ABC பகுப்பாய்வு

எந்தத் தயாரிப்புகளை மீண்டும் ஆர்டர் செய்யலாம், எவை அதிகச் சேமிப்பிடத்தையும் பணத்தையும் எடுத்துக்கொள்கின்றன என்பதைத் தீர்மானிக்க Stocky-இன் ABC பகுப்பாய்வு உதவுகிறது. ABC பகுப்பாய்வு உங்கள் ஒவ்வொரு தயாரிப்பு மாறுபாட்டின் கடந்த 8 வாரச் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டது, எனவே அதிகத் தேவைகொண்ட சீசன் தயாரிப்புகளுக்கு இது சிறந்த குறிகாட்டியாக இருக்காது.

Stocky ஒரு நாளைக்கு ஒருமுறை உங்கள் தயாரிப்புகளுக்குப் பின்வரும் தரங்களைப் பயன்படுத்துகிறது:

  • A தரத் தயாரிப்புகள் உங்கள் வருவாயில் 80% பங்களிக்கின்றன, மேலும் இவை பொதுவாக உங்கள் தயாரிப்பு வரம்பில் 20% மட்டுமே இருக்கும். இவை உங்கள் மிக முக்கியமான தயாரிப்புகளாகும்.
  • B தரம் அடுத்து மிக முக்கியமானதாகும்.
  • C தரத்தை மீண்டும் ஆர்டர் செய்வது பயனளிக்காமல் போகலாம்.
  • Stocky-யிடம் ஒரு தயாரிப்பிற்கான 8 வாரங்களுக்கும் குறைவான விற்பனைத் தரவு இருந்தால், அதற்கு U தரம் வழங்கப்படும்.

நீங்கள் முதன்முறையாக ABC பகுப்பாய்வைச் செயல்படுத்தும்போது, சரியான தரவைப் பெற 24 மணிநேரம் வரை காத்திருக்க வேண்டியிருக்கலாம்.