கட்டண முறையாகப் பேமெண்ட் கார்டுகளை ஏற்றுக்கொள்வது
Shopify POSஐப் பயன்படுத்திப் பேமெண்ட் கார்டுகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு நேரில் நெகிழ்வான மற்றும் பாதுகாப்பான பேமெண்ட் விருப்பங்களை வழங்கலாம். உங்கள் வன்பொருள், இடம் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் கட்டணச் சேவை ஆகியவற்றைப் பொறுத்து, சிப், காண்டாக்ட்லெஸ் மற்றும் ஸ்வைப் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பல வகையான கார்டுகள் மற்றும் கட்டண முறைகளை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியும். ஒருங்கிணைந்த Shopify கார்டு ரீடர்கள் அல்லது வெளிப்புறக் கார்டு டெர்மினல்களைப் பயன்படுத்தி கார்டு பேமெண்டுகளை எவ்வாறு ஏற்பது என்பதையும், Shopify POS மூலம் பேமெண்டுகளைச் செயல்படுத்துவதற்கான படிகளையும் தெரிந்துகொள்ளுங்கள்.
இந்தப் பக்கத்தில்
ஆதரிக்கப்படும் கார்டு பிராண்டுகள்
நேரில் கார்டு பரிவர்த்தனைகளைச் செயல்படுத்த நீங்கள் Shopify Paymentsஐப் பயன்படுத்தினால், பின்வரும் கார்டு பிராண்டுகள் ஆதரிக்கப்படும்:
- Visa மற்றும் Visa Debit
- Mastercard மற்றும் Debit Mastercard
- American Express
- Discover (அமெரிக்கா, கனடா மற்றும் யுனைடெட் கிங்டமில் உள்ள இடங்களுக்கு மட்டும்)
- Diners Club (அமெரிக்கா, கனடா மற்றும் யுனைடெட் கிங்டமில் உள்ள இடங்களுக்கு மட்டும்)
- JCB (அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உள்ள இடங்களுக்கு மட்டும்)
- Union Pay (அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள இடங்களுக்கு மட்டும்)
- eftpos (ஆஸ்திரேலியாவிற்கு மட்டும்)
- Interac (கனடாவிற்கு மட்டும்)
- Cartes Bancaires (பிரான்ஸ் மட்டும், POS Terminal மற்றும் BBPOS WisePad 3 கார்டு ரீடரில்)
Visa அல்லது Mastercard உடன் இணைந்து பேட்ஜ் செய்யப்பட்ட Interac, girocard அல்லது eftpos கார்டுகள் போன்ற பெரும்பாலான தேசிய டெபிட் கார்டுகளால் Visa மற்றும் Mastercard ஐப் பயன்படுத்திக் கார்டு வழங்குநரின் நாட்டிற்கு வெளியே பேமெண்டுகளைச் செயல்படுத்த முடியும். Mastercard அல்லது Visa மூலம் பேமெண்டுகளைச் செயல்படுத்தாத சில இணைந்து பேட்ஜ் செய்யப்பட்ட டெபிட் கார்டுகள் கார்டு வழங்குநரின் நாட்டிற்கு வெளியே செயல்படாமல் போகலாம்.
காண்டாக்ட்லெஸ் பேமெண்டுகளை ஆதரிக்கும் வன்பொருளில், Apple Pay, Google Pay மற்றும் Samsung Pay போன்ற டிஜிட்டல் வாலட்டில் வாடிக்கையாளர்கள் ஏற்றிருக்கும் ஆதரிக்கப்படும் ஏதேனும் கார்டு பிராண்டுகளையும் அவர்கள் காண்பிக்கலாம்.
