QuickBooks Desktop கணக்கியல் மென்பொருள் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்திசைவுப் பிழைகள் மற்றும் பொதுவான சிக்கல்களைச் சிக்கல் தீர்த்தல்
உங்கள் QuickBooks Desktop கணக்கியல் மென்பொருளை Shopify உடன் ஒருங்கிணைக்கும்போது அல்லது ஒத்திசைக்கும்போது, நீங்கள் பிழைகளைச் சந்திக்க நேரிடலாம். இந்தப் பக்கத்தில் நீங்கள் பொதுவான பிழைகள் மற்றும் அவற்றை எப்படிச் சிக்கல் தீர்ப்பது என்பது குறித்த வழிகாட்டுதலைக் காணலாம்.
இந்தப் பக்கத்தில்
அடிப்படையான சிக்கல் தீர்த்தல் படிகள்
உங்கள் QuickBooks Desktop தரவை Shopify உடன் ஒருங்கிணைப்பதில் உங்களுக்குச் சிக்கல்கள் இருந்தால், பின்வரும் அடிப்படையான சிக்கல் தீர்த்தல் படிகளைப் பூர்த்தி செய்யவும்.
உங்கள் கணினி இயங்குதளம் மற்றும் QuickBooks Desktop மென்பொருளைப் புதுப்பிக்கவும்
- உங்கள் கணினியில் இணைய இணைப்பு இருப்பதை உறுதிப்படுத்தவும்.
- உங்கள் Windows இயங்குதளம் புதுப்பித்த நிலையில் உள்ளதா என்பதை உறுதிசெய்யவும்.
- QuickBooks Desktop செயலியைச் சமீபத்திய வெளியீட்டிற்குப் புதுப்பிக்கவும்.
- உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்யவும்.
உங்கள் QuickBooks Desktop செயலிக்கான 'Run as administrator' விருப்பத்தை முடக்கவும்
- நீங்கள் மட்டுமே உள்நுழைந்துள்ள Windows பயனர் என்பதை உறுதிசெய்யவும்.
- QuickBooks Desktop செயலியை மூடிவிட்டு, பிறகு உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்யவும்.
- QuickBooks Desktop ஷார்ட்கட்டை வலது கிளிக் செய்து, Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- Advanced என்பதைக் கிளிக் செய்யவும்.
- Run as administrator என்பதன் தேர்வகற்றவும்.
- OK என்பதைக் கிளிக் செய்து, பிறகு மீண்டும் OK என்பதைக் கிளிக் செய்யவும்.
- செயலியைத் திறக்க, QuickBooks Desktop ஷார்ட்கட்டை இருமுறை கிளிக் செய்யவும்.
நிர்வாகி பயனர் சுயவிவரத்தைப் பயன்படுத்தி, QuickBooks Desktop-இல் உள்நுழையவும்
- QuickBooks நிறுவனக் கோப்பைத் திறக்கவும்.
- நிர்வாகி சுயவிவரத்தின் சான்றுகளை உள்ளிடவும்.
- நீங்கள் நிர்வாகியாக உள்நுழைந்துள்ளதை உறுதிப்படுத்தவும்:
- Company மெனுவைக் கிளிக் செய்து, Set Up Users and Passwords என்பதைக் கிளிக் செய்யவும்.
- Set Up Users என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- நிர்வாகி பயனர் உள்நுழைந்துள்ளதாகக் காட்டப்படுகிறதா என்பதைச் சரிபார்க்கவும்.
உங்கள் QuickBooks நிறுவனக் கோப்பினை ஒற்றைப் பயனர் (single user) பயன்முறையில் திறக்கவும்
- உங்கள் QuickBooks Desktop செயலியில், File என்பதைக் கிளிக் செய்யவும்.
- மெனுவில் Switch to Single User Mode விருப்பம் காட்டப்பட்டால், அந்த விருப்பத்தைக் கிளிக் செய்து, ஒற்றைப் பயனர் பயன்முறைக்கு மாறுவதற்கான அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்.
Shopify நிர்வாகியிலுள்ள Realm ID, QuickBooks Desktop-இல் உள்ள Company Intuit ID ஆகியவற்றுடன் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்தவும்
- QuickBooks Desktop செயலியைத் திறந்து, நிர்வாகி பயனர் சுயவிவரத்தைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
- தயாரிப்புத் தகவல் திரையைத் திறக்க, உங்கள் கீபோர்டில் F2 விசையை அழுத்தவும்.
