QuickBooks Desktop கணக்கியல் மென்பொருளை Shopify உடன் ஒருங்கிணைத்தல்
நீங்கள் QuickBooks Desktop கணக்கியல் மென்பொருளைப் பயன்படுத்தினால், உங்களின் QuickBooks Desktop செயலி கணக்கை உங்கள் Shopify POS உடன் ஒருங்கிணைக்கலாம். இந்தச் செயல், விற்பனை மற்றும் கொள்முதல் போன்ற உங்களின் அனைத்து வணிக, கணக்கியல் தரவையும் உங்கள் கணக்கியல் சிஸ்டத்தில் ஒத்திசைக்கும்.
ஒருங்கிணைக்க, உங்களின் வரி குறித்த விருப்பத்தேர்வுகளை அமைத்து, ஒரு செயலி டோக்கனை உருவாக்கி, உங்கள் கணக்கைப் பொருத்தி, அதன் பிறகு ஒருங்கிணைப்பைத் தொடங்க வேண்டும்.
இந்தப் பக்கத்தில் இருப்பவை
உங்களின் QuickBooks Desktop கணக்கியல் மென்பொருளை Shopify உடன் ஒருங்கிணைக்கும்போது கவனிக்க வேண்டியவை
நீங்கள் ஒருங்கிணைப்பைத் தொடங்குவதற்கு முன், கவனிக்க வேண்டிய பின்வரும் விஷயங்களைச் சரிபார்க்கவும்:
- உங்கள் டெஸ்க்டாப் சாதனத்தில் QuickBooks Desktop செயலியின் சமீபத்திய பதிப்பு நிறுவப்பட்டுள்ளதை உறுதிசெய்துகொள்ளவும்.
- உங்கள் Shopify நிர்வாகியில் QuickBooks Desktop கனெக்டர் செயலி நிறுவப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தவும்.
- உங்களின் QuickBooks Desktop POS ஐப் பயன்படுத்தும் அதே டெஸ்க்டாப் சாதனத்தில் QuickBooks Desktop கணக்கியல் மென்பொருளின் ஒருங்கிணைப்பைத் தொடங்குவதை உறுதிசெய்துகொள்ளவும்.
- நீங்கள் QuickBooks Desktop POS ஐப் பயன்படுத்தினால், QuickBooks Desktop கணக்கியல் மென்பொருளை Shopify உடன் ஒருங்கிணைக்கத் தொடங்குவதற்கு முன், QuickBooks POS தரவு இடமாற்றத்தை முடித்திருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
- நீங்கள் QuickBooks Desktop-க்குப் பதிலாக QuickBooks Online ஐப் பயன்படுத்தினால், உங்கள் தரவை Shopify உடன் ஒருங்கிணைக்க QuickBooks Desktop கனெக்டர் செயலியைப் பயன்படுத்தத் தேவையில்லை. உங்கள் தரவை ஒருங்கிணைக்க, உங்களின் Shopify ஸ்டோரில் QuickBooks Online செயலியை நிறுவவும்.
- ஒருங்கிணைப்புச் செயல்முறையை ஒரு முறை மட்டுமே முடிக்க முடியும், அதை மீண்டும் செய்ய முடியாது. நீங்கள் ஒருங்கிணைப்பை மீட்டமைக்க வேண்டும் என்றால், பிரத்தியேக ஆதரவுக் குழுவைத் தொடர்புகொள்ளவும்.
படி 1: உங்கள் வரி குறித்த விருப்பத்தேர்வுகளை அமைக்கவும்
ஒருங்கிணைப்பைத் தொடங்குவதற்கு முன், QuickBooks Desktop கணக்கியல் மென்பொருளில் உங்கள் வரி விருப்பத்தேர்வுகளை அமைக்க வேண்டும்.
படிகள்:
- உங்கள் டெஸ்க்டாப் சாதனத்திலிருந்து, QuickBooks Desktop செயலியைத் திறக்கவும்.
- Edit > Preferences என்பதைக் கிளிக் செய்யவும்.
- Do you charge sales tax பிரிவில், Yes என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- விற்பனை வரி உருப்படியைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது சேர்க்கவும்:
- உங்களிடம் மிகவும் பொதுவான விற்பனை வரி உருப்படி இருந்தால், அதை Most common sales tax item புலத்தில் தேர்ந்தெடுக்கவும்.
- புதிய விற்பனை வரி உருப்படியைச் சேர்க்க, பின்வருவனவற்றைச் செய்யவும்:
- Add sales tax item என்பதைக் கிளிக் செய்யவும்.
- Sales Tax Name என்பதில், உங்கள் விற்பனை வரி உருப்படிக்குப் பெயரிடவும்.
- Description புலத்தில், Sales Tax என உள்ளிடவும்.
- Tax Rate (%) புலத்தில், 0% என உள்ளிடவும்.
- OK என்பதைக் கிளிக் செய்யவும்.
- OK என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 2: செயலி டோக்கனை உருவாக்கவும்
உங்கள் வரி விருப்பத்தேர்வுகளை அமைத்த பிறகு, QuickBooks Desktop கணக்கியல் மென்பொருளில் செயலி டோக்கனை உருவாக்க வேண்டும்.
படிகள்:
- உங்கள் டெஸ்க்டாப் சாதனத்திலிருந்து, QuickBooks Desktop செயலியைத் திறக்கவும்.
