Dymo லேபிள் பிரிண்டிங்
Dymo லேபிள் பிரிண்டரைப் பயன்படுத்தி Stocky-யில் பார்கோடு லேபிள்களை அச்சிடுவது, சில்லறை விற்பனைச் செயல்பாடுகளுக்கு உங்கள் தயாரிப்புகளைத் திறமையாக லேபிளிடவும் ஒழுங்கமைக்கவும் உதவுகிறது. Dymo ஒருங்கிணைப்பின் மூலம், Stocky-யில் உள்ள கொள்முதல் ஆர்டர்களிலிருந்து நேரடியாக நீங்கள் பார்கோடு லேபிள்களை உருவாக்கலாம், இது உங்கள் நேரடி ஸ்டோரில் சரக்கு இருப்பை நிர்வகிப்பதை எளிதாக்குகிறது.
Stocky-யுடன் Dymo லேபிள் பிரிண்டிங்கை எப்படி அமைப்பது, தேவையான மென்பொருளைப் பதிவிறக்குவது மற்றும் உங்களுக்குத் தேவையான தகவல்களுடன் பார்கோடு லேபிள்களை எப்படி அச்சிடுவது என்பதை அறிய, இந்த வழிகாட்டியைப் பயன்படுத்தவும்.
இந்தப் பக்கத்தில்
DYMO லேபிள் பிரிண்டிங் மென்பொருளைப் பதிவிறக்குதல்
Stocky செயலியிலிருந்து நேரடியாக உங்களின் சொந்த பார்கோடு லேபிள்களை அச்சிட, உங்கள் DYMO பிரிண்டர் மாடல் மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் (OS) அடிப்படையில், அதற்கேற்ற DYMO லேபிள் பிரிண்டிங் மென்பொருளைப் பதிவிறக்க வேண்டும்.
உங்கள் DYMO பிரிண்டர் மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு எந்த மென்பொருள் தேவை என்பதைத் தீர்மானித்து, அதற்கேற்ற பதிப்பைப் பதிவிறக்க, DYMO-இன் இணக்கத்தன்மை விளக்கப்படத்தைப் பார்க்கவும்.
Dymo லேபிள் பிரிண்டிங்கைப் பயன்படுத்தி பார்கோடை அச்சிடுதல்
படிகள்:
- உங்கள் Shopify நிர்வாகியில், செயலிகள் > Stocky என்பதற்குச் செல்லவும்.
- உறுதிசெய்யப்பட்ட கொள்முதல் ஆர்டரைக் கிளிக் செய்யவும்.
- மேலும் செயல்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
- Dymo லேபிள்களை அச்சிடு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் முதல் முறையாக ஒரு லேபிளை அச்சிடுகிறீர்கள் என்றால், உங்கள் Dymo லேபிள் டெம்ப்ளேட்டைப் பதிவேற்ற வேண்டும். Dymo லேபிள் பிரிண்டிங் மென்பொருளைப் பயன்படுத்தி நீங்கள் ஒரு டெம்ப்ளேட்டை உருவாக்கலாம்.
உங்கள் லேபிள்களில் எந்தத் தரவைக் காட்ட வேண்டும் என்பதை Stocky அறிந்துகொள்வதை உறுதிசெய்ய, அங்கீகரிக்கப்பட்ட பின்வரும் பெயர்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி, உரைப்புலங்களுக்குப் பெயரிட வேண்டும்:
- product_title
- variant_title
- sku
- barcode
- price
- price_cents
- cost_price
- cost_price_cents
- supplier_code
- supplier
உரைப்புலத்திற்குப் பெயரிடுதல்
Stocky செயலி உங்கள் Dymo லேபிள் பிரிண்டருடன் தொடர்புகொள்ள ஏதுவாக, உங்கள் கம்ப்யூட்டரில் Dymo லேபிள் பிரிண்டிங் மென்பொருளை நிறுவி இயக்க வேண்டும்.
படிகள்:
- DYMO லேபிள் பிரிண்டிங் மென்பொருளில், ஓர் உரைப்புலத்தின் மீது ரைட்-கிளிக் செய்து, பண்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- மேம்பட்டவை தாவலைத் தேர்ந்தெடுக்கவும்.
- குறிப்புப் பெயர் பிரிவில், உரைப்புலப் பெயர்களின் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலிலிருந்து ஒரு பெயரைத் தேர்ந்தெடுத்து உள்ளிடவும்.
- தகவலைச் சேமிக்க, சரி என்பதைக் கிளிக் செய்யவும்.
- லேபிளை உங்கள் கம்ப்யூட்டரில் சேமிக்கவும்.
- விருப்பத்தேர்வுகள் என்பதையும், பின்னர் Dymo என்பதையும் கிளிக் செய்து, லேபிளை Stocky-யில் பதிவேற்றவும்.
DYMO லேபிள் டெம்ப்ளேட்டில் ஒவ்வொரு புலத்திற்கும் பிரத்யேகப் பெயர் இருக்க வேண்டும். உதாரணமாக, லேபிளில் இரண்டு SKU-கள் அச்சிடப்பட வேண்டும் என நீங்கள் விரும்பினால், ஒவ்வொரு SKU-க்கும் வெவ்வேறு குறிப்புப் பெயர்களை வழங்க வேண்டும். இதற்கு உதவ, _2 என்று முடியும் இரண்டாவது மெர்ஜ் புலங்களின் தொகுப்பைச் சேர்க்கவும். உதாரணம்: sku_2, barcode_2.