- உங்கள் Shopify நிர்வாகியின் QuickBooks Desktop Connector-இல் காட்டப்படும் Realm ID, Company Intuit ID உடன் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்தவும்.
Shopify Connector செயலில் உள்ளதாக (Active) காட்டப்படுவதை உறுதிப்படுத்தவும்
- QuickBooks Desktop செயலியைத் திறந்து, நிர்வாகி பயனர் சுயவிவரத்தைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
- File > App Management > Manage Web Apps என்பதைக் கிளிக் செய்யவும்.
- Connected apps என்பதைக் கிளிக் செய்யவும்.
- Shopify Connector செயலி செயலில் உள்ளதாகக் காட்டப்படுகிறதா என்பதைச் சரிபார்க்கவும்.
- Shopify Connector செயலி செயலில் இல்லை எனில், Status கீழ்தோன்றும் மெனுவைக் கிளிக் செய்து, Reconnect என்பதைக் கிளிக் செய்யவும்.
பொதுவான பிழைகளைச் சிக்கல் தீர்த்தல்
QuickBooks Desktop கணக்கியல் மென்பொருளை அமைக்கும்போது அல்லது அதனுடன் உங்கள் தரவை ஒத்திசைக்கும்போது நீங்கள் பிழைகளைச் சந்திக்க நேரிடலாம். நீங்கள் சந்திக்கக் கூடிய பொதுவான பிழைகளுக்கான உதாரணங்கள் பின்வருமாறு:
- டோக்கனை உருவாக்கும்போது அங்கீகரிப்பு தோல்வியடைந்தது
- பட்டியலிடப்பட்ட நிர்வாகி அல்ல
- Shopify-ஆல் QuickBooks Desktop கணக்கியலுடன் ஒத்திசைக்க முடியவில்லை
- QuickBooks-ஐத் தொடங்க முடியவில்லை
- Shopify-ஆல் QBD 0x8004040D உடன் இணைக்க முடியவில்லை
- Shopify-ஆல் QBD 0x8004041D உடன் இணைக்க முடியவில்லை
- Shopify உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள நிறுவனமானது, தற்போது Quickbooks Desktop-இல் திறக்கப்பட்டுள்ள நிறுவனத்திலிருந்து வேறுபட்டது: 0x8004040A
- Shopify-ஆல் QuickBooks Desktop கணக்கியலுடன் ஒத்திசைக்க முடியவில்லை. 9900
டோக்கனை உருவாக்கும்போது அங்கீகரிப்பு தோல்வியடைந்தது
QuickBooks Desktop நிறுவனக் கோப்பில் நீங்கள் டோக்கனை உருவாக்க முயலும்போது, டோக்கனை உருவாக்கும்போது அங்கீகரிப்பு தோல்வியடைந்தது என்ற பிழையைப் பெறக்கூடும்.
படிகள்:
- அடிப்படையான சிக்கல் தீர்த்தல் படிகளைப் பூர்த்தி செய்யவும்.
- உங்கள் கணினியிலிருந்து QuickBooks Desktop கணக்கியல் மென்பொருளின் பழைய பதிப்புகள் எதேனும் இருந்தால், அவற்றை அகற்றவும்.
- உங்கள் கணினியில் Control Panel-ஐத் திறந்து, Programs and Features என்பதைக் கிளிக் செய்யவும்.
- பழைய QuickBooks Desktop பதிப்பைத் தேர்ந்தெடுத்து, Uninstall என்பதைக் கிளிக் செய்யவும்.
- பழைய பதிப்பினை நிறுவல் நீக்க, அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்.
- உங்கள் QuickBooks Desktop கணக்கியல் மென்பொருளைச் சரிசெய்யவும்:
- உங்கள் கணினியில் Control Panel-ஐத் திறந்து, Programs and Features என்பதைக் கிளிக் செய்யவும்.
- QuickBooks Desktop-இன் தற்போதைய பதிப்பைத் தேர்ந்தெடுத்து, Uninstall என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்களின் தற்போதைய பதிப்பைச் சரிசெய்ய அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்.
- புதிய Windows பயனர் சுயவிவரத்தை உருவாக்கி, புதிதாக உருவாக்கப்பட்ட Windows பயனரைப் பயன்படுத்தி உங்கள் QuickBooks டெஸ்க்டாப் மென்பொருளை மீண்டும் நிறுவவும்.
