Shopify POS செயலியிலிருந்து பதிவேட்டு அமர்வுகளை நிர்வகித்தல்

Shopify POS app icon

இந்தப் பக்கம் Shopify POS செயலிக்கானது, Shopify நிர்வாகிக்கானது அல்ல.

ஒரு ஷிஃப்டின் போது உங்கள் பணப் பெட்டிக்குள் வரும் மற்றும் வெளியே செல்லும் ரொக்கத்தைக் கண்காணிக்கப் பதிவேடு அமர்வுகள் உதவுகின்றன. ஷிஃப்டின் தொடக்கத்திலும் முடிவிலும் உங்கள் பெட்டியில் உள்ள தொகையைப் பதிவுசெய்யவும், பணியாளர்கள் தாங்கள் கையாளும் ரொக்கத்திற்குப் பொறுப்பாவதை உறுதிசெய்யவும், எதிர்பார்க்கப்பட்ட மற்றும் உண்மையான ரொக்கத் தொகைகளுக்கு இடையேயான முரண்பாடுகளைக் கண்டறியவும் பதிவேடு அமர்வுகளைப் பயன்படுத்தலாம்.

பணப் பெட்டி ஒப்புநோக்கலை எளிதாக்குவதற்கும் உங்கள் பிசினஸிற்கான துல்லியமான பதிவுகளைப் பராமரிப்பதற்கும் நீங்கள் Shopify POS செயலியிலிருந்தே நேரடியாகப் பதிவேட்டு அமர்வுகளை நிர்வகிக்கலாம்.

நீங்கள் ஒரு பதிவேட்டு அமர்வைத் தொடங்கியதும், கிரெடிட் கார்டுகள் போன்ற பிற பேமெண்ட் வகைகளின் மூலமான விற்பனைகளையும் கண்காணிக்கலாம்.

பதிவேட்டு அமர்வுகளை நிர்வகிப்பதற்கான கவனத்தில்கொள்ள வேண்டியவை

நீங்கள் பதிவேட்டு அமர்வுகளைப் பயன்படுத்துவதற்கு முன், கவனத்தில்கொள்ள வேண்டிய பின்வரும் விஷயங்களை மதிப்பாய்வு செய்யவும்:

  • உங்கள் ஸ்டோர் திறக்கப்படும்போதும் மூடப்படும்போதும் அல்லது பணியாளர்கள் தங்கள் ஷிஃப்டைத் தொடங்கும்போதும் முடிக்கும்போதும் என வழக்கமான இடைவெளிகளில் ஒரு பதிவேட்டு அமர்வு மூடப்பட வேண்டும்.
  • பதிவேட்டு அமர்வுகள் நீண்ட கால அறிக்கையிடலுக்கானவை அல்ல. ஒரு பதிவேட்டு அமர்வை நீங்கள் நீண்ட நேரம் திறந்தே வைத்திருந்தால், எதிர்பார்க்கப்படும் ரொக்கம் மற்றும் முரண்பாடுகள் அறிக்கைகள் துல்லியமற்றதாக மாறக்கூடும். நீண்ட காலப் பேமெண்ட்டுகள் அறிக்கைகளுக்கு, உங்கள் Shopify நிர்வாகியிலுள்ள நிதி அறிக்கைகள் மற்றும் ஆர்டர் அறிக்கைகளைப் பார்க்கவும்.
  • ஒவ்வொரு சாதனத்திலும் உங்களால் ஒரு நேரத்தில் ஒரு பதிவேட்டு அமர்வை மட்டுமே திறந்து வைத்திருக்க முடியும்.