பேமெண்டைத் தாமதமாகப் பெறுதல்
Shopify Payments மூலம் செயல்படுத்தப்படும் கார்டு பேமெண்டுகள் விற்பனைப் புள்ளியில் அங்கீகரிக்கப்பட்டு, 15 நிமிடங்கள் வரை தாமதத்திற்குப் பிறகு பெறப்படும். அங்கீகாரம் என்பது பேமெண்ட் கார்டு செல்லுபடியாகும் நிலையில் இருப்பதையும் அதில் போதுமான நிதி இருப்பதையும் உறுதிசெய்கிறது, மேலும் பெறுதல் என்பது வாடிக்கையாளரிடம் கட்டணம் வசூலிப்பதாகும். இந்தத் தாமதம் தவறான உருப்படி அல்லது தொகை போன்ற பிழையைச் சரிசெய்யப் பணியாளர்களுக்கு நேரம் அளிக்கிறது, அதாவது பணத்தைத் திரும்பப்பெறுவதற்குப் பதிலாக ஆர்டரை ரத்துசெய்யலாம். ரத்துசெய்யப்பட்ட ஆர்டர்களுக்குப் பரிவர்த்தனைக் கட்டணங்கள் பொருந்தாது.
15 நிமிட அவகாசத்தின் போது, ஆர்டரின் பேமெண்ட் நிலை அங்கீகரிக்கப்பட்டது என இருக்கும், மேலும் பணியாளர்கள் ஆர்டரை ரத்துசெய்யலாம். 15 நிமிடங்களுக்குப் பிறகு, பேமெண்ட் பெறப்பட்டு, வாடிக்கையாளரிடம் கட்டணம் வசூலிக்கப்படும். அதன் பிறகு உருப்படிகள் அல்லது வசூலிக்கப்பட்ட தொகையை மாற்ற, பணத்தைத் திரும்பப்பெறுதல் தேவைப்படும், ஆனால் நீங்கள் தொடர்ந்து ஆர்டர் குறிப்புகள் மற்றும் வாடிக்கையாளர் தகவல் போன்ற பிற ஆர்டர் விவரங்களைப் புதுப்பிக்கலாம்.
பேமெண்டைத் தாமதமாகப் பெறுவதற்கான பரிசீலனைகள்
பேமெண்டைத் தாமதமாகப் பெறுவது குறித்துப் பின்வரும் பரிசீலனைகளை மதிப்பாய்வு செய்யவும்:
- POS Pro திட்டத்திலுள்ள இடங்களுக்கான கார்டு பேமெண்டுகளுக்கு, தாமதமாகப் பெறுதல் தானாகவே பொருந்தும்.
- ஒரு பேமெண்ட் அங்கீகரிக்கப்படும்போது, வாடிக்கையாளரின் கார்டு அறிக்கையிலும் Shopify POS செயலியிலும் உங்கள் Shopify நிர்வாகியிலும் நிலுவையிலுள்ள கட்டணம் காண்பிக்கப்படும். நிலுவையிலுள்ள கட்டணம் என்பது அங்கீகாரம் ஆகும், மேலும் பெறப்படும் கட்டணமே இறுதிப் பேமெண்ட் ஆகும். இவை இரண்டு வெவ்வேறு கட்டணங்கள் அல்ல, ஒரே பரிவர்த்தனையின் இரண்டு நிலைகளைக் குறிக்கின்றன. பேமெண்டைப் பெற்ற பிறகு வாடிக்கையாளரின் வங்கி அங்கீகாரப் பிடிப்பை விடுவிக்கும், ஆனால் அந்தப் பிடிப்பு வாடிக்கையாளரின் அறிக்கையில் 30 நாட்கள் வரை காண்பிக்கப்படலாம். இதன் நேரம் வாடிக்கையாளரின் வங்கி மற்றும் கார்டு வழங்குநரைப் பொறுத்தது. வாடிக்கையாளரின் வங்கி அறிக்கைகளிலுள்ள அங்கீகாரப் பிடிப்புகள் குறித்து மேலும் அறிக.
- தாமதமாகப் பெறுதல் ஜெர்மனி அல்லது இத்தாலியில் கிடைக்காது, அங்கு கார்டு பேமெண்டுகள் உடனடியாகப் பெறப்படும், மேலும் ஆர்டர்களை ரத்துசெய்ய முடியாது.
- கிஃப்ட் கார்டு, ரொக்கம், Interac, EFTPOS, மேனுவல் கிரெடிட் பேமெண்டுகள் மற்றும் பிரித்துச் செலுத்தப்படும் ஆர்டர்கள் உட்படச் சில பேமெண்டுகளையும் ஆர்டர்களையும் 15 நிமிட அவகாசத்தில் ரத்துசெய்ய முடியாது. ஆர்டர்களை ரத்துசெய்வதற்கான கட்டுப்பாடுகளைக் மதிப்பாய்வு செய்யவும்.