பட்டியலிடப்பட்ட நிர்வாகி இல்லை
நிர்வாகப் பயனர் சுயவிவரத்திற்குப் பதிலாக கணக்காளர் பயனர் சுயவிவரத்தைப் பயன்படுத்தி நீங்கள் டோக்கனை உருவாக்க முயலும்போது பட்டியலிடப்பட்ட நிர்வாகி இல்லை பிழையைப் பெறலாம். உங்கள் QuickBooks நிறுவனக் கோப்பில் Company Intuit ID-ஐ நீங்கள் மீட்டமைக்க வேண்டும்.
படிகள்:
- உங்கள் QuickBooks நிறுவனக் கோப்பிலிருந்து, உதவி > Intuit ID-ஐ மீட்டமை என்பதைக் கிளிக் செய்யவும்.
- YES என்பதை உள்ளிட்டு, சரி என்பதைக் கிளிக் செய்யவும்.
- QuickBooks டெஸ்க்டாப் செயலியை மூடி, மீண்டும் திறக்கவும்.
- நிர்வாகப் பயனர் சுயவிவரத்தைப் பயன்படுத்தி உங்கள் Intuit கணக்கில் உள்நுழைவதற்கு, பிராம்ட்டுகளைப் பின்பற்றவும்.
Shopifyஆல் QuickBooks Desktop Accounting உடன் ஒத்திசைக்க முடியவில்லை
Shopifyஇலிருந்து QuickBooks டெஸ்க்டாப்புக்குத் தரவை ஒத்திசைப்பதற்கான கோரிக்கையைப் பெறுவதற்கு 30 வினாடிகளுக்கும் மேல் ஆகும் போது, நீங்கள் Shopifyஆல் QuickBooks Desktop Accounting உடன் ஒத்திசைக்க முடியவில்லை என்பதைப் பெறலாம்.
படிகள்:
- அடிப்படையான சிக்கல் தீர்த்தல் படிகளைப் பூர்த்தி செய்யவும்.
- செயலி அனுமதிகளை அங்கீகரிக்க, உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, முகப்பு என்பதைக் கிளிக் செய்து, பிறகு QuickBooks கனெக்டர் என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்யவும்.
நிறுவனக் கோப்பு வேறு கணினியில் ஹோஸ்ட் செய்யப்பட்டிருந்தால், வலையமைப்புத் தாமதம் காரணமாக காலாவதி ஆகலாம். QuickBooks டெஸ்க்டாப் செயலி இருக்கும் அதே கணினிக்கு உங்கள் நிறுவனக் கோப்பை மாற்றுவதைப் பரிசீலிக்கவும்.
QuickBooks-ஐத் தொடங்க முடியவில்லை
பின்வரும் காரணங்களால் நீங்கள் QuickBooks-ஐத் தொடங்க முடியவில்லை என்ற பிழையைப் பெறலாம்:
- நிரல் அனுமதி நிலைகளில் முரண்பாட்டை ஏற்படுத்தும் நிர்வாகி சுயவிவரத்தைப் பயன்படுத்தி, QuickBooks தொடங்கப்படுவதால்.
- நிறுவனக் கோப்பு திறக்கப்படவில்லை என்பதோடு, அந்தக் கோப்பின் நிர்வாகப் பயனரைப் பயன்படுத்தி உள்நுழையவில்லை.
- QuickBooksஇன் பல பதிப்புகள் நிறுவப்பட்டுள்ளன. பழைய பதிப்புகளை அகற்றிவிட்டு, சமீபத்திய பதிப்பை மட்டும் நிறுவி வைத்திருக்கவும்.
- தவறான நிறுவனக் கோப்பு திறக்கப்பட்டுள்ளது.
படிகள்:
- அடிப்படையான சிக்கல் தீர்த்தல் படிகளைப் பூர்த்தி செய்யவும்.
- உங்கள் கணினியிலிருந்து QuickBooks Desktop கணக்கியல் மென்பொருளின் பழைய பதிப்புகள் எதேனும் இருந்தால், அவற்றை அகற்றவும்.
- உங்கள் கணினியில் Control Panel-ஐத் திறந்து, Programs and Features என்பதைக் கிளிக் செய்யவும்.
- பழைய QuickBooks Desktop பதிப்பைத் தேர்ந்தெடுத்து, Uninstall என்பதைக் கிளிக் செய்யவும்.
