இருப்பு சரிபார்த்தல்கள்
உங்கள் சரக்கு இருப்பை எண்ணுவதற்கும், இருப்பு நிலைகள் துல்லியமாக இருப்பதை உறுதிசெய்து அவற்றைச் சரிசெய்வதற்கும் நீங்கள் இருப்பு சரிபார்த்தல்களைப் பயன்படுத்தலாம். நீங்கள் மேனுவலாக இருப்பு சரிபார்த்தலை மேற்கொள்ளலாம் அல்லது கிடைக்கக்கூடிய உருப்படிகளை ஸ்கேன் செய்ய பார்கோடு ஸ்கேனரைப் பயன்படுத்தலாம்.
எதிர்பார்க்கப்படும் சரக்கு இருப்புக்கும் உண்மையான சரக்கு இருப்புக்கும் இடையே உள்ள எந்தவொரு முரண்பாடும் சரிசெய்தலாகக் கருதப்படும். Stocky-இல் சரக்கு இருப்பு நிலைகளில் ஏதேனும் சரிசெய்தல்களை நீங்கள் உறுதிப்படுத்தினால், அந்தச் சரிசெய்தல்கள் தானாகவே Shopify உடன் ஒத்திசைக்கப்படும்.
இந்தப் பக்கத்தில்
இருப்பு சரிபார்த்தல்களுக்கான பரிசீலனைகள்
இருப்பு சரிபார்த்தலை மேற்கொள்ளும் முன், பின்வரும் பரிசீலனைகளை நீங்கள் மதிப்பாய்வு செய்துள்ளீர்களா என்பதை உறுதிப்படுத்தவும்:
- நிறைவேற்றப்படாத ஆர்டர்களில் உள்ள உருப்படிகளை Stocky கணக்கில் எடுத்துக்கொள்ளாது, மேலும் அந்த உருப்படிகளைக் கொண்ட நிறைவேற்றப்படாத ஆர்டர்கள் அனுப்பப்பட வேண்டியிருந்தாலும், சரக்கு இருப்பைக் கிடைக்கக்கூடியதாகவே கருதும். இருப்பு சரிபார்த்தலை மேற்கொள்வதற்கு முன், உங்களின் கிடைக்கக்கூடிய சரக்கு இருப்பை உங்கள் இருப்பு சரிபார்த்தல் இன்னும் துல்லியமாகப் பிரதிபலிக்க உதவுவதற்கு, நிலுவையில் உள்ள எந்தவொரு நிறைவேற்றப்படாத ஆர்டர்களையும் தேர்வுசெய்து பேக் செய்வதைக் கருத்தில் கொள்ளவும்.
- இருப்பு சரிபார்த்தலின் போது நீங்கள் தவறவிடப்பட்ட உருப்படிகளைப் பூஜ்ஜியமாக்கு என்பதைத் தேர்ந்தெடுத்தால், இருப்பு சரிபார்த்தலில் சேர்க்கப்படாத, அந்த இடத்தில் உள்ள அனைத்துத் தயாரிப்புகளும் தானாகவே பூஜ்ஜியம் என்ற எண்ணிக்கையுடன் சேர்க்கப்படும். இது நீங்கள் ஏற்கனவே ஸ்கேன் செய்த அல்லது எண்ணிய தயாரிப்புகளை மட்டுமல்லாமல், அந்த இடத்தில் உள்ள முழுச் சரக்கு இருப்பையும் பாதிக்கும்.
மேனுவலான இருப்பு சரிபார்த்தலை மேற்கொள்ளுதல்
நீங்கள் Stocky-இல் மேனுவலாக இருப்பு சரிபார்த்தலை மேற்கொள்ளலாம். மேனுவலான இருப்பு சரிபார்த்தலில் நீங்கள் செய்யும் சரக்கு இருப்பு நிலையிலான எந்தவொரு மாற்றமும், Shopify நிர்வாகியில் தானாகவே ஒத்திசைக்கப்படும். இவை Stocky-இன் சரிசெய்தல்கள் பக்கத்தில் மேனுவலான சரிசெய்தல்களாகப் பதிவு செய்யப்படுவதில்லை.
படிகள்:
- உங்கள் Shopify நிர்வாகியில், செயலிகள் > Stocky என்பதற்குச் செல்லவும்.
- சரக்கு இருப்பு > இருப்பு சரிபார்த்தல்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
- இருப்பு சரிபார்த்தலை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
- இருப்பு சரிபார்த்தலுக்குப் பெயரிடவும். இருப்பு சரிபார்த்தல் வகை புலத்தில், மேனுவல் என்பதைத் தேர்வுசெய்யவும்.
- பின்வரும் இருப்பு சரிபார்த்தல் புலங்களில் தகவலை உள்ளிடவும்:
- இருப்பு சரிபார்த்தல் இடம்
- விற்பனையாளர் அல்லது சப்ளையர் இருப்பு சரிபார்த்தலா?
