Stocky அறிக்கை வகைகள்
Stocky உங்கள் சரக்கு இருப்பின் மதிப்பு, சில்லறை விலை ஆகியவற்றின் தினசரி ஸ்னாப்ஷாட்டைப் பதிவுசெய்யும். சரக்குக் கையிருப்பு அறிக்கையிடலைச் செயல்படுத்தியதும், Stocky தரவைச் சேகரிக்கத் தொடங்கும். உங்களின் முதல் சரக்குக் கையிருப்புப் பதிவு காட்டப்பட 24 மணிநேரம் வரை ஆகலாம்.
இந்தப் பக்கத்தில்
அறிக்கையை அணுகுதல்
- உங்கள் Shopify நிர்வாகியில், செயலிகள் > Stocky என்பதற்குச் செல்லவும்.
- அறிக்கைகள் கீழ்தோன்றும் மெனுவிலிருந்து, நீங்கள் ரன் செய்ய விரும்பும் அறிக்கையைக் கிளிக் செய்யவும்.
Stocky அறிக்கைகள்
Stocky-க்குள்ளிருந்து பின்வரும் அறிக்கைகளை நீங்கள் பார்க்கலாம்.
ABC பகுப்பாய்வு
ஒவ்வொரு தயாரிப்புக்குமான ABC பகுப்பாய்வை நீங்கள் பார்க்கலாம், இது கடந்த 8 வாரங்களுக்கான விற்பனை வரலாற்றின் அடிப்படையில் உங்கள் தயாரிப்புகளைத் தரவரிசைப்படுத்துகிறது.
அதிகம் விற்பனையாகும் தயாரிப்புகள்
தயாரிப்பு அல்லது மாறுபாடு SKU அடிப்படையில், அதிகம் விற்பனையாகும் தயாரிப்புகளின் பட்டியலை நீங்கள் பார்க்கலாம்.
குறைந்த சரக்கு இருப்பு அறிக்கைகள்
விற்பனையாளர், தயாரிப்பு அல்லது மாறுபாடு SKU அடிப்படையில் குறைந்த சரக்கு இருப்பு அறிக்கைகளை நீங்கள் பார்க்கலாம்.
குறைந்த சரக்கு இருப்பு விற்பனையாளர்கள் அறிக்கை, எந்த விற்பனையாளர்களின் மாறுபாடுகள் குறைந்த சரக்கு இருப்பில் உள்ளன என்பதையும் எந்த மாறுபாடுகள் கையிருப்பில் இல்லை மற்றும் அதனால் இழக்கப்படும் தோராய வருவாய் என்பதையும் காட்டும். மேலும், விற்பனையாளரிடம் ஆர்டர் செய்து இதுவரை பெறப்படாத தனித்துவமான மாறுபாடுகளையும் இது காட்டும்.
குறைந்த சரக்கு இருப்புத் தயாரிப்புகள் அறிக்கை, எந்தத் தயாரிப்புகள் குறைந்த சரக்கு இருப்பில் உள்ளன என்பதையும் எந்தத் தயாரிப்புகள் கையிருப்பில் இல்லை மற்றும் விற்பனையாளரிடம் ஆர்டரில் இல்லை என்பதையும் காட்டும். மாறுபாடு கையிருப்பில் இல்லை எனில், ஒவ்வொரு நாளும் இழக்கப்படும் தோராய வருவாயையும் இது காட்டும்.
குறைந்த சரக்கு இருப்பு மாறுபாடுகள் அறிக்கைதான், குறைந்த சரக்கு இருப்பு குறித்த மிக விரிவான அறிக்கையாகும். உங்களிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கான சரக்கு இருப்பு உள்ளது, உங்கள் சரக்கு இருப்பு தீரும் தோராயத் தேதி மற்றும் அதைப் பெற ஆகும் காலஅளவின் அடிப்படையில் நீங்கள் தோராயமாக எந்தத் தேதிக்குள் கூடுதல் சரக்கு இருப்பை மீண்டும் ஆர்டர் செய்ய வேண்டும் போன்ற விவரங்களை இது காட்டும்.
ஆர்டர்கள்
ஆர்டர்கள் அறிக்கை, மாதம், வாரம் அல்லது நாளின் அடிப்படையில் உங்கள் ஆர்டர்களுக்கான வரைபடத்தைக் காட்டும். ஆர்டர்கள் அறிக்கை, உங்கள் ஆர்டர்களின் பட்டியலையும் காட்டும். விற்பனையாளர், தயாரிப்பு அல்லது மாறுபாடு போன்ற குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் பொருந்தும் ஆர்டர்களைப் பார்க்க நீங்கள் வடிப்பான்களைத் திருத்தலாம்.