பதிவேட்டு அமர்வுகளுக்கான வரம்புகள்

பதிவேட்டு அமர்வுகளுக்கான பின்வரும் வரம்புகளை மதிப்பாய்வு செய்யவும்:

  • சாதனங்கள் உருவாக்கப்பட்டதும் அவை பதிவேட்டு அமர்வுகளைச் சேமிக்கும். ஒரு சாதனத்தில் உருவாக்கப்பட்ட அமர்வுகள் மற்ற சாதனங்களில் தெரியாது. பதிவேட்டு அமர்வுகளுக்கு உங்களுக்குச் சிறப்புத் தனிப்பயனாக்கங்கள் தேவைப்பட்டால், POS UI Extension வழிகாட்டிகளைப் பார்த்து, புதிய API குறித்து அறியவும்.
  • Shopify POS செயலியை நீங்கள் மீட்டமைத்தாலோ மீண்டும் நிறுவினாலோ, பதிவேட்டு அமர்வுகள் காட்டப்படாமல் போகலாம். உங்கள் இடத்திற்கு Shopify POS Pro சந்தா இருந்தால், நீங்கள் Shopify நிர்வாகியிலிருந்து அனைத்து அமர்வுகளையும் அணுகலாம்.
  • ரொக்கத்தைக் கணக்கிடும் கருவியானது பின்வரும் நாணயங்களை மட்டுமே ஆதரிக்கிறது: AUD, CAD, EUR, GBP, JPY, NZD, PLN, SGD மற்றும் USD.

Shopify POS செயலியில் பதிவேட்டு அமர்வுகளைச் செயல்படுத்தவும்

ரொக்கம் மற்றும் பிற பேமெண்ட் வகைகளின் மூலமான விற்பனைகளைத் தடமறிய, ஒரு பதிவேட்டு அமர்வைச் செயல்படுத்தவும். பதிவேட்டு அமர்வுகளைச் செயல்படுத்துவதன் மூலம், நீங்கள் கைமுறையாகவோ தானாகவோ புதிய பதிவேட்டு அமர்வைத் தொடங்க முடியும்.

ஒவ்வொரு ரொக்கப் பரிவர்த்தனையின்போதும் பணப் பெட்டி தானாகவே திறக்கப்படும்படி நீங்கள் அமைக்கலாம். சுவீடனில் உள்ள சில்லறை விற்பனை இருப்பிடங்களுக்கு, Drawer auto-open (பணப் பெட்டி தானாகத் திறப்பது) எப்போதும் இயக்கப்பட்டிருக்கும், மேலும் இந்த அமைப்பை உங்களால் முடக்க முடியாது. சுவீடனில் உள்ள சில்லறை விற்பனை இருப்பிடங்களுக்கான தேவைகள் குறித்து மேலும் அறிக.

படிகள்

  1. Shopify POS-லிருந்து, Register ஐகானைத் தட்டவும்.

  2. அமைப்புகள் என்பதைத் தட்டவும்.

  3. விருப்பத்தேர்வு: ஒவ்வொரு அமர்வின் தொடக்கத்திலும் முடிவிலும் ரொக்கக் கணக்கீடு தேவையெனில், அமர்வு தொடங்கும்போதும் முடியும்போதும் ரொக்கக் கணக்கீடு தேவை என்பதைச் செயல்படுத்தவும். இது முடக்கப்பட்டிருந்தால், அமர்வுகள் பேமெண்ட் தரவைத் தொடர்ந்து தடமறியும், ஆனால் வெளிப்படையாக ரொக்கத் தொகைகளைத் தடமறியாது.

  4. விருப்பத்தேர்வு: ஒவ்வொரு ரொக்கப் பரிவர்த்தனையின்போதும் பணப் பெட்டியைத் தானாகத் திறக்க, பெட்டியைத் தானாகத் திற என்பதைச் செயல்படுத்தவும்.

Shopify POS செயலியில் புதிய பதிவேட்டு அமர்வைத் திறத்தல்

நீங்கள் ஒரு புதிய பதிவேட்டு அமர்வைத் தொடங்கும் போது, தொடக்க ரொக்கத் தொகையை எப்படி நிர்வகிப்பது என்பதை முடிவு செய்ய வேண்டும். தொடக்கத் தொகை என்பது பதிவேட்டு அமர்வின் தொடக்கத்தில் பதிவேட்டில் இருக்கும் ரொக்கமாகும், இதன் மூலம் ரொக்கப் பேமெண்ட்டுகளுக்குப் பணியாளர்கள் சில்லறை கொடுக்க முடியும்.