பேமெண்டைத் தாமதமாகப் பெறுதலை முடக்குதல்
POS Pro திட்டத்திலுள்ள இடங்களுக்குப் பேமெண்டைத் தாமதமாகப் பெறுதல் இயல்பாகவே இயக்கப்பட்டிருக்கும். உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள POS எடிட்டரில் இருந்து பேமெண்டைத் தாமதமாகப் பெறுவதற்கான அமைப்பை நீங்கள் முடக்கலாம்.
பேமெண்டைத் தாமதமாகப் பெறுதல் முடக்கப்பட்டிருக்கும்போது கார்டு பேமெண்டுகள் உடனடியாகப் பெறப்படும், எனவே நிலுவையிலுள்ள அங்கீகாரக் காலம் எதுவும் பொருந்தாது, அத்துடன் 15 நிமிட ரத்துசெய்தல் அவகாசமும் கிடைக்காது. பேமெண்டைப் பெற்ற பிறகு பிழையைச் சரிசெய்ய, நீங்கள் பணத்தைத் திரும்பப்பெறுதலை வழங்க வேண்டும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், விற்பனைச் சேனல்கள் > விற்பனைப் புள்ளி என்பதற்குச் செல்லவும்.
இன்-ஸ்டோர் அனுபவத்தைத் தனிப்பயனாக்கு பிரிவில், POS செயலி என்பதற்கு திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
பக்கப்பட்டியில், செக்அவுட் என்பதைக் கிளிக் செய்யவும்.
செக்அவுட் அமைப்புகளில், தாமதமாகப் பெறுதல் என்பதை முடக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
Shopify கார்டு ரீடர்கள் மூலம் கார்டு பேமெண்டுகளை ஏற்றுக்கொள்வது
POS Terminal, WisePad 3 அல்லது Tap & Chip கார்டு ரீடர் போன்ற ஆதரிக்கப்படும் Shopify கார்டு ரீடரைப் பயன்படுத்தி நீங்கள் பேமெண்ட் கார்டுகளை ஏற்றுக்கொள்ளலாம். உங்களுக்குக் கிடைக்கும் கார்டு ரீடர்கள் உங்கள் ஸ்டோர் அமைந்துள்ள நாடு மற்றும் பிராந்தியத்தைப் பொறுத்தது. விவரங்களுக்கு Shopify POS ஆதரிக்கப்படும் வன்பொருளை மதிப்பாய்வு செய்யவும்.
ஆதரிக்கப்படும் அனைத்து Shopify கார்டு ரீடர்களும் சிப் கார்டுகள், காண்டாக்ட்லெஸ் (டேப்) கார்டுகள் மற்றும் Apple Pay, Google Pay, Samsung Pay போன்ற மொபைல் வாலட்டுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டண முறைகளை ஏற்றுக்கொள்கின்றன.
படிகள்:
Shopify POS இல் இருந்து, கார்ட்டில் உருப்படிகளைச் சேர்த்து, பின்னர் செக்அவுட் என்பதைத் தட்டவும்.
கார்டு என்பதைத் தட்டவும் அல்லது பல கார்டு ரீடர்கள் இணைக்கப்பட்டிருந்தால், எந்தக் கார்டு ரீடர் மூலம் கார்டு பேமெண்டைச் செயல்படுத்த விரும்புகிறீர்களோ அதைத் தட்டவும்.
பின்வரும் கட்டண முறைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்த வாடிக்கையாளரை அனுமதிக்கவும்:
- காண்டாக்ட்லெஸ் முறைக்கு: வாடிக்கையாளர் தங்களது காண்டாக்ட்லெஸ் பேமெண்ட் கார்டையோ மொபைல் சாதனத்தையோ ரீடருக்கு 2.5 செமீ அருகில் வைத்திருக்க வேண்டும்.
- சிப் முறைக்கு: வாடிக்கையாளர் தனது சிப் கார்டைக் கார்டு ரீடரில் செருகி, திரையிலுள்ள பிராம்ட்களைப் பின்பற்ற வேண்டும்.
