POS எடிட்டரைப் பயன்படுத்தி ஸ்மார்ட் கிரிட்டைத் திருத்துதல்
உங்கள் சில்லறை விற்பனைச் சூழலின் தேவைகளுக்கு ஏற்ப உங்கள் POS சாதனம் பொருந்துவதை உறுதிசெய்ய, POS எடிட்டரைப் பயன்படுத்தி ஸ்மார்ட் கிரிட் டைல்களைச் சேர்ப்பதன் மூலம் மற்றும் திருத்துவதன் மூலம் உங்களின் ஸ்மார்ட் கிரிட் வார்ப்புருக்களைத் தனிப்பயனாக்கலாம். இந்த டைல்கள் சில்லறை விற்பனைப் பணியாளர்கள் பணிகளை முடிக்கவும் வாடிக்கையாளர் கொள்முதல்களை நிறைவுசெய்யவும் உதவக்கூடும். நீங்கள் வழக்கமாக விற்கும் தயாரிப்புகள் அல்லது உங்கள் பணியாளர்கள் அடிக்கடி முடிக்க வேண்டிய பணிகள் ஏதேனும் இருந்தால், அந்தச் செயல்களை முடிப்பதற்கு உதவ உங்கள் ஸ்மார்ட் கிரிட்டில் டைல்களைச் சேர்க்கலாம்.
Shopify POS-இலிருந்தே நேரடியாக, தனிப்பட்ட POS இடத்திற்கான ஸ்மார்ட் கிரிட்டையும் நீங்கள் தனிப்பயனாக்கலாம். Shopify POS செயலியிலிருந்து ஸ்மார்ட் கிரிட்டைத் தனிப்பயனாக்குவது குறித்து மேலும் அறிக.
இப்பக்கத்தில்
- POS எடிட்டரை அணுகுங்கள்
- உங்கள் ஸ்மார்ட் கிரிட் வார்ப்புருவில் டைல்களைச் சேர்க்கவும்
- உங்கள் ஸ்மார்ட் கிரிட் வார்ப்புருவிலிருந்து பரிந்துரைக்கப்படும் டைல்களைச் சேர்க்கவும் அல்லது அகற்றவும்
- உங்கள் ஸ்மார்ட் கிரிட் டைல்களைத் தனிப்பயனாக்குதல்
- உங்கள் ஸ்மார்ட் கிரிட் வார்ப்புருவுக்கான டைல் பக்கங்களை நிர்வகித்தல்
- POS எடிட்டரில் உங்கள் ஸ்மார்ட் கிரிட்டை முன்னோட்டமிடுங்கள்
POS எடிட்டரை அணுகுதல்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, விற்பனைச் சேனல்கள் > விற்பனைப் புள்ளி என்பதற்குச் செல்லவும்.
ஸ்டோர் அனுபவத்தைத் தனிப்பயனாக்குக பிரிவில், POS செயலி என்பதற்கு திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்மார்ட் கிரிட் பிரிவில், நீங்கள் முன்னோட்டமிட விரும்பும் ஸ்மார்ட் கிரிட் வார்ப்புருவைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் ஸ்மார்ட் கிரிட் வார்ப்புருவில் டைல்களைச் சேர்த்தல்
கூடுதல் செயல்பாடுகளுக்கு அல்லது உங்கள் சில்லறை விற்பனைப் பணியாளர்களுக்குத் தவறாமல் தேவைப்படும் கருவிகளை அணுக, உங்கள் ஸ்மார்ட் கிரிட்டில் புதிய டைல்களைச் சேர்க்கலாம். எடுத்துக்காட்டாக, உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் FAQ பக்கத்தை உங்கள் பணியாளர்கள் தவறாமல் அணுக வேண்டியிருந்தால், உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் FAQ-க்கு இணைக்கும் ஓர் இணைப்பு டைலைச் சேர்க்கலாம்.
