குறைந்த சரக்கு இருப்பு

உங்கள் ஸ்டோர் முழுவதும் உள்ள தயாரிப்புகளின் சரக்கு இருப்பைக் கண்காணிக்கவும், சரக்கு இருப்பு நிலைகள் குறைவாக இருக்கும்போது கண்டறியவும் Stocky-ஐப் பயன்படுத்தவும். குறைவான சரக்கு இருப்பைக் கொண்ட தயாரிப்புகளைத் தடமறிவதன் மூலம், இருப்பு தீர்ந்துபோவதைத் தவிர்க்க சரியான நேரத்தில் சரக்கு இருப்பை மீண்டும் ஆர்டர் செய்து, உங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சீரான ஷாப்பிங் அனுபவத்தை வழங்கலாம்.

குறைந்த சரக்கு இருப்பைக் கொண்ட தயாரிப்பு மாறுபாடுகள்

குறைந்த சரக்கு இருப்பு அறிக்கை என்பது, கையிருப்பில் இல்லாத அல்லது லீட் டைமுக்கு முன்னதாகவே கையிருப்பில் இல்லாமல் போகக்கூடிய தயாரிப்பு மாறுபாடுகளின் மேலோட்டமாகும்.

தயாரிப்பு மாறுபாடுகள், நாளின் அடிப்படையில் இழக்கப்படும் வருவாயைக் கொண்டு வரிசைப்படுத்தப்படும்; ஒரு தயாரிப்பு மாறுபாடு கையிருப்பில் இல்லாதபோது, நீங்கள் இழப்பதாகக் கணிக்கப்படும் வருவாயின் அளவே இதுவாகும். Stocky-இல் உள்ள விருப்பத்தேர்வுகள் (Preferences) பக்கத்தில் நீங்கள் அமைத்த மாதிரி காலத்தின் (sample period) சராசரி விற்பனை விகிதத்தைப் பயன்படுத்தி இந்த மதிப்பு கணக்கிடப்படுகிறது. இயல்பான மாதிரி காலம், கடந்த 30 நாட்களாக அமைக்கப்பட்டிருக்கும்.

அறிக்கையானது பின்வரும் நெடுவரிசைகளையும் கொண்டுள்ளது:

  • ROP நெடுவரிசையானது, ஒவ்வொரு தயாரிப்பு மாறுபாட்டிற்கும் தானாகவே கணக்கிடப்பட்ட, மீண்டும் ஆர்டர் செய்யும் புள்ளியைக் (ROP) கொண்டிருக்கும்.
  • லீட் டைம் (Lead time) நெடுவரிசையானது, ஒரு தயாரிப்பு கையிருப்பில் இல்லாமல் போவதற்கு முன், அதை மீண்டும் ஆர்டர் செய்ய எவ்வளவு நேரம் தேவை என்பதைக் குறிக்கும்.
  • தேவை (Need) நெடுவரிசையானது, ஒவ்வொரு தயாரிப்பு மாறுபாட்டிற்குமான லீட் டைமை ஈடுகட்டத் தேவையான சரக்கு இருப்பின் அளவைக் கொண்டிருக்கும்.
  • தீர்ந்துபோகுதல் (Depletion) நெடுவரிசையானது, தயாரிப்பு மாறுபாடு கையிருப்பில் இல்லாமல் போகும் வரையிலான உத்தேச நாட்களின் எண்ணிக்கையைக் கொண்டிருக்கும்.

குறைந்த சரக்கு இருப்பைக் கொண்ட மாறுபாடுகளுக்கான தினசரி மின்னஞ்சல் அறிக்கையை அமைத்தல்

குறைந்த சரக்கு இருப்பைக் கொண்ட தயாரிப்பு மாறுபாடுகளின் பட்டியலைக் கொண்டுள்ள, தினசரி மின்னஞ்சல் அறிவிப்பைப் பெற நீங்கள் தேர்வுசெய்யலாம். இந்த மின்னஞ்சலானது வழக்கமான ஒன்றுதான், ஒரு தயாரிப்பின் சரக்கு இருப்பு குறையத் தொடங்கியதும் உடனடியாக அனுப்பப்படாது. மேலும், இந்த மின்னஞ்சல் ஒரு மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே அனுப்பப்படும்.