- File > App Management > Manage Web Apps என்பதைக் கிளிக் செய்யவும்.
- Search Apps புலத்தில், Shoppinpal QBD connector என்பதை உள்ளிட்டுத் தேடவும்.
- Action நெடுவரிசையில், Set up என்பதைக் கிளிக் செய்யவும்.
- Generate token என்பதைக் கிளிக் செய்யவும்.
- Copy to clipboard என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 3: உங்கள் கணக்கை மேப் செய்து ஒருங்கிணைப்பைத் தொடங்கவும்
உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள QuickBooks Desktop Connector செயலியைப் பயன்படுத்தி ஒருங்கிணைப்பைத் தொடங்க, செயலி டோக்கனைச் சேர்க்க வேண்டும், Shopify வகைகளுடன் உங்கள் QuickBooks தரவுப் புலங்களை மேப் செய்ய வேண்டும் மற்றும் உங்கள் Stocky API விசையைச் சேர்க்க வேண்டும்.
மேலும் QuickBooks Desktop கணக்கியல் மென்பொருளுடன் தரவை எவ்வாறு பகிர விரும்புகிறீர்கள் என்பதையும் தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் இரண்டு ஒத்திசைவுப் பயன்முறைகளில் இருந்து தேர்வுசெய்யலாம்:
- சுருக்கப் பயன்முறை: QuickBooks Desktop கணக்கியல் மென்பொருளுக்குச் சுருக்கமான தரவை அனுப்பும். நீங்கள் QuickBooks Desktop Pro அல்லது Premier பதிப்பைப் பயன்படுத்தி, 14,500 க்கும் மேற்பட்ட ஒருங்கிணைந்த தரவு வரிசைகளைக் கொண்டிருந்தால், நீங்கள் சுருக்க ஒத்திசைவுப் பயன்முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- விவரப் பயன்முறை: QuickBooks Desktop கணக்கியல் மென்பொருளுக்குப் பெயர்கள் மற்றும் விளக்கங்கள் போன்ற என்டிட்டிகளின் முழு விவரங்களை அனுப்பும்.
QuickBooks Desktop கணக்கியல் மென்பொருளை Shopify உடன் ஒருங்கிணைக்கும் போது மட்டுமே தரவு ஒத்திசைவுப் பயன்முறையைத் தேர்ந்தெடுக்க முடியும். தரவு ஒத்திசைவுப் பயன்முறையை உங்களால் பிறகு மாற்ற முடியாது.
QuickBooks மற்றும் Shopify தரவு மேப்பிங் பற்றி மேலும் அறிக.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், செயலிகள் > QuickBooks Desktop Connector என்பதற்குச் செல்லவும்.
Start integration என்பதைக் கிளிக் செய்யவும்.
விற்பனை வரி விருப்பத்தேர்வுகள் தொடர்பான வழிமுறைகளை மதிப்பாய்வு செய்து, பின்னர் Generate app token next என்பதைக் கிளிக் செய்யவும்.
D. Enter token பிரிவில், செயலி டோக்கனைச் சேர்த்து, பின்னர் Next என்பதைக் கிளிக் செய்யவும்.
Account mapping பிரிவில், Shopify வகைகளுடன் பொருந்தக்கூடிய உங்கள் QuickBooks புலங்களைத் தேர்ந்தெடுக்கவும். எடுத்துக்காட்டாக, Cost of goods sold புலத்துடன் பொருத்த COGS account வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
Sync scheduler பிரிவில், மேனுவல் ஒத்திசைவுப் பயன்முறை அல்லது தானியங்கி ஒத்திசைவுப் பயன்முறையைத் தேர்வுசெய்யவும்.
- விருப்பத்தேர்வு: தானியங்கி ஒத்திசைவிற்கு, ஒத்திசைவு நடைபெற வேண்டிய நாளின் நேரத்தைத் தேர்வுசெய்யவும். (ஒத்திசைவு 15 நிமிட கால அவகாசத்திற்குள் நிகழும் என்பதை நினைவில் கொள்ளவும். மேனுவல் ஒத்திசைவை எந்த நேரத்திலும் நிகழ்த்தலாம்.)
Sync mode பிரிவில், Customer, Inventory மற்றும் Vendor ஆகியவற்றிற்கு Summary அல்லது Detailed ஒத்திசைவுப் பயன்முறையைத் தேர்ந்தெடுக்கவும்.
Enter Stocky's API key to start the sync பிரிவில், உங்கள் Stocky API விசையை உள்ளிடவும்.
Start integration என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் நிதித் தரவு மற்றும் விற்பனைத் தரவை QuickBooks Desktop கணக்கியல் மென்பொருளுடன் ஒத்திசைக்க, ஒருங்கிணைப்பிற்குப் பிறகு உங்கள் Shopify நிர்வாகியில் QuickBooks Desktop Connector செயலியை நிறுவியிருக்க வேண்டும். QuickBooks Desktop Connector செயலியில் எந்த நேரத்திலும் உங்கள் தரவை நீங்கள் மேனுவலாக ஒத்திசைக்கத் தொடங்கலாம். தானியங்கி தினசரி தரவு ஒத்திசைவை நீங்கள் அமைக்கலாம், இது தரவு ஒத்திசைவைத் திட்டமிட உங்களை அனுமதிக்கிறது.