Star Micronics TSP143IV-UEWB ரசீது அச்சுப்பொறிக்கான சிக்கல் தீர்த்தல்
Star Micronics TSP143IV-UEWB ரசீது அச்சுப்பொறியில் உள்ள பொதுவான சிக்கல்களைத் தீர்க்க, இந்த வழிகாட்டியைப் பயன்படுத்தவும். நீங்கள் சந்திக்கும் குறிப்பிட்ட சிக்கலைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு, படி 1: Star Micronics TSP143IV-UEWB ரசீது அச்சுப்பொறிக்கான பொதுவான சிக்கல் தீர்த்தல் என்பதை நிறைவுசெய்யவும். இந்தச் சிக்கல் தீர்த்தல் படிகள் மூலம் சிக்கல் தீரவில்லை எனில், Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
இந்தப் பக்கத்தில்
படி 1: Star Micronics TSP143IV-UEWB ரசீது அச்சுப்பொறிக்கான பொதுவான சிக்கல் தீர்த்தல்
உங்கள் ரசீது அச்சுப்பொறிச் சிக்கல்களுக்குப் பின்வரும் பொதுவான சிக்கல் தீர்த்தல் படிகளை நிறைவுசெய்யவும்:
Star Micronics TSP143IV-UEWB ரசீது அச்சுப்பொறியைப் பயன்படுத்துவதற்கான தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்துள்ளீர்களா என்பதைச் சரிபார்க்கவும்.
Shopify POS புதுப்பித்த நிலையில் உள்ளதா என உறுதிசெய்யவும்.
உங்கள் சாதனம் புதுப்பித்த நிலையில் உள்ளதா என்பதை உறுதிசெய்யவும்:
- உங்கள் iOS சாதனத்தைப் புதுப்பிக்க, சாதனத்தின் அமைப்புகளுக்குச் சென்று General > Software Update என்பதைத் தட்டவும். ஏதேனும் புதுப்பிப்பு இருந்தால், Update now என்பதைத் தட்டலாம்.
- உங்கள் Android சாதனத்தைப் புதுப்பிக்க, சாதனத்தின் அமைப்புகளுக்குச் சென்று Software update என்பதைத் தட்டவும். ஏதேனும் புதுப்பிப்பு இருந்தால், திரையில் தோன்றும் வழிமுறைகளைப் பின்பற்றி அதை நிறுவவும்.
உங்கள் POS சாதனத்தை மறுதொடக்கம் செய்யவும்.
உங்கள் அச்சுப்பொறியை ஆஃப் செய்து, இணைப்பகற்றி மறுதொடக்கம் செய்யவும். பிறகு, மீண்டும் இணைத்து ஆன் செய்யவும்.
நீங்கள் Wi-Fi இணைப்பைப் பயன்படுத்தினால், அச்சுப்பொறி ஒதுக்கப்பட்டுள்ள நெட்வொர்க் 2.4g பேண்டாக உள்ளதா என உறுதிசெய்துகொள்ளவும். 5g-மட்டுமே உள்ள நெட்வொர்க்கில் அச்சுப்பொறியை இணைக்க முடியாது. பெரும்பாலான நெட்வொர்க்குகள் டூயல்-பேண்டாக உள்ளன, அதாவது Wi-Fi இணைப்பானது 2.4g மற்றும் 5g ஆகிய இரண்டிலுமே இயங்கும். உங்கள் நெட்வொர்க் 2.4g அல்லது 5g என உறுதியாகத் தெரியவில்லை எனில், உங்கள் இணைய வழங்குநரைத் தொடர்புகொண்டு நேரடியாகக் கேட்டுத் தெரிந்துகொள்ளவும். ஒரு சில அரிதான சமயங்களில், நீங்கள் ஒரு டூயல் பேண்ட் நெட்வொர்க்கைப் பிரிக்க வேண்டியிருக்கும்.