நீங்கள் உடனடியாகச் செயல்படக்கூடிய அளவிலான குறைந்த சரக்கு இருப்பு அறிவிப்பை உருவாக்க அல்லது பல பணியாளர்களுக்குத் தெரிவிக்க விரும்பினால், Shopify App Store-இலிருந்து மூன்றாம் தரப்பு சரக்கு இருப்பு எச்சரிக்கைச் செயலியை நிறுவுவது அல்லது Shopify Flow-ஐப் பயன்படுத்தி ஒரு சரக்கு இருப்புத் தானியக்கமாக்கலை அமைப்பது குறித்துப் பரிசீலிக்கவும்.

படிகள்:

  1. Stocky-இல், அறிக்கைகள் (Reports) > குறைந்த சரக்கு இருப்பு (Low Stock) > SKU/மாறுபாடுகள் (SKU/Variants) என்பதற்குச் செல்லவும்.
  2. அமைப்புகள் (Settings) > அறிக்கை மின்னஞ்சல் (Report Email) என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. தினசரி குறைந்த சரக்கு இருப்பு அறிக்கை மின்னஞ்சல் (Daily low stock report email) உரையாடலில், தினசரி குறைந்த சரக்கு இருப்பு அறிக்கையைப் பெறு (00:00 UTC) (Receive a daily low stock report (00:00 UTC)) என்ற விருப்பத்தேர்வைச் செயல்படுத்தவும்.
  4. அறிவிப்பு மின்னஞ்சல் முகவரி (Notification email address) புலத்தில், மின்னஞ்சல் முகவரி சரியாக இருப்பதை உறுதிசெய்யவும்.
  5. புதுப்பி (Update) என்பதைக் கிளிக் செய்யவும்.

மீண்டும் ஆர்டர் செய்யும் புள்ளிகளைக் கணக்கிடுதல்

குறைந்த சரக்கு இருப்பு மாறுபாடுகள் அறிக்கையில் உள்ள மீண்டும் ஆர்டர் செய்யும் புள்ளி அல்லது ROP நெடுவரிசையானது, ஒவ்வொரு தயாரிப்பு மாறுபாட்டிற்கும் தானாகவே கணக்கிடப்பட்ட, மீண்டும் ஆர்டர் செய்யும் புள்ளியைக் கொண்டிருக்கும். லீட் டைம் மற்றும் ஒரு நாளுக்கான விற்பனை எண்ணிக்கையைப் பயன்படுத்தி, மீண்டும் ஆர்டர் செய்யும் புள்ளிகள் கணக்கிடப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, நீங்கள் நாளொன்றுக்கு 5 நீல நிற சாக்ஸ்களை விற்று, உங்கள் சப்ளையரின் லீட் டைம் 10 நாட்களாக இருந்தால், சரக்கு இருப்பில் மீதமுள்ள நீல நிற சாக்ஸ்களின் எண்ணிக்கை 50-ஐ எட்டும்போது குறைந்த சரக்கு இருப்பு எச்சரிக்கை தூண்டப்படும்.

குறிப்பிட்ட தயாரிப்பு மாறுபாடுகளுக்கான, தானியங்கு மீண்டும் ஆர்டர் செய்யும் புள்ளிகளையும் ஒவ்வொரு விற்பனையாளருக்கான லீட் டைமையும் நீங்கள் கைமுறையாக மேலெழுதலாம்.

தானியங்கு மீண்டும் ஆர்டர் செய்யும் புள்ளிகளை மேலெழுதுதல்

  1. Stocky-இல், அறிக்கைகள் (Reports) > குறைந்த சரக்கு இருப்பு (Low Stock) > SKU/மாறுபாடுகள் (SKU/Variants) என்பதற்குச் செல்லவும்.
  2. அமைப்புகள் (Settings) > மீண்டும் ஆர்டர் செய்யும் புள்ளிகள் (Reorder Points) என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. கைமுறை ROP (Manual ROP) நெடுவரிசையில், புதிய மதிப்பை உள்ளிட ஒரு வரிசையைக் கிளிக் செய்யவும்.

