உங்கள் Shopify நிர்வாகியில் உங்களின் Shopify POS மாறுபாடுகளை நிர்வகித்தல்
அளவு அல்லது நிறம் போன்ற, ஒன்றுக்கு மேற்பட்ட விருப்பத்தேர்வுகளில் வரும் தயாரிப்புக்கு நீங்கள் மாறுபாடுகளைச் சேர்க்கலாம். ஒரு தயாரிப்புக்கான விருப்பத்தேர்வுகளின் ஒவ்வொரு கலவையும் அந்தத் தயாரிப்புக்கான மாறுபாடாகும்.
உதாரணமாக, அளவு மற்றும் நிறம் என இரண்டு விருப்பத்தேர்வுகளில் நீங்கள் டி-ஷர்ட்டுகளை விற்பதாக வைத்துக்கொள்வோம். அளவு விருப்பத்தேர்வில் சிறியது, நடுத்தரமானது மற்றும் பெரியது என மூன்று மதிப்புகள் உள்ளன. நிறம் விருப்பத்தேர்வில் நீலம் மற்றும் பச்சை என இரண்டு மதிப்புகள் உள்ளன. இந்த விருப்பத்தேர்வுகளில் இருந்து பெறப்படும் ஒரு குறிப்பிட்ட மாறுபாடு சிறிய அளவிலான நீல நிற டி-ஷர்ட் ஆகும்.
தயாரிப்பு விவரங்கள் பக்கத்தில் ஒரு தயாரிப்புக்கான மாறுபாடுகளின் பட்டியலை நீங்கள் பார்க்கலாம்.
ஒரு தயாரிப்புக்கு மாறுபாடுகளைச் சேர்க்கும்போது, ஒவ்வொரு மாறுபாட்டிற்குமான தயாரிப்பு விவரங்களை நீங்கள் அமைக்கும் முறை மாறுகிறது. எந்தவொரு மாறுபாடுகளும் இல்லாத தயாரிப்புகளுக்கு, தயாரிப்பு விவரங்கள் பக்கத்தில் இருந்து அத்தயாரிப்பிற்கான விலை, சரக்கு இருப்பு மற்றும் ஷிப்பிங் அமைப்புகளை நீங்கள் சரிசெய்ய வேண்டும். நீங்கள் மாறுபாடுகளைச் சேர்த்த பிறகு, ஒவ்வொரு மாறுபாட்டிற்கும் மாறுபாடு விவரங்கள் பக்கத்தில் இருந்து அந்த அமைப்புகளைச் சரிசெய்ய வேண்டும்.
சரக்கு இருப்பு பக்கத்தில் இருந்து ஒவ்வொரு மாறுபாட்டிற்குமான சரக்கு இருப்பையும் நீங்கள் நிர்வகிக்கலாம்.