கொள்முதல் ஆர்டர்கள்

உங்கள் தயாரிப்புகளுக்கான கொள்முதல் ஆர்டர்களை உருவாக்க, நிர்வகிக்க மற்றும் தடமறிய Stocky-ஐப் பயன்படுத்தவும். கொள்முதல் ஆர்டர்களைக் (PO) கொண்டு, நீங்கள் சரக்கு இருப்பைச் சிறப்பாக நிரப்பலாம், சப்ளையர் பரிவர்த்தனைகளின் பதிவுகளை வைத்திருக்கலாம் மற்றும் உங்கள் ஸ்டோரில் சரியான இடங்களுக்குச் சரியான தயாரிப்புகள் வழங்கப்படுவதை உறுதிசெய்யலாம்.

கொள்முதல் ஆர்டரை உருவாக்குதல்

Stocky-இன் பரிந்துரையைப் பயன்படுத்திக் கொள்முதல் ஆர்டரை உருவாக்குகிறீர்கள் எனில், உங்கள் சரக்கு இருப்பு எத்தனை நாள்களுக்கு நீடிக்க வேண்டும் என்பதற்கான நாள்களின் எண்ணிக்கையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கொள்முதல் ஆர்டர்களைச் செயல்முறையில் பின்னரொரு நேரத்தில் மீண்டும் உருவாக்கிக்கொள்ளலாம்.

பின்வரும் படிகளைப் பயன்படுத்திக் கொள்முதல் ஆர்டரை உருவாக்கலாம்:

படி 1: கொள்முதல் ஆர்டரைத் திறக்கவும்

  1. உங்கள் Shopify நிர்வாகியில், செயலிகள் > Stocky என்பதற்குச் செல்லவும்.
  2. Purchases (கொள்முதல்கள்) என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. Create Purchase Order (கொள்முதல் ஆர்டரை உருவாக்கு) என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. கீழ்தோன்றும் மெனுவைப் பயன்படுத்தி, கொள்முதல் ஆர்டர் எந்த விற்பனையாளர் அல்லது சப்ளையருக்கானது என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. நீங்கள் விற்பனையாளரைத் தேர்ந்தெடுத்தீர்களா அல்லது சப்ளையரைத் தேர்ந்தெடுத்தீர்களா என்பதைப் பொறுத்து, பின்வரும் படிகளில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:
    • நீங்கள் Vendor (விற்பனையாளர்) என்பதைத் தேர்வுசெய்தால், கீழ்தோன்றும் மெனுவிலிருந்து உங்கள் கொள்முதல் ஆர்டர் எந்த விற்பனையாளருக்கானது என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    • நீங்கள் Supplier (சப்ளையர்) என்பதைத் தேர்வுசெய்தால், கீழ்தோன்றும் மெனுவிலிருந்து உங்கள் கொள்முதல் ஆர்டர் எந்த சப்ளையருக்கானது என்பதைத் தேர்ந்தெடுக்கவும். சப்ளையர் என்பது விற்பனையாளர்களின் ஒரு குழுவாகும். பல விற்பனையாளர்கள் அடங்கிய கொள்முதல் ஆர்டரை நீங்கள் உருவாக்க விரும்பினால், முதலில் நீங்கள் புதிய சப்ளையரை உருவாக்க வேண்டும்.
  6. கொள்முதல் ஆர்டர் உருவாக்க வகையைத் தேர்வுசெய்ய, Generate (உருவாக்கு) கீழ்தோன்றும் மெனுவைப் பயன்படுத்தவும். நீங்கள் காலியான கொள்முதல் ஆர்டரையோ Stocky-இன் பரிந்துரையின் அடிப்படையிலான கொள்முதல் ஆர்டரையோ உருவாக்கலாம்.
  7. விருப்பத்தேர்வு: Stocky-இன் பரிந்துரைகளின் அடிப்படையில் கொள்முதல் ஆர்டரை உருவாக்க நீங்கள் தேர்வுசெய்தால், உங்கள் புதிய சரக்கு இருப்பு எத்தனை நாள்களுக்கு நீடிக்க வேண்டும் என்பதற்கான நாள்களின் எண்ணிக்கையை உள்ளிட Suggest for (days) (இத்தனை நாள்களுக்கான பரிந்துரை) என்பதைப் பயன்படுத்தவும்.
  8. கொள்முதல் ஆர்டர் எந்த இடத்திற்கு டெலிவரி செய்யப்பட வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்க, Location to receive stock (சரக்கு இருப்பைப் பெறுவதற்கான இடம்) கீழ்தோன்றும் மெனுவைப் பயன்படுத்தவும்.
  9. விருப்பத்தேர்வு: Stocky-இன் பரிந்துரைகளின் அடிப்படையில் கொள்முதல் ஆர்டரை உருவாக்க நீங்கள் தேர்வுசெய்தால், Stocky உங்கள் கொள்முதல் ஆர்டரை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்க Base forecast on (முன்னறிவிப்பிற்கான அடிப்படை) என்பதைப் பயன்படுத்தவும்.
  10. Create Purchase Order (கொள்முதல் ஆர்டரை உருவாக்கு) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 2: கொள்முதல் ஆர்டரில் தயாரிப்புகளைச் சேர்க்கவும்

