Shopify POS இல் தனிப்பயன் விற்பனையைச் செய்தல்
பரிவர்த்தனைக்கு ஏதேனும் கூடுதல் விலையை உள்ளிட, நீங்கள் தனிப்பயன் விற்பனை உருப்படி ஒன்றைப் பயன்படுத்தலாம். நிரந்தரமாகக் கிடைக்கும் உருப்படியாக உங்கள் Shopify நிர்வாகி அல்லது Shopify POS இல் நீங்கள் முன்பே தயாரிப்பாகச் சேர்க்காத ஒரு உருப்படியை விற்பனை செய்வதற்குத் தனிப்பயன் விற்பனை உருப்படிகள் உகந்தவையாகும்.
தனிப்பயன் விற்பனை உருப்படிகளில் பிரத்தியேக சூழ்நிலைகளுக்கான சிறிய ஆட்-ஆன்கள் அல்லது கூடுதல் கட்டணங்கள் இருக்கலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஓவியங்களை விற்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம், ஆனால் உங்கள் நேரடி வாடிக்கையாளர் ஓவியத்துடன் சேர்த்து அதைக் காட்சிப்படுத்தும் தாங்கியையும் (easel) வாங்க விரும்புகிறார் எனில், நீங்கள் வாடிக்கையாளருக்கு வழக்கம் போல் ஓவியத்தை விற்கலாம், அத்துடன் ஒப்புக்கொள்ளப்பட்ட தாங்கியின் விலையையும் ஒரு தனிப்பயன் விற்பனை உருப்படியாகச் சேர்க்கலாம்.
இந்தப் பக்கத்தில்
Shopify POS இல் உள்ள தனிப்பயன் விற்பனைகளுக்கான பரிசீலனைகள்
- உங்கள் Shopify POS ஸ்மார்ட் கிரிட்டில் காட்டப்படும் தனிப்பயன் விற்பனையைச் சேர் டைலிலிருந்து நீங்கள் ஒரு தனிப்பயன் விற்பனையை உருவாக்கலாம். ஒரு பரிமாற்றத்தின் போது மாற்றீட்டு உருப்படியாகவும் தனிப்பயன் விற்பனை உருப்படியை நீங்கள் சேர்க்கலாம்.
- ஒரு அறிக்கையில் வழக்கமான தயாரிப்பு விற்பனை காட்டப்படும் அதே வழியில் தனிப்பயன் விற்பனை உருப்படிகள் காட்டப்படாது. விற்பனை அறிக்கைகளில் உள்ள தனிப்பயன் விற்பனைகள் குறித்து மேலும் அறிக.
Shopify POS இல் தனிப்பயன் விற்பனையை உருவாக்குங்கள்
- உங்கள் Shopify POS ஸ்மார்ட் கிரிட்டிலிருந்து, தனிப்பயன் விற்பனையைச் சேர் டைலைத் தட்டவும்.
- விற்பனைக்கான விருப்பத் தலைப்பு மற்றும் விற்பனை விலையை உள்ளிடவும். அளவுகளையோ அல்லது உருப்படிக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதா என்பதையோ நீங்கள் சரிசெய்யலாம்.
- பரிவர்த்தனையைத் தொடர கார்ட்டில் சேர் என்பதைத் தட்டவும்.