Shopify POS FAQ

இந்தப் பக்கத்தில்

எனது Shopify POS வன்பொருள் தொடர்பான சிக்கல்களை நான் எவ்வாறு தீர்ப்பது?

கார்டு ரீடர்கள், ரசீது அச்சுப்பொறிகள், பார்கோடு ஸ்கேனர்கள் மற்றும் பிற POS வன்பொருள்களில் உள்ள சிக்கல்களைக் கண்டறிந்து தீர்க்க, வன்பொருள் சிக்கல் தீர்த்தல் வழிகாட்டியைப் பயன்படுத்தலாம்.

எந்தச் சாதனங்களில் Shopify POS வேலை செய்யும்?

Shopify POS iOS மற்றும் Android சாதன இணக்கத்தன்மைத் தேவைகள்

Shopify POS iOS மற்றும் Android சாதனங்களுக்கு மட்டுமே கிடைக்கும். இது லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுக்கோ அல்லது Amazon Fire டேப்லெட்டுகளுக்கோ கிடைக்காது.

பின்வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சாதனங்களில் Shopify POS வேலை செய்யும்:

Shopify POS-உடன் வேலை செய்யும் iPhone-கள், iPad-கள், Android சாதனங்கள் மற்றும் POS Go, அத்துடன் அவற்றுக்குத் தேவையான தலைமுறைகள் மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களின் பட்டியல்.
சாதனம்விளக்கம்
iPadiPadOS 15.1 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பில் இயங்கும் 5-ஆம் தலைமுறை அல்லது அதற்குப் பிந்தைய சாதனங்கள்
iPad Air iPadOS 15.1 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பில் இயங்கும் 2-ஆம் தலைமுறை அல்லது அதற்குப் பிந்தைய சாதனங்கள்
iPad miniiPadOS 15.1 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பில் இயங்கும் 4-ஆம் தலைமுறை அல்லது அதற்குப் பிந்தைய சாதனங்கள்
iPad ProiPadOS 15.1 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பில் இயங்கும் அனைத்து iPad Pro மாடல்களும்
iPhoneiOS 15.1 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பில் இயங்கும் iPhone 7 அல்லது அதற்குப் பிந்தைய மாடல்கள்
POS GoShopify வழங்கும் சமீபத்திய மென்பொருள் புதுப்பிப்புகளில் இயங்கும் POS Go
AndroidGoogle Play Services மற்றும் Google Mobile Services செயல்படுத்தப்பட்டு, அதிகாரப்பூர்வமான Android பதிப்பு 10.0 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பில் இயங்கும் போன் அல்லது டேப்லெட்

Shopify POS இனி iOS 14 அல்லது அதற்கு முந்தைய பதிப்புகளை ஆதரிக்காது. iOS-இன் பழைய பதிப்புகளிலும் நீங்கள் செயலியைத் தொடர்ந்து பயன்படுத்தலாம், ஆனால் இனி உங்களால் அதைப் புதுப்பிக்க முடியாது. பிழைத் திருத்தங்கள் மற்றும் புதிய அம்சங்களைப் பயன்படுத்திக்கொள்ள, உங்கள் சாதனத்தை iOS 15.1 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பிற்குப் புதுப்பிக்க வேண்டும். அது சாத்தியமில்லை எனில், iOS 15.1 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பில் இயங்கும் வேறொரு சாதனத்தில் Shopify POS-ஐப் பயன்படுத்தத் தொடங்குங்கள்.

எனது Shopify POS செயலியை நான் ஏன் புதுப்பிக்க வேண்டும்?

Shopify POS செயலியின் ஒவ்வொரு பதிப்பும் வெளியிடப்பட்ட பிறகு சுமார் 180 நாட்களுக்கு ஆதரிக்கப்படும். மென்பொருட் புதுப்பிப்புகள் உங்களுக்குச் சமீபத்திய அம்சங்களை வழங்குவதோடு, காலாவதியான மென்பொருளால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கவும் உதவுகின்றன. உங்கள் பதிப்பிற்கான ஆதரவு நிறுத்தப்படுவதற்கு முன்பு, எந்தத் தேதிக்குள் நீங்கள் புதுப்பிக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடும் செய்தி ஒன்று Shopify POS இல் காண்பிக்கப்படும். அந்தத் தேதிக்குள் நீங்கள் புதுப்பிக்காவிட்டால், சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பிக்கும் வரை அந்தச் சாதனத்தில் Shopify POS ஐ உங்களால் பயன்படுத்த முடியாது.