- பழைய பதிப்பினை நிறுவல் நீக்க, அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்.
- உங்கள் QuickBooks Desktop கணக்கியல் மென்பொருளைச் சரிசெய்யவும்:
- உங்கள் கணினியில் Control Panel-ஐத் திறந்து, Programs and Features என்பதைக் கிளிக் செய்யவும்.
- QuickBooks Desktop-இன் தற்போதைய பதிப்பைத் தேர்ந்தெடுத்து, Uninstall என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்களின் தற்போதைய பதிப்பைச் சரிசெய்ய அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்.
Shopifyஆல் QBD 0x8004040D உடன் இணைய முடியவில்லை
பல ஒத்திசைவு முயற்சிகள் தோல்வியடையும் போது அல்லது உங்கள் QuickBooks டெஸ்க்டாப் செயலியானது சமீபத்திய பதிப்பில் இல்லாதபோது, நீங்கள் Shopifyஆல் QBD 0x8004040D உடன் இணைய முடியவில்லை என்ற பிழையைப் பெறலாம். நீங்கள் அடிப்படைச் சிக்கல் தீர்த்தல் படிகளை முடித்து, பின்னர் QBConfiguration-ஐ மீண்டும் உருவாக்க வேண்டும்.
படிகள்:
- Windows தேடலில், Services.mscஎன்பதை உள்ளிட்டு, அதன் பின்னர் Services செயலியைக் கிளிக் செய்யவும்.
- QBWCMonitor-ஐக் கண்டறிந்து, பண்புகளைத் திறக்க இருமுறை கிளிக் செய்யவும்.
- நிறுத்து என்பதைக் கிளிக் செய்து, பின்னர் சரி என்பதைக் கிளிக் செய்யவும்.
- Windows தேடலில், explorerஎன்பதை உள்ளிட்டு, அதன் பின்னர் File Explorer.
- உங்கள் கணினியிலிருந்து, C:\ProgramData\Intuit\WebConnector 3.0\Config என்பதற்குச் செல்லவும்.
- QBConfiguration கோப்பை வலது கிளிக் செய்து, பின்னர் மறுபெயரிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
- கோப்புப் பெயரை OLDQBConfiguration என மாற்றவும்.
- Windows தேடலில், Services.mscஎன்பதை உள்ளிட்டு, அதன் பின்னர் Services செயலியைக் கிளிக் செய்யவும்.
- QBWCMonitor-ஐக் கண்டறிந்து, பண்புகளைத் திறக்க இருமுறை கிளிக் செய்யவும்.
- தொடங்கு என்பதைக் கிளிக் செய்து, பின்னர் சரி என்பதைக் கிளிக் செய்யவும்.
- QuickBooks டெஸ்க்டாப் செயலியைத் திறந்து, பின்னர் நிர்வாகப் பயனரைப் பயன்படுத்தி நிறுவனக் கோப்பில் உள்நுழையவும்.
- இதைக் கிளிக் செய்யவும்: கோப்பு > செயலி நிர்வாகம் > இணையச் செயலிகளை நிர்வகி, பின்னர் பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:
- டோக்கன் இருந்தால், இணைக்கப்பட்ட செயலிகள் என்பதைக் கிளிக் செய்து, செயலியானது செயலில் உள்ளது எனக் காட்டப்படுவதை உறுதிப்படுத்தவும்.
- டோக்கன் இல்லையென்றால், Shopify என்பதைத் தேடி, Shopify கனெக்டர் என்பதைத் தேர்ந்தெடுத்து, டோக்கனை உருவாக்க அமை என்பதைக் கிளிக் செய்யவும்.
- இதைக் கிளிக் செய்யவும்: கோப்பு > செயலி நிர்வாகம் > இணையச் செயலிகளை நிர்வகி, பின்னர் பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:
Shopifyஆல் QBD 0x8004041D உடன் இணைய முடியவில்லை
தரவு ஒத்திசைவை அனுமதிக்க, QuickBooks டெஸ்க்டாப் செயலி திறக்கப்படாமல் இருக்கும் போது Shopifyஆல் QBD 0x8004041D உடன் இணைய முடியவில்லை என்ற பிழையை நீங்கள் பெறலாம். இந்தச் சிக்கலைச் சரிசெய்ய, நீங்கள் அடிப்படைச் சிக்கல் தீர்த்தல் படிகளை முடிக்க வேண்டும்.