நீங்கள் கொள்முதல் ஆர்டரிலிருந்து ஏதேனும் உருப்படிகளைச் சேர்க்கலாம், திருத்தலாம், அகற்றலாம் அல்லது தேவை முன்னறிவிப்பு விருப்பங்களை மாற்றலாம்.

Stocky-இன் தேவை முன்னறிவிப்பிற்கான அளவுகோல்களைத் தேர்வுசெய்து முடித்ததும், புதுப்பிக்கப்பட்ட முன்னறிவிப்புடன் கொள்முதல் ஆர்டரைப் புதுப்பிக்க Regenerate (மீண்டும் உருவாக்கு) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

Stocky-இன் தேவை முன்னறிவிப்பின் அடிப்படையில் கொள்முதல் ஆர்டரை உருவாக்க நீங்கள் தேர்வுசெய்திருந்தால், Stocky-இன் சரக்கு இருப்புப் பரிந்துரைகளை மதிப்பாய்வு செய்யவும். உங்கள் கொள்முதல் ஆர்டரில் ஒரு உருப்படியை மேனுவலாகச் சேர்க்க, Add Products (தயாரிப்புகளைச் சேர்) படிவத்தைப் பயன்படுத்தவும்.

உங்கள் தயாரிப்புகள் குறித்த பின்வரும் விவரங்களை நீங்கள் திருத்தலாம்:

  • Shelf (ஷெல்ஃப்): ஷெல்ஃப் பெயர் அல்லது எண்ணைச் சேர்க்கவும்.
  • Aisle (இடைகழி): இடைகழி பெயர் அல்லது எண்ணைச் சேர்க்கவும்.
  • Cost (base) (செலவு (அடிப்படை)): இந்தத் தயாரிப்பிற்கான ஒன்று அல்லது அனைத்து மாறுபாடுகளுக்கான செலவு விலையைத் திருத்தவும்.
  • Quantity (அளவு): கொள்முதல் ஆர்டரில் இருக்க வேண்டிய ஒவ்வொரு மாறுபாட்டின் எண்ணிகையையும் திருத்தவும்.

படி 3: கொள்முதல் ஆர்டரில் பேமெண்ட் மற்றும் ஷிப்பிங் விவரங்களைத் திருத்தவும்

பேமெண்ட் மற்றும் ஷிப்பிங் விவரங்கள் படிவத்தில், உங்கள் கொள்முதல் ஆர்டருக்குப் பொருந்தக்கூடிய பின்வரும் பிரிவுகளைத் திருத்தவும்:

  • பேமெண்ட் விவரங்கள்
  • ஷிப்பிங் முகவரி
  • இன்வாய்ஸ் எண்
  • சப்ளையர் ஆர்டர் எண்
  • பெறும் இடம் (உங்கள் கொள்முதல் ஆர்டர் எந்த இடத்திற்கு ஷிப் செய்யப்பட வேண்டும் என விரும்புகிறீர்களோ அந்த இடம்)
  • தேதிகள் (கொள்முதல் ஆர்டர் தேதி, இன்வாய்ஸ் தேதி, எதிர்பார்க்கப்படும் தேதி, ஷிப்பிங் தேதி மற்றும் ரத்துசெய்யும் தேதி)
  • குறிப்புகள் (பணியாளர் பெயர், சப்ளையர் தகவல் அல்லது ஒரு காரணம் போன்றவை)

படி 4: கொள்முதல் ஆர்டரில் தள்ளுபடிகளைச் சேர்க்கவும்

உங்கள் கொள்முதல் ஆர்டரில் தள்ளுபடியைச் சேர்க்கலாம்.

