Shopify POS-இல் கிஃப்ட் கார்டுகள் பற்றிய மேலோட்டம்
இந்தப் பக்கத்தில்
தேவைகள்
Shopify POS மூலம் டிஜிட்டல் கிஃப்ட் கார்டுகளை விற்கவும் மீட்டுக்கொள்ளவும், Shopify POS செயலியில் கட்டண முறையாக கிஃப்ட் கார்டுகளைச் செயல்படுத்த வேண்டும்.
நீங்கள் பிசிக்கல் கிஃப்ட் கார்டுகளை விற்கவும் மீட்டுக்கொள்ளவும் விரும்பினால், உங்கள் Shopify நிர்வாகியிலுள்ள POS எடிட்டரிலிருந்து டிஜிட்டல் அல்லது பிசிக்கல் கிஃப்ட் கார்டுகளை வழங்குவதற்கான அமைப்பையும் செயல்படுத்த வேண்டும்.
வழங்க வேண்டிய கிஃப்ட் கார்டுகளின் வகையை அமைத்தல்
பேமெண்ட்டிற்கு நீங்கள் வழங்கும் மற்றும் ஏற்கும் கிஃப்ட் கார்டுகளின் வகைகளைத் தனிப்பயனாக்கலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் டிஜிட்டல் கிஃப்ட் கார்டுகளை மட்டும் வழங்கவும் ஏற்கவும் தேர்வுசெய்யலாம் அல்லது டிஜிட்டல் மற்றும் பிசிக்கல் கிஃப்ட் கார்டுகள் இரண்டையும் வழங்கவும் ஏற்கவும் முடியும். இந்த அமைப்பு, எல்லா இடங்களிலும் உள்ள அனைத்து POS சாதனங்களுக்கும் பொருந்தும்.
உங்கள் Shopify நிர்வாகியிலுள்ள POS எடிட்டரிலிருந்து வழங்க வேண்டிய கிஃப்ட் கார்டு வகையை நீங்கள் அமைக்கலாம். உங்கள் ஸ்டோரில் இதுவரை எந்தக் கிஃப்ட் கார்டு தயாரிப்புகளும் இல்லை என்றால், முதலில் ஒரு கிஃப்ட் கார்டு தயாரிப்பைச் சேர்க்கவும். ஆதரிக்கப்படும் நாடுகளில் Shopify Hardware Store-லிருந்து பிசிக்கல் கிஃப்ட் கார்டுகளை நீங்கள் ஆர்டர் செய்யலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, விற்பனைச் சேனல்கள் > விற்பனைப் புள்ளி என்பதற்குச் செல்லவும்.
இன்-ஸ்டோர் அனுபவத்தைத் தனிப்பயனாக்கு பிரிவில், POS செயலிக்கு திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
கிஃப்ட் கார்டுகள் பிரிவில், வழங்க வேண்டிய வகை என்பதில் பின்வரும் விருப்பங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்:
- டிஜிட்டல் கிஃப்ட் கார்டுகளை விற்கவோ அல்லது அவற்றிலிருந்து பேமெண்ட்டுகளை ஏற்கவோ டிஜிட்டல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும், இவற்றை நீங்கள் அச்சிட்டு வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் செய்யலாம்.
- டிஜிட்டல் மற்றும் பிசிக்கல் கிஃப்ட் கார்டுகள் இரண்டையும் விற்கவோ அல்லது அவற்றிலிருந்து பேமெண்ட்டுகளை ஏற்கவோ டிஜிட்டல் அல்லது பிசிக்கல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
பிசிக்கல் கிஃப்ட் கார்டுகள்
பிசிக்கல் கிஃப்ட் கார்டுகள் என்பவை முன்பே ஒதுக்கப்பட்ட குறியீடுகளுடன் கூடிய முன்-தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கார்டுகளாகும். ஒரு பிசிக்கல் கிஃப்ட் கார்டை வழங்க, நீங்கள் முதலில் பிசிக்கல் கிஃப்ட் கார்டுகளை வழங்குவதற்கான அமைப்பைச் செயல்படுத்த வேண்டும். வாடிக்கையாளர் கொள்முதல் செய்யும்போது Shopify POS-இல் கிஃப்ட் கார்டின் QR குறியீடு அல்லது பார்கோடை நீங்கள் ஸ்கேன் செய்யலாம். இதற்கான படிகளுக்கு, Shopify POS-இல் கிஃப்ட் கார்டுகளை விற்றல் என்பதைப் பார்க்கவும்.
கிஃப்ட் கார்டு தயாரிப்பிற்கான ஆன்லைன் ஆர்டர், நிறைவேற்றத்தின்போது ஒரு டிஜிட்டல் கிஃப்ட் கார்டையே உருவாக்கும், முன் அச்சிடப்பட்ட பிசிக்கல் கார்டை அல்ல. ஆன்லைன் ஆர்டர்கள் குறிப்பிட்ட பிசிக்கல் கார்டின் QR குறியீடு அல்லது பார்கோடுகளுடன் தானாகவே இணைக்கப்படுவதில்லை, எனவே முன் அச்சிடப்பட்ட பிசிக்கல் கார்டுகள் Shopify POS மூலமாகவே வழங்கப்படுகின்றன.
ஆதரிக்கப்படும் நாடுகளில் Shopify Hardware Store-லிருந்து உங்கள் வடிவமைப்பைத் தேர்வுசெய்து, தனிப்பயனாக்கக்கூடிய பிசிக்கல் கிஃப்ட் கார்டுகளை ஆர்டர் செய்யலாம்.
கிஃப்ட் கார்டுக்கு இணக்கமான விற்பனைச் சேனல்கள்
வாடிக்கையாளர்கள் தங்களின் கிஃப்ட் கார்டுகளை Shopify செக்அவுட்டைப் பயன்படுத்தும் உங்கள் எந்தவொரு விற்பனைச் சேனல்களிலும் மீட்டுக்கொள்ளலாம்:
- ஆன்லைன் ஸ்டோர்
- வாங்கு பொத்தான்
- Facebook Shop
- Messenger
- Shopify POS
- Shop செயலி
அடுத்த படி: Shopify POS-இல் கிஃப்ட் கார்டுகளை விற்றல்
கிஃப்ட் கார்டு தேவைகளை மதிப்பாய்வு செய்து, எந்த வகையான கிஃப்ட் கார்டுகளை வழங்குவது என்பதைத் தேர்வுசெய்த பிறகு, செக்அவுட்டின் போது வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் அல்லது பிசிக்கல் கிஃப்ட் கார்டுகளை வழங்குவதற்கு, Shopify POS செயலியில் கிஃப்ட் கார்டுகளை விற்கலாம்.