பின்வரும் ஏதேனும் ஒரு வழியில் Shopify POS செயலியில் பதிவேட்டு அமர்வைத் தொடங்கலாம்:

  • பதிவேட்டு அமர்வுக்கான ஆரம்பத் தொடக்க ரொக்கத் தொகையைக் குறிப்பிட விரும்பினால், பதிவேட்டு அமர்வை மேனுவலாகத் தொடங்கவும்.
  • முந்தைய அமர்விலிருந்து பணப் பெட்டியில் எதிர்பார்க்கப்படும் தொகையைத் தொடக்கத் தொகையாகப் பயன்படுத்த விரும்பினால், பதிவேட்டு அமர்வை தானாகவே தொடங்கவும்.

Shopify POS செயலியில் பதிவேட்டு அமர்வை மேனுவலாகத் திறக்கவும்

நீங்கள் புதிய பதிவேட்டு அமர்வை மேனுவலாகத் திறந்தால், தொடக்கத் தொகையை உள்ளிடலாம்.

படிகள்:

  1. Shopify POS-லிருந்து, Register ஐகானைத் தட்டவும்.

  2. அமர்வைத் திற என்பதைத் தட்டவும்.

  3. பெட்டியில் உள்ள தற்போதைய தொகை புலத்தில், தொடக்கத் தொகையை உள்ளிடவும். தொடக்கத் தொகையை உறுதிப்படுத்த ரொக்கத்தை எண்ண வேண்டும் எனில், ரொக்கத்தை எண்ணு என்பதைத் தட்டி, ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் பிரிவுகளில் உள்ள தொகைகளைச் சரிசெய்ய - மற்றும் + ஐகான்களைப் பயன்படுத்தவும்.

  4. விருப்பத்தேர்வு: குறிப்பு ஒன்றை உள்ளிடவும்.

  5. முடிந்தது என்பதைத் தட்டவும்.

நீங்கள் மேனுவலாக மூடும் வரை பதிவேட்டு அமர்வு திறந்தே இருக்கும். துல்லியமான அறிக்கையிடலுக்கு, ஸ்டோரை மூடும் செயல்முறைகளின் ஒரு பகுதியாகப் பதிவேட்டு அமர்வுகளை மூட, உங்கள் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதை உறுதிசெய்யவும்.

Shopify POS செயலியில் பதிவேட்டு அமர்வை தானாகவே திறக்கவும்

நீங்கள் ஒரு பதிவேட்டு அமர்வை முடித்துவிட்டு, அடுத்த ஆர்டரைச் செயலாக்குவதற்கு முன், மேனுவலாகப் பிறிதொரு அமர்வைத் திறக்கவில்லை எனில், Shopify POS செயலி தானாகவே புதிய பதிவேட்டு அமர்வைத் திறக்கும்.

முந்தைய பதிவேட்டு அமர்வின் முடிவில் கணக்கிடப்பட்ட ரொக்க இருப்பே தொடக்கத் தொகையாக மாறும். இது உங்கள் ஸ்டோரின் முதல் பதிவேட்டு அமர்வு எனில், தொடக்கத் தொகை 0 என அமைக்கப்படும்.