படிகள்:

  1. தயாரிப்புத் தேடல் புலம் என்பதற்கு அடுத்துள்ள, New (புதியது) > Other (மற்றவை) என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. Cost Price (செலவு விலை) புலத்தில் தள்ளுபடித் தொகையை உள்ளிடவும்.
  3. விருப்பத்தேர்வு: ஒரு Tax type (வரி வகை) என்பதைத் தேர்ந்தெடுத்து விளக்கத்தைச் சேர்க்கவும்.
  4. Quantity (அளவு) புலத்தில், 1 என உள்ளிடவும்.
  5. Add (சேர்) என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 5: கொள்முதல் ஆர்டரை அனுப்பவும்

சப்ளையருக்குக் கொள்முதல் ஆர்டரை அனுப்பப் பல வழிகள் உள்ளன:

  • Stocky-இலிருந்து: நீங்கள் கொள்முதல் ஆர்டரை மின்னஞ்சல் மூலம் PDF அல்லது CSV கோப்பாக Stocky-இலிருந்தே நேரடியாக அனுப்பலாம்.
  • மின்னஞ்சல் மூலம்: நீங்கள் கொள்முதல் ஆர்டரைப் பதிவிறக்கி, அதன் நகலை மின்னஞ்சல் மூலம் மேனுவலாக அனுப்பலாம்.
Stocky
  1. உங்கள் Shopify நிர்வாகியில், செயலிகள் > Stocky என்பதற்குச் செல்லவும்.
  2. Purchases (கொள்முதல்கள்) என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. நீங்கள் அனுப்ப விரும்பும் கொள்முதல் ஆர்டரின் எண்ணைக் கிளிக் செய்யவும்.
  4. Send (அனுப்பு) என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. To (பெறுநர்) புலத்தில், பெறுநர் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். கொள்முதல் ஆர்டரைப் பல மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்ப, அவற்றுக்கு இடையே காற்புள்ளியை உள்ளிடவும்.
  6. Reply to (பதிலளி) நெடுவரிசையில், உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.
  7. விருப்பத்தேர்வு: Message (செய்தி) புலத்தில் செய்தியைத் திருத்தவும்.
  8. விருப்பத்தேர்வு: கொள்முதல் ஆர்டர் விவரங்களை CSV கோப்பாகவும் அனுப்ப Attach CSV (CSV-ஐ இணை) என்பதைத் தேர்வுசெய்யவும்.
  9. Send (அனுப்பு) என்பதைக் கிளிக் செய்யவும்.
மின்னஞ்சல்
  1. உங்கள் Shopify நிர்வாகியில், செயலிகள் > Stocky என்பதற்குச் செல்லவும்.
  2. Purchases (கொள்முதல்கள்) என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. நீங்கள் அனுப்ப விரும்பும் கொள்முதல் ஆர்டரின் எண்ணைக் கிளிக் செய்யவும்.
  4. இங்கே Download (பதிவிறக்கு)என்பதைக் கிளிக் செய்து, உங்களுக்கு விருப்பமான விருப்பத்தேர்வைத் தேர்வுசெய்யவும்:
    • PDF
    • எளிய உரை
    • CSV
    • Dymo-க்கான CSV
  5. நீங்கள் உங்கள் சப்ளையருக்கு அனுப்பும் எந்தவொரு வழக்கமான மின்னஞ்சலிலும் PDF அல்லது CSV கோப்பை இணைப்பாகச் சேர்க்கவும். உங்கள் PO-ஐ எளிய உரையாகப் பதிவிறக்க நீங்கள் தேர்வுசெய்திருந்தால், PO உள்ளடக்கத்தை நகலெடுத்து மின்னஞ்சல் பகுதியிலேயே ஒட்டவும்.

படி 6: கொள்முதல் ஆர்டரை உறுதிப்படுத்தவும்

உங்கள் PO தயாரானதும், Mark as ordered (ஆர்டர் செய்ததாகக் குறி) என்பதைக் கிளிக் செய்யவும். Mark as ordered என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், PO இல் உள்ள அனைத்து உருப்படிகளும் "not received" எனக் குறிக்கப்படும்.

உங்கள் PO-இல் சேர்க்கப்பட்டுள்ள உருப்படிகள் பின்வரும் பகுதிகளில் காட்டப்படும்:

  • Shopify நிர்வாகியில், தயாரிப்புப் பக்கத்தில் உள்ள சரக்கு இருப்பு கார்டின் உள்வருபவை நெடுவரிசையில்
  • Shopify நிர்வாகியில், சரக்கு இருப்பு பக்கத்தின் உள்வருபவை நெடுவரிசையில்
  • Shopify POS-இல், தயாரிப்பு விவரங்கள் பக்கத்தில்

உங்கள் ஸ்டோரில் கொள்முதல் ஆர்டரைப் பெறுதல்

உங்கள் புதிய சரக்கு இருப்பு உங்கள் ஸ்டோருக்கு வந்ததும், Receive Selected (தேர்ந்தெடுத்ததைப் பெறு) என்பதைக் கிளிக் செய்து அதை Shopify உடன் ஒத்திசைக்கலாம். ஒரு உருப்படி விடுபட்டிருந்தால், Receive Selected என்பதைக் கிளிக் செய்வதற்கு முன், அந்த உருப்படிக்கான தேர்வை நீக்கிவிட்டு, பின்னர் ஒரு தேதியில் ஒத்திசைக்கலாம்.