- தயாரிப்பு மாறுபாடுகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்து
- விரும்பினால், மேம்பட்ட விருப்பங்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து, பின்வரும் விருப்பத்திற்குரிய புலங்களில் தகவலை உள்ளிடவும்:
- சரக்கு இருப்பை நிர்வகிப்பது
- ABC தரம்
- தயாரிப்பு வகை
- இருப்பு சரிபார்த்தலை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
- ஒவ்வொரு தயாரிப்பிற்கும், பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:
- தயாரிப்பில் சரியான சரக்கு இருப்பு இருந்தால், தம்ப்ஸ் அப் பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- ஒரு தயாரிப்பின் சரக்கு இருப்பை சரிசெய்ய வேண்டும் எனில், தம்ப்ஸ் டவுன் பொத்தானைக் கிளிக் செய்து, சரியான சரக்கு இருப்பு நிலையை உள்ளிட்டு, சரக்கு இருப்பு நிலையைப் புதுப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
அனைத்துத் தயாரிப்புகளையும் மதிப்பாய்வு செய்த பிறகு, நீங்கள் இந்தப் பக்கத்திலிருந்து வெளியேறலாம்.
பார்கோடு ஸ்கேனரைக் கொண்டு இருப்பு சரிபார்த்தலை மேற்கொள்ளவும்
டெஸ்க்டாப் சாதனத்தில் Stockyஐப் பயன்படுத்தி இருப்பு சரிபார்த்தலை மேற்கொள்ள, ஆதரிக்கப்படும் பார்கோடு ஸ்கேனரை நீங்கள் பயன்படுத்தலாம். Stocky இல் இருப்பு சரிபார்த்தலை மேற்கொள்ளும்போது, உங்கள் சாதனத்தின் உள்கட்டமைக்கப்பட்ட கேமராவிற்கு ஆதரவு கிடையாது. மேலும், Shopify POS அல்லது Shopify POS GO மூலமாக Stockyஐப் பயன்படுத்தி இருப்பு சரிபார்த்தலை மேற்கொள்ள முடியாது.
Stocky இல் பார்கோடு இருப்பு சரிபார்த்தலைத் தொடங்குவதற்கு முன், உங்கள் ஆதரிக்கப்படும் பார்கோடு ஸ்கேனர் Basic (கீபோர்டு) பயன்முறைக்கு அமைக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும். இதற்கான வழிமுறைகளுக்கு, Socket Mobile 1d பார்கோடு ஸ்கேனரை, செயலிப் பயன்முறையிலிருந்து கீபோர்டு பயன்முறைக்கு மாற்றுவது குறித்த வழிமுறைகளை அல்லது Zebra DS2208 USB பார்கோடு ஸ்கேனரை, செயலிப் பயன்முறையிலிருந்து கீபோர்டு பயன்முறைக்கு மாற்றுவது குறித்த வழிமுறைகளைப் பார்க்கவும்.
படிகள்:
- உங்கள் Shopify நிர்வாகியில், செயலிகள் > Stocky என்பதற்குச் செல்லவும்.
- சரக்கு இருப்பு > இருப்பு சரிபார்த்தல்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
- இருப்பு சரிபார்த்தலை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
- இருப்பு சரிபார்த்தலுக்குப் பெயரிட்டு, இருப்பு சரிபார்த்தல் வகை புலத்தில், பார்கோடு என்பதைத் தேர்வுசெய்யவும்.
- இருப்பு சரிபார்த்தலுக்கான இடத்தை உள்ளிட்டு, இருப்பு சரிபார்த்தலை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
- ஒவ்வொரு தயாரிப்பின் பார்கோடினையும் ஸ்கேன் செய்யவும்.
- விரும்பினால்: ஸ்கேன் செய்யப்படாத தயாரிப்புகளின் பட்டியலை மதிப்பாய்வு செய்ய, Missed தாவலைக் கிளிக் செய்யவும்.
- அனைத்து பார்கோடுகளும் ஸ்கேன் செய்யப்பட்ட பிறகு, இருப்பு சரிசெய்தலை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
- இருப்பு சரிசெய்தலை உறுதிப்படுத்த, சரிசெய்தலை மேற்கொள் என்பதைக் கிளிக் செய்யவும்.
சரிசெய்தலைத் தொடங்கிய பிறகு, நீங்கள் இந்தப் பக்கத்திலிருந்து வெளியேறலாம்.
Stocky இல் உள்ள சரக்கு இருப்பு > சரிசெய்தல்கள் பக்கத்திலிருந்து, பார்கோடு ஸ்கேனரைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இருப்பு சரிபார்த்தலிலிருந்து நீங்கள் தற்போது முடித்த சரிசெய்தல் உட்பட எந்தவொரு சரிசெய்தலையும் மதிப்பாய்வு செய்யலாம்.
