தேடலைப் பாதிக்கும் சிக்கல்

சில பயனர்களால் இப்போது தேடலைப் பயன்படுத்த முடியாமல் போகலாம். இதை நாங்கள் விசாரித்து வருகிறோம்.

சரக்கு இருப்பை நிர்வகித்தல்

துல்லியமான சரக்கு எண்ணிக்கைளைப் பராமரிக்கவும் உங்கள் இடங்கள் முழுவதும் உங்களின் ஆர்டர் செயல்முறையை நெறிப்படுத்தவும் Stocky-யில் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. சரக்கு இருப்பின் நகர்வுகளை நீங்கள் தடமறியலாம், விற்பனைத் தரவின் அடிப்படையில் கொள்முதல் ஆர்டர்களை உருவாக்கலாம் மற்றும் Shopify-இல் பதிவாகியிருப்பதற்கு ஏற்ப உங்களின் சரக்கு இருப்பு நிலைகள் இருப்பதை உறுதிசெய்ய நேரடிச் சரக்கு இருப்பு எண்ணிக்கைகளை மேற்கொள்ளலாம்.

புதிய சரக்கு இருப்பைப் பெறும்போது அல்லது சேதமடைந்த தயாரிப்புகளைக் கணக்கிட வேண்டியிருக்கும்போது, சரக்கு இருப்பு நிலைகளைச் சரிசெய்ய Stocky-யைப் பயன்படுத்தவும். உங்களின் விற்பனை வரலாறு மற்றும் லீட் நேரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆர்டர் செய்ய வேண்டிய சரியான அளவுகளைத் தீர்மானிக்க, தேவை முன்கணிப்புடன் கொள்முதல் ஆர்டர்களை உருவாக்கவும். தேவையைப் பூர்த்திசெய்ய இடங்களுக்கு இடையே சரக்கு இருப்பை இடமாற்றவும், உங்கள் நேரடிச் சரக்கு இருப்பு உங்களின் பதிவுகளுடன் பொருந்துகிறதா என்பதைச் சரிபார்க்க, வழக்கமான இருப்பு சரிபார்த்தல்களை மேற்கொள்ளவும்.

குறைந்த சரக்கு இருப்பு நிலைகளைக் கண்காணிப்பதன் மூலம் எந்தத் தயாரிப்புகளை மீண்டும் ஆர்டர் செய்ய வேண்டும் என்பதை நீங்கள் கண்டறியலாம். சரக்கு இருப்பைத் தடமறிவதற்கும் பெறுவதற்கும் உதவும் வகையில் Stocky-யிலிருந்து நேரடியாகப் பார்கோடு லேபிள்களையும் அச்சிடலாம்.

இந்தப் பிரிவில்