன் செய்யவும். ஃபார்ம்வேர் தகவலை அச்சுப்பொறி அச்சிடும் வரை காத்திருந்து, பிறகு FEED பொத்தானை விட்டுவிடவும். அச்சுப்பொறி இணையத்துடன் இணைக்க முயற்சித்து, தொடர்ந்து மேலும் கண்டறிதல் தகவல்களை அச்சிடும்.
- காட்டப்படும் உரையுடன் பின்வரும் சிக்கல்களில் ஏதேனும் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்த, அச்சிடப்பட்ட தாளைச் சரிபார்க்கவும்:
| அச்சுப்பொறிச் சிக்கல் | சிக்கல் தீர்க்கும் படிகள் |
|---|---|
| "Current IP Parameters Status" என்பதன் கீழுள்ள IP முகவரி பூஜ்ஜியங்களைக் காட்டுகிறது |
1. அச்சுப்பொறியை ஆஃப் செய்து, ஐந்து வினாடிகள் காத்திருந்து மீண்டும் ஆன் செய்யவும். பிழைதிருத்தச் செயல்முறையை மீண்டும் முயலவும். 2. ரவுட்டரின் LAN போர்ட்டுடன் இணைக்கப்பட்டுள்ளதையும், ரவுட்டர் சரியாகச் செருகப்பட்டு வேலை செய்வதையும் உறுதிப்படுத்தவும். அச்சுப்பொறி தற்போது ஈத்தர்நெட் ஸ்விட்ச் அல்லது வால் போர்ட்டில் இணைக்கப்பட்டிருந்தால், அது வேலை செய்கிறதா என்பதை உறுதிப்படுத்த தற்காலிகமாக ரவுட்டரில் அச்சுப்பொறியைச் செருகவும். 3. மேற்கண்ட தீர்வுகள் எதுவும் பலனளிக்கவில்லை எனில், உங்கள் இணைய வழங்குநரைத் தொடர்புகொள்ளவும். உங்களின் இணைய அமைப்பில் சிக்கல் இருக்கலாம். |
| "No Host Connection" என்ற செய்தி காட்டப்படும் | உங்கள் இணைய இணைப்பை இழக்கும்போது அல்லது அச்சுப்பொறி ரவுட்டருடன் சரியாக இணைக்கப்படாதபோது இது பொதுவாக நிகழும். உங்கள் இணைய சிக்னல் மற்றும் ரவுட்டர் கேபிளைச் சரிபார்க்கவும். |
அச்சிடுதல் சிக்கல்களைத் தீர்த்தல்
ரசீதுகளை அச்சிடுவதில் சிக்கல் இருந்தால், காகிதம் சரியாகச் செருகப்பட்டுள்ளதையும், நிலை காட்டி விளக்கு அடர் நீல நிறத்தில் எரிவதையும் உறுதிப்படுத்தவும்.

ரசீது அச்சுப்பொறிக்குள் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் காகிதத்தைச் செலுத்தினால், காகிதம் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது. இப்படி நடந்தால், அச்சுப்பொறியை அணைத்து, அதைத் திறந்து, காகிதத்தை மீண்டும் உள்ளிடவும்.
குறிப்பிடப்பட்ட 3 அங்குல அகலத்தை விட ரசீதைச் சிறியதாக அமைக்க முயல்கிறீர்கள் என்றால், வழங்கப்பட்டுள்ள டிவைடரைப் பயன்படுத்துவதை உறுதிசெய்யவும். அச்சுப்பொறிக்குள் காகிதத்தைச் செலுத்தும் போது அதை மடிக்க வேண்டாம்.
ரூட்டரிலிருந்து அதிகத் தொலைவில் அச்சுப்பொறி இருப்பதற்கான சிக்கலைத் தீர்க்கவும்
வழங்கப்பட்டுள்ள வலையமைப்பு கேபிளின் அதிகபட்ச நீளம் 3 அடி மட்டுமே. உங்கள் ஸ்டோரின் பின்பகுதியில் ரூட்டரும் முன்பகுதியில் உங்கள் POS சிஸ்டமும் அமைந்திருந்தால், கேபிள் எட்டாமல் போகலாம். பின்வரும் மாற்றுத் தீர்வுகளைப் பரிசீலிக்கவும்:
அதிக நீளமுள்ள வலையமைப்பு கேபிளைக் கொள்முதல் செய்து, அதை ரூட்டரிலிருந்து அச்சுப்பொறிக்கு இணைக்கவும்.
உங்கள் ஸ்டோர் முழுவதும் நீளமான கேபிள்களைப் பயன்படுத்துவது சிறந்த தீர்வாக இல்லை எனில், உங்கள் ஸ்டோரின் வலையமைப்பில் ஒரு பகுதியாக இணைக்க, கூடுதலாக ஒரு ரூட்டரைக் கொள்முதல் செய்யலாம்.
LED விளக்குகள் ஒளிருவதைப் பற்றிய சிக்கலைத் தீர்க்கவும்
உங்கள் அச்சுப்பொறியிலுள்ள LED விளக்குகள் ஒளிர்கின்றன என்றால், சிக்கல் தீர்த்தல் படிகளுக்கு LED Display குறித்த Star Micronics ஆவணத்தைப் பரிசீலிக்கவும்.
அச்சுப்பொறி உறை திறக்காததைப் பற்றிய சிக்கலைத் தீர்க்கவும்
திறப்பதற்கான நெம்புகோலை அழுத்தியும் அச்சுப்பொறியின் உறை திறக்கவில்லை என்றால், கட்டரைப் பூட்டும் வகையில் காகிதம் சிக்கியிருக்க வாய்ப்புள்ளது. உறையைத் திறக்க, அச்சுப்பொறியை அணைத்து மீண்டும் இயக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது, பூட்டு தானாகவே விடுவிக்கப்படும்.
பவரை அணைத்துவிட்டு மீண்டும் இயக்கிய பிறகும் பூட்டு விடுவிக்கப்படவில்லை என்றால், நீங்களே மேனுவலாகப் பூட்டை விடுவிக்க வேண்டும்.
படிகள்:
- அச்சுப்பொறியை அணைக்கவும்.
- முன்பக்க உறையை அகற்றவும் (a).

- முன்பக்க உறைக்குள் சிக்கியுள்ள காகிதத்தை அகற்றவும்.
- கட்டர் குமிழியைச் சுழற்றி (b), நகரும் பகுதி (c) முகப்பு நிலைக்கு (d) வரும் வரை அதை நகர்த்தவும்.

- அச்சுப்பொறிக்குள் சிக்கியுள்ள காகிதத்தை அகற்றவும்.
- அச்சுப்பொறிக்குள் காகிதத்தைச் செருகவும்.
- முன்பக்க உறையை இணைக்கவும்.

- அச்சுப்பொறியை இயக்கவும்.
உங்கள் Star Micronics TSP143IIILAN ரசீது அச்சுப்பொறி குறித்து Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்
பொதுவான சிக்கல் தீர்த்தல் படிகள் மற்றும் குறிப்பிட்ட சிக்கலைத் தீர்க்கும் படிகளைப் பின்பற்றிய பிறகும் உங்கள் ரசீது அச்சுப்பொறி இயங்கவில்லை என்றால், நீங்கள் Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளலாம்.
Shopify POS இலிருந்து, ஐகான் > ஆதரவு > ஆதரவைத் தொடர்புகொள்க என்பதைத் தட்டவும்.