நீங்கள் தானியங்கிப் புதுப்பிப்புகளை ஆன் செய்யலாம் அல்லது அவற்றை ஆஃப் செய்துவிட்டு உங்கள் வணிக நேரங்களுக்கு வெளியே Shopify POS ஐ மேனுவலாகப் புதுப்பிக்கலாம். Shopify POS ஐ எவ்வாறு புதுப்பிப்பது என்பதைத் தேர்வுசெய்தல் பற்றி மேலும் அறிக.

Shopify POS மற்றும் POS Pro ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு என்ன?

Shopify POS என்பது உங்களின் நேரடி விற்பனையகத்தை ஆதரிப்பதற்கான பல்வேறு அம்சங்களைக் கொண்ட ஒரு விற்பனைப் புள்ளிச் செயலியாகும். அனைத்துச் சந்தாத் திட்டங்களிலும் Shopify POS செயலி கிடைக்கும்.

Shopify POS Pro என்பது Shopify POS-இல் வழங்கப்படும் ஒரு ஆட்-ஆன் ஆகும், இது நேரடி வணிகங்களுக்கான கூடுதல் அம்சங்களை வழங்குகிறது. நீங்கள் Shopify POS-ஐப் பயன்படுத்தத் தொடங்கும்போது, Pro அம்சங்களை 3 நாள் இலவசச் சோதனையில் பயன்படுத்தலாம். அப்போது கூடுதல் மாதாந்திரக் கட்டணம் செலுத்தி, உங்களின் சில்லறை விற்பனை ஸ்டோர்களுக்கான Pro அம்சங்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதைத் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இல்லையெனில், உங்கள் தரப்பிலிருந்து எந்தச் செயலும் தேவையில்லாமல், செயலியானது Shopify POS-இன் இலவசப் பதிப்பிற்குத் தானாகவே மாறிவிடும்.

நான் ஆன்லைனில் விற்க விரும்பவில்லை என்றால், எனக்கு எதற்காக ஒரு Shopify ஸ்டோர் தேவை?

நீங்கள் எங்கு விற்பனை செய்தாலும், உங்களின் வாடிக்கையாளர்கள், சரக்கு இருப்பு மற்றும் கணக்கு விவரங்கள் போன்ற தகவல்களை நீங்கள் நிர்வகிக்கும் இடமாக உங்களின் Shopify ஸ்டோர் செயல்படும். வாடிக்கையாளர் தொடர்பான செயல்பாடுகளையும் உங்களின் ஸ்டோர் அமைப்புகளையும் Shopify POS செயலி கையாளும்.

செயலியைத் தவிர எனக்கு வேறு என்னென்ன தேவை?

ஆதரிக்கப்படும் சாதனம், Shopify POS செயலி, ஒரு Shopify ஸ்டோர் (இதைச் செயலியிலிருந்தே நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம்) மற்றும் விற்பனை செய்வதற்கான ஒரு தயாரிப்பு ஆகியவையே அத்தியாவசியமான விஷயங்களாகும். பணப் பெட்டி, iPad ஸ்டாண்ட், ரசீது அச்சுப்பொறி மற்றும் பார்கோடு ஸ்கேனர் போன்ற பல்வேறு வகையான சில்லறை விற்பனை வன்பொருள்களுடன் Shopify POS செயல்படுகிறது, ஆனால் இந்தப் பொருட்கள் இல்லாமலும் உங்களால் விற்பனைகளைச் செயலாக்க முடியும். Shopify POS வன்பொருளானது குறிப்பிட்ட சில நாடுகளில் உள்ள Shopify Hardware Store-இல் கிடைக்கிறது. மேலும் தகவலுக்கு, Shopify Hardware Store-ஐப் பார்வையிடவும்.