உங்கள் ஸ்மார்ட் கிரிட்டில் பின்வரும் டைல்களைச் சேர்க்கலாம்:
| டைல் வகை | விளக்கம் |
|---|---|
| செயல் | தற்போதைய ஆர்டரை மாற்றும் குறிப்பிட்ட சில செயல்களைச் செய்ய பயனர்களை அனுமதிக்கும் ஒரு டைலை உருவாக்குகிறது, இதில் பின்வரும் பணிகள் அடங்கும்:
|
| இணைப்பு | நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஓர் இணையதளத்திற்கு வழிநடத்தும் டைலை உருவாக்குகிறது. டைலை உருவாக்கும்போது, நீங்கள் URL மற்றும் டைலிலேயே காட்டப்படும் தலைப்பைத் தேர்ந்தெடுக்கலாம். |
| கட்டணம் | தற்போதைய ஆர்டரில் தனிப்பயன் விற்பனைத் தொகையைச் சேர்க்கும் டைலை உருவாக்குகிறது. டைலை உருவாக்கும்போது, ஆர்டரில் சேர்க்க வேண்டிய விலையையும் இந்தக் கட்டணத்திற்கு வரி பொருந்துமா என்பதையும் அமைக்கலாம். டைலில் காட்டப்படும் தனிப்பயன் விற்பனைத் தொகைக்கான தலைப்பையும் தேர்ந்தெடுக்கலாம். ஆர்டரில் சேர்க்கப்படும்போது, இது கூடுதல் கட்டணம் எனக் காட்டப்படும். கட்டணத்தின் தலைப்பு துணைத்தலைப்பாகக் காட்டப்படும். ஒரு ஆர்டரில் 1 கூடுதல் கட்டணத்தை மட்டுமே சேர்க்க முடியும். |
| தள்ளுபடி | உங்கள் ஸ்டோரில் தள்ளுபடிகளைப் பயன்படுத்தினால், உங்கள் ஸ்மார்ட் கிரிட்டில் தள்ளுபடிக் குறியீடு, சதவீத அடிப்படையிலான தள்ளுபடி அல்லது நிலையான தொகைத் தள்ளுபடி ஆகியவற்றைப் பயன்படுத்தும் தள்ளுபடி டைலை நீங்கள் உருவாக்கலாம். Shopify POS-இல் தள்ளுபடிக் குறியீட்டை வழங்க விரும்பினால், முதலில் உங்கள் Shopify நிர்வாகியில் தள்ளுபடிக் குறியீட்டை உருவாக்க வேண்டும். தள்ளுபடிக் குறியீடு டைலைச் சேர்க்கும்போது அல்லது திருத்தும்போது, POS எடிட்டரைப் பயன்படுத்தி உங்களின் கிடைக்கக்கூடிய தள்ளுபடிக் குறியீடுகளைத் தேடலாம், தேர்ந்தெடுக்கலாம். சதவீதம் மற்றும் நிலையான தொகைத் தள்ளுபடிகளுக்கு, தள்ளுபடிக்கான விருப்பக் காரணத்தையும் நீங்கள் சேர்க்கலாம், இது டைலிலேயே காட்டப்படும். |
| தயாரிப்பு | கார்ட்டில் ஒரு குறிப்பிட்ட தயாரிப்பைச் சேர்க்கும் டைலை உருவாக்குகிறது. அடிக்கடி வாங்கப்படும் உருப்படிகளை ஸ்கேன் செய்ய வேண்டிய அவசியமில்லாமல் கார்ட்டில் விரைவாகச் சேர்க்க இந்த டைல் உகந்தது. |
| மாறுபாடு | ஒரு தனி தயாரிப்பு மாறுபாட்டைத் தேடாமலேயே கார்ட்டில் சேர்க்கும் ஒரு டைலை உருவாக்குகிறது. |
| சேகரிப்பு | உங்கள் ஸ்மார்ட் கிரிட்டில் ஒரு குறிப்பிட்ட சேகரிப்பைத் திறக்கும் டைலை உருவாக்குகிறது, அந்தச் சேகரிப்பிலிருந்து ஏதேனும் உருப்படிகளைக் கார்ட்டில் விரைவாகச் சேர்க்க இது உங்களை அனுமதிக்கிறது. |
| குறுக்குவழி | பயனர்கள் பின்வருவன போன்ற மற்றொரு POS செயல்பாடு அல்லது அமைப்பை அணுக அனுமதிக்கும் ஒரு டைலை உருவாக்குகிறது:
|
| நிறைவேற்றம் | Shopify POS Pro-ஐப் பயன்படுத்தும் இடங்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
POS இடத்தில் இருந்து ஆதரிக்கப்படும் வெவ்வேறு நிறைவேற்ற முறைகளுக்கான ஆர்டர் பட்டியலைக் காண்பிக்கும் டைலை உருவாக்குகிறது:
|
| உட்பொதிக்கப்பட்ட செயலிகள் | Shopify POS செயலியின் செயல்பாட்டை விரைவாக அணுகுவதற்கான டைலை உருவாக்குகிறது. உங்கள் ஸ்மார்ட் கிரிட்டில் செயலியைச் சேர்க்க விரும்பினால், Shopify POS உடன் ஒருங்கிணைக்கப்படும் செயலியைப் பயன்படுத்துகிறீர்களா என்பதை உறுதிசெய்ய வேண்டும். |
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, விற்பனைச் சேனல்கள் > விற்பனைப் புள்ளி என்பதற்குச் செல்லவும்.
ஸ்டோர் அனுபவத்தைத் தனிப்பயனாக்குக பிரிவில், POS செயலி என்பதற்கு திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்மார்ட் கிரிட் பிரிவில், நீங்கள் டைலைச் சேர்க்க விரும்பும் ஸ்மார்ட் கிரிட் வார்ப்புருவைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் டைலைச் சேர்க்க விரும்பும் பக்கத்தில், ⊕ டைலைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் சேர்க்க விரும்பும் டைல் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் சேர்க்கும் டைல் வகையின் அடிப்படையில் டைலுக்கான விவரங்களைத் தனிப்பயனாக்குங்கள்.
சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் ஸ்மார்ட் கிரிட் வார்ப்புருவில் மாற்றங்களைச் சேமிக்க, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் ஸ்மார்ட் கிரிட் வார்ப்புருவிலிருந்து பரிந்துரைக்கப்படும் டைல்களைச் சேர்க்கவும் அல்லது அகற்றவும்
நீங்கள் ஒரு ஸ்மார்ட் கிரிட் வார்ப்புருவைத் திருத்தும்போது, சேர்ப்பதற்கான அல்லது அகற்றுவதற்கான டைல்களைக் கொண்ட பரிந்துரைகள் பேனலை POS எடிட்டர் காட்டக்கூடும். பரிந்துரைக்கப்படும் டைல்கள் உங்கள் ஸ்டோரின் பட்டியல், ஆர்டர்கள் மற்றும் Shopify POS செயல்பாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை, மேலும் உங்கள் பணியாளர்கள் விற்கும் விதத்திற்கு ஏற்ப ஒவ்வொரு வார்ப்புருவும் ஒத்திசைவாக இருக்க இவை உதவலாம்.
உங்களின் ஸ்மார்ட் கிரிட் வார்ப்புருவில் சேர்ப்பதற்காகப் பரிந்துரைக்கப்படும் டைல்களில் தயாரிப்புகள் மற்றும் தள்ளுபடிகள் உள்ளடங்கலாம். அகற்றுவதற்காகப் பரிந்துரைக்கப்படும் டைல்கள் என்பவை, ஒரு இடம் அரிதாகவே பயன்படுத்தும் டைல்களாகும். ஒரு தயாரிப்பைப் பணியாளர்கள் எவ்வளவு அடிக்கடி தேடியுள்ளனர் என்பது போன்ற குறுகிய காரணம் ஒன்றும் ஒவ்வொரு பரிந்துரையிலும் இருக்கும்.