தயாரிப்புகள்
தற்போதைய சரக்கு இருப்பு மற்றும் விற்பனைத் தொகை போன்ற உங்கள் தயாரிப்புகள் பற்றிய விவரங்களை தயாரிப்பு அறிக்கை காட்டும்.
கொள்முதல் ஆர்டர்கள்
கொள்முதல் ஆர்டர்கள் அறிக்கை, சேரும் இலக்கு, டெலிவரி நிலை, பேமெண்ட் நிலை போன்ற உங்களின் ஒவ்வொரு கொள்முதல் ஆர்டர்களைப் பற்றிய விவரங்களையும் காட்டும். இந்த அறிக்கையில் பின்வருபவையும் அடங்கும்:
| சரக்கு இருப்பு | அறிக்கையிடப்படும் நேரத்தில், தற்போது கையிருப்பில் உள்ள அளவு. |
| ஆர்டர் செய்யப்பட்டவை | நிலுவையிலுள்ள அனைத்துக் கொள்முதல் ஆர்டர்களிலும் தற்போது ஆர்டர் செய்யப்பட்டு, இன்னும் பெறப்படாத அளவு. இந்த மாறுபாட்டை நிலுவையில் கொண்ட பல கொள்முதல் ஆர்டர்கள் இருந்தால், அந்தக் கொள்முதல் ஆர்டர்கள் அனைத்தின் ஒட்டுமொத்தத் தொகையையும் இந்த மதிப்பு குறிக்கும். |
| அளவு | அந்தக் குறிப்பிட்ட கொள்முதல் ஆர்டர்களில் அந்த மாறுபாட்டிற்காக ஆரம்பத்தில் ஆர்டர் செய்யப்பட்ட அளவு. இந்த எண் கொள்முதல் ஆர்டர்களுக்குக் குறிப்பிட்டதாகும், மேலும் பொருட்கள் பெறப்படும்போது இது மாறாது. |
தள்ளுபடிப் பொருட்கள்
தள்ளுபடிப் பொருட்கள் அறிக்கை, உங்கள் தள்ளுபடிப் பொருட்களைத் தயாரிப்பு அல்லது மாறுபாடு அடிப்படையில் காட்டும்.
SKU/மாறுபாடு
SKU/மாறுபாடு அறிக்கை, ஒவ்வொரு மாறுபாட்டிற்கான யூனிட் செலவு, விற்பனை விலை மற்றும் விற்பனையின் எண்ணிக்கை ஆகியவற்றைக் காட்டும். ஒவ்வொரு மாறுபாடு குறித்தும் மேலும் விரிவான பகுப்பாய்வை உருவாக்க, நீங்கள் கூடுதல் நெடுவரிசைகளைச் சேர்க்கலாம்.
புள்ளிவிவரங்கள்
கடந்த 28 நாட்கள் மற்றும் கடந்த 7 நாட்களுக்கான சராசரி ஆர்டர் மதிப்பு மற்றும் ஒரு நாளுக்கான சராசரி ஆர்டர் மொத்தம் போன்ற ஸ்டோர் புள்ளிவிவரங்களை புள்ளிவிவரங்கள் அறிக்கை ஒப்பிடும்.
சரக்குக் கையிருப்பு அறிக்கைகள்
உங்கள் சரக்குக் கையிருப்புக்கான தற்போதைய அல்லது முந்தைய அறிக்கையை நீங்கள் பார்க்கலாம்.
தற்போதைய சரக்குக் கையிருப்பு அறிக்கை, உங்கள் சரக்கு இருப்பின் தற்போதைய மதிப்பு மற்றும் செலவைக் காட்டும்.
ஒரு தேதியிடைவெளியில் உள்ள ஒவ்வொரு தேதிக்குமான அடக்க விலை, மதிப்பு அல்லது அளவு போன்ற அனைத்துச் சரக்கு இருப்புகளுக்குமான குறிப்பிட்ட மொத்த மதிப்பை அனைத்து இடங்களுக்குமான முந்தைய சரக்குக் கையிருப்பு அறிக்கை காட்டும். அனைத்து விற்பனையாளர்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட விற்பனையாளரை அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்த அளவைக் காட்டும்படி அறிக்கையை நீங்கள் வடிகட்டலாம்.
சரிசெய்தல்கள்
ஒவ்வொரு சரக்கு இருப்புச் சரிசெய்தல் குறித்த விவரங்களான தேதி, அதற்கான காரணம், அதைச் செய்த பணியாளர் ஆகியவற்றை சரிசெய்தல்கள் அறிக்கை காட்டும்.
பரிமாற்றங்கள்
ஒவ்வொரு சரக்கு இருப்பு இடமாற்றம் குறித்த விவரங்களான அதன் நிலை, மூல இடம் மற்றும் இலக்கு, இடமாற்றத்திற்கான காரணம் ஆகியவற்றை பரிமாற்றங்கள் அறிக்கை காட்டும்.