Shopify POS செயலியில் பதிவேட்டு அமர்வின் தொடக்கத் தொகையைச் சரிசெய்யவும்

பதிவேட்டு அமர்வின் தொடக்கத் தொகையைச் சரிசெய்வது என்பது ரொக்கத்தைச் சேர்ப்பது அல்லது அகற்றுவதை உள்ளடக்கியதாகும். பின்வரும் ஏதேனும் ஒரு சூழ்நிலையில் சரிசெய்தல்கள் தேவைப்படலாம்:

  • பணப் பெட்டியில் உள்ள ரொக்கத்தைக் கொண்டு பணியாளர்களால் சரியான சில்லறையைக் கொடுக்க முடியாத போது.
  • பணப் பெட்டியில் உள்ள ரொக்கம், நீங்கள் விரும்பும் வரம்பைத் தாண்டும் போது.
  • பணப் பெட்டியிலிருந்து தற்காலிகமாக ரொக்கத்தைப் பணியாளர்கள் அகற்ற வேண்டியிருக்கும் போது.

படிகள்:

  1. Shopify POS-லிருந்து, Register ஐகானைத் தட்டவும்.

  2. அமர்வைத் திற என்பதைத் தட்டவும்.

  3. நீங்கள் செய்ய விரும்பும் பரிவர்த்தனை வகையைப் பொறுத்து ரொக்கத்தைச் சேர் அல்லது ரொக்கத்தை அகற்று என்பதைத் தட்டவும்.

  4. நீங்கள் சேர்க்கும் அல்லது அகற்றும் ரொக்கத் தொகையை உள்ளிடவும்.

  5. காரணக் குறியீடுகள் செயலில் இருந்தால், ரொக்கத்தைச் சேர்ப்பதற்கான அல்லது அகற்றுவதற்கான காரணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

  6. சேமி என்பதைத் தட்டவும்.

பதிவேட்டில் செய்யப்படும் சரிசெய்தல்கள், அமர்வின் விவரங்கள் பக்கத்தில் உள்ள ரொக்கச் செயல்பாட்டுப் பிரிவில் காட்டப்படும்.

Shopify POS செயலியில் பதிவேட்டு அமர்வை மூடவும்

உங்கள் பதிவேட்டு அமர்வை நேரடியாக Shopify POS செயலியிலிருந்து மூடலாம் அல்லது உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து தொலைவிலிருந்து அமர்வை மூடலாம். பதிவேட்டு அமர்வை மூடிய பிறகு, அதை மீண்டும் திறக்கவோ திருத்தவோ முடியாது.

பதிவேட்டு அமர்வை மூடிய பிறகு, நீங்கள் அமர்வு வரலாற்றின் விவரங்களைப் பார்க்கலாம்.

படிகள்:

  1. Shopify POS-லிருந்து, Register ஐகானைத் தட்டவும்.

  2. அமர்வை மூடு என்பதைத் தட்டவும்.

  3. பணப் பெட்டியில் உள்ள ரொக்கத் தொகையை உள்ளிடவும்.

  4. விருப்பத்தேர்வு: குறிப்பு ஒன்றைச் சேர்க்கவும்.

  5. Checkmark ஐகானைத் தட்டி, விரும்பிய கையிருப்புத் தொகையை (float amount) உள்ளிடவும்.

  6. பொருந்தினால், பதிவேட்டில் நீங்கள் விரும்பும் கையிருப்புத் தொகை (float amount) போக மீதமுள்ள ரொக்கத் தொகையை அகற்றவும்.

  7. அமர்வு முடிந்தது திரையில் மொத்தத் தொகைகளைச் சரிபார்க்கவும். பணப் பெட்டியில் உள்ள ரொக்கத் தொகையும் எதிர்பார்க்கப்படும் இருப்பும் சமமாக இருக்க வேண்டும்.

  8. விருப்பத்தேர்வு: குறிப்பு ஒன்றைச் சேர்க்கவும்.

  9. விருப்பத்தேர்வு: பிரிண்ட் செய் என்பதைத் தட்டவும். இது இந்தப் பதிவேட்டு அமர்வுக்கான ரொக்க விவரங்களையும் அனைத்துப் பேமெண்ட் வகைகளையும் கொண்ட சுருக்கத்தையும் பிரிண்ட் செய்யும்.