உங்கள் iOS அல்லது Android சாதன அமைப்புகளில் பின்வருவனவற்றைச் சரிபார்க்கவும்:
- iOS மற்றும் Android: Location என்பது When using this app என அமைக்கப்பட்டிருக்க வேண்டும்
- iOS மற்றும் Android: Camera என்பது On அல்லது Allowed என அமைக்கப்பட்டிருக்க வேண்டும்
- iOS: Local Network என்பது On என அமைக்கப்பட்டிருக்க வேண்டும்
- iOS: Background app refresh என்பது On என அமைக்கப்பட்டிருக்க வேண்டும்
- iOS: Allow Cross-Website Tracking என்பது On என அமைக்கப்பட்டிருக்க வேண்டும்
படி 2: Star Micronics TSP143IV-UEWB ரசீது அச்சுப்பொறி சிக்கலைத் தேர்ந்தெடுக்கவும்
ரசீது அச்சுப்பொறிச் சிக்கலைத் தேர்ந்தெடுத்து, அனைத்துச் சிக்கல் தீர்த்தல் படிகளையும் பின்பற்றவும்.
Shopify POS Hub இணைப்புச் சிக்கல்களைத் தீர்த்தல்
Shopify POS Hub மூலம் உங்கள் POS வன்பொருள் இணைக்கப்படவில்லை எனில், Shopify POS Hub சிக்கல் தீர்த்தல் படிகளை நிறைவுசெய்யவும்.
LAN இணைப்புச் சிக்கல்களைத் தீர்த்தல்
உங்கள் அச்சுப்பொறி சாதனத்துடன் இணைக்கப்படவில்லை அல்லது அடிக்கடி துண்டிக்கப்படுகிறது எனில், அச்சுப்பொறியை ஆஃப் செய்து, உங்கள் திசைவியிலிருந்து (router) LAN கேபிளை அகற்றவும், பின்னர் பவர் மூலத்திலிருந்து உங்கள் திசைவியை அகற்றவும். 30 வினாடிகளுக்குப் பிறகு, LAN கேபிள் மற்றும் உங்கள் திசைவியை மீண்டும் இணைக்கவும். உங்கள் அச்சுப்பொறியை மீண்டும் ஆன் செய்யவும். உங்கள் சாதனம் நெட்வொர்க்கில் மீண்டும் இணைக்கப்படச் சிறிது நேரம் ஆகலாம்.
Shopify POS இன் Connectivity மெனுவில் அச்சுப்பொறி காட்டப்படவில்லை எனில், என்பதைத் தட்டி அச்சுப்பொறியை இணைக்கவும், பிறகு + Add hardware > Receipt Printer > Star Micronics> Ethernet/LAN என்பதைத் தட்டி, அச்சுப்பொறி மாடலைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் அச்சுப்பொறியில் உள்ள சிக்கல்களைத் தீர்த்தல்
உங்கள் அச்சுப்பொறியில் இன்னும் சிக்கல்கள் இருந்தால், நோயறிதல் தகவல்களை அச்சிடுவதன் மூலம் உங்கள் அச்சுப்பொறியில் உள்ள சிக்கல்களைத் தீர்க்கவும்.
படிகள்:
- உங்கள் அச்சுப்பொறியை ஆஃப் செய்து, FEED பொத்தானை அழுத்திப் பிடிக்கவும்.
- FEED பொத்தானைத் தொடர்ந்து அழுத்திப் பிடித்தவாறே, அச்சுப்பொறியை மீண்டும் ஆன் செய்யவும். ஃபார்ம்வேர் தகவலை அச்சுப்பொறி அச்சிட அனுமதிக்கவும், அதன்பின் FEED பொத்தானை விட்டுவிடவும். அச்சுப்பொறி இணையத்துடன் இணைய முயன்று, மேலும் பல கண்டறிதல் தகவல்களைத் தொடர்ந்து அச்சிடும்.