பணியாளர் PIN என்றால் என்ன?

Shopify POS செயலிக்கான அணுகலைப் பெறுவதற்காக, தனித்துவமான நான்கு இலக்கத் தனிப்பட்ட அடையாள எண்ணாக (PIN) பணியாளர் PINகளை Shopify POS அறிமுகப்படுத்துகிறது.

உள்நுழைந்துள்ள ஒரு பணியாளர் Shopify POS மூலமாக செக்அவுட்டைச் செயலாக்கும்போது, அந்தப் பணியாளரின் பெயர் அந்த ஆர்டருடன் இணைக்கப்படும். ஒரு ஆர்டரை எந்தப் பணியாளர் செயலாக்கினார் என்பதை, Shopify POS-இல் உள்ள ஆர்டரின் விவரக் காட்சியிலும், Shopify நிர்வாகியில் உள்ள ஆர்டரின் காலவரிசையிலும் நீங்கள் பார்க்கலாம்.

ஒரு பணியாளருக்கு எந்த PIN ஒதுக்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியவில்லை என்றால், நிர்வாகியில் அவர்களுக்கு ஒரு புதிய பணியாளர் PIN-ஐ நீங்கள் அமைக்கலாம்.

நான் ஆன்லைனில் விற்கும் அதே தயாரிப்புகளைத்தான் ஸ்டோரிலும் விற்க வேண்டுமா?

இல்லை. உங்களின் Shopify நிர்வாகியில் தயாரிப்புகளைச் சேர்க்கும்போது, அவற்றை ஆன்லைனிலோ ஸ்டோரிலோ அல்லது இரண்டிலுமோ கிடைக்கும்படி செய்ய வேண்டுமா என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம்.

இந்தச் செயலி ஒவ்வொரு நாடும் மற்றும் நாணயத்திலும் செயல்படுமா?

Shopify ஆதரிக்கும் கிரெடிட் கார்டு கட்டண வழங்குநர்கள் உள்ள நாடுகளில் நீங்கள் Shopify POS-ஐப் பயன்படுத்தலாம். தற்சமயம் சீனாவில் Shopify POS கிடைப்பதில்லை.

Shopify POS-இல் மட்டுமே தயாரிப்புகள் கிடைக்கும்படி செய்வது எப்படி?

உங்களின் Shopify நிர்வாகியில் உள்ள தயாரிப்புகள் பக்கத்திலிருந்து உங்கள் தயாரிப்புகள் கிடைக்கும் தன்மையை உங்களால் மாற்ற முடியும்.

ஒரு தயாரிப்பு கிடைக்கும் தன்மையை மாற்ற, அந்தத் தயாரிப்பைக் கிளிக் செய்து தயாரிப்புக் கிடைக்கும் தன்மை என்பதைத் திருத்தவும், இதனால் விற்பனைப் புள்ளி என்பது மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும். முடிந்தது என்பதைக் கிளிக் செய்து, பிறகு சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

பல தயாரிப்புகள் கிடைக்கும் தன்மையை மாற்ற, நீங்கள் திருத்த விரும்பும் தயாரிப்புகளைத் தேர்ந்தெடுத்து, செயல்கள் என்பதைக் கிளிக் செய்து, தயாரிப்புகள் கிடைக்கச் செய் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். விற்பனைப் புள்ளி மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும் வகையில், கிடைக்கும் தன்மையை மாற்றி, தயாரிப்புகள் கிடைக்கச் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.

எந்தெந்த மொழிகளை Shopify POS ஆதரிக்கிறது?

Shopify POS பின்வரும் மொழிகளை ஆதரிக்கிறது:

  • சீனம் (எளிமையாக்கப்பட்டது)
  • சீனம் (மரபுவழி)
  • செக்
  • டேனிஷ்
  • டச்சு
  • ஆங்கிலம்
  • ஃபின்னிஷ்
  • பிரெஞ்சு
  • ஜெர்மன்
  • இத்தாலியன்
  • ஜப்பானியம்
  • கொரியன்
  • நார்வேஜியன் போக்மால்
  • போலிஷ்
  • போர்ச்சுகீஸ் (பிரேசில்)
  • போர்ச்சுகீஸ் (போர்ச்சுகல்)
  • ஸ்பானிஷ்
  • ஸ்வீடிஷ்
  • தாய்
  • துருக்கியம்

Shopify POS செயலியின் மொழியை மாற்ற, iOS அமைப்புகள் வழியாக iOS சாதனத்தின் மொழியை நீங்கள் மாற்ற வேண்டும்.