பரிந்துரைக்கப்படும் டைலைச் சேர்
ஸ்மார்ட் கிரிட் வார்ப்புருவில் நீங்கள் பரிந்துரைக்கப்படும் டைலைச் சேர்க்கலாம் அல்லது உங்களுக்குப் பிடிக்காத பரிந்துரையை நிராகரிக்கலாம். டைலைச் சேர்ப்பதைத் திரும்பப்பெறலாம், ஆனால் பரிந்துரையை நிராகரிப்பது நிரந்தரமானதாகும். அதே டைல் மற்றும் வார்ப்புருவுக்கு அந்தப் பரிந்துரை மீண்டும் வராது.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, விற்பனைச் சேனல்கள் > விற்பனைப் புள்ளி என்பதற்குச் செல்லவும்.
ஸ்டோர் அனுபவத்தைத் தனிப்பயனாக்குக பிரிவில், POS செயலி என்பதற்கு திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்மார்ட் கிரிட் வார்ப்புரு பிரிவில், நீங்கள் திருத்த விரும்பும் ஸ்மார்ட் கிரிட் வார்ப்புருவைத் தேர்ந்தெடுக்கவும்.
பரிந்துரைகள் பேனலில், சேர்ப்பதற்காகப் பரிந்துரைக்கப்படும் டைல்களை மதிப்பாய்வு செய்யவும்.
பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:
- வார்ப்புருவில் டைலைச் சேர்க்க, டைலைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
- பரிந்துரையை நிராகரிக்க, இப்போதைக்கு வேண்டாம் என்பதைக் கிளிக் செய்யவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
பரிந்துரைக்கப்படும் டைலை அகற்று
ஒரு இடம் அரிதாகவே ஒரு டைலைப் பயன்படுத்தும்போது, அதை அகற்றுவதற்குப் பரிந்துரைகள் பேனல் பரிந்துரைக்கலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, விற்பனைச் சேனல்கள் > விற்பனைப் புள்ளி என்பதற்குச் செல்லவும்.
ஸ்டோர் அனுபவத்தைத் தனிப்பயனாக்குக பிரிவில், POS செயலி என்பதற்கு திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்மார்ட் கிரிட் பிரிவில், நீங்கள் திருத்த விரும்பும் ஸ்மார்ட் கிரிட் வார்ப்புருவைத் தேர்ந்தெடுக்கவும்.
பரிந்துரைகள் பேனலில், அகற்றுவதற்காகப் பரிந்துரைக்கப்படும் டைல்களை மதிப்பாய்வு செய்யவும்.
வார்ப்புருவிலிருந்து டைலை அகற்ற, டைலை அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் ஸ்மார்ட் கிரிட் டைல்களைத் தனிப்பயனாக்குதல்
உங்கள் ஸ்மார்ட் கிரிட்டில் இருந்து டைல் ஐகான்களைத் திருத்தலாம், மறுவரிசைப்படுத்தலாம், நீக்கலாம் அல்லது நிறத்தை மாற்றலாம். ஸ்மார்ட் கிரிட் டைல்களில் எழுத்துருவின் அளவையோ நடையையோ மாற்ற முடியாது.
Shopify POSஐப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட இடத்திற்கான ஸ்மார்ட் கிரிட்டை நீங்கள் திருத்தும்போது, அந்த இடத்திற்கு ஒதுக்கப்பட்ட வார்ப்புரு மற்ற இடங்களிலும் பயன்படுத்தப்பட்டால், உங்கள் மாற்றங்கள் அசல் வார்ப்புருவின் புதிய நகலாகச் சேமிக்கப்படும். இந்தப் புதிய பதிப்பு நீங்கள் திருத்திய POS இடத்திற்கு மட்டுமே பொருந்தும், எனவே உங்கள் மாற்றங்கள் பிற இடங்களில் உள்ள ஸ்மார்ட் கிரிட் வார்ப்புருக்களைப் பாதிக்காது.