- தோன்றும் உரைக்குப் பின்வரும் சிக்கல்களில் ஏதேனும் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்த, அச்சிடப்பட்ட காகிதத்தைச் சரிபார்க்கவும்:
| அச்சுப்பொறிச் சிக்கல் | சிக்கல் தீர்த்தல் படிகள் |
|---|---|
| "Current IP Parameters Status" என்பதன் கீழ் உள்ள IP முகவரி பூஜ்ஜியங்களைக் காட்டுகிறது |
1. அச்சுப்பொறியை ஆஃப் செய்து, ஐந்து வினாடிகள் காத்திருந்து மீண்டும் ஆன் செய்யவும். பிழைத்திருத்தச் செயல்முறையை மீண்டும் முயலவும். 2. உங்கள் ரௌட்டரின் LAN போர்ட்டில் இணைக்கப்பட்டுள்ளீர்களா என்பதையும் ரௌட்டர் சரியாகச் செருகப்பட்டு வேலை செய்கிறதா என்பதையும் உறுதிப்படுத்தவும். அச்சுப்பொறி தற்போது ஈதர்நெட் சுவிட்ச் அல்லது வால் போர்ட்டுடன் இணைக்கப்பட்டிருந்தால், அது வேலை செய்கிறதா என்பதை அறிய அச்சுப்பொறியைத் தற்காலிகமாக ரௌட்டரில் செருகவும். 3. மேற்கண்ட தீர்வுகள் எதுவும் பலனளிக்கவில்லை எனில், உங்கள் இணைய வழங்குநரைத் தொடர்புகொள்ளவும். உங்கள் இணைய அமைவில் சிக்கல் இருக்கலாம். |
| "No Host Connection" செய்தி காட்டப்படும் | உங்கள் இணைய இணைப்பானது துண்டிக்கப்படும்போது அல்லது உங்கள் அச்சுப்பொறி ரௌட்டருடன் சரியாக இணைக்கப்படாதபோது இது பொதுவாக நிகழும். உங்கள் இணையச் சிக்னல் மற்றும் ரௌட்டர் கேபிளைச் சரிபார்க்கவும். |
உங்கள் ரௌட்டரிலிருந்து அச்சுப்பொறி நீண்ட தூரத்தில் இருப்பதற்கான சிக்கல் தீர்த்தல்
வழங்கப்பட்டுள்ள வலையமைப்பு கேபிளின் நீளம் 3 அடி மட்டுமே. உங்கள் ரௌட்டர் ஸ்டோரின் பின்பக்கத்திலும் உங்கள் POS சிஸ்டம் முன்பக்கத்திலும் இருந்தால், கேபிள் எட்டாமல் போகலாம். பின்வரும் மாற்றுத் தீர்வுகளைப் பரிசீலிக்கவும்:
- கூடுதல் நீளமான வலையமைப்பு கேபிளை வாங்கி, ரௌட்டரில் இருந்து அச்சுப்பொறிக்கு இணைக்கவும்.
- உங்கள் ஸ்டோரில் நீளமான கேபிள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க விரும்பினால், உங்கள் ஸ்டோர் வலையமைப்பை விரிவுபடுத்திக் கூடுதல் ரௌட்டரை வாங்கி அச்சுப்பொறியை இணைக்கவும்.
Bluetooth இணைப்புப் பிரச்சனைகளுக்கான சிக்கல் தீர்த்தல்
உங்கள் அச்சுப்பொறி இணைக்கப்படாமலோ அடிக்கடி துண்டிக்கப்பட்டாலோ, பின்வரும் படிகளைப் பின்பற்றிச் சிக்கல் தீர்க்கவும்:
- உங்கள் சாதனம் மற்றும் அச்சுப்பொறியின் இணைப்பை நீக்கவும்.
- உங்கள் ரசீது அச்சுப்பொறியை அதன் தொழிற்சாலை அமைப்புகளுக்கு மீட்டமைக்கவும்.
- அச்சுப்பொறியுடன் உங்கள் சாதனத்தை இணைக்கவும்.
- சாதனத்தின் அமைப்புகளைத் திறக்கவும்.
- Bluetooth மெனு விருப்பத்தைத் தட்டி, அச்சுப்பொறி இணைக்கப்படவில்லை (Not connected) எனக் காட்டப்படுவதை உறுதிசெய்யவும்.
- அச்சுப்பொறியுடன் இணைக்க அதைத் தட்டவும்.
- அச்சுப்பொறி இணைக்கப்பட்டது எனக் காட்டப்படும்போது, அதை மீண்டும் மறுதொடக்கம் செய்யவும். அச்சுப்பொறி ஆன் ஆகும்போது, சிறிது நேரம் இணைக்கப்படவில்லை எனவும், அதன் பின் இணைக்கப்பட்டது எனவும் காட்டும்.