படிகள்:

iOS
  1. Shopify POS செயலியை மூடவும்.
  2. உங்கள் iPad-இல், அமைப்புகள் > பொது > மொழி மற்றும் பிராந்தியம் என்பதைத் தட்டவும்.
  3. iPad மொழி என்பதைத் தட்டி, பின்னர் பட்டியலிலிருந்து உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுத்து முடிந்தது என்பதைத் தட்டவும்.
  4. (தேர்ந்தெடுக்கப்பட்ட மொழி)-க்கு மாற்று என்பதைத் தட்டவும்.
Android
  1. Shopify POS செயலியை மூடவும்.
  2. உங்கள் சாதனத்தில், அமைப்புகள் > சிஸ்டம் > மொழி மற்றும் உள்ளீடு என்பதைத் தட்டவும்.
  3. மொழி மற்றும் பிராந்தியம் என்பதைத் தட்டி, பட்டியலிலிருந்து உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. விருப்பத்தேர்வு: உங்களுக்கு விருப்பமான மொழி பட்டியலில் இல்லை எனில், மொழியைச் சேர் என்பதைத் தட்டி, உங்கள் விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

இங்கே பட்டியலிடப்படாத மற்ற மொழிகள் வேலை செய்யக்கூடும், ஆனால் அவை ஆதரிக்கப்படவில்லை என்பதுடன், மொழிபெயர்ப்புகள் விடுபட்டு இயல்பாகவே ஆங்கிலத்தில் காட்டுவதற்கு அது வழிவகுக்கலாம்.

எனது POS கார்டு ரீடர் திருடப்பட்டுவிட்டால், நான் என்ன செய்ய வேண்டும்?

பயன்படுத்தப்படாத, தொலைந்துபோன அல்லது திருடப்பட்ட POS சாதனங்களின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும் அல்லது வெளியேற வேண்டும்.

Bluetooth கார்டு ரீடரின் இணைப்பைத் துண்டி

உங்கள் Bluetooth கார்டு ரீடர் பயன்படுத்தப்படாவிட்டாலோ, தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டிருந்தாலோ, POS செயலியில் உள்ள Bluetooth-இலிருந்து அதன் இணைப்பைத் துண்டிக்கவும். இதில் Tap & Chip, WisePad 3 மற்றும் Chipper 2X BT போன்ற ரீடர்கள் அடங்கும்.

படிகள்:

  1. Shopify POS-இலிருந்து, Connectivity Icon ஐகானைத் தட்டவும்.

  2. வன்பொருள் பிரிவில், கார்டு ரீடரைத் தட்டவும்.

  3. கார்டு ரீடரை மற என்பதைத் தட்டவும்.

  4. iOS அல்லது Android சாதனத்தின் Bluetooth அமைப்புகளுக்குச் சென்று, கார்டு ரீடரை மறக்கச் செய்யவும்.

POS Terminal அல்லது POS Go-இலிருந்து வெளியேறு

உங்கள் POS Terminal அல்லது POS Go சாதனத்தைப் பயன்படுத்தவில்லை என்றாலோ, அது தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டுவிட்டாலோ, உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து அந்தச் சாதனத்தை விட்டு வெளியேறவும்.

படிகள்:

  1. Shopify நிர்வாகியில், Point of Sale (விற்பனைப் புள்ளி) > Devices (சாதனங்கள்) என்பதற்குச் செல்லவும்.
  2. பட்டியலிலிருந்து சாதனத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. ஸ்டோரிலிருந்து வெளியேறு என்பதைக் கிளிக் செய்யவும்.

