Shopify POS சாதன ஸ்டாண்டுகள் உலகளாவிய ரீதியில் கிடைக்கும் தன்மை

நேரடி விற்பனைக்காக, உங்கள் POS சாதனங்களைப் பாதுகாப்பாக வைத்துப் பயன்படுத்துவதற்கு என வடிவமைக்கப்பட்ட பல்வேறு சாதன ஸ்டாண்டுகளை Shopify POS ஆதரிக்கிறது. கிடைக்கும் சாதன ஸ்டாண்டுகளைப் பற்றி மதிப்பாய்வு செய்யவும், உங்கள் வன்பொருளுடன் அவை இணங்குகின்றனவா என்பதை உறுதிப்படுத்தவும், நாட்டிற்கேற்ப அவை கிடைக்கும் தன்மையைச் சரிபார்க்கவும் இந்தப் பக்கத்தைப் பயன்படுத்தவும். ஆதரிக்கப்படும் சாதன ஸ்டாண்டைத் தேர்ந்தெடுப்பது, செக்அவுட் அனுபவத்தை எளிதாக்குவதற்கும் உங்கள் POS அமைவைச் சீராக வைத்திருப்பதற்கும் உதவும்.

Shopify POS-ஆல் ஆதரிக்கப்படும் சாதன ஸ்டாண்டுகளை ஆராய்தல்

பல்வேறு டேப்லெட்டுகளுக்கு ஏற்ற பல மாடல்களைக் கொண்ட, Shopify POS இணக்கச் சாதன ஸ்டாண்டுகளைப் பற்றி ஆராயுங்கள். மாடல் எண்கள் மற்றும் அவை பல்வேறு நாடுகளில் கிடைக்கின்றமை பற்றிய விரிவான தகவல்கள் கீழேயுள்ள அட்டவணையில் விளக்கப்பட்டுள்ளன.

Shopify POS இணக்கச் சாதன ஸ்டாண்டுகளின் பட்டியல் மற்றும் நாட்டிற்கேற்ப அவற்றின் கிடைக்கும் தன்மை.
iPad ஸ்டாண்ட்மாடல் எண்கிடைக்கும் தன்மை
Bouncepad Eddy Tablet Standஏதுமில்லைபெல்ஜியம், கனடா, செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, சிங்கப்பூர், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா
Bosstab Touch Nexus Universal Tablet Standஏதுமில்லைஆஸ்திரேலியா

CDW-டமிருந்து வன்பொருளை வாங்குதல்

CDW என்பது Shopify-இன் வன்பொருள், மென்பொருள் மற்றும் பேமெண்ட் தீர்வுகளை மீண்டும் விற்பனை செய்யும் ஒரு Shopify கூட்டாளர் ஆகும். நீங்கள் CDW-டமிருந்து வன்பொருளை வாங்கும்போது, CDW-இன் ரிட்டர்ன் பக்கம் மூலமாக 30 நாட்களுக்குள் உங்கள் வன்பொருளைத் திருப்பியளிக்கலாம்.

மூன்றாம் தரப்பு அல்லது முதல் தரப்பு உருப்படியில் உங்களுக்குச் சிக்கல் தீர்த்தல் ஆதரவு தேவைப்பட்டால், நீங்கள் Shopify ஆதரவு குழுவைத் தொடர்புகொள்ள வேண்டும்.

உங்களிடம் பழுதடைந்த மூன்றாம் தரப்பு உருப்படி இருந்தால், பழுதுபார்ப்பதற்கு அல்லது மாற்றிப் பெறுவதற்கு நீங்கள் உற்பத்தியாளரைத் தொடர்புகொள்ள வேண்டும். உங்களிடம் பழுதடைந்த முதல் தரப்பு உருப்படி இருந்தால், அதனை மாற்றிப் பெறுவதற்கு Shopify-ஐத் தொடர்புகொள்ள வேண்டும்.