Shopify உடன் ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனமும், தற்போது QuickBooks டெஸ்க்டாப்பில் திறக்கப்பட்டுள்ள நிறுவனமும் வெவ்வேறானவை: 0x8004040A
Shopify கனெக்டர் செயலியுடன் அமைக்கப்பட்டதற்குப் பதிலாக, தவறான QuickBooks டெஸ்க்டாப் நிறுவனக் கோப்பு திறக்கப்பட்டிருக்கும் போது, Shopify உடன் ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனமும், தற்போது QuickBooks டெஸ்க்டாப்பில் திறக்கப்பட்டுள்ள நிறுவனமும் வெவ்வேறானவை: 0x8004040A என்ற பிழையை நீங்கள் பெறலாம்.
- அடிப்படைச் சிக்கல் தீர்த்தல் படிகளை முடித்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
- உங்கள் Shopify நிர்வாகியிலுள்ள Realm ID, QuickBooks டெஸ்க்டாப் செயலியில் உள்ள Company Intuit ID-உடன் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்தவும்:
- QuickBooks டெஸ்க்டாப் செயலியைத் திறந்து, நிர்வாகப் பயனர் சுயவிவரத்தைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
- தயாரிப்புத் தகவல் திரையைத் திறக்க, உங்கள் கீபோர்டில் F2 விசையை அழுத்தவும்.
- உங்கள் Shopify நிர்வாகியின் QuickBooks Desktop Connector-இல் காட்டப்படும் Realm ID, Company Intuit ID உடன் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்தவும்.
- QBConfiguration-ஐ மீண்டும் உருவாக்கவும்:
- Windows தேடலில், Services.mscஎன்பதை உள்ளிட்டு, அதன் பின்னர் Services செயலியைக் கிளிக் செய்யவும்.
- QBWCMonitor-ஐக் கண்டறிந்து, பண்புகளைத் திறக்க இருமுறை கிளிக் செய்யவும்.
- நிறுத்து என்பதைக் கிளிக் செய்து, பின்னர் சரி என்பதைக் கிளிக் செய்யவும்.
- Windows தேடலில், explorerஎன்பதை உள்ளிட்டு, அதன் பின்னர் File Explorer.
- உங்கள் கணினியிலிருந்து, C:\ProgramData\Intuit\WebConnector 3.0\Config என்பதற்குச் செல்லவும்.
- QBConfiguration கோப்பை வலது கிளிக் செய்து, பின்னர் மறுபெயரிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
- கோப்புப் பெயரை OLDQBConfiguration என மாற்றவும்.
- Windows தேடலில், Services.mscஎன்பதை உள்ளிட்டு, அதன் பின்னர் Services செயலியைக் கிளிக் செய்யவும்.
- QBWCMonitor-ஐக் கண்டறிந்து, பண்புகளைத் திறக்க இருமுறை கிளிக் செய்யவும்.
- தொடங்கு என்பதைக் கிளிக் செய்து, பின்னர் சரி என்பதைக் கிளிக் செய்யவும்.
- QuickBooks டெஸ்க்டாப் செயலியைத் திறந்து, பின்னர் நிர்வாகப் பயனரைப் பயன்படுத்தி நிறுவனக் கோப்பில் உள்நுழையவும்.
- இதைக் கிளிக் செய்யவும்: கோப்பு > செயலி நிர்வாகம் > இணையச் செயலிகளை நிர்வகி, அதன் பின்னர் பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:
- டோக்கன் இருந்தால், இணைக்கப்பட்ட செயலிகள் என்பதைக் கிளிக் செய்து, பின்னர் செயலியானது செயலில் உள்ளது எனக் காட்டப்படுவதை உறுதிப்படுத்தவும்.
- டோக்கன் இல்லையென்றால், Shopify என்பதைத் தேடி, Shopify கனெக்டர் என்பதைத் தேர்ந்தெடுத்து, டோக்கனை உருவாக்க அமை என்பதைக் கிளிக் செய்யவும்.
- இதைக் கிளிக் செய்யவும்: கோப்பு > செயலி நிர்வாகம் > இணையச் செயலிகளை நிர்வகி, அதன் பின்னர் பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:
- Windows தேடலில், Services.mscஎன்பதை உள்ளிட்டு, அதன் பின்னர் Services செயலியைக் கிளிக் செய்யவும்.