மாற்று Shopify POS வன்பொருளை Shopify வன்பொருள் ஸ்டோரில் இருந்து வாங்கிக் கொள்ளலாம்.

எனது கார்டு ரீடரை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருப்பது?

பின்வரும் படிகளைப் பின்பற்றி உங்கள் கார்டு ரீடரைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும்:

  • தெரியாத நபர்கள் சாதனங்களின் இணைப்பைத் துண்டிக்கவோ திறக்கவோ முயல்வது போன்ற சந்தேகத்திற்குரிய நடத்தைகள் குறித்து விழிப்புடன் இருக்கவும். பழுதுபார்க்கும் அல்லது பராமரிக்கும் பணியாளர்கள் எனக் கூறிக் கொள்ளும் மூன்றாம் தரப்பு நபர்களின் அடையாளத்தைச் சரிபார்க்கவும். Shopify இந்தச் சாதனங்களுக்கு நேரில் சேவை வழங்குவதில்லை.
  • சந்தேகத்திற்குரிய நடத்தைகள், POS சாதனம் சேதப்படுத்தப்பட்ட அல்லது மாற்றப்பட்டதற்கான அறிகுறிகள் குறித்து Shopify கணக்கு உரிமையாளரிடம் தெரிவிக்கவும். எதிர்பாராத இணைப்புகள் அல்லது கேபிள்கள் சாதனத்தில் சொருகப்பட்டிருப்பது, விடுபட்ட அல்லது மாற்றப்பட்ட பாதுகாப்பு லேபிள்கள், உடைந்த அல்லது வேறு நிறத்திலான உறை, வரிசை எண் அல்லது பிற வெளிப்புறக் குறிகளில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவை ஒரு சாதனம் சேதப்படுத்தப்பட்டிருக்கலாம் அல்லது மாற்றப்பட்டிருக்கலாம் என்பதற்கான எடுத்துக்காட்டுகளாகும்.
  • சேதப்படுத்தப்பட்டதை (உதாரணமாக, சாதனங்களில் கார்டு ஸ்கிம்மர்கள் சேர்க்கப்பட்டிருப்பது) அல்லது மாற்றப்பட்டதைக் கண்டறிய (உதாரணமாக, ஒரு சாதனம் போலியான சாதனத்தால் மாற்றப்படவில்லை என்பதைச் சரிபார்க்க அதன் வரிசை எண் அல்லது பிற குணாதிசயங்களைச் சரிபார்ப்பதன் மூலம்) POS சாதனங்களை அவ்வப்போது பரிசோதிக்கவும். சேதப்படுத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் POS சாதனங்களைப் பரிசோதிக்கும் வரை அவற்றைப் பயன்படுத்த வேண்டாம்.

ஸ்டோர் நிர்வாக இடைமுகத்தில் உள்ள POS கார்டு ரீடர் சாதனச் சரக்கு இருப்பைப் பராமரிப்பதற்கு நீங்களே பொறுப்பாவீர்கள்.

சாதனம் சேதப்படுத்தப்பட்டிருந்தால், அமைப்புகள் இடைமுகத்தில் உள்ள உங்கள் POS சாதனத்திலிருந்து அதை அகற்றவும். Shopify POS-இல், Connectivity Icon ஐகானைத் தட்டி, சாதனத்தைத் தட்டி, பின்னர் சாதனத்தை மறந்துவிடு என்பதைத் தட்டவும்.

பேமெண்ட் தரவைப் பெற சேதப்படுத்தப்பட்ட ஒரு சாதனம் பயன்படுத்தப்பட்டால், கிரெடிட் கார்டு தரவு திருடப்பட்டிருக்கலாம். திருடப்பட்ட பேமெண்ட் தரவைக் குறித்து, உங்கள் நிகழ்விற்கான பதில் செயல்முறைக்கு ஏற்பவும் PCI இணக்கத்திற்காக PCI DSS விதிமுறைகளின்படியும் கட்டணச் சேவை வழங்குநருக்கு (மற்றும்/அல்லது கார்டு பிராண்டுகளுக்கு) புகாரளிக்க வேண்டியது உங்கள் பொறுப்பாகும்.