POS இல் தள்ளுபடி சேர்க்கைகள்
Shopify POS-இல் நீங்கள் ஒரு விற்பனையைச் செயலாக்கும்போது, உங்கள் Shopify நிர்வாகியில் உள்ளமைத்துள்ள தானியங்கு தள்ளுபடிகள், தள்ளுபடிக் குறியீடுகள் ஆகியவற்றுடன் பரிவர்த்தனை சார்ந்த பிரத்தியேகத் தள்ளுபடிகளையும் பயன்படுத்தலாம். ஒரே ஆர்டருக்குப் பல தள்ளுபடிகள் பயன்படுத்தப்படும்போது, வாடிக்கையாளர்கள் தங்கள் கார்ட்டின் அடிப்படையில் சாத்தியமான சிறந்த மொத்தத் தள்ளுபடியைப் பெறுவார்கள்.
Shopify POS-இல் தள்ளுபடி சேர்க்கைகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு, Shopify நிர்வாகியில் தள்ளுபடிகளை அமைத்து, அவற்றைச் சேர்க்கக்கூடிய வகையில் உள்ளமைக்க வேண்டும். தள்ளுபடி சேர்க்கைகளை அமைத்து உள்ளமைப்பது பற்றி மேலும் அறிக.
தேவைகள்
Shopify POS-இல் தள்ளுபடி சேர்க்கைகளைப் பயன்படுத்த, உங்கள் ஸ்டோர் பின்வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:
- உங்கள் சில்லறை விற்பனை இருப்பிடம் Shopify POS Pro-ஐப் பயன்படுத்த வேண்டும்.
- தள்ளுபடிகள் POS பரிவர்த்தனைகளில் சேர்வதற்கு முன்பு, அவை உங்கள் Shopify நிர்வாகியில் சேர்க்கக்கூடிய வகையில் உள்ளமைக்கப்பட வேண்டும்.
POS சார்ந்த தள்ளுபடியின் செயல்பாடுகள்
Shopify POS-இல் தள்ளுபடி சேர்க்கைகளுடன் பணிபுரியும்போது, பின்வரும் செயல்பாடுகளைக் கவனிக்கவும்:
- பிற தள்ளுபடிகளில் சேர்ப்பதற்கான கட்டுப்பாடுகள் இருந்தாலும், Shopify POS-இல் நீங்கள் மேனுவலாகப் பயன்படுத்தும் பிரத்தியேகத் தள்ளுபடிகள் எப்போதும் ஆர்டருக்குப் பயன்படுத்தப்படும்.
- பிரிக்கப்பட்ட வரிசை உருப்படிக்குப் பிரத்தியேக வரிசை உருப்படித் தள்ளுபடிகளை உங்களால் பயன்படுத்த முடியாது.
- Shopify POS-இல் நீங்கள் பிரத்தியேக வரிசை உருப்படித் தள்ளுபடியைப் பயன்படுத்திய பிறகு, அதே உருப்படிக்குக் கூடுதல் தயாரிப்புத் தள்ளுபடிக் குறியீடுகளைப் பயன்படுத்த முடியாது.
- அனைத்துத் தானியங்கு தள்ளுபடிகளும் தள்ளுபடிக் குறியீடுகளும் ஆன்லைன் ஆர்டர்களைப் போன்றே, தள்ளுபடி சேர்க்கை விதிகளையும் கணக்கீட்டு முறையையும் பின்பற்றுகின்றன.
- Shopify Plus திட்டத்தில் உள்ள ஸ்டோர்களுக்கான POS-இல், ஒரே வரிசை உருப்படியில் பல தயாரிப்புத் தள்ளுபடிகளைச் சேர்ப்பதற்கான வசதி ஆதரிக்கப்படுகிறது.
தள்ளுபடி சேர்க்கைகளைச் சோதித்தல்
நேரடிப் பரிவர்த்தனைகளைச் செயலாக்குவதற்கு முன்பு, Shopify POS-இல் தள்ளுபடி சேர்க்கைகள் சரியாகச் செயல்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்த நீங்கள் அவற்றைச் சோதிக்கலாம்.
படிகள்:
- தள்ளுபடி சேர்க்கையைத் தூண்டும் தயாரிப்புகளை உங்கள் கார்ட்டில் சேர்த்து, Shopify POS-இல் சோதனை ஆர்டரை வழங்கவும்.
- செக்அவுட்டின் போது தொடர்புடைய தள்ளுபடிக் குறியீடுகளைப் பயன்படுத்தவும்.
- சரியான தள்ளுபடிகள் பயன்படுத்தப்பட்டு, சேர்க்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்த, கார்ட்டை மதிப்பாய்வு செய்யவும்.
- சோதனைப் பரிவர்த்தனையை நிறைவுசெய்யவும்.