Shopifyஆனது QuickBooks Desktop Accounting உடன் ஒத்திசைக்காது. 9900
Shopify மற்றும் QuickBooks டெஸ்க்டாப் செயலிக்கு இடையிலான தரவு ஒத்திசைவின் போது உள் பிழை உருவாகினால், நீங்கள் Shopifyஆல் QuickBooks Desktop Accounting உடன் ஒத்திசைக்க முடியவில்லை. 9900 என்ற பிழையைப் பெறலாம். இந்தச் சிக்கலைச் சரிசெய்ய, நீங்கள் அடிப்படைச் சிக்கல் தீர்த்தல் படிகளை முடித்துவிட்டு, WebConnector சேவைகளை மீண்டும் தொடங்க வேண்டும்.
படிகள்:
- Windows தேடலில், Services.msc என்பதை உள்ளிட்டு, அதன் பின்னர் Services செயலியைக் கிளிக் செய்யவும்.
- QBWCMonitor-ஐக் கண்டறிந்து, பண்புகளைத் திறக்க இருமுறை கிளிக் செய்யவும்.
- நிறுத்து என்பதைக் கிளிக் செய்து, பின்னர் சரி என்பதைக் கிளிக் செய்யவும்.
- QuickBooks டெஸ்க்டாப் செயலியைத் திறந்து, பின்னர் நிர்வாகப் பயனரைப் பயன்படுத்தி நிறுவனக் கோப்பில் உள்நுழையவும்.
- File > App Management > Manage Web Apps என்பதைக் கிளிக் செய்யவும்.
- இணைக்கப்பட்ட செயலிகள் என்பதைக் கிளிக் செய்து, பின்னர் செயலியானது செயலில் உள்ளது எனக் காட்டப்படுவதை உறுதிப்படுத்தவும்.
மதிப்பாய்வுக்காக உங்கள் பதிவுகளைப் பெறுதல்
நீங்கள் Shopify சில்லறை விற்பனை ஆதரவைத் தொடர்புகொள்ளும்போது, உங்கள் சிக்கலை மேலும் விசாரிக்க QuickBooks டெஸ்க்டாப் செயலியிலிருந்து பதிவுகளை மீட்டெடுக்குமாறு உங்களிடம் கேட்கப்படலாம். நீங்கள் மூன்று வகையான பதிவுகளையும் சேகரிக்க வேண்டும்.
செயலிப் பதிவு
- உங்கள் Windows தேடல் பட்டியில், Run என்பதை உள்ளிட்டு, Run செயலியைத் திறக்க உங்கள் கீபோர்டில் உள்ள
Enterவிசையை அழுத்தவும். %LocalAppData%\Intuit\WebConnector 3.0\Logபாதையைச் சேர்த்து, பின்னர் சரி என்பதைக் கிளிக் செய்யவும்.- Intuit.QBDT.Webconnector.Application_19_Apr_2023-07_20.log என்பதைப் போன்ற, சமீபத்திய தேதி முத்திரையுடன் கூடிய Intuit.QBDT.WebConnector.Application பதிவைக் கண்டறியவும்.
QuickBooks Desktop SDK பதிவுகள்
- உங்கள் Windows தேடல் பட்டியில், Run என்பதை உள்ளிட்டு, Run செயலியைத் திறக்க உங்கள் கீபோர்டில் உள்ள
Enterவிசையை அழுத்தவும். %programdata%\Intuit\QuickBooks\பாதையைச் சேர்த்து, பின்னர் சரி என்பதைக் கிளிக் செய்யவும்.- qbsdklog.txt மற்றும் qbsdkold.txt கோப்புகளைக் கண்டறியவும்
QuickBooks Desktop நிரல் பதிவுகள்
- உங்கள் Windows தேடல் பட்டியில், Run என்பதை உள்ளிட்டு, Run செயலியைத் திறக்க உங்கள் கீபோர்டில் உள்ள
Enterவிசையை அழுத்தவும். %LocalAppData%\Intuit\QuickBooks\Log\பாதையைச் சேர்த்து, பின்னர் சரி என்பதைக் கிளிக் செய்யவும்.- 32.0 போன்ற சமீபத்திய எண்ணிடப்பட்ட கோப்புறையைத் திறக்கவும்.
- QBWin.log மற்றும் QBWDOTNET.log கோப்புகளைக் கண்டறியவும். ஒன்று அல்லது பல QBWin.log.old
கோப்புகள் இருந்தால், மிகச் சமீபத்திய மூன்று கோப்புகளைச் சேகரிக்கவும்.