நீங்கள் உங்கள் PO-களைப் பகுதியளவாகப் பெற்று பேக்ஆர்டரும் செய்யலாம் மற்றும் பார்கோடு ஸ்கேனரைப் பயன்படுத்தி PO-ஐயும் பெறலாம்.

பகுதியளவாகப் பெறுதல் மற்றும் பேக்ஆர்டர் செய்தல்

நீங்கள் எதிர்பார்த்ததை விட வேறுபட்ட அளவில் உங்கள் சப்ளையர் உருப்படிகளை அனுப்பியிருந்தால் அல்லது வழியில் சில உருப்படிகள் சேதமடைந்திருந்தால், நீங்கள் ஒரு உருப்படியைப் பகுதியளவாகப் பெற்று, மீதமுள்ள உருப்படிகளை பேக்ஆர்டரில் வைக்கலாம்.

படிகள்:

  1. உருப்படியின் Quantity (அளவு) நெடுவரிசையிலுள்ள அம்புக்குறிப் பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  2. கீழ்தோன்றும் மெனுவில், Partially receive (பகுதியளவாகப் பெறு) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. பேக்ஆர்டர் மூலம் பின்னர் பெற வேண்டிய உருப்படிகளின் எண்ணிக்கையைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. விரும்பினால்: பேக்ஆர்டருக்கான காரணத்தை ஒரு குறிப்பாக எழுதவும்.
  5. Update (புதுப்பி) என்பதைக் கிளிக் செய்யவும்.

இப்போது அந்த உருப்படி இரண்டு வரிசைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

பார்கோடு ஸ்கேனர் மூலம் PO-ஐப் பெறுதல்

நிலையான USB பார்கோடு ஸ்கேனரைப் பயன்படுத்தி PO-இல் உள்ள உருப்படிகளை நீங்கள் பெறலாம்.

படிகள்:

  1. PO-இல் More actions (மேலும் செயல்கள்) > Barcode scanner receive (பார்கோடு ஸ்கேனர் மூலம் பெறுதல்) என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. ஸ்கேன் செய்த எண்ணிக்கையை அதிகரிக்க ஒவ்வொரு உருப்படியையும் ஸ்கேன் செய்யவும் அல்லது Receive (பெறுதல்) பிரிவில் அளவை நேரடியாகப் புதுப்பிக்கவும்.
  3. உங்கள் உருப்படிகள் அனைத்தையும் ஸ்கேன் செய்த பிறகு, உங்கள் Shopify சரக்கு இருப்பு நிலைகளைப் புதுப்பிக்க, Receive Scanned (ஸ்கேன் செய்ததைப் பெறு) > Receive & Sync (பெற்று ஒத்திசை) என்பதைக் கிளிக் செய்யவும்.

Shopify POS-ஐப் பயன்படுத்திப் பகுதியளவாகப் பெறப்பட்ட கொள்முதல் ஆர்டர்களுக்கான பிரிக்கப்பட்ட வரிசை உருப்படிகள்

சப்ளையர் மேலாண்மை மற்றும் கொள்முதல் ஆர்டரை இறுதி செய்தலை மேம்படுத்த, Stocky Purchase Orders POS UI நீட்டிப்பைப் பயன்படுத்தும்போது கொள்முதல் ஆர்டர்களில் உள்ள வரிசை உருப்படிகள் அவற்றின் நிலையைக் கொண்டு பிரிக்கப்படும்.

கொள்முதல் ஆர்டர் சரக்கு இருப்பு மூன்று வெவ்வேறு நிலைகளில் இருக்கலாம்:

  • Not received - சரக்கு இருப்பு மதிப்பாய்வு செய்யப்படவில்லை, அத்துடன் விற்பனைக்கும் கிடைக்கவில்லை.
  • Received - சரக்கு இருப்பு மதிப்பாய்வு செய்யப்பட்டு, விற்பனைக்குக் கிடைக்கிறது.
  • Rejected - சரக்கு இருப்பு மதிப்பாய்வு செய்யப்பட்டது, ஆனால் விற்பனைக்குக் கிடைக்கவில்லை.