லாபம்
ரிட்டர்ன்கள், மொத்த விற்பனை மற்றும் விற்கப்பட்ட பொருட்களின் அடக்க விலை போன்ற உங்கள் ஸ்டோரின் நிதித் தகவலை லாபம் அறிக்கை காட்டும்.
அறிக்கை வகைகள்
பல வெவ்வேறு சரக்குக் கையிருப்பு அறிக்கைகள் கிடைக்கின்றன.
மொத்தச் செலவு
உங்கள் கையிருப்பிலுள்ள அனைத்து மாறுபாடுகளுக்கும், ஒவ்வொரு மாறுபாட்டின் அளவையும் அதன் அடக்க விலையால் பெருக்கினால் வரும் மதிப்பு மொத்தச் செலவுக்குச் சமம். எதிர்மறைச் சரக்கு இருப்பு அளவுகளைக் கொண்ட மாறுபாடுகளும் மறைக்கப்பட்ட மாறுபாடுகளும் இந்தக் கணக்கீட்டில் சேர்க்கப்படாது.
மொத்தச் சில்லறை விற்பனை
ஒவ்வொரு மாறுபாட்டின் அளவையும் அதன் சில்லறை விலையால் பெருக்கினால் வரும் மதிப்பு மொத்தச் சில்லறை விற்பனைக்குச் சமம். உங்களது அனைத்துச் சரக்கு இருப்புகளையும் அதன் தற்போதைய விலையில் விற்றால், உங்களுக்கு இவ்வளவு தொகை கிடைக்கும்.
மொத்த உருப்படிகள்
மொத்த உருப்படிகள் என்பது உங்கள் ஸ்டோரில் கையிருப்பில் உள்ள மொத்த உருப்படிகளின் எண்ணிக்கையாகும். உங்களிடம் 10 சிவப்பு சாக்ஸ்கள் மற்றும் 5 நீல நிற சாக்ஸ்கள் இருந்தால், மொத்த உருப்படிகளின் எண்ணிக்கை 15 ஆகும்.
விற்பனையாளர் வாரியாக கையிருப்பில் உள்ள சரக்கு
Stocky ஒவ்வொரு விற்பனையாளருக்கும் கையிருப்பில் உள்ள சரக்கின் பதிவை வைத்திருக்கிறது. ஒரு விற்பனையாளருக்கான கையிருப்பில் உள்ள சரக்கை அணுக, கையிருப்பில் உள்ள சரக்கு அறிக்கையின் மேற்புறத்தில் உள்ள படிவத்தைப் பயன்படுத்தவும். சில அறிக்கைகளில் Shopify மூலம் கண்காணிக்கப்படுகிறது எனப் பட்டியலிடப்பட்ட சரக்கு இருப்பு இருக்கலாம். இது Shopify மூலம் கண்காணிக்கப்படும் உருப்படிகளின் அடிப்படையில் உங்களின் கையிருப்பில் உள்ள சரக்கு அறிக்கைகளைப் பிரிப்பதற்கான ஒரு வழியாகும். உங்கள் டிராப்-ஷிப்பிங் செய்யப்பட்ட தயாரிப்புகளை Shopify கண்காணிக்கவில்லை எனில், ஒவ்வொரு அறிக்கையின் Shopify மூலம் கண்காணிக்கப்படுகிறது பதிப்பைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் கையிருப்பில் உள்ள சரக்கு அறிக்கைகளிலிருந்து டிராப்-ஷிப்பிங் செய்யப்பட்ட சரக்கினை விலக்கலாம்.
Stocky-இல் முழுமையாக்குதல்
வெவ்வேறு கணக்கியல் மற்றும் சரக்கு மேலாண்மை அமைப்புகள் முழுமையாக்குதலை வெவ்வேறு வழிகளில் கையாளுகின்றன. Stocky எண்களை வரிசை உருப்படி அளவில் இரண்டு தசம இடங்களுக்கு முழுமையாக்குகிறது, பின்னர் உங்களுக்கு மொத்த மதிப்பை வழங்க வரிசை உருப்படிகளைக் கூட்டுகிறது. கூட்டலுக்குப் பிறகு முழுமையாக்கும் பிற முறைகளுடன் ஒப்பிடும்போது இது சிறிய முரண்பாட்டை உருவாக்கலாம்.
நீங்கள் ஏதேனும் எண்களைக் கைமுறையாகச் சரிசெய்ய விரும்பினால், அதை சரிசெய்தல்கள் புலத்தில் செய்யலாம். உங்கள் சப்ளையரின் கணக்கியல் அமைப்பு முழுமையாக்குவதற்கு வேறு முறையைப் பயன்படுத்தினால் சரிசெய்தல்கள் அவசியமாகலாம்.