- ஸ்வைப் முறைக்கு (உங்கள் ரீடரில் கிடைத்தால்): Shopify POS செயலியில் கேட்கப்படுவது போல் வாடிக்கையாளர் தமது கார்டை ஸ்வைப் செய்ய வேண்டும். சிப் இல்லாத பேமெண்ட் கார்டுகளுக்கு அல்லது சிப் கார்டு செயல்படத் தவறினால் மட்டுமே ஸ்வைப் பயன்படுத்தப்பட வேண்டும்.
வாடிக்கையாளர் தங்கள் பேமெண்ட் கார்டு PIN-ஐப் பயன்படுத்தி பேமெண்ட்டுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டியிருக்கலாம். செக்அவுட்டின் போது ஏதேனும் பிழை ஏற்பட்டால் அல்லது வாடிக்கையாளர் செக்அவுட்டை ரத்துசெய்தால், செக்அவுட் பாதுகாப்பை உறுதிசெய்ய, பணியாளர் தனது Shopify POS PIN-ஐ மீண்டும் உள்ளிட வேண்டும்.
விருப்பத்திற்குரியது: ரசீதை அச்சிட, அச்சிடு என்பதைத் தட்டவும்.
Shopify POS தயாரிப்புகள் திரைக்குத் திரும்ப, முடிந்தது என்பதைத் தட்டவும்.
நீங்கள் POS Pro திட்டத்தில் இருந்தால், கார்டு பேமெண்ட்டுகள் அதிகபட்சம் 15 நிமிடங்கள் தாமதத்திற்குப் பிறகே பெறப்படும். ஆர்டரை ரத்துசெய்ய முடியுமெனில், அந்த இடைவெளியில் ஆர்டரை ரத்துசெய் பொத்தான் காட்டப்படும், மேலும் நீங்கள் பணத்தைத் திரும்பப் பெறுவதற்குப் பதிலாக ஆர்டரை ரத்துசெய்யலாம். தாமதமான பேமெண்ட் பெறுதல் குறித்து மேலும் அறிக.
வெளிப்புற கார்டு ரீடர்
வெளிப்புறக் கட்டண வழங்குநர் உங்களுக்கான பேமெண்ட்டுகளைச் செயல்படுத்துவார். நீங்கள் Shopify Payments-ஐப் பயன்படுத்த வேண்டாம் என முடிவுசெய்யும்போதோ Shopify Payments-ஐ ஆதரிக்காத பிராந்தியத்தில் நீங்கள் இருக்கும்போதோ வெளிப்புறக் கட்டண வழங்குநரைப் பயன்படுத்தலாம்.
வெளிப்புறக் கார்டு டெர்மினலைப் பயன்படுத்த, கட்டணச் செயலியுடன் ஒரு கணக்கை அமைக்க வேண்டும், பின்னர் அவர்களிடமிருந்து ஒரு டெர்மினலை விலைக்கு அல்லது வாடகைக்கு வாங்க வேண்டும், அதன்பிறகு POS செயலியில் தனிப்பயன் பேமெண்ட் வகையை உருவாக்க வேண்டும். பேமெண்ட் வெளிப்புறமாகச் செயல்படுத்தப்படுவதால், Shopify POS செயலியில் ஆர்டரை ‘பேமெண்ட் செலுத்தப்பட்டது’ எனக் குறிக்க வேண்டும்.
படிகள்:
Shopify POS இல் இருந்து, கார்ட்டில் உருப்படிகளைச் சேர்த்து, பின்னர் செக்அவுட் என்பதைத் தட்டவும்.
பேமெண்ட் விருப்பத்தைத் தேர்ந்தெடு திரையில் இருந்து, உங்கள் தனிப்பயன் பேமெண்ட் வகையைத் தட்டவும்.
செயல்படுத்தப்படும் பேமெண்ட் கார்டு வகையைத் தட்டவும்.
உங்கள் வெளிப்புற டெர்மினல் மூலம் பேமெண்ட்டை வெற்றிகரமாகச் செயல்படுத்திவிட்டீர்கள் என்பதை உறுதிசெய்துவிட்டு, பேமெண்ட் செலுத்தப்பட்டது எனக் குறி என்பதைத் தட்டவும்.
