Shopify POS பகுப்பாய்வு
உங்களின் கடையின் தினசரி விற்பனை அறிக்கையைப் படித்துப் பார்க்கவும் உங்கள் நிகர விற்பனை, சராசரி ஆர்டர் மதிப்பு மற்றும் ஒரு ஆர்டருக்கான சராசரி உருப்படிகள் குறித்த நுண்ணறிவுகளை வழங்கவும் Shopify POS-இல் உள்ள பகுப்பாய்வுத் திரை உங்களை அனுமதிக்கிறது. தினசரி விற்பனை அறிக்கையானது இன்றைய விற்பனையை முந்தைய வாரத்தின் இதே நாளில் நிகழ்ந்த விற்பனையுடன் ஒப்பிடுகிறது.
இந்தப் பக்கத்தில்
தினசரி விற்பனை அறிக்கை
இந்த அறிக்கையானது இன்றைய விற்பனையை முந்தைய வாரத்தின் இதே நாளில் நிகழ்ந்த விற்பனையுடன் ஒப்பிடுகிறது. Shopify POS-இல் இருந்து தினசரி விற்பனை அறிக்கைக்குச் செல்ல, ஐகான் > பகுப்பாய்வு என்பதைத் தட்டவும்.
பின்வரும் சொற்கள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன:
| சொல் | விளக்கம் |
|---|---|
| நிகர விற்பனை | மொத்த தினசரி விற்பனையிலிருந்து ரிட்டர்ன்கள் மற்றும் பிற பிடித்தங்களை கழித்துக் கிடைக்கும் மதிப்பு. இந்த மதிப்பானது முந்தைய வாரத்தின் இதே நாளில் இருந்த மதிப்புடன் ஒப்பிடப்படுகிறது. |
| சராசரி ஆர்டர் மதிப்பு | வாடிக்கையாளர் ஆர்டரின் சராசரி பண மதிப்பு. இந்த மதிப்பானது முந்தைய வாரத்தின் இதே நாளில் இருந்த மதிப்புடன் ஒப்பிடப்படுகிறது. |
| ஒரு ஆர்டருக்கான உருப்படிகள் | வாடிக்கையாளர் ஆர்டரில் உள்ள உருப்படிகளின் சராசரி எண்ணிக்கை. இந்த மதிப்பானது முந்தைய வாரத்தின் இதே நாளில் இருந்த மதிப்புடன் ஒப்பிடப்படுகிறது. |
| நிகர விற்பனை வாரியான சிறந்த தயாரிப்புகள் | இன்று விற்கப்பட்ட சிறந்த மூன்று தயாரிப்பு மாறுபாடுகள். விற்கப்பட்ட அலகுகளின் எண்ணிக்கை மற்றும் மொத்த விற்பனை விவரங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. |
| நிகர விற்பனை வாரியான சிறந்த தயாரிப்பு வகைகள் | இன்று விற்கப்பட்ட சிறந்த மூன்று தயாரிப்பு வகைகள். விற்கப்பட்ட அலகுகளின் எண்ணிக்கை மற்றும் மொத்த விற்பனை விவரங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. |
| நிகர விற்பனை வாரியாகப் பதிவேட்டில் இருக்கும் சிறந்த பணியாளர்கள் | இன்று சிறப்பாகச் செயல்பட்ட மூன்று பணியாளர்கள். செயலாக்கப்பட்ட ஆர்டர்களின் எண்ணிக்கை மற்றும் மொத்த விற்பனை விவரங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. |
| வகை வாரியான நிகரப் பேமெண்ட்டுகள் | அன்றைய நாளின் வகை வாரியான நிகரப் பேமெண்ட்டுகள். மொத்த நிகரப் பேமெண்ட்டுகள் குறித்த விவரங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. |
தினசரி விற்பனை டைல்கள்
அறிக்கையின் மேற்புறத்தில் நிகர விற்பனை, சராசரி ஆர்டர் மதிப்பு மற்றும் ஒரு ஆர்டருக்கான உருப்படிகள் ஆகியவற்றைக் காட்டும் மூன்று டைல்கள் உள்ளன. மேலும் விரிவான அறிக்கையைப் பார்க்க, டைல் ஒன்றைத் தட்டவும்.
பின்வரும் தேதிக்கான வரம்புகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்:
| சொல் | விளக்கம் |
|---|---|
| இன்று | தற்போதைய தேதி. |
| நேற்று | முந்தைய தேதி. |
| வாரம் முதல் இன்று வரை | நடப்பு வாரம், திங்கள் முதல் தற்போதைய தேதி வரை. |
| மாதம் முதல் இன்று வரை | நடப்பு மாதம், மாதத்தின் முதல் நாள் முதல் தற்போதைய தேதி வரை. |
| காலாண்டு முதல் இன்று வரை | நடப்பு காலாண்டு, காலாண்டின் முதல் நாள் முதல் தற்போதைய தேதி வரை. காலாண்டுகளுக்கான தேதிகள் பின்வருமாறு:
|
| நடப்பு ஆண்டு இதுவரை | நடப்பு ஆண்டு, ஜனவரி முதல் தேதியிலிருந்து தற்போதைய தேதி வரை. |
பணியாளர் வாரியான மொத்த விற்பனை அறிக்கை
செக்அவுட்டில் வரிசை உருப்படிகளுக்கு வரவு வைக்கப்பட்ட பணியாளர்களின் நிகர விற்பனையை பணியாளர் வாரியான மொத்த விற்பனை (Total sales by staff) அறிக்கை காட்டுகிறது. அதிக விற்பனை செய்யும் பணியாளர்கள் மற்றும் ஒவ்வொரு பணியாளரின் நிகர விற்பனையை உங்கள் Shopify POS சாதனத்திலேயே நேரடியாகக் காண இதைப் பயன்படுத்தலாம்.
Shopify POS-இலிருந்து இந்த அறிக்கையைத் திறக்க, ஐகான் > பகுப்பாய்வு (Analytics) என்பதைத் தட்டவும். பணியாளர் வாரியான மொத்த விற்பனை (Total sales by staff) பிரிவில், பணியாளர் விற்பனை அறிக்கை (Sales by staff report) என்பதைத் தட்டவும்.
தேதிக்கான வரம்பு மூலம் அறிக்கையை நீங்கள் வடிகட்டலாம், மேலும் விற்பனை (அதிகபட்சம் முதலில்) போன்றவாறு அது வரிசைப்படுத்தப்படும் விதத்தையும் மாற்றலாம்.
பின்வரும் சொற்கள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன:
| சொல் | விளக்கம் |
|---|---|
| பணியாளர் பெயர் | வரிசை உருப்படிகளுக்கான விற்பனை அங்கீகாரம் பெற்ற பணியாளரின் பெயர். |
| விற்பனையான உருப்படிகள் | பணியாளருக்கு வரவு வைக்கப்பட்ட உருப்படிகளின் எண்ணிக்கை. |
| நிகர விற்பனை | ரிட்டர்ன்கள் மற்றும் பிற விலக்குகள் போக, பணியாளருக்கு வரவு வைக்கப்பட்ட மொத்த விற்பனை. |