கொள்முதல் ஆர்டர்களுக்கான தேவை முன்னறிவிப்பு
நீங்கள் ஒரு கொள்முதல் ஆர்டரை உருவாக்கும்போது, நீங்கள் ஆர்டர் செய்ய வேண்டிய தயாரிப்புகள் மற்றும் அவற்றின் அளவுகள் குறித்து Stocky பரிந்துரைகளை வழங்க முடியும். எந்தத் தயாரிப்புகளை மீண்டும் ஆர்டர் செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க உங்களுக்கு உதவ, Stocky உங்களின் ஸ்டோரிலிருந்து விற்பனைத் தரவைப் பயன்படுத்துகிறது. ஒரு தயாரிப்பின் சமீபத்திய ஆர்டர் வரலாறு, குறிப்பிட்ட நேரத்தில் அதன் ஆர்டர் வரலாறு அல்லது ஒரு தயாரிப்புக்காக நீங்கள் தேர்ந்தெடுத்த சரக்கு இருப்பு நிலைகளைப் பராமரிப்பது ஆகியவற்றின் அடிப்படையில் Stocky பரிந்துரைகளை வழங்கலாம்.
இந்தப் பக்கத்தில்
தேவை முன்னறிவிப்புடன் கொள்முதல் ஆர்டரை உருவாக்குதல்
- உங்கள் Shopify நிர்வாகியில், செயலிகள் > Stocky என்பதற்குச் செல்லவும்.
- கொள்முதல்கள் > கொள்முதல் ஆர்டரை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
- கொள்முதல் ஆர்டர் விற்பனையாளருக்கானதா அல்லது சப்ளையருக்கானதா என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- விற்பனையாளர் அல்லது சப்ளையரைத் தேர்ந்தெடுக்கவும்.
- உருவாக்கு என்பதில், பரிந்துரையைப் பயன்படுத்தி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- பின்வரும் விவரங்களை உள்ளிடவும்:
- இதற்கான பரிந்துரை (நாட்கள்): முன்னறிவிப்பு எத்தனை நாட்களுக்கு இருக்க வேண்டும்.
- இருப்பைப் பெறுவதற்கான இடம்: முன்னறிவிப்பிலிருந்து இருப்பை நீங்கள் எங்குப் பெற விரும்புகிறீர்களோ அந்த இடம்.
- இதன் அடிப்படையிலான முன்னறிவிப்பு: முன்னறிவிப்பைக் கணக்கிட, ஒப்பிட வேண்டிய உங்களின் வணிகப் பகுதி(கள்). எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தையோ உங்களின் ஒட்டுமொத்த ஸ்டோரையோ தேர்வுசெய்யலாம்.
- கொள்முதல் ஆர்டரை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
தேவை முன்னறிவிப்பு வகையைத் தேர்ந்தெடுக்கவும்
வெவ்வேறு அளவுகோல்களைப் பயன்படுத்தித் தயாரிப்புகளின் தேவையை நீங்கள் முன்னறிவிக்கலாம்.
| முன்னறிவிப்பு வகை | விளக்கம் |
|---|---|
| கடந்த X நாட்கள் |
நீங்கள் உள்ளிடும் மாதிரிப் பருவத்தில் ஒரு நாளுக்கான சராசரி ஆர்டர்களை எடுத்து, இதற்கான பரிந்துரை புலத்தில் நீங்கள் உள்ளிடும் நாட்களின் எண்ணிக்கையோடு Stocky அதைப் பெருக்குகிறது. எடுத்துக்காட்டாக, நீங்கள் கடந்த 7 நாட்களில் 14 சட்டைகளை விற்றீர்கள் என வைத்துக்கொள்வோம், இது ஒரு நாளுக்குச் சராசரியாக 2 சட்டைகள் ஆகும். உங்கள் மாதிரிப் பருவமாக 7 நாட்கள் மற்றும் இதற்கான பரிந்துரை புலத்தில் 14 நாட்கள் என நீங்கள் உள்ளிடுகிறீர்கள் எனில், நீங்கள் 28 சட்டைகளை ஆர்டர் செய்யுமாறு Stocky பரிந்துரைக்கும். |
| தனிப்பயன் தேதிக்கட்டம் |