உங்கள் ஸ்மார்ட் கிரிட்டில் உள்ள டைல்களைத் திருத்துதல்
உங்கள் ஸ்மார்ட் கிரிட் வார்ப்புருவில் உள்ள சில டைல்களின் உள்ளடக்கத்தை நீங்கள் திருத்தலாம். இதில் தயாரிப்பு டைல்கள், இணைப்பு டைல்கள் மற்றும் தள்ளுபடி டைல்கள் ஆகியவை அடங்கும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, விற்பனைச் சேனல்கள் > விற்பனைப் புள்ளி என்பதற்குச் செல்லவும்.
ஸ்டோர் அனுபவத்தைத் தனிப்பயனாக்குக பிரிவில், POS செயலி என்பதற்கு திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்மார்ட் கிரிட் பிரிவில், நீங்கள் திருத்த விரும்பும் டைல் உள்ள ஸ்மார்ட் கிரிட் வார்ப்புருவைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் திருத்த விரும்பும் டைலைக் கிளிக் செய்யவும்.
தயாரிப்பு, இணைப்பு அல்லது டைலுடன் தொடர்புடைய தள்ளுபடி போன்ற டைல் விவரங்களைப் புதுப்பிக்கவும்.
டைலில் செய்த மாற்றங்களைச் சேமிக்க, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் ஸ்மார்ட் கிரிட் வார்ப்புருவில் மாற்றங்களைச் சேமிக்க, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்மார்ட் கிரிட்டில் டைல்களை மறுவரிசைப்படுத்துதல்
ஸ்மார்ட் கிரிட் டைல்களை அதே பக்கத்தில் நீங்கள் மறுவரிசைப்படுத்தலாம். ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்திற்கு டைல்களை மறுவரிசைப்படுத்த முடியாது.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, விற்பனைச் சேனல்கள் > விற்பனைப் புள்ளி என்பதற்குச் செல்லவும்.
ஸ்டோர் அனுபவத்தைத் தனிப்பயனாக்குக பிரிவில், POS செயலி என்பதற்கு திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்மார்ட் கிரிட் பிரிவில், நீங்கள் மறுவரிசைப்படுத்த விரும்பும் டைல்கள் உள்ள ஸ்மார்ட் கிரிட் வார்ப்புருவைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் நகர்த்த விரும்பும் ஸ்மார்ட் கிரிட் டைலின் மீது கர்சரை வைக்கவும்.
ஸ்மார்ட் கிரிட் டைலுக்குப் பக்கத்தில் உள்ள
ஐகானைக் கிளிக் செய்து பிடித்துக்கொள்ளவும், பிறகு அதே டைல் பக்கத்தில் உள்ள பட்டியலில் உள்ள மற்றொரு நிலைக்கு டைலை இழுக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் ஸ்மார்ட் கிரிட்டிலிருந்து டைல்களை நீக்குதல்
ஸ்மார்ட் கிரிட்டில் இருந்து ஒரு டைலை நீங்கள் அகற்றலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, விற்பனைச் சேனல்கள் > விற்பனைப் புள்ளி என்பதற்குச் செல்லவும்.
ஸ்டோர் அனுபவத்தைத் தனிப்பயனாக்குக பிரிவில், POS செயலி என்பதற்கு திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்மார்ட் கிரிட் பிரிவில், நீங்கள் நீக்க விரும்பும் டைல் உள்ள ஸ்மார்ட் கிரிட் வார்ப்புருவைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் நீக்க விரும்பும் ஸ்மார்ட் கிரிட் டைலின் மீது கர்சரை வைக்கவும்.
டைலை அகற்ற,
ஐகானைக் கிளிக் செய்யவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
டைல் ஐகான்களின் நிறத்தைத் தனிப்பயனாக்குதல்
தயாரிப்பு அல்லது சேகரிப்புப் படத்தை டைலின் பின்னணியாகக் காண்பிக்கும் தயாரிப்பு மற்றும் சேகரிப்பு டைல்களைத் தவிர்த்து, உங்கள் ஸ்மார்ட் கிரிட் டைல் ஐகான்களின் நிறத்தை நீங்கள் மாற்றலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, விற்பனைச் சேனல்கள் > விற்பனைப் புள்ளி என்பதற்குச் செல்லவும்.