கூடுதல் அளவுகளைச் சிறப்பித்துக் காட்ட, Received அல்லது Rejected உடன் Extra லேபிளும் காட்டப்படும். உள்வரும் கொள்முதல் ஆர்டர் சரக்கு இருப்பானது Shopify நிர்வாகி மற்றும் Shopify POS-இல் காட்டப்படும்.

சரக்கு இருப்பு நிலை கட்டுப்பாடுகள்

PO முன்னறிவிப்பு அம்சத்தைப் பயன்படுத்தும்போது சரக்கு இருப்பு நிலை கட்டுப்பாடுகளை அமைக்க Stocky உங்களை அனுமதிக்கிறது.

குறைந்தபட்ச ஆர்டர் என்பது நீங்கள் ஆர்டர் செய்ய வேண்டிய குறைந்தபட்ச உருப்படிகளின் எண்ணிக்கையாகும். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு உருப்படியின் 67 அளவை ஆர்டர் செய்ய வேண்டும் என உங்கள் PO முன்னறிவித்தால், ஆனால் குறைந்தபட்ச ஆர்டர் 100 என இருந்தால், PO-க்கு 100 உருப்படிகள் சேர்க்கப்படும்.

குறைந்தபட்ச சரக்கு இருப்பு என்பது உங்களிடம் இருக்க வேண்டிய குறைந்தபட்ச சரக்கு இருப்பின் அளவாகும். எடுத்துக்காட்டாக, உங்களிடம் ஒரு உருப்படியின் 40 அளவு ஏற்கனவே சரக்கு இருப்பில் இருந்தால் மற்றும் உங்கள் குறைந்தபட்ச சரக்கு இருப்பு நிலை 100 ஆக இருந்தால், குறைந்தபட்சம் 60-ஐ ஆர்டர் செய்யுமாறு உங்கள் PO முன்னறிவிப்பு பரிந்துரைக்கிறது.

அதிகபட்ச சரக்கு இருப்பு என்பது உங்களிடம் இருக்கக்கூடிய அதிகபட்ச சரக்கு இருப்பின் அளவாகும். எடுத்துக்காட்டாக, உங்களுக்கு ஒரு உருப்படியின் 30 அளவு தேவை என உங்கள் PO முன்னறிவித்தால், ஆனால் உங்கள் அதிகபட்ச சரக்கு இருப்பு வரம்பு 20 ஆக இருந்தால், PO-இல் 20 உருப்படிகள் சேர்க்கப்படும்.

அதிகபட்ச சரக்கு இருப்பை விட குறைந்தபட்ச ஆர்டருக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும். உங்கள் அதிகபட்ச சரக்கு இருப்பு வரம்பு 100 ஆகவும், குறைந்தபட்ச ஆர்டர் 20 ஆகவும் இருப்பதாக வைத்துக்கொள்வோம். உங்களிடம் 90 சரக்கு இருப்பு இருந்தால், உங்கள் அதிகபட்ச சரக்கு இருப்பு வரம்பை மீறும் என்றாலும் 20-ஐ ஆர்டர் செய்ய PO முன்னறிவிப்பு பரிந்துரைக்கும்.

PO முன்னறிவிப்பு அம்சத்தைப் பயன்படுத்தும்போது குறைந்தபட்ச ஆர்டரை விட Fill Shelves, Fill Shelves (if below min) மற்றும் Target stock level ஆகிய தேவை முன்னறிவிப்பு வகைகள் முன்னுரிமை பெறும்.

குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச சரக்கு இருப்பு மதிப்புகளை அமைத்தல்

  1. உங்கள் Shopify நிர்வாகியில், செயலிகள் > Stocky என்பதற்குச் செல்லவும்.
  2. இருப்பிடங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. ஒரு இடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. Min Stock (குறைந்தபட்ச சரக்கு இருப்பு) நெடுவரிசையில், உங்கள் குறைந்தபட்ச சரக்கு இருப்பு மதிப்பையும், Max Stock (அதிகபட்ச சரக்கு இருப்பு) நெடுவரிசையில், உங்கள் அதிகபட்ச சரக்கு இருப்பு மதிப்பையும் உள்ளிடவும்.

குறைந்தபட்ச ஆர்டர் அளவுகளை அமைத்தல்

  1. உங்கள் Shopify நிர்வாகியில், செயலிகள் > Stocky என்பதற்குச் செல்லவும்.
  2. விற்பனையாளர்கள் என்பதைக் கிளிக் செய்து, பிறகு ஒரு விற்பனையாளரைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. ஆர்டர் வரம்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. உங்கள் குறைந்தபட்ச ஆர்டர் அளவுகளை உள்ளிடவும்.