பகுதி மற்றும் முழுமையான இருப்பு சரிபார்த்தல்கள்
இயல்பாகவே, புதிதாக உருவாக்கப்பட்ட இருப்பு சரிபார்த்தலானது அனைத்துத் தயாரிப்புகளையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான இருப்பு சரிபார்த்தலாக இருக்கும். உங்கள் தயாரிப்புகளின் ஒரு பகுதியை மட்டுமே கணக்கிடும் வகையில், இதை ஒரு பகுதி இருப்பு சரிபார்த்தலாக நீங்கள் மாற்றிக்கொள்ளலாம். ஸ்கேன் செய்யப்படாத சரக்கு இருப்பு கொண்ட அனைத்துத் தயாரிப்புகளையும் Missed தாவல் உள்ளடக்கியுள்ளது.
படிகள்:
- புதிய இருப்பு சரிபார்த்தல் பக்கத்தில், Missed தாவலைத் தேர்ந்தெடுத்து, வடிகட்டிகளை நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.
- வடிகட்டிகளை நிர்வகி என்பதைத் தேர்ந்தெடுத்து, உங்கள் தயாரிப்புகளின் ஒரு பகுதிக்கான இருப்பு சரிபார்த்தலை மேற்கொள்ளத் தேவையான வடிகட்டிகளைக் குறிப்பிடவும்.
நீங்கள் தேர்ந்தெடுத்த வடிகட்டிகளுக்குப் பொருத்தமானதும் இதுவரை இருப்பு சரிபார்த்தலில் சேர்க்கப்படாததுமான அனைத்துத் தயாரிப்புகளையும் Missed தாவல் பட்டியலிடுகிறது.
இருப்பு சரிபார்த்தலுக்குப் பிறகு தவறவிடப்பட்ட உருப்படிகளைக் கையாளுதல்
நீங்கள் இருப்பு சரிபார்த்தலின் முடிவிற்கு வந்த பிறகும் உங்கள் Missed பட்டியலில் உருப்படிகள் இருந்தால், Stocky இல் எதிர்பார்த்ததை விடக் குறைவான உருப்படிகளே உங்களின் கையிருப்பில் உள்ளன என்று அர்த்தம். அனைத்தையும் பூஜ்ஜியமாக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலமாகவோ, அதற்கான தேர்வுப்பெட்டிகளைத் தேர்ந்தெடுத்து, தேர்ந்தெடுத்ததைப் பூஜ்ஜியமாக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலமாகவோ நீங்கள் இந்த உருப்படிகளைப் பூஜ்ஜியத்திற்கு மீட்டமைக்கலாம்.
பகுதி இருப்பு சரிபார்த்தலிலிருந்து தவறுதலாக ஸ்கேன் செய்யப்பட்ட உருப்படியை அகற்றுதல்
உங்கள் வடிகட்டப்பட்ட பகுதி இருப்பு சரிபார்த்தலில் இல்லாத ஒரு உருப்படியை நீங்கள் தவறுதலாக ஸ்கேன் செய்தால், தயாரிப்பின் பெயருக்கு அருகில் மஞ்சள் நிற ! எச்சரிக்கை ஐகான் காட்டப்படும். அந்த வரிசையில் உள்ள ⏷ என்பதைக் கிளிக் செய்து, பின் நீக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் அதனை இருப்பு சரிபார்த்தலில் இருந்து அகற்றலாம்.
உங்கள் இருப்பு சரிபார்த்தலின் CSV கோப்பைப் பதிவிறக்குதல்
Stocky வரலாற்றுச் சரக்கு இருப்புத் தரவைச் சேமிக்காது என்பதால், இருப்பு சரிபார்த்தல் செயல்முறையின் போது எந்த நேரத்திலும் உங்கள் இருப்பு சரிபார்த்தலின் விரிவான நகலை CSV கோப்பாகப் பதிவிறக்கிக்கொள்ளலாம். .csv கோப்பை உங்கள் சாதனத்தில் பதிவிறக்க, இருப்பு சரிசெய்தலின் போது CSV என்பதையோ பதிவிறக்கு > CSV என்பதையோ கிளிக் செய்யவும்.
இருப்பு சரிபார்த்தல் CSV கோப்புகளில் தயாரிப்பின் பெயர், SKU, பார்கோடு மற்றும் Shopify ID போன்ற தகவல்களும், பட்டியலிடப்பட்ட சில்லறை விலை மற்றும் அடக்கவிலை, அத்துடன் எதிர்பார்க்கப்படும் சரக்கு இருப்பு, உண்மையான சரக்கு இருப்பு, மற்றும் சரிசெய்தல் மொத்தங்கள் மற்றும் செலவுகள் போன்ற சரக்கு இருப்புத் தகவல்களும் அடங்கும்.