ஸ்டோர் அனுபவத்தைத் தனிப்பயனாக்குக பிரிவில், POS செயலி என்பதற்கு திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்மார்ட் கிரிட் பிரிவில், நீங்கள் நிறத்தை மாற்ற விரும்பும் டைல் உள்ள ஸ்மார்ட் கிரிட் வார்ப்புருவைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் திருத்த விரும்பும் ஸ்மார்ட் கிரிட் டைலைக் கிளிக் செய்யவும்.
நிறம் தேர்வியில், டைல் ஐகானுக்கான நிறத்தைத் தேர்ந்தெடுக்க கீழ்தோன்றும் மெனுவைப் பயன்படுத்தவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் ஸ்மார்ட் கிரிட் வார்ப்புருவிற்கான டைல் பக்கங்களை நிர்வகித்தல்
டைல் பக்கங்கள் ஸ்மார்ட் கிரிட்டில் உள்ள டைல்களைத் தொகுக்கின்றன. Shopify POS செயலியில் ஸ்மார்ட் கிரிட்டை இடப்புறமும் வலப்புறமும் ஸ்வைப் செய்து டைல் பக்கங்களுக்கு இடையே செல்லலாம். எந்த டைல் பக்கத்திலும் அனைத்து வகையான டைல்களையும் சேர்க்கலாம். எனவே ஸ்மார்ட் கிரிட் டைல் பக்கங்களை எப்படி ஒழுங்கமைப்பது என்பதை நீங்களே தீர்மானிக்கலாம். POS எடிட்டரில் டைல் பக்கங்களை உருவாக்கலாம், வரிசை மாற்றலாம் மற்றும் நீக்கலாம்.
டைல் பக்கங்களுக்கு இடையே டைல்களை நகர்த்த முடியாது. ஒரு டைல் பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்திற்கு ஒரு டைலை நகர்த்த, ஆரம்பப் பக்கத்தில் இருந்து டைலை நீக்கிவிட்டு, இரண்டாவது பக்கத்தில் அதை மீண்டும் சேர்க்க வேண்டும்.
உங்கள் ஸ்மார்ட் கிரிட்டிற்குப் புதிய டைல் பக்கத்தை உருவாக்குதல்
POS எடிட்டரில் இருந்து நீங்கள் புதிய டைல் பக்கத்தை உருவாக்கலாம். ஸ்மார்ட் கிரிட் வார்ப்புருவைச் சேமிக்கும் போது அனைத்து டைல் பக்கங்களிலும் குறைந்தது 1 டைலாவது இருக்க வேண்டும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, விற்பனைச் சேனல்கள் > விற்பனைப் புள்ளி என்பதற்குச் செல்லவும்.
ஸ்டோர் அனுபவத்தைத் தனிப்பயனாக்குக பிரிவில், POS செயலி என்பதற்கு திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்மார்ட் கிரிட் பிரிவில், நீங்கள் டைல் பக்கத்தைச் சேர்க்க விரும்பும் ஸ்மார்ட் கிரிட் வார்ப்புருவைத் தேர்ந்தெடுக்கவும்.
⊕ டைல் பக்கத்தைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
புதிய டைல் பக்கத்தில் டைலைச் சேர்க்க, ⊕ டைலைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் ஸ்மார்ட் கிரிட்டில் டைல் பக்கங்களை மறுவரிசைப்படுத்துதல்
உங்கள் ஸ்மார்ட் கிரிட்டில் உள்ள டைல் பக்கங்களை நீங்கள் மறுவரிசைப்படுத்தலாம். டைல் பக்கங்களை மறுவரிசைப்படுத்தும்போது, புதிய பக்க வரிசையைப் பிரதிபலிக்கும் வகையில் பக்க எண்கள் புதுப்பிக்கப்படும். எடுத்துக்காட்டாக, பக்கம் 2க்கு மேலே பக்கம் 4ஐ நகர்த்தினால், அது புதிய பக்கம் 2 ஆக மாறும், மேலும் புதிய வரிசைக்கு ஏற்ப அடுத்துள்ள எல்லாப் பக்கங்களுக்கும் புதிய எண்கள் வழங்கப்படும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, விற்பனைச் சேனல்கள் > விற்பனைப் புள்ளி என்பதற்குச் செல்லவும்.