ஒவ்வொரு விற்பனையாளருக்குமான லீட் டைமை மாற்றுதல்

  1. Stocky-இல், விற்பனையாளர்கள் (Vendors) என்பதற்குச் செல்லவும்.
  2. லீட் டைம் அல்லது மீளிருப்புக் காலத்தை மாற்ற விரும்பும் விற்பனையாளரின் பெயரைக் கிளிக் செய்யவும்.
  3. அமைப்புகள் (Settings) > லீட் மற்றும் மீளிருப்பு நேரங்கள் (Lead & restock times) என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. பின்வரும் மாற்றங்களில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:
    • விற்பனையாளர் லீட் டைம் (நாட்கள்) (Vendor lead time (days)) புலத்தில், மதிப்பைச் சேர்க்கவும் அல்லது புதுப்பிக்கவும்.
    • மீளிருப்புக் காலம் (நாட்கள்) (Re-stock period (days)) புலத்தில், மதிப்பைச் சேர்க்கவும் அல்லது புதுப்பிக்கவும். இதை காலியாக விட்டால், இந்த மதிப்பு இயல்பாகவே லீட் டைமாக மாறும்.
    • மாறுபாட்டின் அடிப்படையிலான லீட் டைம் (Lead time by variant) பிரிவில், மேலெழுது (நாட்கள்) (Override (days)) நெடுவரிசையில் மதிப்பைச் சேர்ப்பதன் மூலம் அல்லது புதுப்பிப்பதன் மூலம், குறிப்பிட்ட தயாரிப்பு மாறுபாடுகளுக்கான லீட் டைமையைக் கைமுறையாக அமைக்கலாம்.
  5. மாற்றங்களைச் சேமி (Save changes) என்பதைக் கிளிக் செய்யவும்.

குறைவான சரக்கு இருப்பு கொண்ட தயாரிப்புகள்

குறைவான சரக்கு இருப்பு கொண்ட தயாரிப்புகள் அறிக்கை என்பது, குறைவான சரக்கு இருப்பு கொண்ட அல்லது கையிருப்பில் இல்லாத உருப்படிகளின் மேலோட்டமாகும்; இது தயாரிப்பின் அடிப்படையில் குழுவாக்கப்பட்டிருக்கும். இந்தப் பக்கம் நாளொன்றுக்கு இழக்கப்படும் வருவாயின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டு, மிகவும் அவசரமாகத் தேவைப்படும் தயாரிப்புகளைக் காண்பிக்கும்.

குறைவான சரக்கு இருப்பு கொண்ட விற்பனையாளர்கள்

பின்வரும் காரணிகளின் அடிப்படையில், இழக்கப்படும் வருவாயைக் கருத்தில் கொண்டு அடுத்து எந்த விற்பனையாளரிடமிருந்து நீங்கள் ஆர்டர் செய்ய வேண்டும் என்பதற்கான அறிகுறியை, குறைவான சரக்கு இருப்பு கொண்ட விற்பனையாளர்கள் அறிக்கை உங்களுக்கு வழங்குகிறது:

  • கையிருப்பில் இல்லாதவை மட்டும் (Out of stock only): இப்போது கையிருப்பில் இல்லாதவற்றின் அடிப்படையில், எந்த விற்பனையாளர்கள் தற்போது வருவாயை இழக்கிறார்கள் என்பதைக் குறிக்கிறது.
  • லீட் டைமுக்குள் (Within lead time): எந்தெந்த விற்பனையாளர்களிடம் தற்போது கையிருப்பு இல்லை மற்றும் அவர்களது சப்ளையர் லீட் டைம்களின் அடிப்படையில் வருவாயை இழக்கவுள்ளார்கள் என்பதைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, 'விற்பனையாளர் A'-இன் லீட் டைம் 10 நாட்களாக இருந்து, அவரிடம் உள்ள 'தயாரிப்பு B' 8 நாட்களில் கையிருப்பில்லாமல் போகும் நிலையில், அந்தத் தயாரிப்பு B-இன் இழக்கப்படும் வருவாயும் இந்த அறிக்கையில் சேர்க்கப்படும்.