Shopify POS பணப் பெட்டிகளின் உலகளாவியத் தேர்வு

உலகெங்கிலும் உள்ள வணிகங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட Shopify POS பணப் பெட்டிகளின் தேர்வை இந்தப் பக்கத்தில் காணலாம். குறிப்பிட்ட மாடல்கள், நிற விருப்பங்கள் மற்றும் பிராந்தியக் கிடைக்கும் தன்மை ஆகிய விவரங்களும் இதில் உள்ளன.

Shopify ஹார்டுவேர் ஸ்டோர் உள்ள நாட்டில் உங்கள் ஸ்டோர் அமைந்திருந்தால், Shopify ஹார்டுவேர் ஸ்டோரிலிருந்து நீங்கள் ஆதரிக்கப்படும் வன்பொருளை வாங்கலாம்.

Shopify ஹார்டுவேர் ஸ்டோர் உள்ள நாட்டில் உங்கள் ஸ்டோர் அமைந்திருக்கவில்லை எனில், ஆதரிக்கப்படும் மாடல் எண்களுக்கு இந்தப் பக்கத்தில் உள்ள தகவலைப் பயன்படுத்தி, சரிபார்க்கப்பட்ட மூன்றாம் தரப்புச் சில்லறை விற்பனையாளரிடம் வன்பொருளை வாங்கவும்.

Shopify POS-ஆல் ஆதரிக்கப்படும் பணப் பெட்டிகளை ஆராயுங்கள்

கீழே பட்டியலிடப்பட்டுள்ள Shopify POS உடன் இணக்கமான Shopify POS பணப் பெட்டிகளின் சேகரிப்பை ஆராயுங்கள். வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் கிடைக்கும் பிராண்டுகள், நிற விருப்பங்கள், மாடல் எண்கள் மற்றும் பிராந்தியக் கிடைக்கும் தன்மை பற்றிய விவரங்களும் இதில் உள்ளன.

வட அமெரிக்காவில் Shopify POS பணப் பெட்டிகள்

வட அமெரிக்காவில் Shopify POS-க்குக் கிடைக்கும் பல்வேறு பணப் பெட்டிகளை மதிப்பாய்வு செய்யுங்கள். இதில் Star Micronics-இன் வெவ்வேறு அளவுகள் மற்றும் நிறங்கள், குறிப்பிட்ட மாடல் விவரங்கள் மற்றும் பிராந்தியக் கிடைக்கும் தன்மை ஆகியவை இடம்பெற்றுள்ளன.

வட அமெரிக்காவில் Shopify POS-க்கான பணப் பெட்டிகளின் கிடைக்கும் தன்மை
பிராண்ட்பணப் பெட்டிநிற விருப்பங்கள்மாடல் எண்கிடைக்கும் தன்மை
Star Micronics14" பணப் பெட்டிகருப்பு அல்லது வெள்ளைCD4-1416கனடா, அமெரிக்கா
Star Micronics16" பணப் பெட்டிகருப்பு அல்லது வெள்ளைCD4-1616கனடா, அமெரிக்கா

ஐரோப்பாவில் Shopify POS பணப் பெட்டிகள்

பல நாடுகளில் கிடைக்கும் Star Micronics மாடல்களைக் கொண்ட ஐரோப்பாவில் உள்ள Shopify POS பணப் பெட்டிகளுக்கான விருப்பங்களை ஆராயுங்கள். இதில் நிறத் தேர்வுகள் மற்றும் மாடல் விவரக்குறிப்புகள் உள்ளன.

ஐரோப்பாவில் Shopify POS-க்கான பணப் பெட்டிகளின் கிடைக்கும் தன்மை
பிராண்ட்பணப் பெட்டிநிற விருப்பங்கள்மாடல் எண்கிடைக்கும் தன்மை
Star Micronics16" பணப் பெட்டிகருப்பு அல்லது வெள்ளைCD4-1616பெல்ஜியம், செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, லக்ஸம்பர்க், நெதர்லாந்து, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, யுனைடெட் கிங்டம்
Star Micronics16" பணப் பெட்டிகருப்பு அல்லது வெள்ளைCB-2002FNபெல்ஜியம், செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, லக்ஸம்பர்க், நெதர்லாந்து, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, யுனைடெட் கிங்டம்

ஆசியா-பசிபிக்கில் Shopify POS பணப் பெட்டிகள்

ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் Shopify POS-க்கு வழங்கப்படும் பணப் பெட்டிகளின் தேர்வை ஆராயுங்கள். இதில் VPOS மற்றும் Kingly போன்ற பிராண்டுகள், நிற விருப்பங்கள், மாடல் எண்கள் மற்றும் குறிப்பிட்ட சந்தைகளில் கிடைக்கும் தன்மை ஆகிய விவரங்கள் உள்ளன.

ஆசியா-பசிபிக் - Shopify POS-க்கான பணப் பெட்டிகளின் கிடைக்கும் தன்மை
பிராண்ட்பணப் பெட்டிநிற விருப்பங்கள்மாடல் எண்கிடைக்கும் தன்மை
VPOS14" பணப் பெட்டிகருப்புEC350ஆஸ்திரேலியா
VPOS16" பணப் பெட்டிகருப்புEC410ஆஸ்திரேலியா, நியூசிலாந்து
Kinglyபணப் பெட்டி - சிறியதுகருப்புPS-335-BLKசிங்கப்பூர்
Kinglyபணப் பெட்டி - பெரியதுகருப்புPS-405-BLKசிங்கப்பூர்

Shopify POS iOS மற்றும் Android சாதன இணக்கத்தன்மைத் தேவைகள்

Shopify POS ஆனது iOS மற்றும் Android சாதனங்களுக்கு மட்டுமே கிடைக்கும். லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் அல்லது Amazon Fire டேப்லெட்டுகளுக்கு இது கிடைக்காது.