ஸ்டோர் அனுபவத்தைத் தனிப்பயனாக்குக பிரிவில், POS செயலி என்பதற்கு திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்மார்ட் கிரிட் பிரிவில், நீங்கள் மறுவரிசைப்படுத்த விரும்பும் டைல் பக்கங்கள் உள்ள ஸ்மார்ட் கிரிட் வார்ப்புருவைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் மறுவரிசைப்படுத்த விரும்பும் பக்க எண்ணுக்கு அடுத்துள்ள
ஐகானைக் கிளிக் செய்து, டைல் பக்கத்தை மறுசீரமைக்க அதை மேலே அல்லது கீழே இழுக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் ஸ்மார்ட் கிரிட்டிலிருந்து டைல் பக்கங்களை நீக்குதல்
எந்த நேரத்திலும் ஒரு டைல் பக்கத்தை நீங்கள் நீக்கலாம். டைல் பக்கத்தில் உள்ள அனைத்து டைல்களும் நீக்கப்படும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, விற்பனைச் சேனல்கள் > விற்பனைப் புள்ளி என்பதற்குச் செல்லவும்.
ஸ்டோர் அனுபவத்தைத் தனிப்பயனாக்குக பிரிவில், POS செயலி என்பதற்கு திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்மார்ட் கிரிட் பிரிவில், நீங்கள் நீக்க விரும்பும் டைல் பக்கங்கள் உள்ள ஸ்மார்ட் கிரிட் வார்ப்புருவைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் நீக்க விரும்பும் பக்க எண்ணுக்கு அடுத்துள்ள
ஐகானைக் கிளிக் செய்யவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
POS எடிட்டரில் உங்கள் ஸ்மார்ட் கிரிட்டை முன்னோட்டமிடுதல்
டார்க் மோடு அல்லது லைட் மோடைப் பயன்படுத்திப் பல்வேறு சாதனங்களில் Shopify POS செயலியில் உங்கள் ஸ்மார்ட் கிரிட் எப்படிக் காண்பிக்கப்படும் என்பதை முன்னோட்டமிட POS எடிட்டரை நீங்கள் பயன்படுத்தலாம். இயல்புநிலையாக, டார்க் மோடைப் பயன்படுத்தி டேப்லெட் வடிவத்தில் POS எடிட்டர் உங்கள் ஸ்மார்ட் கிரிட்டைக் காண்பிக்கும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, விற்பனைச் சேனல்கள் > விற்பனைப் புள்ளி என்பதற்குச் செல்லவும்.
ஸ்டோர் அனுபவத்தைத் தனிப்பயனாக்குக பிரிவில், POS செயலி என்பதற்கு திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்மார்ட் கிரிட் பிரிவில், நீங்கள் முன்னோட்டமிட விரும்பும் ஸ்மார்ட் கிரிட் வார்ப்புருவைத் தேர்ந்தெடுக்கவும்.
முன்னோட்ட விருப்பங்கள் மெனுவில், உங்கள் ஸ்மார்ட் கிரிட்டை எவ்வாறு முன்னோட்டமிட வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்:
- சாதனம் பிரிவில், நீங்கள் பயன்படுத்த விரும்பும் சாதனத்தின் வகையைத் (டேப்லெட் அல்லது மொபைல்) தேர்ந்தெடுக்கவும்.
- தோற்றம் பிரிவில், நீங்கள் பயன்படுத்த விரும்பும் காட்சிப் பயன்முறையைத் (டார்க் அல்லது லைட் மோடு) தேர்ந்தெடுக்கவும்.