நீங்கள் உள்ளிடும் மாதிரிப் பருவத்தில் ஒரு நாளுக்கான சராசரி ஆர்டர்களை எடுத்து, இதற்கான பரிந்துரை புலத்தில் நீங்கள் உள்ளிடும் நாட்களின் எண்ணிக்கையோடு Stocky அதைப் பெருக்குகிறது. எடுத்துக்காட்டாக, மூன்று மாதங்களுக்கு முன் உங்களுக்கு இரண்டு நாள் விற்பனை இருந்தது என்றும், அதில் 50 சட்டைகளை நீங்கள் விற்றீர்கள் என்றும் வைத்துக்கொள்வோம். அதே விற்பனையை நீங்கள் மீண்டும் நடத்த விரும்புகிறீர்கள், ஆனால் இந்த முறை ஐந்து நாட்களுக்கு நடத்த விரும்புகிறீர்கள். விற்பனைக்கான தேதிகளை நீங்கள் தேர்ந்தெடுத்து, இதற்கான பரிந்துரை புலத்தில் 5 நாட்கள் என உள்ளிடுகிறீர்கள் எனில், 125 சட்டைகளை நீங்கள் ஆர்டர் செய்ய Stocky பரிந்துரைக்கும். |
| கடந்த ஆண்டு இதே பருவம் |
இதற்கான பரிந்துரை புலத்தில் நீங்கள் உள்ளிடும் மாதிரிப் பருவத்திற்குள் பெறப்பட்ட ஆர்டர்களை Stocky எடுத்துக்கொண்டு, ஆர்டர் செய்யப்பட்ட அதே அளவிலான சரக்கு இருப்பை நீங்கள் ஆர்டர் செய்யுமாறு பரிந்துரைக்கிறது. உதாரணமாக, கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியின் அடிப்படையில், அடுத்த 30 நாள்களுக்கு உங்களுக்கு எவ்வளவு சரக்கு இருப்பு தேவைப்படலாம் என்பதை நீங்கள் அறிய விரும்புகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். நீங்கள் |
| ஷெல்ஃப்களை நிரப்பு |
உங்கள் ஷெல்ஃப் வரம்புகளை எட்ட நீங்கள் ஆர்டர் செய்ய வேண்டிய சரக்கு இருப்பின் அளவை Stocky பரிந்துரைக்கிறது. ஷெல்ஃப்களை நிரப்பு விருப்பத்தைப் பயன்படுத்த, உங்கள் சப்ளையர் அல்லது விற்பனையாளர் பக்கங்களில் உங்கள் தயாரிப்புகளுக்கான ஷெல்ஃப் வரம்புகளை உள்ளிட வேண்டும். |
| ஷெல்ஃப்களை நிரப்பு (குறைந்தபட்ச அளவை விடக் குறைவாக இருந்தால்) |
குறைந்தபட்சச் சரக்கு இருப்பு நிலைக்குக் கீழே உள்ள தயாரிப்புகளுக்கு, அவற்றின் ஷெல்ஃப் வரம்புகளை எட்ட நீங்கள் ஆர்டர் செய்ய வேண்டிய சரக்கு இருப்பின் அளவை Stocky பரிந்துரைக்கிறது. ஷெல்ஃப்களை நிரப்பு (குறைந்தபட்ச அளவை விடக் குறைவாக இருந்தால்) விருப்பத்தைப் பயன்படுத்த, உங்கள் சப்ளையர் அல்லது விற்பனையாளர் பக்கங்களில் உங்கள் தயாரிப்புகளுக்கான ஷெல்ஃப் வரம்புகளையும் குறைந்தபட்சச் சரக்கு இருப்பு நிலைகளையும் உள்ளிட வேண்டும். |
| இலக்குச் சரக்கு இருப்பு நிலை |
நீங்கள் ஒரு இலக்கு அளவை உள்ளிட்ட பிறகு, நீங்கள் உள்ளிட்ட இலக்கு அளவை எட்டுவதற்கு ஒவ்வொரு தயாரிப்புக்கும் எவ்வளவு சரக்கு இருப்பை ஆர்டர் செய்ய வேண்டும் என்பதை Stocky பரிந்துரைக்கும்.
உதாரணமாக, 3, 6 மற்றும் 10 என்ற சரக்கு இருப்புகளைக் கொண்ட மூன்று தயாரிப்புகள் உங்களிடம் உள்ளன என வைத்துக்கொள்வோம். நீங்கள் |
கொள்முதல் ஆர்டரை உருவாக்கிய பிறகு, Stocky-யிலிருந்தே நேரடியாக அதை உங்கள் உற்பத்தியாளர்களுக்கோ சப்ளையர்களுக்கோ அனுப்பலாம். சரக்கு இருப்பைப் பெற்ற பிறகு, உங்கள் சரக்கு இருப்பு நிலைகளைப் புதுப்பிக்க, கொள்முதல் ஆர்டரைப் பெற்றதாகக் குறிக்கவும்.