பின்வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சாதனங்களில் Shopify POS இயங்கும்:

Shopify POS-உடன் இயங்கும் iPhone-கள், iPad-கள், Android சாதனங்கள் மற்றும் POS Go ஆகியவற்றின் பட்டியல், அத்துடன் தேவையான தலைமுறைகள் மற்றும் இயங்குதளங்கள்.
சாதனம்விளக்கம்
iPadiPadOS 15.1 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பைக் கொண்ட 5-வது தலைமுறை அல்லது அதற்கும் பிந்தைய தலைமுறைச் சாதனங்கள்
iPad Air iPadOS 15.1 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பைக் கொண்ட 2-வது தலைமுறை அல்லது அதற்கும் பிந்தைய தலைமுறைச் சாதனங்கள்
iPad miniiPadOS 15.1 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பைக் கொண்ட 4-வது தலைமுறை அல்லது அதற்கும் பிந்தைய தலைமுறைச் சாதனங்கள்
iPad ProiPadOS 15.1 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பைக் கொண்ட அனைத்து iPad Pro மாடல்களும்
iPhoneiOS 15.1 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பைக் கொண்ட iPhone 7 அல்லது அதற்கும் பிந்தைய மாடல்கள்
POS GoShopify வழங்கும் சமீபத்திய மென்பொருள் புதுப்பிப்புகளைக் கொண்ட POS Go
Androidஅதிகாரப்பூர்வ Android 10.0 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பைக் கொண்ட மற்றும் Google Play Services, Google Mobile Services ஆகியவை செயல்படுத்தப்பட்ட ஃபோன் அல்லது டேப்லெட்

Shopify POS செயலியானது, iOS 14 மற்றும் அதற்கு முந்தைய பதிப்புகளை இனி ஆதரிக்காது. பழைய iOS பதிப்புகளைக் கொண்டுள்ள சாதனங்களில் நீங்கள் தொடர்ந்து செயலியைப் பயன்படுத்தலாம், ஆனால் அதைப் புதுப்பிக்க முடியாது. பிழைத்திருத்தங்கள் மற்றும் புதிய அம்சங்களைப் பெற, உங்கள் சாதனத்தை iOS 15.1 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பிற்குப் புதுப்பிக்க வேண்டும். ஒருவேளை அது சாத்தியமில்லை எனில், iOS 15.1 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பைக் கொண்ட வேறொரு சாதனத்தில் Shopify POS-ஐப் பயன்படுத்தவும்.

iOS அனுமதிக்கான தேவைகள்

உங்கள் சாதனத்தை iOS 15.1 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பிற்குப் புதுப்பித்து, மூன்றாம் தரப்பு Shopify செயலிகளைப் பயன்படுத்தினால், உங்கள் iOS அமைப்புகளில் கிராஸ்-வெப்சைட் டிராக்கிங் (Cross-Website tracking) என்பதைச் செயல்படுத்த வேண்டியிருக்கலாம். உங்கள் Shopify நிர்வாகியில் நீங்கள் நிறுவும் மூன்றாம் தரப்பு Shopify செயலிகளை, Shopify Inbox, Shopify Point of Sale மற்றும் Shopify செயலியுடன் தொடர்ந்து இணைக்கப்பட்டிருக்க கிராஸ்-வெப்சைட் டிராக்கிங் அனுமதிக்கிறது.

கிராஸ்-வெப்சைட் டிராக்கிங் என்பதைச் செயல்படுத்த, பின்வரும் படிகளை நிறைவுசெய்யவும்:

  1. உங்கள் iOS சாதனத்தில், அமைப்புகள் (Settings) செயலியைத் திறக்கவும்.
  2. Shopify, Shopify POS அல்லது Shopify Inbox என்பதைத் தட்டவும்.
  3. Allow Cross-Website Tracking என்பதைச் செயல்படுத்தவும்.

CDW-டமிருந்து வன்பொருளை வாங்குதல்

CDW என்பது Shopify-இன் வன்பொருள், மென்பொருள் மற்றும் பேமெண்ட் தீர்வுகளை மீண்டும் விற்பனை செய்யும் ஒரு Shopify கூட்டாளர் ஆகும். நீங்கள் CDW-டமிருந்து வன்பொருளை வாங்கும்போது, CDW-இன் ரிட்டர்ன் பக்கம் மூலமாக 30 நாட்களுக்குள் உங்கள் வன்பொருளைத் திருப்பியளிக்கலாம்.

மூன்றாம் தரப்பு அல்லது முதல் தரப்பு உருப்படியில் உங்களுக்குச் சிக்கல் தீர்த்தல் ஆதரவு தேவைப்பட்டால், நீங்கள் Shopify ஆதரவு குழுவைத் தொடர்புகொள்ள வேண்டும்.

உங்களிடம் பழுதடைந்த மூன்றாம் தரப்பு உருப்படி இருந்தால், பழுதுபார்ப்பதற்கு அல்லது மாற்றிப் பெறுவதற்கு நீங்கள் உற்பத்தியாளரைத் தொடர்புகொள்ள வேண்டும். உங்களிடம் பழுதடைந்த முதல் தரப்பு உருப்படி இருந்தால், அதனை மாற்றிப் பெறுவதற்கு Shopify-ஐத் தொடர்புகொள்ள வேண்டும்.