வாடிக்கையாளருக்கு ரசீதை மின்னஞ்சலில் அல்லது குறுஞ்செய்தியில் அனுப்பவும், பின்னர் POS முகப்புத் திரைக்குத் திரும்ப முடிந்தது என்பதைத் தட்டவும்.
கார்டு தகவலை மேனுவலாக உள்ளிடவும்
உங்களிடம் கார்டு ரீடர் இல்லையென்றாலோ கார்டு ரீடரைப் பயன்படுத்துவதில் சிக்கல் இருந்தாலோ, பேமெண்ட்டைப் பெறுவதற்கு பேமெண்ட் கார்டு விவரங்களை மேனுவலாக உள்ளிடலாம். உங்களின் கட்டண வழங்குநரும் சாதனமும் மேனுவலாகக் கார்டு உள்ளிடுவதை ஆதரிக்க வேண்டும், மேலும் ஆஃப்லைனில் விற்கும்போது இதைப் பயன்படுத்த முடியாது. ஆன்லைன் பேமெண்ட்டுகளுக்கு ஏற்கப்படும் கிரெடிட் கார்டுகளும் ஆதரிக்கப்படும். உங்கள் ஸ்டோர் ஏற்கும் கிரெடிட் கார்டுகளை நீங்கள் நிர்வகிக்கலாம்.
வாடிக்கையாளர் உங்கள் ஸ்டோரில் இருந்தாலும், மேனுவலாக உள்ளிடப்பட்ட கார்டு பேமெண்ட்டுகள் ‘கார்டு இல்லாமல் செய்யப்படும் பரிவர்த்தனைகள்’ ஆகும். நீங்கள் Shopify Payments-ஐப் பயன்படுத்தினால், மேனுவலாக உள்ளிடப்படும் பேமெண்ட்டுகளுக்கு, நேரடி கார்டு பேமெண்ட்டுகளை விட வெவ்வேறு விகிதத்தில் கட்டணம் விதிக்கப்படும். Shopify-இன் விலை நிர்ணயப் பக்கத்தில் உங்கள் பிராந்தியத்திற்கான கட்டண விகிதங்களை மதிப்பாய்வு செய்யவும். நீங்கள் மூன்றாம் தரப்பு கட்டண வழங்குநரைப் பயன்படுத்தினால், மேனுவலாக உள்ளிடப்படும் பேமெண்ட்டுகளுக்கான அவர்களின் கட்டண விகிதங்களைச் சரிபார்க்கவும்.
படிகள்:
Shopify POS இல் இருந்து, கார்ட்டில் உருப்படிகளைச் சேர்த்து, பின்னர் செக்அவுட் என்பதைத் தட்டவும்.
மேனுவலாக கார்டை உள்ளிடுதல் என்பதைத் தட்டவும்.
பேமெண்ட் கார்டு விவரங்களை உள்ளிடவும். செக்அவுட்டின் போது ஏதேனும் பிழை ஏற்பட்டால் அல்லது வாடிக்கையாளர் செக்அவுட்டை ரத்துசெய்தால், செக்அவுட் பாதுகாப்பை உறுதிசெய்ய, பணியாளர் தனது Shopify POS PIN-ஐ மீண்டும் உள்ளிட வேண்டும்.
பேமெண்ட்டைச் செயல்படுத்த, கட்டணம் வசூலி என்பதைத் தட்டவும்.
விருப்பத்திற்குரியது: ரசீதை அச்சிட, அச்சிடு என்பதைத் தட்டவும்.
Shopify POS முகப்புத் திரைக்குத் திரும்ப முடிந்தது என்பதைத் தட்டவும்.
POS செக்அவுட் பாதுகாப்பு
பணம் செலுத்தாமல் வாடிக்கையாளர்கள் செக்அவுட் செய்வதைத் தடுக்க, Shopify POS-இல் உள்கட்டமைப்புப் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. பின்வரும் சூழ்நிலைகளில் ஒரு பரிவர்த்தனையின் போது பணியாளர் தனது Shopify POS PIN-ஐ மீண்டும் உள்ளிட வேண்டும்:
- செக்அவுட் பிழை ஏற்படும்போது
- செக்அவுட் ரத்துசெய்யப்படும்போது
- டிப் ரத்துசெய்யப்படும்போது.