நாணயங்கள்
Stocky-இல் பல நாணய அம்சத்திற்கு ஆதரவு உள்ளது, மேலும் இது சப்ளையர் அளவில் கிடைக்கும். தற்போதைய நாணயப் பரிமாற்ற விகிதங்களின் அடிப்படையில் ஒவ்வொரு 24 மணிநேரத்திற்கும் உங்கள் செலவு விலைகள் புதுப்பிக்கப்படும்.
சப்ளையர் செலவு விலைகள் அனைத்தும் உங்கள் அடிப்படை செலவு விலையாகத் தானாகவே மாற்றப்படும். ஒவ்வொரு கொள்முதல் ஆர்டருக்கும் பரிமாற்ற விகிதத்தை நீங்கள் அமைக்கலாம்.
இந்தப் பக்கத்தில்
உங்கள் சப்ளையர் நாணயத்தைத் தேர்ந்தெடுக்கவும்
- உங்கள் Shopify நிர்வாகியில், செயலிகள் > Stocky என்பதற்குச் செல்லவும்.
- சப்ளையர்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து, எந்தச் சப்ளையருக்கு நாணயத்தை மாற்ற வேண்டுமோ அவரைத் தேர்ந்தெடுக்கவும்.
- அமைப்புகள் > விவரங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
- நாணயம் கீழ்தோன்றும் பட்டியலில் ஒரு நாணயத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- மாற்றங்களைச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
சப்ளையர் நாணயத்தில் செலவு விலைகளைச் சேர்க்கவும்
சப்ளையர்கள் பக்கத்திலிருந்து சப்ளையர் நாணயச் செலவை நீங்கள் சேர்க்கலாம், அல்லது கொள்முதல் ஆர்டரை உருவாக்கும்போது செலவு (CNY) நெடுவரிசையைக் கிளிக் செய்து ஓர் எண்ணை உள்ளிடுவதன் மூலமும் சேர்க்கலாம்.
சப்ளையரின் செலவு விலையைச் சேர்ப்பது அல்லது புதுப்பிப்பது, தற்போதைய பரிமாற்ற விகிதத்தின் அடிப்படையில் உங்களின் அடிப்படை நாணயத்தில் உள்ள செலவு விலையையும் தானாகவே புதுப்பிக்கும்.
பல நாணயக் கொள்முதல் ஆர்டர்கள்
ஒரு தயாரிப்பின் செலவு விலையைக் கொள்முதல் ஆர்டரிலிருந்தே நேரடியாகத் திருத்தலாம். தயாரிப்பு மாறுபாட்டின் உண்மையான செலவைப் புதுப்பிக்க வேண்டுமா அல்லது குறிப்பிட்ட கொள்முதல் ஆர்டருக்கான செலவைப் புதுப்பிக்க வேண்டுமா என்பதையும் நீங்கள் தேர்வுசெய்யலாம்.
கொள்முதல் ஆர்டரிலிருந்து பரிமாற்ற விகிதத்தைத் திருத்த, பரிமாற்ற விகிதம் என்பதற்கு அடுத்துள்ள எண்ணைத் தேர்ந்தெடுத்து, உங்களுக்குத் தேவையான விகிதத்திற்கு அந்த எண்ணை மாற்றவும்.