- நீங்கள் இரண்டாவது முறையாக அதை மறுதொடக்கம் செய்யும்போது அச்சுப்பொறி தானாகவே இணையவில்லை என்றால், தானியங்கு இணைப்பைச் செயல்படுத்தவும்.
- சோதனை ரசீதை அச்சிட்டுப் பார்ப்பதன் மூலம் அச்சுப்பொறியைச் சோதிக்கவும்.
உங்கள் அச்சுப்பொறியில் தொடர்ந்து இணைப்புச் சிக்கல்கள் இருந்தால், பிற Bluetooth சாதனங்களைத் துண்டித்துவிட்டு சிக்கல் தீர்த்தல் படிகளை மீண்டும் முயலவும். பிற Bluetooth இணைப்புகள் உங்கள் அச்சுப்பொறியின் இணைப்பில் இடையூறு செய்யலாம். வயர்லெஸ் குறுக்கீட்டால் ஏற்படும் Wi-Fi மற்றும் Bluetooth சிக்கல்களைத் தீர்க்கவும் நீங்கள் முயலலாம்.
ரௌட்டர் தூரச் சிக்கல்களுக்கான சிக்கல் தீர்த்தல்
வழங்கப்பட்டுள்ள வலையமைப்பு கேபிளின் நீளம் 3 அடி மட்டுமே. உங்கள் ரௌட்டர் ஸ்டோரின் பின்பக்கத்திலும் உங்கள் POS சிஸ்டம் முன்பக்கத்திலும் இருந்தால், கேபிள் எட்டாமல் போகலாம். பின்வரும் மாற்றுத் தீர்வுகளைப் பரிசீலிக்கவும்:
கூடுதல் நீளமான வலையமைப்பு கேபிளை வாங்கி, ரௌட்டரில் இருந்து அச்சுப்பொறிக்கு இணைக்கவும்.
உங்கள் ஸ்டோர் முழுவதும் நீண்ட கேபிள்களைப் பயன்படுத்துவது சிறந்த தீர்வாக இருக்காது எனில், உங்கள் ஸ்டோரில் உள்ள வலையமைப்பின் ஒரு பகுதியாக இணைக்க, கூடுதல் ரௌட்டரை நீங்கள் வாங்கலாம்.
ஒளிரும் LED விளக்குகளுக்கான சிக்கல் தீர்த்தல்
உங்கள் அச்சுப்பொறியில் LED விளக்குகள் ஒளிர்கின்றன எனில், சிக்கல் தீர்த்தல் படிகளுக்காக LED காட்சி குறித்த Star Micronics ஆவணத்தை மதிப்பாய்வு செய்யவும்.
அச்சுப்பொறி மூடி திறக்காததற்கான சிக்கல் தீர்த்தல்
ஓப்பன் லீவரை அழுத்தும்போதுகூட அச்சுப்பொறியின் மூடி திறக்கப்படவில்லை எனில், பேப்பர் சிக்கிக்கொண்டு கட்டரைப் பூட்டியிருக்க வாய்ப்புள்ளது. மூடியைத் திறக்க, பவரை ஆஃப் செய்துவிட்டு மீண்டும் ஆன் செய்வதன் மூலம் நீங்கள் பூட்டை விடுவிக்க வேண்டும், இது தானாகவே பூட்டை விடுவிக்கும்.
பவரை ஆஃப் மற்றும் ஆன் செய்த பிறகும் பூட்டு விடுபடவில்லை எனில், நீங்களே கைமுறையாகப் பூட்டை விடுவிக்க வேண்டும்.
படிகள்:
- அச்சுப்பொறியை ஆஃப் செய்யவும்.
- முன் மூடியை (a) அகற்றவும்.

- முன் மூடியின் உள்ளே சிக்கியிருக்கும் பேப்பரை அகற்றவும்.
- கட்டர் நாப்பை (b) சுழற்றி, நகரும் பகுதி (c) அதன் ஹோம் நிலையில் (d) அமரும் வரை நகர்த்தவும்.

- அச்சுப்பொறியின் உள்ளே சிக்கியிருக்கும் பேப்பரை அகற்றவும்.
- அச்சுப்பொறியின் உள்ளே பேப்பரைச் செருகவும்.
- முன் மூடியைப் பொருத்தவும்.

- அச்சுப்பொறியை ஆன் செய்யவும்.