Shopify POS செயலியில் பதிவேட்டு அமர்வு விவரங்களைப் பார்த்தல்

நீங்கள் திறந்திருக்கும் பதிவேட்டு அமர்வை அல்லது மூடப்பட்ட பதிவேட்டு அமர்வின் வரலாற்றைப் பார்க்கலாம். பதிவேட்டு அமர்வின் தொடக்க மற்றும் முடிவு நேரங்கள், அனைத்துப் பேமெண்ட் வகைகளுக்கான நிகரப் பேமெண்ட்டுகள், ரொக்கச் செயல்பாடு மற்றும் சரிசெய்தல்கள் ஆகியவற்றின் கண்ணோட்டத்தை அமர்வு விவரங்கள் வழங்குகின்றன.

Shopify POS செயலியில் திறந்திருக்கும் பதிவேட்டு அமர்வைப் பார்க்கவும்

  1. Shopify POS-லிருந்து, Register ஐகானைத் தட்டவும்.

  2. திறந்திருக்கும் அமர்வைப் பார் என்பதைத் தட்டவும்.

Shopify POS செயலியில் மூடப்பட்ட பதிவேட்டு அமர்வின் விவரங்களைப் பார்க்கவும்

  1. Shopify POS-லிருந்து, Register ஐகானைத் தட்டவும்.

  2. அமர்வு வரலாறு என்பதைத் தட்டவும்.

  3. நீங்கள் பார்க்க விரும்பும் பதிவேட்டு அமர்வைத் தட்டவும்.

  4. விருப்பத்தேர்வு: அமர்வில் பயன்படுத்தப்பட்ட பேமெண்ட் வகைகளின் பிரிகையைப் பார்க்க, பேமெண்ட் வகைகள் என்பதைத் தட்டவும்.

  5. விருப்பத்தேர்வு: பேமெண்ட் வகை தகவலைப் பிரிண்ட் செய்ய பிரிண்ட் செய் என்பதைத் தட்டவும்.

பணப் பெட்டி திறக்கும் போது காரணக் குறியீட்டைத் தேர்ந்தெடுத்தல்

உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள விற்பனைப் புள்ளி சேனலின் ரொக்க நிர்வாகம் பிரிவில் காரணக் குறியீடுகளை நீங்கள் செயல்படுத்தியிருந்தால், பணியாளர் ஒருவர் பணப் பெட்டியைத் திறக்கும்போது, அவர்கள் பெட்டியைத் திறந்ததற்கான காரணத்தைத் தேர்ந்தெடுக்கத் தூண்டும் வகையில் பெட்டியைத் திற என்ற உரையாடல் பெட்டி காட்டப்படும். அதற்கான காரணம் காட்டப்படாவிட்டால், அவர்கள் மற்றவை என்பதைத் தேர்ந்தெடுத்து, பெட்டியைத் திறந்ததற்கான காரணத்தை விளக்க ஒரு குறிப்பை எழுதலாம்.

நீங்கள் Shopify POS செயலியில் திறந்த அல்லது மூடப்பட்ட பதிவேட்டு அமர்வைப் பார்க்கும்போது மற்றும் Shopify நிர்வாகியில் உள்ள ரொக்கத்தின் நகர்வைத் தடமறிதல் அமர்வுக்கு செயல்பாட்டைப் பார் என்பதைத் தேர்ந்தெடுக்கும் போது காரணக் குறியீடுகள் காட்டப்படும்.

அடுத்த படி: Shopify நிர்வாகியிலிருந்து பதிவேட்டு அமர்வுகளை நிர்வகியுங்கள்

Shopify POS இல் நீங்கள் பதிவேட்டு அமர்வுகளை நிர்வகித்த பிறகு, உங்கள் இடங்கள் முழுவதிலும் உள்ள பதிவேட்டு அமர்வுகளைச் சரிபார்க்க, ஏற்றுமதி செய்ய, மூட மற்றும் உள்ளமைக்க Shopify நிர்வாகியிலிருந்து பதிவேட்டு அமர்வுகளை நிர்வகிக்கலாம்.